பஞ்சாப் மாநிலம் மொகாலியில்ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதலாவது ரி20 போட்டியில் இந்தியா 6 விக்கெற்களால் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களிஒ 5 விக்கெற்களை இழந்து 158 ஓட்டங்கள் எடுத்தது. இந்தியா 17.3 ஓவர்களில் 4 விக்கெற்களை இழந்து 159 ஓட்டங்கள் எடுத்து வெற்ரி பெற்றது.
ரஹமனுல்லா குர்பாஸ் 23 , கப்டன் இப்ராஹிம் ஜாட்ரான் 25, ரஹமத் ஷா 3 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர் 57 ஓட்டங்கல் எடுத்த நிலையில் நட்சத்திர வீரர் முகமது நபி அதிரடியாக விளையாடி வேகமாக ஓட்டங்களைச் சேர்த்தார். 4வது விக்கெட்டுக்கு 68 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக அமித்தாலும் சற்று தடுமாற்றமாகவே விளையாடிய ஓமர்சாய் 29 (22) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவரிலேயே மறுபுறம் அதிரடியாக விளையாடிய முகமது நபியும் 2 பவுண்டரி 3 சிக்சருடன் 42 (27) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் நஜிபுல்லா ஜாட்ரான் 19* கரீம் ஜானத் 9* ஓட்டங்கள் எடுக்க 20 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 158 ஓட்டங்கள் எடுத்தது. இந்தியா சார்பில் முகேஷ் குமார், அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்
159 ஓட்டங்கல் எனும் இலக்குடன் இந்தியா களம்
இறங்கியது. 14 மாதங்கள் கழித்து விளையாடிய கப்டன் ரோகித் சர்மா முதல் ஓவரிலேயே
தவறான புரிதலால் ரன் அவுட்டாகி சென்றார். அவரை அவுட் செய்து விட்ட மற்றொரு துவக்க வீரர்
சுப்மன் கில் அதிரடியாக விளையாட முயற்சித்து அடுத்த சில ஓவரிலேயே 23 (12)ஓட்டக்களில்
ஸ்டம்ப்கிங் முறையில் வெளியேறினார். தடுமாறிய
இந்தியாவை அடுத்ததாக சிவம் துபே மற்றும் திலக் வர்மா ஆகியோர் ஜோடி சேர்ந்து மீட்டெடு
த்தனர். 3வது விக்கெட்டுக்கு 44 ஓட்டங்கள்
பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்த இந்த ஜோடியில் திலக் வர்மா 26 (22) ஓட்டங்களில்
அவுட்டாக அடுத்ததாக வந்த ஜித்தேஷ் சர்மா அதிரடியாக 5 பவுண்டரியுடன் 31 (20) ஓட்டங்கள் கள் விளாசி ஆட்டமிழந்தார். ஆனால் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாக விளையாடிய சிவம்
துபே நேரம் செல்ல செல்ல அதிரடியாக அரை சதமடித்து
5 பவுண்டரி 2 சிக்ஸருடன் 60* (40) ஓட்டங்கள்
அடித்து வெற்ரியைப் பெற்றுக் கொடுத்தார் . 9 பந்துகளில்
ரிங்கு சிங் 16* ஓட்டங்கள் எடுத்தார்.
17.3 ஓவரிலேயே 4 விக்கெற்களை இழந்த
இந்துயா 159 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது
No comments:
Post a Comment