Monday, January 1, 2024

அவுஸ்திரேலிய ஓபன் போட்டியின் பரிசுத் தொகை அதிகரிக்கிறது

 மெல்போர்ன் பார்க்கில் நடக்கும் அவுதிரேலிய ஓபன் டென்னிஸ்   போட்டிக்கான பரிசுத் தொகை அவுஸ்திரேலிய $10 மில்லியன் ($6.8 மில்லியன்) உயர்த்த்தப்பட்டுள்ளது.

கிராண்ட்ஸ்லாம் போட்டியின் மொத்தப் பரிசுத் தொகையில் இப்போது அவுஸ்திரேலிய $86.5 ($58.4 மில்லியன்) வழங்கப்படும் என்று போட்டி இயக்குநர் கிரேக் டைலே வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

யுஎஸ் ஓபன்  அதன் மொத்த பரிசுத் தொகை மற்றும் வீரர்களின் இழப்பீட்டுத் தொகையை சாதனையாக $65 மில்லியனாக உயர்த்துவதாக அறிவித்தது, இது நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக உயர்ந்ததாகும்.

"அவுஸ்திரேலியன் ஓபனில் ஒவ்வொரு சுற்றுக்கும் நாங்கள் தகுதிச் சுற்றுகள் மற்றும் ஒற்றையர் மற்றும் இரட்டையர்களின் ஆரம்ப சுற்றுகளில் பெரிய அதிகரிப்புடன் பரிசுத் தொகையை உயர்த்தியுள்ளோம்" என்று டைலி கூறினார்.

மெல்போர்னில், முதல்-சுற்று தகுதி பெறுபவர்கள் 20% அதிகரித்து A$31,250 ஆக (சுமார் $21,000) பெறுவார்கள். ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் சாம்பியன்கள் தலா $3.15 மில்லியன் (சுமார் $2.15 மில்லியன்) பெறுவார்கள்.

 அவுஸ்திரேலிய ஓபன் ஜனவரி 14 ஆம் திகதி அரம்பமாகும்.மகளிர் இறுதிப் போட்டி ஜனவரி 27-ஆம் யும் ஆடவர் இறுதிப் போட்டி ஜனவரி 28-ஆம் திகதி நடைபெற உள்ளது.

No comments: