Sunday, January 7, 2024

தமிழகத்தில் அரசியல் நாகரிக மேடையேற்றம்

அரசியலில் எதிரும் ,புதிருமாக  இருக்கும் தலைவர்கள்  ஒரே மேடையி ஏறி தமது அரசியல் நிலைப்பாட்டினை விளக்கி உள்ளனர்.

 இந்தியப் பிரதமர்  மோடி, தமிழக  முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக ஆளுநர் ரவி  ஆகிய மூவரும் ஒரே மேடையில்  இருந்தனர்.

தமிழகஆளுநரைச்ச் சந்தித்தார்  முதலமைச்சர் ஸ்டாலின்.

 டில்லிக்குச் சென்று பிரதமரைச் சந்தித்தார் தமிழக அமைச்சர் உதயநிதி.

பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில்  மோடி, ஸ்டாலின், ரவி ஆகிய மூவரும் ஒன்றாக     அமர்ந்திருந்தனர். மேடையேறிய ஸ்டாலின் தமிழகத்துக்குத் தேவையானவற்றைப் பட்டியலிட்டார். தமிழகத்துக்கு பாரதீய ஜனதா செய்த  உதவிகளை    மோடி எடுத்தியம்பினார். பாரதீய ஜனதாக் கட்சியினர்  பெருமளவில்  கலந்து கொண்டனர்ஸ்டாலினை வரவேற்க  திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் கூடவில்லை.மோடி கலந்துகொள்ளும் விழாவில் திராவிட முன்னேற்றக் கழகத்தினர்  தென்படவில்லை.

பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட  மோடி, அரசியல் விளையாட்டு  ஒன்றையும் உருவாக்கினார்.

தமிழகத்தில் மோடி கலந்துகொண்ட நிகழ்ச்சிகள்  பாரதீய ஜனதாவின் கூட்டம்  போல் நடந்து முடிந்துள்ளது.      தமிழகத்துக்கு விஜயம் செய்த பிரதமரை, முதலமைச்சர் வரவேற்றார். ஸ்டாலின்  பேச ந்ழுந்ததும் "மோடி,மோடி" என கூச்சல் எழுந்தது. ஸ்டாலினை அவமானப் படுதுவதாக நினைத்து தமது காழ்ப்புணர்ச்சியை  பாரதீய ஜனதாவினர் கக்கினர்

ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 30‍ம் திகதி ராஜ் பவனுக்குச் சென்றார் முதல்வர். நிலுவையிலிருக்கும் மசோதாக்களின் பட்டியல் மற்றும் விவரங்களுடன், அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ராஜகண் ணப்பன், ரகுபதி, தொடர்புடைய துறைகளின் அதிகாரிகள் எனப் பெரும்படையே ஆளுநர் மாளிகைக்குச் சென்றது. தனது அறையின் வாசல் வரை வந்து முதல்வரை வரவேற்று அழைத்துச் சென்றிருக்கிறார் ஆளுநர். பரஸ்பர நல விசாரிப்புகளுக்குப் பிறகு, ஜனாதிபதியின் பரிந்துரைக்கு ஆளுநர் அனுப்பிய மசோதாக்கள் தொடர்பாக விவாதம் திரும்பியிருக்கிறது. அந்த மசோதாக்கள் ஏன் கொண்டுவரப்பட்டன என்பதை முதல்வருடன் சென்றிருந்த அதிகாரிகள் ஆளுநருக்கு விளக்கியிருக்கிறார்கள். ‘அவை எல்லாவற்றையும் ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அனுப்பியிருக்கிறேன்...’ என ஆளுநர் கூறியிருக்கிறார்.”

தமிழகத்தில்  முதல்வரை விட அதிக அதிகாரம் தனக்கு இருப்பதாக நினைத்துச் செயல்படும் ஆளுநர்,நீதிமன்றம் குட்டியதால் தமிழக  முதலவ்ருக்கு அழைப்பு விடுத்தார்.

உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி நடந்த சந்திப்பு என்பதால், இரு தரப்புமே அடக்கி வாசித்திருக்கின்றன.உச்ச நீதிமன்றம் கண்காணிப்பதால், இரு தரப்பும் ரொம்ப நல்லவர்களாக நடந்து கொண்டார்கள்அனாலும், தான் சட்டப்படி நடந்ததாக ஆளுநர் தெரிவித்தார். தன்னிடம் இருந்த கோப்புகள் அனைத்தையும் அவசர அவசரமாக ஜனாதிபதிக்கு அனுப்பிவிட்டு சட்டப்படி நடப்பதாகத் தெரிவித்தார். சட்டம்  ஒரு இருட்டறை  என அறிஞர் அண்ணா சொன்னதை அவருக்கு யாரும் சொல்லவில்லை.

பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, கேலோ இந்தியா போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்க அழைப்புவிடுத்திருக்கிறார் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

ஹாக்கி, கிரிக்கெட் போட்டிகளைத் தவிர்த்து, இதர விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிப்பதற்காகவும், அதன்மூலமாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வகையில் விளையாட்டு வீரர்களை தயார் செய்வதற்காகவும் 'கேலோ இந்தியா' விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 17 வயதுக்கு கீழானவர்கள், 21 வயதுக்குக் கீழானவர்கள் என இருபிரிவாகத் தேர்ந்தெடுத்து, 2018-ம் ஆண்டு முதல் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 21 வயதுக்குக் கீழானவர்களுக்கான 'கேலோ இந்தியா' போட்டிகள், தமிழகத்தில் வரும் ஜனவரி 19‍ம் திகதி முதல் 31‍ம் திகதி வரை நடைபெறுகிறது.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி என பல்வேறு ஊர்களிலும் நடைபெறும் இந்தப் போட்டிகளில், சுமார் 5,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். சென்னையில் நடைபெறவுள்ள 'கேலோ இந்தியா' போட்டியின் தொடக்க விழாவை மிகப் பிரமாண்டமாக நடத்திட தீர்மானித்திருக்கிறது தமிழக அரசு. அந்த விழாவுக்கு பிரதமரை அழைப்பதற்காகத்தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரைச் சந்தித்திருக்கிறார்.

உலக செஸ் போட்டியைப் போல  இன்னொரு பிரமாண்டமான விளையாட்டு விழாவை நடத்த தமிழக  அரசு தயாராகிறது.

டில்லிக்குச் சென்ற  உதயநிதி, திடீரென சோனியாவையும், ராகுலையும் சந்தித்தார். உதயநிதியின்  பயண நெறிமுறையில்  இடம்  பெறாத சந்திப்பு. இது  ஒரு மறைமுக  அரசியல் செய்தியை வெளிப்படுத்தி  உள்ளது. மோடிய  மிக மோசமாக விமர்சிக்கும் திராவிட முன்னேற்றக் கழகம்  பிரதமருக்கு உரிய  மரியாதையையும்  மதிப்பையும்  கொடுக்கிறது.

பாரதீய ஜனதாக் கூட்டணியில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேறிவிட்டது. தமிழகத்தில் பலமான  கூட்டணி  இல்லாமல் பாரதீய ஜனதா தவிக்கிறதுதமிழகத்துக்கு விஜயம் செய்த  பிரதமர்  மோடிபுதிய  கூட்டணிக்கு அச்சாரம் போட்டுள்ளார். விஜயகாந்த் மறைந்து ஆறு நாட்களின்  பின்னர் அவரை ஆகா, ஓகோ எனப் புகழ்ந்து தமிழகப் பத்திரிகைகளில் கட்டுரை  ஒன்றை எழுதி யுள்ளார்  பிரதமர் மோடி. அரைப் பக்கத்தில் வெளியான அந்த்க் கட்டுரை  பாரதீய ஜனதாவின் காவிக் கலர்  இல்லாமல் நீல நிறத்தில் வெளியானது ஆச்சரியத்தை 2014 ஆம்  ஆண்டு  மோடியு, விஜயகாந்தும்  ஒரெ கூட்டணியில் இருந்தார்கள். விஜயகாந்தின் தலைமையில் தமிழகத்தில் தேர்தலைச் சந்தித்த கூட்டணி  படுதோல்வியடைந்தது. அதன்   பின்னர்  மோடியும், விஜயகந்தும் சந்திக்கவில்லை. தொலைபேசியில் கூட சுக நலன் விசாரிக்கவில்லை. வருடக் கணக்காக விஜயகாந்த்  நோய்வாய்ப்பட்டிருந்தபோது மோடி திரும்பியும் பார்க்கவில்லை.

தமிழகத்துக்கு பலமுறை விஜயம் செய்த மோடி , விஜயகாந்தைக் கண்டு கொள்ளவில்லை. தன்க்குத் தேவையான தமிழக அரசியல்வாதிகளை டில்லிக்கு அழைத்த் விருந்து வைத்த மோடிவிஜயகாந்தைக் கண்டுகொள்ளவில்லை. விஜயகாந்த்  இறந்ஹ்ட  பின்னர் அவர்மீது மோடி அளவிலாத பற்று வைத்திருப்பது போல் காட்டிக்கொள்கிறார்.விஜயகாந்தின்  இறுதி  ஊர்வலத்தில் கலந்துகொண்ட மக்கள் கூட்டம்  மோடியின்  கண்ணை உறுத்தியுள்ளது.

விஜயகாந்த்  நோய்வாய்ப்பட்ட பின்னர் அவரது கட்சியை யாரும் கணக்கில் எடுக்கவில்லை. மோடியின் மறைமுக அழைப்பு விஜயகாந்தின் மனைவிக்கு  ஆறுதலைக்  கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 

No comments: