பங்களாதேஷ் பாராளுமன்றத் தேர்தலில் ஷேக் ஹசீனா வென்று பிரதமர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் ஷேக் ஹசீனா தொடர்ந்து ஐந்தாஅவ்து முறையாக பங்களாதேஷ் பிரதமராகப் பதவியேற்றார். அவரது அவாமி லீக் கட்சி பதிவான மொத்த வாக்குகளில் மூன்றில் இரண்டு பங்கை வென்றது. இதன் மூலம் பாராளுமன்றத்தில் 300இல் 250+ இடங்களை அவாமி லீக் கைப்பற்றியுள்ளது.
பங்களாதேஷி
தேர்தலை நடுநிலையான அரசு அமைத்து நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை புறக்கணித்த
ஷேக் ஹசீனா, எதிர்க்கட்சிகளை பயங்கரவாதிகள் எனவும் முத்திரை குத்தினார். தங்கள் கோரிக்கை
ஏற்கப்படாததால் தேர்தலை பங்காளதேஷ் நேஷனலிஸ்ட் பார்ட்டி தலைமையிலான கூட்டணி கட்சிகள்
தேர்தலை புறக்கணித்தன எதிர்கட்சிகள் பெரும்பாலானவை தேர்தலை புறக்கணித்ததால் ஷேக் ஹசீனா
எளிதில் வென்றார். 2009 ஆம் ஆண்டு முதல் தோல்வியை
சந்திக்காமல் தொடர்ந்து வெற்றி பெறுகிறார். ஷேக் ஹசீனா. ஷேக் ஹசீனா அரசியல் குடும்பத்தை
சேர்ந்தவர்தான். பங்களாதேஷ் நிறுவன தந்தையும்
முதல் ஜனாதிபதியுமான பங்கபந்து ஷேக் முகம்மது முஜிபுர் ரகுமாமானின் மகள் ஆவார். பங்களாதேசகி
நீண்ட காலம் அதிகாரம் மிக்க பொறுப்பில் இருப்பவர் என்ற பெருமையையும் இவருக்கே உள்ளது.
1996 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு பிரதமராக பதவி வகித்தார். பின்னர் 2009 ஆம் ஆண்டில்
இருந்து தொடர்ந்து பங்களாதேஷ் பிரதமராக உள்ளார். உலக அளவில் நீண்ட காலம் மக்களால் தேர்வு
செய்யப்பட்டு பொறுப்பில் இருக்கும் பெண் தலைவர் என்ற பெருமையும் இவருக்கே உள்ளது.
1947 ஆம்
ஆண்டு பிறந்த ஷேக் ஹசீனாவுக்கு தற்போது 76 வயது ஆகிறது. இந்தியாவுடனும் நெருக்கமான
உறவையே ஷேக் ஹசீனா கையாண்டு வருகிறார். இதனால், ஷேக் ஹசீனாவின் வெற்றி இந்தியா - வங்காளதேசம்
இடையேயான உறவுக்கு சாதகமாகவே பார்க்கப்படுகிறது. வங்கதேசத்தை பொறுத்தவரை இந்தியாவின்
மிசோரம், திரிபுரா, மேகாலயா, அசாம், ,மேற்கு வங்காளம் ஆகியஇந்திய மாநிலங்களுடன் எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது.
. இதே ஷேக் ஹசீனாவுக்கு ஒரு காலத்தில் இந்தியா அடைக்கலம்
கொடுத்த கதை உங்களுக்குத் தெரியுமா.. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியாவுக்கும்,பங்களாதேஷுக்கும் இடையே நீண்ட காலமாகவே நல்லுறவு இருந்து வருகிறது.
1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான பங்களாதேஷ்
விடுதலைப் போரில் இந்தியா மிக பெரியளவில்
உதவியது. அந்தக் காலகட்டத்தில் தற்போதைய பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா உயிருக்கு அச்சுறுதல் இருந்தது.
இதையடுத்து அப்போது அவருக்கு இந்தியா புகலிடம் கொடுத்தது. சுமார் 6 ஆண்டுகள் வரை அவர்
இந்தியாவில் இருந்தார்.
இதைக் குறிப்பிட்டே பங்களாதேஷ்
விடுதலைக்கு மட்டுமின்றி, தனது வாழ்க்கையின் மிகவும் கடினமான காலத்தில் தன்னைப்
பாதுகாப்பாக வைத்திருந்ததற்காகவும் இந்தியாவுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார். அந்த
6 ஆண்டுகள் ஷேக் ஹசீனா டெல்லியில் உள்ள பண்டாரா சாலையில் தனது குழந்தைகளுடன் வேறு ஒரு
பெயரில் வசித்து வந்தார்.
1975ஆம் ஆண்டு அவரது குடும்பம் பங்களாதேஷ் ச ராணுவத்தாலேயே
படுகொலை செய்யப்பட்டது. 1971இல் பங்களாதேஷ் சுதந்திரம் அடைந்தது. இருப்பினும், நான்கு
ஆண்டுகள் கழித்து 1975இல் பங்களாதேஷ் ராணுவம் ஆட்சி கவிழ்ப்பை நடத்த முயன்றனர். அப்போது
ஷேக் ஹசீனாவின் தந்தையும் மூத்த அரசியல்வாதியுமான ஷேக் முஜிபுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்டார்.
அவரது மாமா மற்றும் 10 வயது இளைய சகோதரர் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 18 உறுப்பினர்கள்
1975 ஆகஸ்ட் 15இல் கொல்லப்பட்டனர்.
பங்களாதேஷில்
பெரிய போராட்டங்கள் நடைபெற்றது. இந்த படுகொலை சம்பவம் நடந்த போது ஷேக் ஹசீனா
ஐரோப்பாவில் இருந்தார். இதன் காரணமாகவே அவர் இந்த படுகொலையில் இருந்து தப்பினார். வங்கதேச
விடுதலைக்குப் பெரியளவில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி உதவியிருந்தார். இதையடுத்து
ஷேக் ஹசீனாவுக்கும் இந்தியா உதவும் என்று இந்திரா காந்தி அறிவித்தார்.
இந்தியாவுக்குச்
சென்ற வந்த ஷேக் ஹசீனாவின் குடும்பம் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் டெல்லியில் தங்க வைக்கப்பட்டாது.
இது குறித்து சமீபத்தில் ஷேக் ஹசீனா கூறுகையில், "இந்திரா காந்தி தான் எங்களுக்குத்
தேவையான அனைத்து உதவிகளையும் செய்தார். எனது கணவருக்கு ஒரு வேலை கொடுத்தார். நாங்கள்
தங்க பண்டாரா சாலையில் வீட்டையும் கொடுத்தார். அப்போது எனது இரு குழந்தைகளும் கைக்குழந்தைகள்.
இதனால் முதல் 2 -3 ஆண்டுகள் ரொம்பவே கடினமாக இருந்தது" என்றார்.
அதன் பின்னரே
ஷேக் ஹசீனா டெல்லிக்கு வந்தார். டெல்லியில் இருந்தாலும் கூட அவரது உயிருக்குத் தொடர்ந்து
அச்சுறுதல் இருந்தது. இதனால் உண்மையான பெயர்களை மறைத்து போலி பெயர்களுடனேயே அவர் வாழும்
சூழல் இருந்தது. 1981ஆம் ஆண்டு வரை சுமார் ஆறு ஆண்டுகள் வரை அவர் இப்படி வசித்தார்.
அதன் பின்னரே தனது குடும்பத்தினர் கொலை செய்தவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்பதை
வலியுறுத்தி அவர் பல உலக நாடுகளுக்குச் சென்று உலக தலைவர்களையும் சந்தித்தார்.
அப்போது பங்களாதேஷி ராணுவ ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து தனது சொந்த நாட்டிற்குச் சென்ற அவர், அவாமி லீக் கட்சிக்குத் தலைமை தாங்கினார். 1996இல் முதலில் அவர் தேர்தலில் வென்று பிரதமர் ஆனார். 2001இல் பிரதமர் பதவியை இழந்த போதிலும், ஏழே ஆண்டுகளில் மீண்டும் அவர் தேர்தலில் வென்று 2008இல் பிரதமர் ஆனார். அதன் பிறகு அவரை வீழ்த்தவே முடியவில்லை. கையாண்டு வருகிறார். இதனால், ஷேக் ஹசீனாவின் வெற்றி இந்தியா - பங்களாதேஷ் ஆகியவற்றுகு இடையேயான உறவுக்கு சாதகமாகவே பார்க்கப்படுகிறது
No comments:
Post a Comment