இந்தியாவில் கொரோனா பரவல் மறைய தொடங்கியதை அடுத்து பிசிசிஐயின் தீவிர முயற்சி காரணமாக இந்த ஆண்டிற்கான பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது சரியாக திட்டமிடப்பட்டு மும்பை, புனே ஆகிய இரு நகரங்களில் உள்ளமைதானங்களில் நடைபெற்று வருகிறது இதுவரை நடைபெற்றுள்ள 29 லீக் ஆட்டங்கள் சிறப்பான முறையில் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பிரச்சனை ஐபிஎல் தொடரில் நுழைந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு
முன்னர் டெல்லி அணியை சேர்ந்த
பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் கொரோனா தொற்று காரணமாக
பாதிக்கப்பட்டார் என்ற தகவல் வெளியானது.
அதனை தொடர்ந்து தற்போது மேலும் டெல்லி
அணி வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியாக
வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதன்
காரணமாக டெல்லி அணி வீரர்கள்
கலந்துகொள்ள இருந்த பயிற்சி ரத்து
செய்யப்பட்டது. அதோடு அவர்கள் வேறு
எங்கும் செல்லக் கூடாது எனவும்
ஹோட்டல் அறையிலேயே மூன்று நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு
உள்ளதாகவும் அவர்களுக்கு விரைவில் பரிசோதனை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக
டெல்லி அணி அடுத்ததாக பஞ்சாப்
அணிக்கு எதிராக நடைபெற இருக்கும்
போட்டியில் பங்கேற்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த
ஆண்டு இதேபோன்று சரியாக திட்டமிடப்பட்டு ஐ.பி.எல் தொடரானது
நடைபெற்ற வேளையில் இடையில் சில வீரர்களுக்கு
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால்
பாதியில்
ஒத்திவைக்கப்பட்டு இரண்டாம் பாதி ஐக்கிய அமீரகத்தில்
நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
பிசியோதெரபிஸ்ட் பேட்டரிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்நிலையில் டெல்லி அணியை சேர்ந்த
நட்சத்திர ஆல்ரவுண்டர் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மிச்செல் மார்ஷ்க்கு
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
டெல்லி அணியின் மருத்துவர்
மற்றும் மீடியா குழுவைச் சேர்ந்த
ஒருவர் அதோடு மூன்று ஹோட்டல்
ஊழியர்கள் என ஆறுபேருக்கு
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால்
டெல்லி அணி முற்றிலுமாக தற்போது
தனிமைப் படுத்தப் பட்டுள்ளது. அதோடு மார்ஷ்க்கு பாதிப்பு
சற்று அதிகமாக உள்ளதால் அவரை
மருத்துவமனையில் அனுமதிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
No comments:
Post a Comment