சர்வதேச கிரிக்கெட்டில் ஒவ்வொரு வருடமும் தங்களுடைய அணிக்காக சிறப்பாக விளையாடும் வீரர்கள் , வீராங்கனைகளுக்கு ஐசிசி விருது வழங்குவது வழக்கமாகும். 2023ஆம் ஆண்டின் சர்வதேச கிரிக்கெட் வீரர் விருதுக்காக நான்கு தகுதியான வீரர்களை ஐசிசி பரிந்துரை செய்துள்ளது. டெஸ்ட், ஒருநாள், ரி20 ஆகிய மூன்று வகையான கிறிக்கெற்றிலும் கடந்த வருடம் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்கள். ஐசிசி வழங்கும் விருதுகளிலேயே மிகவும் உயரிய இந்த விருதுமேற்கு ஜாம்பவான் சர் ஃகேர்பீல்ட் சோபர்ஸ் பெயரில் வழங்கப்பட்டிருக்கிறது. எனவே இம்முறை அவருடைய பெயரில் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்புள்ள நான்கு வீரர்கல் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
விராட் கோலி:
2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்து வந்த சோகத்துக்கு கடந்த வருடம் முற்றுப்புள்ளி வைத்தார் கோலி. இந்த வருடம் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் 35 போட்டிகளில் 2048 ஓட்டங்கள் குவித்து தன்னுடைய தரத்தை நிரூபித்தார். 765 ஓட்டங்கள் விளாசி இந்தியாவின் வெற்றிக்கு போராடிய கோலி ஒரு உலகக்கிண்ணத்தில் (2023) அதிக ஓட்டங்கள் அடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை முந்தி மாபெரும் உலக சாதனை படைத்தார். ஒருநாள் கிறிக்கெற்றில் சச்சினை முந்தி 50 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையும் படைத்த கோலி இம்முறையும் இவ்விருதை வெல்ல பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஒருவேளை இம்முறையும் வென்றால் சோபர்ஸ் கோப்பையை அதிக முறை (3) வென்ற வீரர் என்ற உலக சாதனையை விராட் கோலி படைப்பார்.
டிராவிஸ்
ஹெட்:
2023 உலக
டெஸ்ட் சம்பியன்ஷிப் ,உலகக் கிண்ணம் ஆகிய இரண்டு தொடர்களையும்
அவுஸ்திரேலியா வெல்வதற்கு டிராவிஸ் ஹெட்முக்கிய பங்காற்றியதை ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். ஏனெனில்
இந்த வருடம் 31 போட்டிகளில் வெறும் 1698 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தாலும் அந்த
இரண்டு தொடர்களின் இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு
எதிராக சதமடித்தடிராவிஸ் ஹெட் அவுஸ்திரேலியா இரண்டு
சம்பியன் பட்டங்களை வெல்ல முக்கிய பங்காற்றியதால்
இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
பட் கம்மின்ஸ்:
2023 உலக
டெஸ்ட் சம்பியன்ஷிப் , உலகக்கிண்ணம் ஆகிய இர்டண்டு
தொடர்களிலும் கப்டனாக செயல்பட்டு ஒரே
வருடத்தில் அவுஸ்திரேலியாவுக்கு இஒர்டண்டு சம்பியன் கிண்ணங்களை
வென்று கொடுத்தபட் கம்மின்ஸ் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
கேப்டனாக மட்டுமின்றி இந்த வருடம் 24 போட்டிகளில்
422 ரன்கள் மற்றும் 59 விக்கெட்டுகளை எடுத்து பட் கமின்ஸ்
அவுஸ்திரேலியாவுக்காக அசத்தியுள்ளார்.
ரவீந்திர
ஜடேஜா
துடுப்பாட்டம்,பந்து வீச்சு, ஃபீல்டிங் ஆகிய அனைத்து துறைகளிலும் அசத்தக்கூடிய ஜடேஜா இந்த வருடம் 35 போட்டிகளில் 613 ஓட்டங்கள் அடித்து, 66 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். 2023 கலண்டர் வருடத்தில் அதிக விக்கெட்டுகள் (66) எடுத்த இந்திய பவுலராக சாதனை படைத்து அசத்திய காரணத்தால் ஜடேஜாவும் இந்த விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
கிறிக்கெற்றின் உயிர்நாடியான
டெஸ்ட் போட்டிகளில் 2023 காலண்டர் வருடத்தில் அசத்திய சிறந்த வீரர்களை
ஐசிசி பரிந்துரைத்துள்ளது. 2023ஆம் ஆண்டின் சிறந்த
டெஸ்ட் வீரர் என்ற பெயரில்
ஐசிசி வழங்கப் போகும் இந்த
விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள வீரர்களின் விபரம்,
ரவிச்சந்திரன்
அஸ்வின்:
அனுபவம் ,திறமை ஆகியவற்றால் அசத்தி
வரும் அஸ்வின் கடந்த வருடம்
வெறும் 7 டெஸ்ட் போட்டிகளில் 41 விக்கெட்டுகளை
எடுத்து இந்தியாவின் வெற்றியில் பங்காற்றி ஐசிசி தர வரிசையில்
உலகின் நம்பர் ஒன் பவுலராக
ஜொலித்து வருகிறார். குறிப்பாக சொந்த மண்ணில் நடைபெற்ற
2023 பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வெல்வதற்கு 25 விக்கெட்கள் எடுத்து அவர் முக்கிய
பங்காற்றியதை மறக்க முடியாது. ஆனால்,
இந்திய
அனியில் அவருக்கு நிரந்தச்ர இடம் இல்லை. தொடர்ச்சியாக
வாய்ப்பு வழங்கபப்ட்டிருந்தால் 500 விக்கெற்களை
எடுத்து புதிய சாதனைகளைப்
படைத்திருப்பார். 2023 டெஸ்ட்
சம்பியன்ஷிப் ஃபைனலில் இடம் கிடைக்காததால் ஏமாற்றத்தை
சந்தித்த அஸ்வின் ஏற்கனவே 2016ஆம்
ஆண்டு இந்த விருது வென்ற
பெருமைக்குரியவர். மேலும் 2021இல் பரிந்துரைக்கப்பட்ட அவர்
2வது முறையாக இந்த விருதை
இம்முறையும் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு
ரசிகர்களிடம் இருக்கிறது.
டிராவிஸ்
ஹெட்:
ஈலண்டன்
ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்
போட்டியில் 143 ஓட்டங்கள் விளாசிய டிராவிஸ் ஹெ இந்தியாவை
தோற்கடித்து அவுஸ்திரேலியா கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.
கடந்த வருடம் மொத்தம் 12 போட்டிகளில்
919 ஓட்டங்கள் குவித்ததால் இந்த விருதுக்கு டிராவிஸ்
ஹெட் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
ஜோ
ரூட்
2021ஆம்
ஆண்டு ஏற்கனவே இந்த விருதை
வென்றுள்ள இவர் 2023 காலண்டர் வருடத்தில் 8 டெஸ்ட் போட்டிகளில் 787 ஓட்டங்கள்
,8 விக்கெட்டுகள் எடுத்து இங்கிலாந்தின் வெற்றிகளில்
பங்காற்றினார். அதன் காரணமாக இந்த
விருதை வெல்வதற்கு ஜோ ரூட் 2வது முறையாக பரிந்துரைக்கப்படுவதாக
ஐசிசி கூறியுள்ளது.
உஸ்மான்
கவாஜா
2023 நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட்டில் 13 போட்டிகளில் விளையாடிய இவர் 1210 ஓட்டக்கள் குவித்து டெஸ்ட் சம்பியன்ஷிப் ஃபைனல் அவுஸ்திரேலியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றினார். பரம எதிரி இங்கிலாந்துக்கு எதிராக ஆஷஸ் தொடரில் 496 ஓட்டன்கள் குவித்த அவர் அதிக ஓட்டங்கள் அடித்த வீரராக சாதனை படைத்து அவுஸ்திரேலியா கோப்பையை தக்க வைக்க உதவினார். அதன் காரணமாக இந்த விருந்துக்கு கவாஜாவும் பரிந்துரைக்கப்படுவதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
வளர்ந்து வரும் வீரர் ஆண்கள்
ரச்சின்
ரவீந்திர நியூஸிலாந்து
யஷஸ்வி
ஜெய்ஸ்வால் இந்தியா
ஜெரால்ட்
கோட்ஸி தென்.ஆபிரிக்கா
தில்ஷான்
மதுஷங்க இலங்கை
வளர்ந்து வரும் வீரர்மகளிர்
ஃபோப்
லிட்ச்ஃபீல்ட் அவுஸ்திரேலியா
மருஃபா
அக்டர் பங்களாதேஷ்
லாரன்
பெல் இங்கிலாந்து
டார்சி
கார்ட்டர் நியூஸிலாந்து
சிறந்த ரி20
கிரிக்கெட்
வீரர் ஆண்கள்
சூர்யகுமார்
யாதவ் இந்தியா
சிக்கந்தர்
ராசா ஸிம்பாப்வே
அல்பேஷ்
ராம்ஜானி உகண்டா
மார்க் சாப்மேன்
சிறந்த ரி20
கிரிக்கெட்
வீரர் பெண்கள்
ஹேலி
மேத்யூஸ் மேற்கு
இந்தியா
எல்லிஸ்
பெர்ரி அவுஸ்திரேலியா
சோஃபி
எக்லெஸ்டோன் இங்கிலாந்து
சாமரி
அதபத்து இலங்கை
ஒரு நாள் கிறிக்கெற் ஆண்கள்
சுப்மன்
கில் இந்தியா
முகமது
ஷமி இந்தியா
விராட்
கோலி இந்தியா
டேரில்
மிட்செல் நியூஸிலாந்து
ஒருநாள் கிறிக்கெற் பெண்கள்
ஆஷ்லே
கார்ட்னர் அவுஸ்திரேலியா
சாமரி
அதபத்து இலங்கை
நாட்
ஸ்கிவர்-ப்ரண்ட் இங்கிலாந்து
அமெலியா
கெர் நியூஸிலாந்து
சேர் ஃகேர்பீல்ட்
சோபர்ஸ் விருது பெண்கள்
சாமரி
அதபத்து இலங்கை
ஆஷ்லே
கார்ட்னர் அவுஸ்திரேலியா
பெத்
மூனி இங்கிலாந்து
நாட்
ஸ்கிவர்-ப்ரண்ட் அவுஸ்திரேலியா
No comments:
Post a Comment