ஒலிம்பிக் போட்டிக்குப் பின் அதிகமானோர் கண்டுகளிக்கும் போட்டியாக உலகக் கிண்ண உதைபந்தாட்ட திருவிழா விளங்குகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இப்போட்டியில் விளையாடுவதை ஒவ்வொரு நாடும் எப்படி கௌ ரவமாக பார்க்கிறதோ அதற்கும் ஒரு படி மேல் தொடரை நடத்த போட்டா போட்டி நிலவும். இப்படிப்பட்ட சூழலில் ஒரு போட்டியை 6 நாடுகள் இணைந்து நடத்துவதற்கான வாய்ப்பை வழங்கி வியக்க வைத்துள்ளது சர்வதேசஉதைபந்தாட்ட சம்மேளனம்
இந்நிலையில்,
23-வது உலகக் கிண்ண உதைபந்தாட்ட தொடர்
2026 ஆம் ஆண்டு அமெரிக்கா, மெக்சிகோ ,கனடா
ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகின்றன.இதையடுத்து, 2030 ஆம் ஆண்டு போட்டியை ஐரோப்பிய
கண்டத்தை சேர்ந்த ஸ்பெயின், போத்துக்கல் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மொராக்கோ ஆகிய 3 நாடுகள்
மட்டும் இணைந்து நடத்த முதலில் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், உலகக் கோப்பை கால்பந்துகிண்ண
உதைபந்தாட்ட தொடர் அரங்கேறி நூற்றாண்டு ஆவதை
முன்னிட்டு, அதை விமரிசையாக கொண்டாடும் நோக்கில் மேலும் தென்அமெரிக்க நாடுகளான அர்ஜென்டினா,
உருகுவே, பராகுவே ஆகிய அணிகளும் இணைந்து போட்டியை நடத்தவுள்ளன.
உதைபந்தாட்ட வரலாற்றில் முதல்முறையாக 3 கண்டங்களை சேர்ந்த அணிகள் உலகக் கிண்ண நடத்தவுள்ளன. இதன் மூலம் இந்த 6 அணிகளும் உலகக் கிண்ண பிரதான சுற்றுக்கு நேரடியாக தகுதிபெறும். எஞ்சிய 42 அணிகள் தகுதிச் சுற்று மூலம் தேர்வு செய்யப்படும் என்று பிஃபா தெரிவித்துள்ளது. அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் 2030 உலகக் கிண்ண உதைபந்தாட்ட தொடர் நடத்தப்படவுள்ளது.
No comments:
Post a Comment