Monday, October 16, 2023

மத்தியகிழக்கில் மீண்டும் இரத்த வரலாறு


 இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை ஹமாஸ் அமைப்பினர்  நடத்திய அதிரடித் தாக்குதல் உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இரண்டு மணித்தியாலங்களில் சுமார் 5,000 ஏவுகணைகள் இஸ்ரேல் மீது வீசப்பட்டன. இப்படியான  ஒரு மூர்க்கமான தாக்குதல் இஸ்ரேல் மீது தொடுக்கப்படவில்லை.  இரண்டு  மணித்தியாலங்கள்  இஸ்ரேல்  நிலை குலைந்தது.

 பாலஸ்தீன போராளிகளின் தாக்குதலில் இருந்து பாதுக்காப்பதற்காக   "அயன் டேம்" எனும் தொழில் நுட்பத்தை  இஸ்ரேல்  பொருத்தியுள்ளது. ஏவுகணை போன்றவற்றைக் கண்டறிந்து அழிக்கும்  வல்லமை வாய்ந்தது அயன் டேம்  தொழில் நுட்பம்.அதனையும்  மீறி தரை,கடல், ஆகாயம் மார்க்கமாக  இஸ்ரேலுக்குள்  புகுந்த ஹமாஸ் அமைப்பினர்  நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலால் அப்பாவிப் பொதுமக்கள்  கொல்லப்பட்டனர்.

பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் குழு, இஸ்ரேலின் தெற்கு பகுதியில் தாக்குதல் நடத்தி இருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. தாக்குதல் நடத்திய ஒரு சில மணி நேரங்களிலேயே போரை தொடங்கியுள்ளதாகவும் அதில் வெற்றிபெறுவோம் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். இஸ்ரேல் மீது ஹமாஸ் படை ரொக்கெட் தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி அளிக்கும் விதமாக காசாவில் உள்ள ஹமாஸ் படை மீது தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

ஒபரேஷன் அல்-அக்ஸா ஸ்டார்ம் என்ற பெயரில் தாக்குதலை தொடங்கியுள்ளதாக ஹமாஸ் ரகசிய ராணுவ குழுவின் தலைவர் முகமது டெய்ஃப் தெரிவித்துள்ளார். ஆயுதங்களை எடுத்து கொண்டு போரிடுமாறு இஸ்ரேல் நாட்டில் வாழும் அரபு மக்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம், இஸ்ரேலில் வாழும் 20 சதவிகித மக்கள் அரபு மக்கள் ஆவர்.

"எதிரிக்கு அவரது காலம் முடிந்துவிட்டது என்பதை புரிய வைக்கும் நாள் இது. துப்பாக்கி வைத்திருக்கும் அனைவரும் அதை வெளியே எடுக்க வேண்டும். நேரம் வந்துவிட்டது" என முகமது டெய்ஃப் தெரிவித்துள்ளார்.இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேத்தில் உள்ள அல் அக்ஸா மசூதியை அடையாளம் தெரியாத இஸ்ரேலியர்கள் சேதப்படுத்தியதே ஹமாஸ் படை தாக்குதல் நடத்த காரணமாக அமைந்தது என முகமது டெய்ஃப் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த மசூதி, இஸ்லாமியர்களின் புனித தளமாக கருதப்படுகிறது. இஸ்லாமியர்களுக்கு மட்டும் இன்றி யூதர்களுக்கும் புனித தளமாக கருதப்படுகிறது. இந்த குறிப்பிட்ட பகுதிதான், பல ஆண்டுகாலமாக சர்ச்சைக்குரிய பகுதியாக உள்ளது.

காசா-இஸ்ரேல் எல்லை பகுதியில் கடந்த சில வாரங்களாகவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இஸ்ரேல் மீது பாலஸ்தீனியர்கள் பலூன் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடி அளிக்கும் விதமாக வான்படை தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்தி வருகிறது. ஆனால், இது பெரிய பிரச்னையாக வெடிக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்படாமல் இருந்தது. இச்சூழலில்தான், அல் அக்ஸா மசூதி சேதப்படுத்தப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட வெஸ்ட் பேங்கில் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. முன்னெப்போதும் நடைபெறாத அளவுக்கு இஸ்ரேலுக்குள் பாலஸ்தீனியர்கள் நுழைந்துள்ளனர்.  இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்படிப்பட்ட வீடியோ ஒன்றை ஸ்டெரோட் நகரில் வசிப்பவர் ஒருவர் எடுத்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் உலா வரும் அந்த வீடியோவில் தெருக்களில் செல்லும் அப்பாவி மக்கள் மீது ஹமாஸ் அமைப்பினர் சுடுவது பதிவாகியுள்ளது.

தன்னுடைய வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கொண்டு ஒரு நபர், அந்த சம்பவத்தை வீடியோவாக எடுக்கிறார். பின்னர், வீடியோ எடுக்கும் நபரை நோக்கி ஹமாஸ் அமைப்பினர் துப்பாக்கியை திருப்புகின்றனர். சுதாரித்து கொண்டு அந்த நபர் பாதுகாப்பை தேடி ஓடுகிறார்.

இந்த வீடியோவை சர்வதேச மனித உரிமை வழக்கறிஞர் ஆர்சன் ஆஸ்ட்ரோவ்ஸ்கி, எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதேபோன்று, காசாவில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அதில், இஸ்ரேல் ராணுவ வீரர்களின் உடல்களை சாலைகளுக்கு இழுத்து வந்த தீவிரவாதிகள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவது பதிவாகியுள்ளது.

காசாவை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் ராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என காசாவை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கூறி வருகின்றனர். பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் குற்றத்தில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பாக, இஸ்லாமியர்களின் புனித தளமாக கருதப்படும் ஜெருசலேத்தில் உள்ள அல் அக்சாவை இழிவுப்படுத்தி வருவதாகவும் குற்றஞ்சாட்டி வருகிறது.

இஸ்ரேல்மீதான  ஹமாஸ் தாக்குதலில் லீ சசி என்ற பெண் 7 மணி நேரம் உயிரிழந்தோரின் உடல்களுக்கு நடுவில் பதுங்கியிருந்து உயிர் பிழைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சனிக்கிழமையன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவி தாக்குதலை தொடங்கியது. பல ஆண்டு காலமாக இஸ்ரேல் பாலஸ்தீன் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இது இஸ்ரேல் தனி நாடாக உருவானதில் இருந்து இந்த பிரச்சனை இருந்து வருகிறது. இஸ்ரேலுடன் பலமுறை போரிட்ட பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸ் காஸாவை ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் தான் கடந்த சனிக்கிழமை போர் தொடங்கியது.

லீ சசி என்ற பெண் 7 மணி நேரம் உயிரிழந்தோரின் உடல்களுக்கு மத்தியில் பத்ங்கியிருந்து உயிர் தப்பியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. லீ சசி மற்றும் அவருடன் சேர்ந்து 35 பேர் வெடிகுண்டு புகலிடம் ஒன்றில் தாக்குதலில் இருந்து பாதுகாப்பாக இருக்க பதுங்கியுள்ளனர். ஆனால் அவர்கள் ஜமாஸ் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டனர். அப்போது அவர்களை நோக்கி சரமாரியாக ஹமாஸ் குழுவினர் தாக்குதல் நடத்தினர். அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் பலரும் உயிரிழந்தனர். ஆனால் லீ சசி அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளார். அவர் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு நடுவில் சுமார் 7 மணி நேரம் மறைந்து இருந்துள்ளார்.

35 பேரில் வெறும் 10 பேர் மட்டுமே உயிர் தப்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை தனது தோழி நடாஷா ரகேல் கிர்த்சக் கட்மோனிடம் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் எப்படி தப்பித்தார் என்றும் அதற்கு ஆதாரமாக வீடியோ ஒன்றும் அனுப்பியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

இந்த தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் 1,610 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் பாலஸ்தீன சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.  அதே சமயம், இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலில் 100 பேர் உயிரிழந்தனர். காசா எல்லைப்பகுதியில் போடப்பட்டிருந்த உச்சக்கட்ட பாதுகாப்பை மீறி காசாவில் இருந்து 10க்கும் மேற்பட்ட பாலஸ்தீன போராளிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

கடல் வழியாக இஸ்ரேலுக்குள் நுழைய முயற்சித்த பாலஸ்தீனியர்களை படுகொலை செய்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இதற்கிடையே, இஸ்ரேலியர்கள் பலரை பிணை கைதியாக பிடித்து வைத்துள்ளதாக ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் அல்-அரூரி தெரிவித்துள்ளார். சிறையில் உள்ள பாலஸ்தீனிய கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

, இஸ்ரேலின் பாதுகாப்பு வீரர்கள் உள்பட நூற்றுக்கணக்கான பேரை சுட்டுக் கொன்றனர். இந்த நிலையில், போர் தொடுக்கப்பட்டதாக அறிவித்த இஸ்ரேல் ஹமாஸ் குழு மீது பதில் தாக்குதல் நடத்தியது. வான் வழி மற்றும் தரைவழி என தொடர் தாக்குதலை ஹமாஸ் மீது இஸ்ரேல் நடத்தி வருகிறது. காசாவை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக இஸ்ரேல் அறிவித்தது. 

இந்த நிலையில், இஸ்ரேல் நிதியமைச்சர் ஜாவத் அபு ஷமால்லாவை விமான நிலைய தாக்குதலில் சுட்டுக் கொலை செய்ததாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 900 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், அவர்களது எக்ஸ் பக்கத்தில் டெல் அவிவ், பெர் ஷேவாவில் சைரன் ஒலிக்கிறது என்றும் பதிவிட்டுள்ளனர்.

இஸ்ரேல் - ஹமாஸ் போர் எதிரொலியாக சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 5 % அதிகரித்துள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் படை இடையேயான போர் சர்வதேச அளவில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இரு படை பிரிவுகளிலும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளில் ஹமாஸ் படையினர் 5000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த போர் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் 5% உயர்ந்துள்ளது. அக்டோபர் 6ஆம் திகதி 84.58 டொலராக இருந்த பிரெண்ட் கச்சா எண்ணெய் கடந்த வெயாழக்கிழமை 89 டொலாராக உயர்ந்துள்ளது. இஸ்ரேல் மீதான தாக்குதலின்  பின்னணியில்  வேறு நாடுகள்  இருப்பதாக இஸ்ரேல் குற்றம் ச்கமாஸின்  கொட்டத்தை அடக்கிவிட்டு அந்த நாடுகளை நோக்கி இஸ்ரேலின் ஆயுதம் நீளும் அப்போது இன்னொரு யுத்தத்தின் ஆரம்பமாகவும் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

No comments: