Wednesday, January 3, 2024

அவுஸ்திரேலியாவில் "பிங்க் டெஸ்ட் " போட்டி


 பாகிஸ்தான்,அவுஸ்திரேலியா ஆகியவற்றுக்கிடையேயான  மூன்றாவது டெஸ்ட் போட்டி  இன்று  புதன்கிழமை சிட்னியில்   நடைபெறுகிறது  சிட்னி கிரிக்கெட் மைதானத்தில்  நடைபெறும் இந்த ஆண்டின் முதல் டெஸ்ட் போட்டி ‘பிங்க் டெஸ்ட்’ என அழைக்கப்படுகிறது. போட்டியின் போது மைதானத்தைச் சுற்றியுள்ள ஸ்டாண்டுகள் மற்றும் அடையாளங்கள், நடுவில் உள்ள ஸ்டம்புகள் உட்பட அனைத்தும்  இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். அவுஸ்திரேலிய வீரர்கள்  பிங்க்  தொப்பி  அணிந்திருப்பார்கள்.

மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பரப்புவதே பிங்க் டெஸ்டின் நோக்கமாகும். முன்னாள் அவுஸ்திரேலிய வீரர் கிளென் மெக்ராத்தின் மனைவி ஜேன் புற்று நோயால் தமரணமானார். 2005 இல் மெக்ராத் தனது மனைவிக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட பிறகு மெக்ராத் அறக்கட்டளையைத் தொடங்கினார். இந்த அறக்கட்டளை கிரிக்கெட் அவுஸ்திரேலியாவுடன் இணைந்து  புற்றுநோய்  பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், நோயாளிகள் மற்றும் உயிர் பிழைத்தவர்களுக்காக நிதி சேகரிப்பதும்  இதன் நோக்கமாகும். அதன் வலைத்தளத்தின்படி, பிங்க் டெஸ்ட் அறக்கட்டளை அதன் முன்முயற்சிகளுக்காக $22 மில்லியனுக்கும் மேல் திரட்ட உதவியது.

புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஜேன் இறந்து ஒரு வருடம் கழித்து, 2009 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா ,தென்னாப்பிரிக்கா ஆகியவற்றுக்கிடையே  இடையே முதல் பிங்க் டெஸ்ட் நடந்தது.அவுஸ்திரேலியா-பாகிஸ்தான் ஆகியவற்ருக்கிடையே  இன்று நடைபெறுஅவ்து 16 ஆவது பின்க்க் டெஸ் போட்டியாகும். 

அவுஸ்திரேலியா இது வரை 15 பிங்க் டெஸ்டில்  போட்டிகளில் விளையாடிவிளையாடி 8 வெற்றி, 6 டிரா, ஒரு தோல்வியைச் சந்தித்தது. பிங்க் டெஸ்டில் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய ஒரே அணி இங்கிலாந்து.  2011  ஆம் ஆண்டு ஒரு இன்னிங்ஸ் மற்றும் 83 ஓட்டங்கள்  வித்தியாசத்தில்  இங்கிலாந்து வென்றது. வென்றது.

No comments: