இந்தியப்
பொதுத்தேர்தலுக்கு இன்னமும் சுமார் மூன்று மாதங்கள் உள்ளனன.
சகல அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு
ஆயத்தமாகி விட்டன. தேர்தல் எப்போது
நடக்கும் என்ற அறிவிப்பு உத்தியோக பூர்வமாக
அறிவிக்கப்படவில்லை. ஆனால், பாரதீய ஜனதாக்
கட்சி தேர்தல் பரப்புரையை ஆரம்பித்துவிட்டது.
"அயோத்திக்கு ராமர் மீண்டும்
வந்துவிட்டார்" என்ற பாரதீய ஜனதாவின்
கோஷம் வடமாநில
மக்களை எழுச்சியடையச் செய்துள்ளது. ஸ்ரீ ஜெய் ராம் எனும் உச்சரிப்பு மத உணர்வுகளைத்
தூண்டியுள்ளது. கடந்தகால
தேர்தல்களில் மோடியை முன்னிலைப்
படுத்தியே பாரதீய ஜனதாக் கட்சி
தேர்தல் பரப்புரை செய்தது. மாநிலத் தேர்தல்களில்
முதலமைச்சரைத் தெரிவிக்காது மோடி
தேர்தலில் போட்டியிடுகிறார் என்றே பாரதீய ஜனதா
அறிவிக்கும். மோடியின் முகத்திரையை எதிர்க் கட்சிகள் கிழித்துவிட்டன. ராகுலின்
பாத யாத்திரை வடமாநிலங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன.
அதலால்
தான் முழுமையடையாத ராமர் கோயிலுக்கு அவசரமாக அவசரமாக மும்பாபிஷேகம்
செய்யப்பட்டது. இந்திய
மடாதிபதிகள், சாதுக்கள் ஆகியோரின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது
நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் இலட்சக் கணக்கான மக்கள்
கலந்துகொண்டார்கள். மும்பாபிஷேகத்தில் திரண்ட
மக்களின் வாக்குகளை
அள்ளலாம் என பாரதீய ஜனதாக்
கட்சி கணக்குப் போடுகிறது. மத உணர்வுகளுக்கு
அடிமையாகும் வடமாநில மக்கள் அதற்கு
இரையாவார்கள் என்பது
வெளிப்படையானது.
ராமரின் சிலையை கர்ப்பக்கிரகத்தில் பிரதிஷ்டை செய்வதற்கு மோடிக்குத் தகுதில் இல்லை என்ற குற்றச்சாட்டை ராம பக்தர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், மோடிய ஏற்றுக்கொள்ளாத தமிழக மக்கள் ராமரையும் தேர்தலில் புறக்கணிப்பார்கள். தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் ராமரின் கோஷம் எடுபட்டது என்பதை தேர்தலின் போது பாரதீய ஜனதாக் கட்சி தெரிந்துகொள்ளும்.
பாரதீய
ஜனதாவைத் தூக்கித்தலையில் வைத்திருந்த எடப்பாடி பழனிச்சாமி, ராமர்
கோயில் கும்பாபிஷேகத்தால் தமிழக வாக்குகளைப் பெற
முடியாது என மிக
காட்டமாக தனது கருத்தைப் பதிவு
செய்துள்ளார்.
இந்தியாவின் எதிர்க் கட்சிகள் அனைத்தும் இன்றிணைந்தால் பாரதீய ஜனதாவை வீழ்த்தலாம் என்பது சாதாரண வாக்காளருக்குத் தெரிந்த உண்மை. பதவி ஆசை பிடித்த அரசியல் மாநில அரசியல் தலைவர்களினால் பாரதீய ஜனதாவை வீழ்த்த முடியவில்லை. 28 எதிர்க் கட்சிகள் இணைந்து "இந்தியா" என்ற கூட்டணைய உருவாக்கியதால் பாரதீய ஜனதா கலங்கியது. அதேவேளை இந்தியக் கூட்டணி நிலைக்காது எனச் சொல்லியது. இப்போது அது நிரூபணமாகிற நிலை தோன்றியுள்ளது.
தேசியக்
கட்சியான காங்கிரஸின் தலைமையில் தேர்தலைச்
சந்தித்த மாநிலக் கட்சிகள் இன்று வளர்ச்சியடைந்து
காங்கிரஸுக்கு எதிராக அரசியல் நடத்துகின்றன.
காங்கிரஸ் கட்சியின் ஆதரவால் வளர்ந்த மாநிலக்
கட்சிகளும், காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய தலைவர்களால் உருவாக்கப்பட்ட
கட்சிகளும் காங்கிரஸுக்கு மிகப் பெரிய எதிரியாக இருக்கின்றன.
தேசிய
அளவில் காங்கிரஸ் கட்சியை பல்வேறு மாநில
கட்சிகள் கழற்றிவிட தொடங்கி உள்ளன. இந்திய
நாடாளுமன்றத் தேர்தலில்
இந்திய கூட்டணியில் போட்டியிட மாட்டோம் என்று திரிணாமூல் காங்கிரஸ்
அறிவித்துள்ளது. தேசிய
அரசியலில் என்ன நடந்தாலும், எங்களுக்கு
கவலை இல்லை. நாங்கள் லோக்சபா
தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்று
மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணியில் இருக்கிறோம் . ஆனால்,
தனித்து போட்டியிடுவோம் என்று அவர் கூறியது
விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியும் தேர்தலில் தனித்து போட்டியிடும் என்று அறிவித்துள்ளது. காங்கிரஸ் உடன் இருக்க மனமின்றி பஞ்சாப்பில் ஆம் ஆத்மி இந்த முடிவை எடுத்துள்ளது. டெல்லியிலும், பஞ்சாப்பிலும் காங்கிரஸுடம் இருந்து ஆட்சியைப் பறித்த ஆம் ஆத்மி எச்சரிக்கையாக இருக்கிறது.
பீகாரில்
பாரதீய ஜனதாவை எதிர்த்த நிதீஷ்குமார்
மீண்டும் பாரதீய ஜனதாவுக்குச் செல்ல முயற்சிக்கிறார். இந்தியக்
கூட்டணிக்கு அத்திபாரமிட்ட நிதீஷ்குமார் வெளியேறுவது
ஆச்சரியமானதல்ல. நிதீஅஹ் குமாரின் கடந்தகால
அரசியல் செயல்பாடுகள் நிலையற்றதகவே உள்ளன. பாரதீய ஜனதாவுடன் இணைவதும், வெளியேறுவதும்
அவருக்கு சர்வ
சாதாரணமானது.
தமிழகத்தில்
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது
காங்கிரஸுக்கு 10 தொகுதிகளை
திராவிட முன்னேற்றக் கழகம் கொடுத்தது. இந்த
முறை ஒற்றை இலக்கத்தில்
தொகுதிகளைக் கொடுக்கப் போவதாக
செய்திகள் கசிந்துள்ளன. 15 தொகுதிகளுக்குக் குறி வைத்திருகும் காங்கிரஸுக்கு
இது பெரிய
அதிர்ச்சியாக உள்ளது.
பாரதீய
ஜனதாவில் இருந்து வெளியேறினால் சிறுபான்மைக்
கட்சிகள் ஒடி
வரும் எனக் கணக்குப் போட்ட
எடப்பாடி பழனிச்சாமி கலங்கிப் போயுள்ளார். இஸ்லாமிய, கிறிஸ்தவ அமைக்குகளைக் கூட்டி மாபெரும் கூட்டங்களை எடப்பாடி பழனிச்சாமி ஏற்பாடு செய்தார். எதிர்பார்த்த
பலனை அவை கொடுக்கவில்லை. பாரதீய
ஜனதாக் கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டோம்
என எடப்பாடி உரத்துச் சொன்னாலும், அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகம் திரும்ப வரும் என்ற
நம்பிக்கை பாஜகவுக்கு இருக்கிறது.
விஜயகாந்த் மறைந்த சோகத்தில் தமிழகம் இருந்த வேளையில் அவருடைய மனைவி பிரேமலதா அரசியல் பேசியதை எவரும் ஏற்கவில்லை. உச்சத்தில் இருந்த கட்சி பதாளத்தில் வீழ்ந்த போது விஜயகாந்தாலும் தூக்கி நிறுத்த முடியவில்லை. இந்த நிலையில் வாய்ச் சவடால் விடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் பிரேமலதா. விஜயகாந்த் இயக்கம் இல்லாமல் இருந்த போது பிரேமலதாவை நம்பி கூட்டணி வைக்க எந்தக் கட்சியும் முன்வரவில்லை.
கலைத்துறையில் சேவையாற்றியதற்காக விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருதை அறிவித்த இந்திய மத்திய அரசு பிரேமலதாவுக்குப் பொறிவைத்துள்ளது. பாரதீய ஜனதாவுடன் இணைந்து மத்திய அமைச்சராகிவிடலாம் என கனவில் பிரேமலதா இருக்கிறார். கட்சியை பாரதீய ஜனதாவுடன் இணைக்கும்படி டெல்லி மேலிடம் உத்தரவிட்டுள்ளதாம். பிரேமலதா அமைச்சராகப் போகிறாரா அல்லது விஜயகாந்தின் கனவை நிறைவேற்றப் போகிறாரா என்பதை அறிய அவரின் ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழகமே எதிர்பார்ப்புடன் இருக்கிறது.
No comments:
Post a Comment