ஆப்கானுக்கு எதிரான மூன்றாவது ரி20போட்டியில் அடித்த 8 சிக்ஸர்களையும் சேர்த்து மொத்தம் 90 சிக்ஸர்களை கப்டனாக அடித்துள்ள ரோஹித் சர்மா சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த கேப்டன் என்ற இங்கிலாந்தின் இயன் மோர்கன் சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
1. ரோஹித் : 90*
2. இயன் மோர்கன் : 86
3. ஆரோன் பின்ச் : 82
இந்த 6 சிக்சர்களையும் சேர்த்து சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த துவக்க வீரர் என்ற நியூசிலாந்தின் மார்ட்டின் கப்டில் சாதனையையும் தகர்த்துள்ள ரோஹித் சர்மா புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
1. ரோஹித் சர்மா : 162*
2. மார்ட்டின் கப்டில் : 161
3. பால் ஸ்டெர்லிங் : 122
4. ஆரோன் பின்ச் : 116
5. எவின் லெவிஸ் : 111
ஏற்கனவே 4 சதங்கள் அடித்திருந்த ரோஹித் சர்மா இதையும் சேர்த்து ரி20 கிரிக்கெட்டில் 5 சதங்கள் அடித்துள்ளார். சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற அவுஸ்திரேலியாவின் கிளன் மேக்ஸ்வெல்,இந்தியாவின் சூரியகுமார் யாதவ் ஆகியோரின் சாதனைகளை உடைத்துள்ள ரோஹித் சர்மா புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் மேக்ஸ்வெல், சூரியகுமார் யாதவ் ஆகியோர் தலா 4 சதங்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.
இந்த போட்டியில் அடித்த 129 ஓட்டங்களையும் சேர்த்து இந்தியாவின் கப்டனாக ரோஹித்சர்மா இதுவரை 1578 ஓட்டங்களைஅடித்துள்ளார். சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவித்த இந்திய கப்டன் என்ற விராட் கோலியின் வாழ்நாள் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
1. ரோஹித்சர்மா : 1578*
2. விராட் கோலி : 1570
3. எம்எஸ் டோனி : 1112
சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் அதிக வயதில் சதமடித்த இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையையும் உடைத்துள்ள ரோஹித் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
1. ரோஹித் சர்மா : 36 வருடம் 272 நாட்கள், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக, 2024*
2. விராட் கோலி : 33 வருடம் 307 நாட்கள், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக, 2022
3. சூரியகுமார் யாதவ் : 33 வருடம் 91 நாட்கள், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக,
ரோஹித் சர்மா இதுவரைரி20 கிரிக்கெட்டில் 5 சதங்கள் அடித்துள்ளார். இந்த 5 சதங்களில் 3 சதங்களை கப்டனாக பதிவு செய்துள்ளார். சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்த கப்டன் என்ற பாகிஸ்தானின் பாபர் அசாம் உலக சாதனையையும் ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார். சமீபத்தில் பதவி விலகிய பாபர் அசாமும் ரி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் கப்டனாக 3 சதங்கள் அடித்துள்ளார்.
No comments:
Post a Comment