ரி20 உலகக்கோப்பை தொடரில் குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி மற்றும் குரூப் டி உள்ளிட்ட 4 பிரிவுகளிலும் எந்தந்த அணிகள் இடம்பெற்றுள்ளது என்ற விவரங்கள் வெளி வந்துள்ளது. நடப்பாண்டில் ஜூன் மாதம் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா , மேற்கு இந்தியா ஆகியந் ஆடுகளில் நடக்கவுள்ளது. மொத்தமாக 20 அணிகள் பங்கேற்கும் இந்தரி20 உலகக்கோப்பை தொடரில், ஒவ்வொரு குரூப்பிலும் 5 அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடக்கவுள்ளது. இதில் ஒவ்வொரு குரூப்பிலும் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும்.
சூப்பர்
8 சுற்று போட்டிகளும் இரண்டு குரூப்களாக பிரிக்கப்பட்டு
போட்டிகள் நடத்தப்படும். அதில் டாப் 2 இடங்களை
பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு
தகுதிபெறும். அதன்பின் இறுதிப்போட்டி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 4ஆம்
திகதி தொடங்கும்ரி20 உலகக்கோப்பை தொடர், ஜூன் 30ஆம்
திகதி இறுதிப்போட்டி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப்
ஏ பிரிவில் இந்தியா,
பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா , அயர்லாந்து
குரூப்
பி பிரிவில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து , ஓமன்
குரூப்
சி பிரிவில் நியூசிலாந்து, மேற்கு இந்தியா, ஆஃப்கானிஸ்தான்,
உகாண்டா, பப்புவா நியூகினியா
குரூப்
டி பிரிவில் தென்னாப்பிரிக்கா, இலங்கை, பங்களாதேஷ், நெதர்லாந்து
, நேபாள்
. இதில் குரூப் ஏ ,குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள உச்ச அணிகள் எளிதாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஆனால் குரூப் சி-யில் 3 நட்சத்திர அணிகள் இடம்பிடித்துள்ளதால், எந்த அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதேபோல் குரூப் டி பிரிவில் 5 அணிகளும் பலம் வாய்ந்த அணிகளாக உள்ளது. ஏனென்றால் கடந்த டி20 உலகக்கோப்பை, உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்கா அணியை நெதர்லாந்து வீழ்த்தியுள்ளது. அதேபோல் பங்களாதேஷும் எந்த நேரத்திலும் எந்த அணியையும் வீழ்த்தும் வல்லமை இருப்பதால், குரூப் டி தான் குரூப் ஆஃப் டெத் என்று பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment