Monday, April 18, 2022

சென்னையின் வெற்றியை தட்டிப்பறித்த மில்லர்

குஜராத்துக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கைக்கு எட்டிய தூரத்தில் இருந்த சென்னையின் வெற்றியை டேவிட் மில்லர் தட்டிப்பறித்தார.

29-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை, குஜராத் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் குஜராத் கப்டன் ஹர்திக் பாண்டியா காயத்தால் விலகிய நிலையில் கப்டனாக செயல்பட்ட ரஷீத் கான் நானயச் சுழர்சியில்  வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய சென்னைக்கு ராபின் உத்தப்பா 3 (10)  ஏமாற்ற அடுத்து வந்த மொய்ன் அலி ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார்.

இதனால் 32/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய சென்னைக்கு அடுத்ததாக களமிறங்கிய அனுபவ வீரர் அம்பத்தி ராயுடு மற்றொரு இளம் தொடக்க வீரர் ருதுராஜ் கைக்வாட் உடன் இணைந்து சரிந்த சென்னையை மீட்டெடுக்க முயன்றார். 4-வது விக்கெட்டுக்கு பொறுப்பாகவும் அதிரடியாகவும் விளையாடிய  இந்த ஜோடி 92 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு சென்னையை மீட்டெடுத்தது. 4 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 46 (31) ஓட்டங்கள் எடுத்து ராயுடு ஆடமிழந்தார்.

 மறுபுறம் முதல் 5 போட்டிகளில் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து கடும் விமர்சனத்தை சந்தித்த ருதுராஜ் கைக்வாட் இந்த போட்டியில் பொறுப்புடனும் அதேசமயம் அதிரடியாகவும் விளையாடி 48 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் உட்பட 73 ஓட்டங்கள்கள் குவித்தார்.  . கடைசி நேரத்தில் கப்டன் ரவீந்திர ஜடேஜா அதிரடியாக 2 சிக்ஸர் உட்பட 22* (12) ஓட்டங்களும் சிவம் துபே 19 (17) ஓட்டங்களும் எடுத்தனர்.   20 ஓவர்களில் 5 விக்கெட் இழந்த சென்னை 169 ஓட்டங்கள் எடுத்தது. குஜராத் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக அல்சாரி ஜோசப் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

170 என்ற இலக்கை துரத்திய குஜராத்துக்கு தொடக்க வீரர் ,நம்பிக்கை நட்சத்திரம் சுப்மன் கில் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளிக்க அடுத்த ஓவரிலேயே தமிழக வீரர் விஜய் சங்கரும் டக் அவுட்டாகினார்.  அதற்கடுத்த ஓவரில் இளம் வீரர் அபினவ் மனோகரும் 12 (12) ஓட்டங்களில் நடையை கட்டியதால் 16/3 என ஆரம்பத்திலேயே  குஜராத் தடுமாறியது.

மற்றொரு தொடக்க வீரர் ரித்திமான் சாஹாவும் 11 (18) ஓட்டங்களில் அவுட்டானதால் 48/4 திண்டாடிய குஜராத்தின் தோல்வி உறுதி என அனைவரும் நினைத்தனர். ஆனால் அந்த நேரத்தில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர்   முதல் பந்திலிருந்தே பவுண்டரிகளை பறக்க விட்டு சென்னைக்கு மிகப் பெரிய தொல்லை கொடுத்தார். இடையில் ராகுல் திவாடியா 6 (14) ஓடங்களில் ஆட்டமிழந்தாலும் அதற்காக அசராத அவர் தொடர்ந்து அதிரடி சரவெடி பேட்டிங்கை வெளிப்படுத்தி அதுவரை சிறப்பாக செயல்பட்ட சென்னை பவுலர்களை தாறுமாறாக புரட்டி எடுத்தார்.

அவருக்கு ஜோடியாக கைகோத்த அக்ப்டன் ரஷித் கான் தனது பங்கிற்கு கடைசி நேரத்தில் அதிரடியாக  விளாசி சென்னைக்கு தொல்லை கொடுத்தார். கிறிஸ் ஜோர்டான் வீசிய 18-வது ஓவரில் 6, 6, 4, 6, 1, 2 என 25 ஓட்டங்கள்  அடித்ததால் சென்னையின் வெற்றி கேள்விக்குறியானது.

19வது ஓவரை பிராவோ 2 விக்கெட்டுகளை வீழ்த்தி 10 oddangகளை மட்டுமே விட்டு கொடுத்தார். சிஎஸ்கே அணியில் வேறு வீரர் இல்லாததால் , ஜார்டனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. கடைசி ஓவரில் ஒரு விக்கெட்டும் வீழ்ந்தது. ஆனால் பந்தின் உயரத்தின் காரணமாக அது நோ பால் என அறிவிக்கப்பட, ஃபிரி ஹிட்டில் பட்லர் பவுண்டரி விளாச, 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி பெற்றது.

இறுதியில் வெறும் 21 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் உட்பட 40 ஓட்டங்கள் எடுத்தார்.   கடைசி 3 ஓவர்களில் சென்னையின் தோல்வி கேள்விக்குறியானது.   டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல்  வெறும் 51 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 6 சிக்சர் உட்பட 94* ஓட்டங்கள் குவித்து வெற்றியை உறுதி செய்தார்.

19.5 ஓவர்களில் 170/7 ஓட்டங்கள் எடுத்த குஜராத் 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு 94* ஓட்டங்கள் விளாசி முக்கிய பங்காற்றிய டேவிட் மில்லர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இதன் காரணமாக இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் 5-வது வெற்றியை பதிவு செய்த குஜராத் 10 புள்ளிகளைப் பெற்று புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

  பிளே ஆஃப் சுற்று கனவைக் கண்டு கொண்டிருந்த சென்னையின் ஆசையில் குஜராத் மண்ணைப் போட்டுவிட்டது.  ஏனெனில் மறுபுறம் துடுப்பாட்டத்தில்  ஓரளவு சிறப்பாக செயல்பட்டு ஆரம்ப கட்டத்தில் பந்துவீச்சில் மிரட்டிய சென்னை கடைசி நேரத்தில் குறிப்பாக கடைசி 3 ஓவர்களில் ஓட்டங்களை வாரி வழங்கியதால் இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் 5-வது தோல்வியை பதிவு செய்து 9-வது இடத்தில் உள்ளது. இனிமேல் எஞ்சிய 8 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெறுவதற்கு சாத்தியம் குறைவு.

No comments: