Wednesday, October 18, 2023

இங்கிலாந்தை வீழ்த்திய முன்னாள் இங்கிலாந்து வீரர்

உலகக்கிண்ணப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஆப்கானிஸ்தான். ஆப்கானிஸ்தானிவ் வெற்ரியால் ரசிகர்கள் மட்டுமல்லாது  மற்றைய அணீகளும் அதிர்ச்சியடாஇந்துள்ளன.   சுழற்பந்துவீச்சுக்கு ஓரளவிற்கு ஒத்துழைப்பு கொடுக்கும் டெல்லி மைதானத்திலேயே வலிமையான இங்கிலாந்து அணியை வீழ்த்தியுள்ளது. அதனால் சுழற்பந்துவீச்சிற்கு முழு ஒத்துழைப்பை வழங்கும் சென்னை , லக்னோ மைதானங்களில் ஆப்கானிஸ்தான் அணியால் இன்னும் வீரியமாக செயல்பட முடியும் என்று பர்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தானின் வெற்ரிக்குப் பின்னால் அங்கிலாந்தின் முன்னாள் வீரர்    ஜானதன்  ட்ராட்-ம் முக்கிய காரணமாக உள்ளார். பேர்ஸ்டோவ், பட்லர், ஸ்டோக்ஸ், ரஷீத், மொயின் அலி உள்ளிட்ட இளம் வீரர்களாக இருந்த போது, இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்களில் ஒருவராக இருந்தவர் ட்ராட். இதனால் இங்கிலாந்து அணியின் பிரச்சனைகள், அவர்களின் தயாரிப்புகள் அத்தனையும் ஜானதன்  ட்ராட்-ம் அறிந்தவர். இவர் தற்போது ஆப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இதனால் ஜானதன்  ட்ராட்-ம் பங்கும் ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

 இந்திய மைதானங்களைப்பறி நன்கு தெரிந்த இந்திய அணியின்  முன்னாள் தலைவர் அஜய் ஜடேஜா ஆப்கானின் அணியின் ஆலோசகராகச் செயற்படுகிறார். அவரின் ஆலோசனையின்  பிரகரம்  மூன்று சுழற்பந்து வீரர்கள்  அணியில் இடம்  பெற்றுள்ளனர். சுழற்பந்தை நன்கு எதிர் கொள்ளக் கூடிய இந்தியா, பங்களாதேஷ் ஆகியவற்றிடம்  ஆப்கானின் ஜம்பம் பலிக்கவில்லை. இங்கிலாந்து  சிக்கீவிட்டது.
 
 
உலகக் கிண்ணத் தொடரில்  இங்கிலாந்து அணி சிறிய அணிகளிடம் தோல்வியடைவது முதல்முறையல்ல. ஏற்கனவே பங்களாதேஷிடம் இரு முறையும், அயர்லாந்து அணியிடம் ஒரு முறையும் தோல்வியடைந்திருக்கின்றது.

69
ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் உலகக் கிண்ணவரலாற்றில் 14 தொடர் தோல்விகளுக்கு பின் 15வது முயற்சியில் வெற்றியை பதிவு செய்துள்ளது. குறிப்பாக 2015இல் ஸ்காட்லாந்துக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான் முதல் முறையாக இங்கிலாந்து போன்ற ஒரு டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிக்கு எதிராக உலகக் கிண்ணத்தில்  சரித்திர வெற்றியை பெற்றுள்ளது. அதை விட இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக ஆப்கானிஸ்தான் ஒரு வெற்றியை பதிவு செய்து மற்றுமொரு சாதனை படைத்துள்ளது.

ரமணி

 

No comments: