Wednesday, January 31, 2024

தவானின் சாதனையை சமன் செய்த முஷீர் கான்

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பையில் நடப்பு சம்பியன் இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய லீக் சுற்றில் 3 போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்று சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றது.    ஜனவரி 30ஆம் திகதி ப்ளூம்போய்ண்டீன் நகரில் தங்களுடைய முதல் சூப்பர் 6 போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொண்ட இந்தியா 214 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியில் முதலில்துடுப்பெடுத்தாடியஇந்தியா 50 ஓவர்களில்  5விக்கெற்களை இழந்து 295  ஓட்டங்கள் குவித்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக முசீர் கான் 13 பவுண்டரி 3 சிக்சருடன் சதமடித்து 131 (126) ஆதர்ஷ் சிங் 52 ஓட்டங்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக மேசன் கிளார்க் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

215  ஓட்ட வெற்றி இலக்குடன்  களமிறங்கிய நியூசிலாந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி  81 ஓட்டங்கள் எடுத்து  தோல்வியை சந்தித்தது.

கப்டன் ஆஸ்கர் ஜான்சன் 19 ஓட்டங்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக சௌமி பாண்டே 4 விக்கெட்களை எடுத்தார். அதனால் மெகா வெற்றி பெற்ற இந்தியா செமி ஃபைனல் வாய்ப்பை ஏறத்தாழ உறுதி செய்து அடுத்த சூப்பர் 6 போட்டியில் நேபாளை எதிர்கொள்ள உள்ளது. இந்த தொடரில் இளம் வீரர் சர்பராஸ் கான் தம்பி முஷீர் கான் அபாரமாக விளையாடி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

யர்லாந்துக்கு எதிரான போட்டியில் 118 (106) ஓட்டங்கள் விளாசி சதமடித்த அவர் இந்த போட்டியிலும் சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்துள்ளார். இதன் வாயிலாக அண்டர்-19 உலககோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் 1க்கும் ஏற்பட்ட சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற ஜாம்பவான் ஷிகர் தவான் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். இதற்கு முன் கடந்த 2004 அண்டர்-19 உலகக் கோப்பையில் ஷிகர் தவான் 3 சதங்கள் அடித்துள்ளார்.

இத்தொடரில் இதுவரை 4 போட்டிகளில் அவர் 325* ரன்களை 81.25 என்ற அபாரமான சராசரியிலும் குவித்துள்ளார். இதன் வாயிலாக பாகிஸ்தானின் ஷாசப் கானை (234) முந்தியுள்ள முசீர் கான் 2024 அண்டர்-19 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார். இது போக 4* விக்கெட்டுகளையும் எடுத்துள்ள அவர் ஆல் ரவுண்டராக இந்த உலகக் கோப்பையில் அசத்தி வருகிறார்.

No comments: