இந்தியா இங்கிலாந்து ஆகியவற்றுக்கிடையே இடையே ஜனவரி 25 முதல் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் மீது ரசிகர்கள் பார்வை இருக்கும். அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களான இவர்கள் இருவரும் இந்தியா-இங்கிலாந்து இடையேயான தொடரின் மூலம் வரலாற்று சாதனை படைக்க இருக்கின்றனர். ரவிசந்திரன் அஸ்வின் , ஜேம்ஸ் அ ண்டர்சன் சரித்திரம் படைக்க தலா 10 விக்கெட்டுகள் மட்டுமே தேவை.
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான
இந்திய அணியை மட்டுமே தற்போது பிசிசிஐ அறிவித்துள்ளது. அதேசமயம், முழு தொடருக்கான
அணியையும் இங்கிலாந்து அறிவித்துள்ளது. அஸ்வின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய
அணியில் இடம்பெற்றுள்ளார் அஸ்வின் ,அண்டர்சனின் சாதனைகளைப் பற்றி பேசுகையில், ஒரு
குறிப்பிட்ட எண்ணிக்கையைத் தொடுவதற்கு இருவருக்கும் தலா 10 விக்கெட்டுகள் தேவை.
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் இதுவரை தனது டெஸ்ட்
வாழ்க்கையில் 690 விக்கெட்டுகளையும், இந்திய சுழற்பந்து வீச்சாளர் 490
விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். டெஸ்ட் போட்டிகளில் அண்டர்சன் 10
விக்கெட்டுகளை வீழ்த்தி 700 விக்கெட்களையும், ரவிசந்திரன் அஷ்வின் 10
விக்கெட்டுகளை வீழ்த்தி 500 விக்கெட்களையும் எடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு
எழுந்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது பந்துவீச்சாளராக ஜேம்ஸ் அண்டர்சனும், 9வது பந்துவீச்சாளர் அஷ்வினும் உள்ளனர். வருகின்ற டெஸ்ட் போட்டிகளில் 10 விக்கெட்டுகளை அண்டர்சன் வீழ்த்தினால், 700 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெறுவார். ஏனெனில் டெஸ்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர்கள் வரிசையில் இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், அவுஸ்திரேலியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னர் 708 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
சர்வதேச டெஸ்ட் வரலாற்றில் இந்திய அணிக்காக 500
அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர்
என்ற பெருமையை அஸ்வின் பெறுவார். இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர்
அனில் கும்ப்ளே டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்சமாக 619 விக்கெட்டுகளை வீழ்த்தி
முதலிடத்தில் உள்ளார். அஸ்வினுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு
வழங்கப்பட்டிருந்தால் இந்தச்சாதனையை அஸ்வின் நிகழ்த்தியிருப்பார்.
ரமணி
No comments:
Post a Comment