Monday, July 2, 2018

ஸ்பெய்னை வெளியேற்றிய ரஷ்ய கோல்கீப்பர் அகின்ஃபீவ்


ரஷ்யாவில் நகரில் நடந்த லீக் போட்டியில் பலம் வாய்ந்த  ஸ்பெய்னை பனால்ரியில்  வென்றதன் மூலம் முதன் முதலாக கால் இறுதிப்  போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றது ரஷ்யா.  உலகக்கிண்ணப் போட்டியை நடத்தும் நாடு என்ற அந்தஸ்துடன் உலகக்கிண்னத் தொடரில் விளையாடுவதற்கு ரஷ்யா தகுதி பெற்றது. ஸ்பெய்ன்,எகிப்து,சவூதி அரேபியா ஆகியவற்றுடன் ஏ பிரிவில் ரஷ்யா இடம் பிடித்தது. பலமான ஸ்பெய்ன், எகிப்து ஆகியவற்றுக்கு எதிராக விளையாடும் ரஷ்யாவின் இரண்டாம் சுற்று வாய்ப்பு சந்தேகத்துடன் நோக்கப்பட்டது.


லீக் சுற்றில் சவூதியுடனான முதல் போட்டியை அதிரடியாக 5-0 என்ற கோல் கணக்குடனும். எகிப்துடனான போட்டியை 3-1 என்றகோல் கணக்குடனும்   வெற்றியுடன் முடித்தது ரஷ்யா.  போத்துகலுடனான போட்டியை 3-3 , மொராக்கோவுடன் 2-2 என சமப்படுத்திய ஸ்பெய்ன் .1-0 எனும் கோல் அடிப்படையில் ஈரானை வென்றது.


2014 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடிய ரஷ்யாவும் ஸ்பெய்னும் முதல் சுற்றுடன் வெளியேறின. முதன் முதலாக கால் இருதிப் போட்டியில் விளையாடும் முனைப்பில் விளையாடிய ரஷ்யா வெற்றி பெற்றது. . 1986 ஆம் ஆண்டு ஒன்ருபட்ட சோவியதாகக் களம் இறங்கி கால் இறுதிப் போட்டியில் விளையாடியபின் தனி நாடான ரஷ்யா இப்பொழுதுதான் கால் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

ஸ்பெய்னுக்கு பிறீகிக் வாய்ப்பு கிடைத்தது.  அந்தரத்தில் வந்த பந்தை ரமோஸ் கோலாக்க முயற்சிக்க இக்னாஷேவிச் அவரை முரட்டுத்தனமாகத்தள்ளினார். அப்போது இக்னாஷேவிச்சின் காலில் பட்ட பந்து கோல் கம்பத்தினுள் சென்று ஓன் கோலானது. . 11 ஆவது நிமிடத்தில் 1-0 என ரஷ்யா முன்னிலை பெற்றது.

38 ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்ரிவாய்ப்பை சரியாகப்பயன் படுத்திய ரஷ்யா கோல் அடித்ததால் 1-1 என சமநிலையானது. பெனால்ரிக்குக் காரணமான ஸ்பெய்ன் வீரர் ஜெரார்ட் பிகே சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக போட்டி முடிந்ததும் அறிவித்தார்.

ஸ்பெய்னும் ரஷ்யாவும் தலா ஒரு கோல்  அடித்த நிலையில் போட்டி முடிவடைந்ததால் மேலதிகமாக30 நிமிடங்கள் வழங்கப்பட்டது.   அப்போதும் வெற்றிக் கோல் அடிக்கப்படாமையால் வெற்றியை முடிவு செய்ய இரண்டு அனிகளுக்கும் தலா ஐந்து பெனால்ரி வழங்கப்பட்டது.
ஸ்பெயினின் வீரர்கள் வசம் 70% பந்து இருந்தது. ஆனாலும் அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை.  மேலதிக 30 நிமிடங்களில் ரஷ்யா சுமார் 5% மட்டுமே பந்தை வசப்படுத்தியது.
ஸ்பெயினின் அணித்தலைவர் முதலில் பெனால்ரியை அடிக்க  விருப்பம் தெரிவித்தார்.
இனியெஸ்டா முதலாவது பெனால்ரியை  கோலாக்கினார். 1-0 என ஸ்பெய்ன் முன்னிலை பெற்றது.
ரஷ்யாவின் ஸ்மோலோவ் முதல் பெனால்ரிய கோலாக்க 1-1 என சமமானது.

ஸ்பெயினின் பிகே கோல் அடிக்க 2-1 என ஸ்பெய்ன் முன்னிலை பெற்றது.

ஓன் கோல் அடித்து ஸ்பெயினை முன்னிலைப்  படுத்திய இக்னோஷேவிச் கோல் அடிக்க 2-2 என ரஷ்யா சமப்படுத்தியது.

மூன்றாவது பெனால்ரியை ஸ்பெயினின் கோக்கோ அடிக்க,  ரஷ்யாவின் கோல் கீப்பர் அகின்ஃபீவ் அதனைத் தடுத்தார்.  ரஷ்ய  ர்சிகர்களின் உற்சாகக்குரலால் மைதானம் அதிர்ந்தது. 2-2 என்ற சமநிலை தொடர்ந்தது
.
ரஷ்யாவின் கோலோ பெனால்ரி அடிக்கத் தயாரான போது, அது கோலாகக்கூடாது என ஸ்பெய்ன் ரசிகர்களும், கோல் அடித்து முன்னிலை பெற வேண்டும் என ரஷ்ய வீரர்களும் பிரார்த்தித்தனர். கோலோ கோலடிக்க மைதானம் மீண்டும் அதிர்ந்தது. 3-2 என ரஷ்யா முன்னைலை பெற்றது

.ரோமோஸின் பெனால்ரி கோலாக 3-3 என போட்டி சமமானது.

ரஷ்ய வீரர் செரிஷேவ் நேர்த்தியாகக் கோல் அடித்தார். 4-3 என ரஷ்யா முன்னிலைபெற்றது.

அஸ்பாஸ் பெனால்ரி அடிக்கத் தயாரானபோது ஒட்டு மொத்தக் கவனமும் அவர் மீது விழுந்தது. அஸ்பாஸ் ஓடிச்சென்று பந்தை அடித்தார். ரஷ்ய கோல்கீப்பர் அகின்ஃபீவ் வலது பக்கமாகப் பாய்ந்தார். பந்து அவருக்கு இடது பக்கமாகச் சென்றது. கண் இமைக்கும் நேரத்தில் தனது இடதுகாலை  அகின்ஃபீவ்  உயர்த்தினார்  அப்போதுஅவருடைய அதிர்ஷ்டம், ஸ்பெயினின் துயரம் காலில் பட்ட பந்து வெளியே போனது. 4-3 கோல் என ரஷ்யா முன்னிலை பெற்றதால் ஐந்தாவது பெனால்ரி கைவிடப்பட்டது. 25 முறை கோல் அடிப்பதற்கு ஸ்பெய்ன் முயற்சித்தது.
உதைபந்தாட்டப் போட்டியை நடத்தும் நாட்டுக்கு எதிராக பெனால்ரியில் தோல்வியடையும் துயர சம்பவம் இம்முறையும் தொடர்ந்தது.

 1934 ஆம் ஆண்டு இத்தாலியில் நடந்த உலகக்கிண்னப் போட்டியில் இத்தாலியிடம்  பெனால்ரியில் தோல்வியடைந்தது. தென்.கொரியா, இங்கிலாந்து  ஆகியவற்றிடமும்  பெனால்ரியில் ஸ்பெய்ன் தோல்வியடைந்தது. அலகக்கிண்ணம் ,ஐரோப்பிய சம்பியன் போட்டி ஆகியவற்ரில் நடத்தும் நாடுகளிடம் நொக்  அவுட் சுற்ரில்  பெனால்ரியில் தோல்வியடைந்த துயரம் இன்று வரை தொடர்கிறது.

Sunday, July 1, 2018

உருகுவேயின் பலத்தால் வெளியேறியது போத்துகல்


ரஷ்யாவின் சோச்சி  நகரில் நடைபெற்ற லீக் போட்டியில் போத்துகலும் உருகுவேயும் மோதின.  ரொனால்டோ என்ற நட்சத்திரத்தை மட்டுமே போத்துகல் நம்பி இருந்தது. சுவாரஸ்,கவானி ஆகியவர்களுடன் பலமான அணியாக உருகுவே களம் இறங்கியது. உருகுவேயின் பலமான ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாத போத்துகல் 2-1 என்ர கோல்கணக்கில் தோல்வியடைந்து முதல் சுற்றுடன் வெளியேறியது.

உருகுவேயும் போத்துகலும் லீக் போட்டியில் தோல்வியடையாமல்  இரண்டாவது சுற்றுக்கு முன்னேறின. எகிப்தையும் சவூதியையும் 1-0 என்ற கோல்கணக்கில் வென்ற உருகுவே, ரஷ்யாவை 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது. உருகுவேக்கு எதிராக கோல் அடிக்கப்படவில்லை.
 லீக் சுற்றில் முதலில் ஸ்பெயினைச் சந்தித்த போத்துகல் 3 -3 என்ர கோல்கணக்கில் சமப்படுத்தியது. 1-0 என்ர கோல்கணக்கில் மொராக்கோவை வென்றது. ஈரானுடனான போட்டி போத்துகலுக்கு ஈடாட்டம் கொடுத்தது. ஈரானை போத்துகல் வென்றுவிடும் என ஒட்டு மொத்த ரசிகர்களும் நம்பிக்கொண்டு இருந்தனர்.  1-1 என்ற கோல்கணக்கில் போத்ஹ்டுகலுக்கு எதிரான போட்டியை ஈரான் சமப்படுத்தியதால் ரசிகர்கள் ஆச்ச்சரியமடைந்தனர்.


போத்துகலுக்கும் உருகுவேக்கும் இடயிலான போட்டியின் 7 ஆவது நிமிடத்தில் கவானி கோல் அடிக்க உருகுவே முன்னிலை பெற்றது.பதில் கோல் அடிக்க போத்துகல் முயற்சி செய்தது. அதன் முயற்சிகள் அனைத்தும் உருகுவேயின் பலமான தடுப்பரணைத் தாண்டி செல்ல முடியவில்லை. 

55 ஆவது நிமிடத்தில் போத்துகல் வீரர் பீபே கோல் அடிக்க 1-1 என சமநிலையானது. 62 ஆவது நிமிடத்தில் கவானி கோல் அடிக்க 2-1 என உருகுவே முன்னிலை பெற்றது.  கோல் அடிப்பதற்காக இறுதிவரை போராடிய  போத்துகல் தோல்வியுடன் வெளியேறியது. 
உருகுவே வீரர்கள் வசம் 30% தான் பந்து இருந்தது. போத்துகல் கோல் அடிப்பதற்காக 20 முறை முயற்சி செய்தது.

  2006 ஆம் ஆண்டு முதல் உலகக்கிண்ணப் போட்டியின் நொக் அவுட் சுற்றில் மெஸ்ஸியும் ரொனால்டோவும் கோல் அடித்ததில்லை. அதேவேளை மற்றைய வீரர்கள் கோல் அடிக்க உதவவில்லை என்பது கசப்பான புள்ளி விபரம்.


ஆட்ட நாயகன் எடின்சன் கவானி,   இந்த உலகக்கிண்ணப் போட்டியில் தனது கோல் கணக்கை 3ஆக உயர்த்தியுள்ளார். மொத்தமாக 45 கோல்களை சர்வதேச போட்டிகளில் அடித்துள்ளார் உருகுவே முதல் முறையாக உலகக்கிண்ண வரலாற்றில்  முதல் 4 போட்டிகளை வென்றுள்ளது.

அதிர்ஷ்டமில்லாத ஆர்ஜென்ரீனா


ரஷ்யாவில் நடைபெறும் உலகக்கிண்ண லீக்  போட்டியில் ஆர்ஜென்ரீனாவும் பிரான்ஸும் கஸான் நகரில் ஆர்ஜென்ரீனாவின் மெஸ்ஸி, பிரான்ஸின் கிரிஸ்மான் ஆகியோருக்கு இடையிலான போட்டியாகவும் இது அமைந்தது.  2014  ஆம் ஆண்டு தங்கக் காலணியையும் ஐந்து முறை ஃபிபாவின் விருதையும் வென்ற மெஸ்சியின் மீது  மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. பரபரப்புக்குப் பஞ்சமில்லாத போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வெற்றி பெற்றது.

பீலே, மரடோனா ஆகியோருடன் ஒப்பிட்டுப் பேசப்படுபவர் மெஸ்ஸி. மெஸ்ஸியின் தலமையிலான் ஆர்ஜென்ரீனா கோபா அமெரிக இறுதிப் போட்டியிலும், 2014 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததால் தன்னை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருந்தார். கிரின்மானின் நிலை  இதற்கு எதிர்மாறாக இருந்தது. பிரான்ஸ் ஒரு முறை சம்பியனாகியது. இம்முறை பிரான்ஸ் சாதிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழவில்லை.

லீக் சுற்றில் டி பிரிவில் இடம் பெற்ற ஆர்ஜென்ரீனா முதல் போட்டியை   அறிமுக அணியான ஐஸ்லாந்துக்கு எதிராக 1-1 என வெற்றி தோல்வியின்றி முடித்தது. செய்தது. இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி, பெனால்டி கிக் வாய்ப்பை தவறவிட்டது கடும் விமர்சனத்துக்கு ஆளானது. இதைத் தொடர்ந்து குரோஷியாவுக்கு எதிரான போட்டியில்  3-0 என படுதோல்வி கண்டது.

எனினும் கடைசி லீக் போட்டியில்  நைஜீரியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் தனது பிரிவில் 4 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.
 நைஜீரியா அணிக்கு எதிரான போட்டியில்  மெஸ்ஸியும் மார்கஸ் ரோஜோவும் கோல் அடித்தனர். லீக் சுற்றில் 3  போட்டிகளில் 5 கோல்களை வாங்கியுள்ளது அர்ஜென்டினா. அதிலும் குரோஷியாவுக்கு எதிராக மட்டும் 3 கோல்களை பெற்றது.

பிரான்ஸ்  லீக் சுற்றில்இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று,  ஒரு போட்டியைச் சமப்படுத்தியது. 7 புள்ளிகள் பெற்று சி பிரிவில் முதலிடம் பிடித்து அசத்தியிருந்தது. அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 2-1 என்ற கோல் கணக்கிலும்  பெருக்கு எதிராகல் 1-0 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்ற பிரான்ஸ்  டென்மார்க் அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தை கோல்களின்றி சமப்படுத்தியது.  லீக் சுற்றில்  தோல்வியடையாது   நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது  பிரான்ஸ்.

லீக் சுற்றின் 3 போட்டிகளிலும்  3 கோல்கள் மட்டுமே அடித்துள்ளது. அதிலும் ஒரு கோல் எதிரணி வீரரால் அடிக்கப்பட்ட ஓன் கோல்.இ மற்றொன்று பெனால்டியில் கிடைத்தது. அதேவேளையில் தற்காப்பு ஆட்ட வியூகத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ள பிரான்ஸ் ஒரு கோலை மட்டுமே வாங்கி உள்ளது. இந்த கோலும் பெனால்டி கிக் வாய்ப்பில் எதிரணியினரால் அடிக்கப்பட்டதுதான். 1998-ல் சாம்பியன் பட்டம் வென்ற போதும் பிரான்ஸ் அணி இதுபோன்று தற்காப்பு ஆட்டத்தில் அதீத பலத்துடன் காணப்பட்டது.


8 ஆவது  நிமிடத்தில் கிளியான் மாபேவை, பாக்ஸ் பகுதிக்கு வெளியே அர்ஜென்டினா வீரர் ஜேவியர் மஸ்செரேனோ தள்ளிவிட்டார். இதனால் பிரான்ஸ் அணிக்கு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. இதில் இலக்கை நோக்கி அன்டோனி கிரீஸ்மான் அடித்த பந்து கோல் போஸ்டில் பட்டு விலகிச் சென்று ஏமாற்றம் அளித்தது.

11 ஆவது நிமிடத்தில் பெனால்டி பகுதிக்குள் வைத்து பிரான்ஸ் வீரர் கிளியான் மாபேவை ஆர்ஜென்ரீனாவின் மார்கஸ் ரோஜோ தள்ளினார் செய்தார். இதனால் பிரான்ஸ் அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதை பயன்படுத்தி கீரிஸ்மான் கோல் அடிக்க பிரான்ஸ் அணி 1-0 என முன்னிலை பெற்றது.
 21 ஆவது நிமிடத்தில் ஃப்ரீ கிக் மூலம் பால் போக்பா, பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து அடித்த பந்து கோல்கம்பத்துக்கு மேலாகச் சென்றது.
22 ஆவது நிமிடத்தில் ஆர்ஜென்ரீனாவின் எவர் பனேகா அடித்த பந்து தடுக்கப்பட்டது.


40 ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினா பதிலடி கொடுத்தது. எவர் பனேகா உதவியுடன் பந்தை பெற்ற ஏஞ்சல் டி மரியாஇ பாக்ஸ் பகுதிக்கு வெளியில் 35 யார்டு தூரத்தில் இருந்து வலுவாக அடித்த ஷாட்இ உயரமாக கர்லிங் முறையில் சுழன்றபடி கோல்கம்பத்தின் வலது ஓரமாக கோல் வலையை துளைத்தது. இதனால் முதல் பாதி ஆட்டம் 1-1 என சமநிலையை அடைந்தது.

48 ஆவது நிமிடத்தில் கப்ரியல் மெர்காடோகோல் அடித்தார். ஆர்ஜென்ரீனா 2-1 என முன்னிலை பெற்றது.

 57 ஆவது நிமிடத்தில் பெஞ்சமின் பவார்ட் கோல் அடிக்க 2-2 என சமமானது.

64 , 68 ஆவது நிமிடங்களில்  கிளியான் மாபே  இரண்டு கோல்கள் அடிக்க  4-2 என பிரான் முன்னிலை பெற்றது.
நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் அர்ஜென்டினா அணியால் மேற்கொண்டு கோல் அடிக்க முடியாமல் போனது.

  காயங்களுக்கு இழப்பீடாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இதில் 3-வது நிமிடத்தில் லயோனல் மெஸ்ஸி உதவியுடன் பந்தை பெற்ற அர்ஜென்டினாவின் அகுரோ தலையால் முட்டி கோலாக்கினார்.
ஆட்ட நேர முடிவில் 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரான்ஸ் கால் இறுதிக்கு முன்னேறியது.


உலகக்கிண்ண வரலாற்றில் ஒரு போட்டியில்  இரண்டு கோல்கள் அடித்த இளம் வீரர் என்ற சாதனையில் பிறேஸில் ஜாம்பவான் பீலேவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தார் பிரான்ஸின் வீரர் மாப்பே.

1958 ஆம் ஆண்டு நடந்த உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் 17 வயதான பீலே அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்தார். 60 வருடங்களுக்குப் பின்னர் 19 வயதான ஒரு போட்டியில் இரண்டு கோல்கள் இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்தார்.

Saturday, June 30, 2018

உலகக்கிண்ண ஆச்சரியத் துளிகள்


ரஷ்யாவில் நடைபெறும் 21 ஆவது உலகக்கிண்ணப் போட்டியின் ஆச்சரியத்துளிகள்.
 5 கண்டங்கள்.
32 நாடுகள்.
376 வீரர்கள்.
62 போட்டிகள்
முதல் சுற்று வரை 48  போட்டிகள் முடிந்துள்ளன.

லீக் சுற்றில் 48  போட்டிகளில் 122 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. இதில் 9 கோல்கள் ஓன் கோல்களாகும். இதன் மூலம் உலகக்கிண்ண வரலாற்றில்   அதிக ஓன் கோல்கள் அடிக்கப்பட்ட தொடராக ரஷ்ய உலகக் கோப்பை தொடர் மாறி உள்ளது. 11 கோல்கள் பெனால்ரி மூலம் அடிக்கப்பட்டன.

அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் இங்கிலாந்தின் ஹாரி கேன் உள்ளார். அவர், 3 போட்டிகளில் 5 கோல்கள் அடித்துள்ளார். பெல்ஜியத்தின் ரோமுலு லுகாகு,போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியார் தலா 4 கோல்களுடன் 2-வது இடத்திலும், ரஷ்யாவின் டெனிஸ் செரிஷேவ்,ஸ்பெயினின் டிகோ கோஸ்டா ஆகியோர் தலா 3 கோல்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.


இவை தவிர உருகுவேயின் லூயிஸ் சுவாரஸ், பிறேஸிலின் கோடின்ஹோ உள்ளிட்ட 13 பேர் தலா இரு கோல்கள் அடித்துள்ளனர். மெஸ்ஸி, நெய்மர் உள்ளிட்ட 68 பேர் தலா ஒரு கோல் அடித்துள்ளனர்    இடதுகால்,வலதுகால்,பெனால்ரி, தலை  ஆகியவற்ரின் மூலம் கோல் அடிக்கப்பட்டன. இந்த நான்கு வகையிலும் கோல் அடித்த ஒரே ஒரு வீரர் ரொனால்டோ மட்டும் அதேவேளை பெனால்ரி அடிக்காத வீரராகவும் ரொனால்டோவின் பெயர் பதியப்பட்டுள்ளது.
மஞ்சள் அட்டை 158  , சிவப்பு அட்டை 3,   36,349 முறை பந்து பாஸ் செய்யப்பட்டது.

நெய்மர் 17 முறை கோல் அடிக்க முயற்சி செய்துள்ளார். டென்மாக் வீரர் எரிக்சன் 36 கிமீ வேகத்தில்  ஓடியுள்ளார். ஜேர்மனி வீரர் ரொனி குறூஸ் 310 முறை பந்தை சரியான முறையில் பாஸ் செய்துள்ளார். மெக்ஸிகோ கோல் கீப்பர் ஒச்சோ  17 கோல்கலைத் தடுத்து சாதனை செய்துள்ளார்.
பெல்ஜியம்,துனீஷியா ஆகியவற்றுக்கிடையேயானபோட்டியில் அதிக பட்சமாக 9 கோல்கள் அடிக்கப்பட்டன. அதி கூடிய 8 மஞ்சள் அட்டைகள் காட்டப்பட்டன.  பெல்ஜியம் 5 கோல்களும் தினீஷியா 2 கோல்களும் அடித்தன. பெல்ஜிய்ததுகு எதிராக 3 மஞ்சள் அட்டையும் பனாமாவிக்கு எதிராக  5 மஞ்சள் அட்டையும் காண்பிக்கப்பட்டன.


இரண்டு போட்டிகளில் விளையாடிய இங்கிலாந்து வீரர் ஹரி கேன், 153 நிமிடங்கள் களத்தில் நின்று 5 கோல்கள் அடித்துள்ளார்.வலதுகாலால் இரண்டு கோல்களும் தலையால் முட்டி ஒரு கோலும் அடித்துள்ளார்.
 இரண்டு போட்டிகளில் விளையாடிய பெல்ஜியம் வீரர் லுகாலு  149 நிமிடங்கள் களத்தில் நின்று 4 கோல்கள் அடித்துள்ளார்.இடதுகாலால் இரண்டு கோல்களும் வலது காலால் ஒரு கோலும் தலையால் முட்டி ஒரு கோலும் அடித்துள்ளார்.


மூன்று போட்டிகளில் விளையாடிய  போத்துகல் வீரர் ரொனால்டோ, 270 நிமிடங்கள் களத்தில் நின்று 4 கோல்கள் அடித்துள்ளார். இடது காலாலும் வலது காலாலும் தலையால் முட்டியும், பெனால்ரியிலும் தலா ஒரு கோல் அடித்துள்ளார்.

Friday, June 29, 2018

உலககிண்ணத்தில் உள்ளே வெளியே நாடுகள் விபரம்.


ரஷ்யாவில் நடைபெறும்வது   உலகக்கிண்ணப் போட்டியில் லீக் சுற்று முடிவடைந்து லீக்கில் விளையாடும் 16 நாடுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.  . அதில் விளையாடும் 16 நாடுகளில் 10 நாடுகள் ஐரோப்பாவைச் சேர்ந்தவை. ஆசியாவில் இருந்து ஜப்பான் முன்னேறியுள்ளது இதுவரை 20 உலகக்கிண்ணப் போட்டிகள் நடைபெற்றுள்ளன. பிறேஸில்,ஆர்ஜென்ரீனா,உருகுவே,ஜேர்மனி,இத்தாலி,ஸ்பெய்ன்,இங்கிலாந்து,பிரான்ஸ் ஆகிய எட்டு நாடுகள் உலகக்கிண்ன சம்பியனாகின. முன்னாள் சம்பியனான இத்தாலி, உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி  பெறவில்லை. நடப்புச் சம்பியனான ஜேர்மனி முதல் சுற்றுடன் வெளியேறியது. மற்றைய நாடுகள் இரண்டாம் சுற்றுக்குத் தெரிவாகியுள்ளன.

 ஃபிபாவின் சார்பில் உலகெங்கும் உள்ள 5 உதைபந்தாட்ட கூட்டமைப்புகள் உலகெங்கும் நடத்திய தகுதிச் சுற்றுப் போட்டிகளில் வென்ற நாடுகளே உலகக்கிண்ணப் போட்டியில் விளையாட தகுதி பெற்றன. அதன்படி ஐரோப்பிய கூட்டமைப்பு நடத்திய போட்டிகளில் வென்று, 14 நாடுகளும்,  . ஆசியாவில் இருந்து 5 நாடுகளும், ஆப்பிரிக்காவில் இருந்து 5 நாடுகளும், தென் அமெரிக்காவில் இருந்து 5 நாடுகளும்,  வட அமெரிக்காவில் இருந்து 3 நாடுகளும்,  உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன.
  
தற்போது முதல் சுற்று லீக் ஆட்டங்கள் முடிந்துஇ நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் துவங்க உள்ளன. இதில் ஐரோப்பாவில் இருந்து முன்னாள் சாம்பியன்களான ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து, ஆகியவற்றுடன் ரஷ்யா, பெல்ஜியம்,குரேஷியா,டென்மார்க்,   போத்துகல், சுவீடன், சுவிட்சர்லாந்து என 10 ஐரோப்பிய நாடுகள் நொக் அவுட்  சுற்றுக்கு முன்னேறியுள்ளன. அறிமுக அணியான ஐஸ்லாந்து, செர்பியா, போலந்து,நடப்பு சம்பியன் ஜேர்மனி ஆகியவை வெளியேறின. 


ஆசியா பிரிவில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று அவுஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், சவுதி அரேபியா,தென் கொரியா ஆகியவை உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன. இதில் ஜப்பான் மட்டுமே நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.முன்னேறியுள்ளது. அவுஸ்திரேலியா, ஈரான், சவுதி அரேபியா, தென்கொரியா ஆகியன முதல் சுற்றுடன் வெளியேறின.

ஆப்பிரிக்காவில் இருந்து எகிப்து, மொராக்கோ,நைஜீரியா, செனகல்,துனீஷியா ஆகியவை உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளன. இந்த அணிகள் அனைத்தும் முதல் சுற்றுடன் வெளியேறின. நட்சத்திர வீரர் மொகம்மது சலாவின் எகிப்து மீது தனி எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால்இ அது ஏமாற்றியது. அதே நேரத்தில் நைஜீரியா, துனீஷியா,செனகல் ஆகியவை சிறப்பாக செயல்பட்டன.

வட அமெரிக்கா பிரிவு தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்ற கோஸ்டாரிகா, மெக்சிகோ, அறிமுக அணியான பனாமா ஆகியவை உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடின. இதில் மெக்சிகோ மட்டும் நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

தென் அமெரிக்காவில் இருந்து ஆர்ஜென்ரீனா,பிரேசில், கொலம்பியா, பெரு,உருகுவே ஆகியவை உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன.  இதில் எதிர்பார்த்ததை போலவே முன்னாள் சாம்பியன்களான ஆர்ஜென்ரீனா,பிறேஸில், பிரேசில், உருகுவே ஆகியவற்றுடன் கொலம்பியாவும் நொஅவுட் பிரிவுக்கு முன்னேறியது. பெரு வெளியேறியது.



Thursday, June 28, 2018

ஜேர்மனியை வெளியேற்றிய தென்.கொரியா


பிறேஸிலில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைக் கையில் ஏந்தி பெருமையுடன் நாடு திரும்பிய ஜேர்மனி, 2018 ஆம் ஆண்டு முதல் சுற்றுடன் அவமானமாக நாடு திரும்பும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

1938க்குப் பிறகு ஜேர்மனி உலகக்கிண்ணப் போட்டியிலிருந்து முதல் சுற்றுடன் வெளியேறியுள்ளது. தொடர்ச்சியாக மூன்று  உலகக்கிண்ணப்  போட்டிகளில் நடப்பு சாம்பியன் அணி முதல் சுற்றுடன் வெளியேறும் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.   2002-ம் ஆண்டில் பிரான்ஸ் அணி நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களம் கண்டு முதல் சுற்றுடன் வெளியேறியது.    2010-ம் ஆண்டில் நடப்பு சாம்பியன் இத்தாலியும்இ 2014-ம் ஆண்டில் நடப்பு சாம்பியன் ஸ்பெயினும் முதல் சுற்றுடன் வெளியேறின. இந்த வரலாற்றுப் பட்டியலில் ஜேர்மனியும் இடம் பிடித்துள்ளது. மெக்ஸிக்கோவுக்கு எதிரான் போட்டியில் 1- 0 என்ற கோல்கனக்கில் தோல்வியடைந்த ஜேர்மனி ,சுவீடனுக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது

தரவரிசையில் முதலிடத்தில் இடத்தில் இருக்கும் ஜேர்மனிக்கு தோல்வியில் இருந்து மீண்டு வருவது பெரிய விடயமல்ல. கடைசிப் ஓட்டியில் தென்.கொரியாவை ஜேர்மனி எதிர்கொண்டது. ஆசிய நாட்டுக்கு எதிராக பெரிய  வெற்றியைப் பெற்று ஜேர்மனி அடுத்த சுற்றுக்குச் செல்லும் என ரசிகர்கள் உறுதியாக நம்பினார்கள்.  உதைபந்தாட்ட உலகின் குட்டி நாடான தென்.கொரியா, நடப்பு சம்பியனான ஜேர்மனியை வெளியேற்ரும் என யாரும் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். தென்.கொரிய வரலாற்றில் இது பொன் எழுத்துகளால் பொரிக்கப்பட வேண்டிய நாள். ஜேர்மனியில் வரலாற்றில்  இது  கறுப்புதினம்.

  ‘எப் பிரிவில்  நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில்  நடப்பு சம்பியன் ஜேர்மனி  , ஆசிய கண்டத்தை சேர்ந்த தென்கொரியாவை எதிர்கொண்டது. இதில் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும் என்ற நெருக்கடியுடன் ஜேர்மனி   களம் கண்டது.  ஜேர்மனி அணியில் அதிக அளவில் நட்சத்திர வீரர்கள் இடம் பெற்று இருந்தனர். அந்த அணியின் பயிற்சியாளர் ஜோசிம் லோ வும் அணியை சிறப்பாக வழிநடத்துவதில் ஆற்றல் படைத்தவர். இதனால் இந்த போட்டி தொடரில் சம்பியனாகும் அணிகளில் ஒன்றாக ஜேர்மனி கருதப்பட்டது.

ஆனால் தென்கொரியா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஜேர்மனி அணி தன் மீதான எதிர்பார்ப்பை நிறவேற்ற முடியாமல் ஏமாற்றம் அளித்தது. ஜேர்மனி  அதிக நேரம் பந்தை தன்வசம் வைத்து இருந்தாலும் (70 சதவீதம்) கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை. தென்கொரியா அணியின் தடுப்பு அரணை தகர்க்க ஜேர்மனி வீரர்கள் எடுத்த பல முயற்சிகள் தோல்வியில் தான் முடிந்தது. தென்கொரியா அணியின் கோல்கீப்பர் ஜோ ஹெயினூ அபாரமாக செயல்பட்டு ஜேர்மனி வீரர்களின் 20-க்கும் மேற்பட்ட ஷாட்களை முறியடித்து சிம்மசொப்பனமாக விளங்கினார்.

கோல் எதுவும் அடிக்காதஹால்  ஜேர்மனி வீரர்கள் கடைசி கட்டத்தில் பதற்றத்துடன் விளையாட ஆரம்பித்தனர். அதனை தென்கொரியா வீரர்கள்  சரியாக பயன்படுத்தி கொண்டனர். வீரர்கள் காயம் உள்ளிட்ட விரயத்துக்காக வழங்கப்படும் நேரத்தில் (இஞ்சுரி டைம்) தென்கொரியா அணி அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. கார்னர் வாய்ப்பில் தென்கொரியா வீரர் கிம் யங்வோன் முதல் கோல் அடித்தார். அதனை நடுவர் ஆப்-சைடு என்று தெரிவித்தார். ஆனால் தென்கொரியா வீரர்களின் அப்பீலை அடுத்து வீடியோ உதவி நடுவர் தொழில்நுட்பத்தை ஆய்வு செய்த நடுவர் கோல் என்று அறிவித்தார். இதனால் பதில் கோல் திருப்ப ஜேர்மனி அணியின் கோல்கீப்பர் உள்பட எல்லா வீரர்களும் முன்னால் இறங்கி ஆடினார்கள். அந்த நேரத்தில் தென்கொரியா அணியின் கேப்டன் சன் ஹிங்மின் பந்தை எளிதாக கடத்தி சென்று 2-வது கோலை அடித்தார்.


முடிவில் தென்கொரியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜேர்மனிக்கு அதிர்ச்சி அளித்தது. இந்த தோல்வியால் ஜேர்மனி அணி தனது பிரிவில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு  அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது. தென்கொரியா அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாவிட்டாலும்  பெரிய அணியை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்ததுடன்  தனது பிரிவில் 3-வது இடத்தை பெற்ற மகிழ்ச்சியுடன் போட்டியில் இருந்து விடைபெற்றது.

இதேபிரிவில் மற்றொரு கடைசி லீக் ஆட்டம் எகடெரின்பர்க் நகரில் நடந்தது. இதில் மெக்சிகோ-சுவீடன் அணிகள் சந்தித்தன. வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்குள் நுழைய வாய்ப்பு ஏற்படும் என்ற நிலையில் சுவீடன்  களம் இறங்கியது. இதில் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை.

பிற்பாதியில் அடுத்தடுத்து 3 கோல்கள் அடித்த சுவீடன் அணி 3-0 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தியது. சுவீடனின்   அகஸ்டின்சன் 50-வது நிமிடத்திலும், கப்டன் கிரான்விஸ்ட் ‘பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி 62-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். 74-வது நிமிடத்தில் சுவீடன் வீரர் அடித்த பந்தை மெக்சிகோ வீரர் அல்வரேஸ் தடுக்கையில் அது சுயகோலாக மாறியது.

எப் பிரிவில் லீக் ஆட்டம் முடிவில் சுவீடன், மெக்சிகோ ஆகியன  தலா 2 வெற்றி ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றன. கோல் விகிதாசாரம் அடிப்படையில் சுவீடன்   முதலிடத்தை பிடித்தது. மெக்சிகோ   2-வது இடம் பெற்றது


Wednesday, June 27, 2018

ஆர்ஜென்ரீனாவைக் காப்பாற்றிய வெற்றி


டி பிரிவில் நைஜீரியாவுக்கு எதிரான போட்டியில் 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றதால் ஆர்ஜென்ரீனா அடுத்த சுற்றுக்குச் செல்லத் தகுதி பெற்றது. முதல் போட்டியில் அறிமுக நாடான ஐஸ்லண்ட் 1-1 என்ற   கோல்கணக்கில் சமப்படுத்தியதால் உதைபந்தாட்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த அதிர்ச்சி மறைவதற்குள் 3-0 என்ற கோல்கணக்கில் குரோஷியாவிடம் ஆர்ஜென்ரீனா தோல்வியடைந்தது. வெறி பெறவேண்டிய கட்டாயத்தில் நைஜீரியாவுடன் மோதொய ஆர்ஜென்ரீனா 2-1 எனும் கோல்கணக்கில் வெற்றி பெற்றது.

ஆர்ஜென்ரீனா பெரிதும் நம்பி இருந்த மெஸ்ஸி, முதல் இரண்டு போட்டிகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தவில்லை.  இந்தத் தொடரில் முதலாவது கோலை அடித்து  நம்பிக்கை ஊட்டினார். ஆர்ஜென்ரீனா வெற்றி பெற்றது. ஆனால், அதனுடைய உணமையான விளையாட்டைக் காணமுடியவில்லை. போட்டியைச் சமப்படுத்துவதிலே நைஜீரியா ஆர்வம் காட்டியதால்  கோல் அடிக்கும் வாய்ப்புகலைத் தவறவிட்டது.  கால் இறுதிக்கு முந்தைய போட்டியில்  பிரான்ஸுடன்  ஆர்ஜென்ரீனா  மோதுகிறது. பிரான்ஸுடன் இதே  போன்று விளையாடினால் அடுத்த சுற்றுடன் ஆர்ஜென்ரீனா வெளியேற வேண்டி ஏற்படும்.

 அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்ற  குரோஷியா ஐஸ்லாண்டை எதிர்த்து விளையாடிய 2-1 என்ற கோல்கனக்கில் வெற்றி பெற்றது.
சி பிரிவில் பிரான்ஸ், டென்மாக் ஆகியவற்றுக்கிடையேயான போட்டி கோல் அடிக்கப்படாமல் வெற்றி தோல்வியின்றி முடிந்தது.  இந்தத் தொடரில் கோல்கள் இன்றி சமநிலையில் முடிந்த ஒரேஒரு போட்டி இதுவாகும்.  வெற்றி அல்லது சமநிலை என்ற இக்கட்டான நிலையில் விளையாடிய டென்மாக் தப்பிப் பிழைத்தது. பிரான்ஸும்  டென்மாக்கும் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றன. அடுத்த சுற்றுக்குத் தெரிவானது. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 2-0 என்றகோல்கணக்கில் பெரு வெற்றி பெற்றது. இரண்டு நாடுகளும் முதல் சுற்றுடன் நாடுதிரும்புகின்றன.