உலகக்கிண்ணத் தொடரில் எதிரணிகளை மிரட்டும் அவுஸ்திரேலிய தொடர் தோல்விகளால் துவண்டு பரிதாப நிலையில் இலங்கையை எதிர் கொண்டது. அவுஸ்திரேலியாவைப் போன்றே இலங்கையும் வெற்றிக்காகப் போராடியது. இலங்கைக்கு எதிரான போட்டியில் வெற்றிக் கணக்கைத் தொடங்கியது அவுஸ்திரேலியா. முன்னைய போட்டிகளைப் போன்றே வெற்றியின் விளிம்பில் நின்ற இலங்கை வெற்றியைத் தாரை வார்த்தது.
இலங்கையின் கப்டன் தசுன் சனக்க காயமடைந்ததால் விளையாடவில்லி. புதிய கப்டனாக பொறுப்பேற்ற குசால் மெண்டிஸ் நாணயச்
சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பெடுத்தாடப்
போவதாக அரிவித்தார். ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களான நிசங்க, குசல் பெரேரா ஆகியோர் சிறப்பாக விளையாடி
விரைவாக ஓட்டங்களைக் குவித்து நம்பிக்கையளித்தனர். பவர் பிளே ஓவரைக் கடந்து கடந்து 21 ஓவர்கள் வரை
நங்கூரமாக நின்று 125 ஓட்டங்கள் சேர்த்து அவுஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சியளித்ததனர்.
8 பவுண்டரியுடன் 61 ஓட்டங்களில் நிசங்காஅட்டமிழந்தார். குசல் பெரேரா 12 பவுண்டரியுடன் 78 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.அதன் பின்னர் அவுஸ்திரேலியாவின் ஆட்டம் ஆரம்பமானது. கப்டன் குஷால் மெண்டிஸ்[9] சமரவிக்ரம [8] வெளியேற ஒருபுறம் அசலங்க நிதானமாக விளையாடிய போதிலும் எதிர்ப்புறம் டீ சில்வா[7] வெல்லாலகே [2], கருணரத்ன [2] என எதிர்ப்புறம் வந்த வீரர்கள் ஒற்றை இலக்கத்துடன் வெளியேறினர். முடிந்தளவுக்கு போராடி 25 ரன்களில் கடைசி விக்கெட்டாக அசலங்க ஆட்டமிழந்தார். 43.3 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்த இலங்கை 209 ஓட்டங்கள் எடுத்தது. ஒரு விக்கெற்றை இழந்து 157 ஓட்டங்கள் எடுத்த இலங்கை இலங்கை 62 ஓட்டங்களில் சகல விக்கெற்களையும் இழந்தது.
210 என்ற சுலபமான இலக்கை
துரத்திய அவுஸ்திரேலியாவுக்கு 3வது ஓவரில் டேவிட் வானர் 11 ஓட்டங்களில்
வெழ்ளியேற்றிய மதுசங்கா அடுத்ததாக
வந்த ஸ்டீவ் ஸ்மித்தை டக் அவுட்டாக்கி மிரட்டினார். அதனால் 24/2 என தடுமாறிய அந்த அணிக்கு
அடுத்ததாக வந்த லபுஸ்ஷேனுடன் மறுபுறம் நிலைத்து நின்ற மற்றொரு துவக்க வீரர் மிட்செல்
மார்ஷ் அதிரடியாக விளையாடி 3வது விக்கெட்டுக்கு 56 ஓட்டங்கள் கள் பார்ட்னர்ஷிப் அமைத்து
9 பவுண்டரியுடன் 52 (51) ஓட்டங்களில் ரன் அவுட்டானார். ஜோஸ் இங்லீசுடன் ஜோடி சேர்ந்த லபுஸ்சேன் தம்முடைய
கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி 4வது விக்கெட்டுக்கு 77 பார்ட்னர்ஷிப் அமைத்த மீண்டும்
மதுசங்கா வேகத்தில் 40 (60) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் களமிறங்கிய
மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடிய நிலையில் எதிர்புறம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய
ஜோஸ் இங்லீஷ் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 58 (59) ஓட்டங்கள் குவித்து வெற்றியை உறுதி செய்து
ஆட்டமிழந்தார்.
இந்தப் போட்டியில் மெக்ஸ்வெல் இரண்டு சிக்ஸர்கள் அடித்தார். இந்திய மண்ணில் களமிறங்கிய டெஸ்ட், ஒருநாள், ரி20 ஆகிய அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து இதுவரை அவர் 33 இன்னிங்ஸில் 51 சிக்ஸர்களை அடித்துள்ளார். இதன் வாயிலாக இந்திய மண்ணில் நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற மேற்கு இந்திய வீரர் கைரன் பொல்லார்ட் சாதனையை உடைத்துள்ள மேக்ஸ்வெல் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
No comments:
Post a Comment