Friday, June 11, 2021

ஐரோப்பிய உதைபந்தாட்ட திருவிழா

ஐரோப்பிய   நாடுகளின்  சம்பியன்  யார் என்பதை  தீர்மானிக்கும்  யூரோ 2020 இன்று ரோமில்  ஆரம்பமாகிறது.  2021  ஆம்  ஆன்டு  நடைபெற  வேன்டிய  இந்தத்   தொடர்  கொரோனா  காரணமாக  ஒத்திவைக்கப்பட்டது. அடுத்த  மாதம்  11  ஆம்  திகதி  இலன்டனின்  நடைபெறும்  இறுதிப்போட்டியில் வெற்றி  பெறும்  நாடு  யூரோ  2020  சம்பியன்  கிண்ணத்தை  முத்தமிடும்.

ஐரோப்பாவின்  11 நகரங்களில்  நடைபெறும் 51  போட்டிகளில்  24  நாடுகள்  மோதுகின்றன.  உலகக்கிண்ண  சம்பியனான பிரான்ஸ்,   இங்கிலாந்து,  இளம்  வீரர்களைக்கொண்ட ஸ்பெய்ன் ,  அனுபவ  வீரர்கள் களமாடும்  ஜேர்மனி  ஆகியவற்றில்  ஒன்று சம்பியனாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

24  நாடுகளும் ஆறு  பிரிவுகளாகப்  பிரிக்கப்பட்டு  ஒரு  பிரிவில் 4 நாடுகள் இடம்  பெறுகின்றன. அவற்றுள்  முதல்  இரண்டு  இடங்களைப்  பிடிக்கும்  12  நாடுகள்  இரண்டாவது   சுற்றுக்குத்   தெரிவு  செய்யப்பட்டு நொக்  அவுட்   முறையில்  போட்டிகள்  நடைபெறும்.

:  துருக்கி,  இத்தாலி, வேல்ஸ்,  சுவிட்ஸர்லாந்து.

பீ:  டென்மார்க்,  பின்லாந்து,  பெல்ஜியம்,   ரஷ்யா

சீ:  நெதர்லாந்து,  உக்ரெய்ன்,  ஒஸ்ரியா,,  மசடோனியா

டீ:  இங்கிலாந்து,  குரோஷியா,   ஸ்கொட்லாந்து,  செக். குடியரசு

:   ஸ்பெய்ன்,   சுவீடன்,  போலந்து,   ஸ்லோவாக்கியா

எஃப்: ஹங்கேரி,   போத்துகல்,  பிரான்ஸ்,  ஜேர்மனி

நடப்பு  சம்பியனான   போத்துகல்  நட்சத்திர  வீரரான  கிறிஸ்டியானி  ரொனால்டோவை   மட்டுமே நம்பி  உள்ளது. நடுவரிசை வீரரான புருனோ பெர்ணான்டஸ்   ரொனால்டோவுக்கு  உதவக்கூடும். நடப்பு  சம்பியனான  போத்துகலுடன்   முன்னாள்  சம்பியன்களான  ஜேர்மனி, பிரான்ஸ்   ஆகியனவும்  எஃப் குழுவில்  இருப்பதால்   போட்டி  கடுமையாக இருக்கும்.

ஜேர்மனி  அணியில்   அனுபவ  கோல்கீப்பரான  மனுவல் நூயர்,  தோமஸ்  முல்லர், ஹம்ம்லல்ஸ்  ஆகியோரும்,  பிரான்ஸ்  அணியில்  பென்சிமா, போக்பா,  கிரைஜ்மான்  ஆகியோரும்  இருப்பதால் எதிர்பார்ப்பு  எகிறியுள்ளது.  

இங்கிலாந்து  அணியில் மார்கஸ்ராஷ்போர்ட்,கப்டன்  ரி கேன், ஜோர்டன் ஹென்டர்சன், ரீஸ் ஜேம்ஸ் ஆகியோர் நட்சத்திர வீரர்களாக வலம் வருகின்றனர்.  தர  வரிசையில்   முன்னணியில்  உள்ளா இத்தாலி [7], சுவிட்சர்லாந்து [13] ,  வேல்ஸ் [17 ] ஆகியனவும் இங்கிலாந்துடன்  குழு  யில்  உள்ளன.    

கறுப்பு  குதிரை   என   வர்ணிக்கப்படும்  துருக்கிபெல்ஜியம்நட்சதிர  வீரர்  வான்  ஜிக்  இல்லாமல்  காத்திருக்கும்  நெதர்லாந்துபலோ  டெல்லியை  நம்பிய இத்தாலி  ஆகியன  எதிரனிகளுக்கு சவால்  விட  காத்திருக்கின்றன.ஸ்பெய்ன்  அணியின்  கப்டன் செர்ஜியோ,   டீகோ  லோரண்டே  ஆகிஒய  இருவரும்  கொரோனாவால்  பாதிக்கப்பட்டது  அந்த  அணிக்கு  பெரும்  பின்னடைவை  ஏற்படுத்தியுள்ளது


1960  ஆம்  ஆண்டு  ஆரம்பிக்கப்பட்ட  யூரோ சம்பியன்  போட்டியில்  இதுவரை  10  நாடுகள்  சம்பியனாகியுள்ளன. 1960  ஆம்  ஆண்டு  ரஷ்யா சம்பியனானது. நடப்பு  சம்பியனாக  போத்துகல் [2016]  விளங்குகிறது. ஜேர்மனி [1972, 1980, 1996] , ஸ்பெய்ன் [ 1964, 2008, 2012 ]  ஆகியன் தலா  மூன்று  முறையும், பிரான்ஸ்[ 1984,  2000]  இரண்டு முறையும்  சம்பியனாகியது.

இத்தாலி [1968],  செக் [1976],  நெதர்லாந்து [1988], டென்மார்க்[  1992], கிறிஸ்[ 2004]  ஆகிய நாடுகள்  தலா  ஒருமுறை  சம்பியனாகின.

சர்வதேச  உதைபந்தாட்ட  அரங்கில் 103   கோல்கள் அடித்த  ரொனால்டோ   இரண்டாவது  இடத்தில்  உள்ளார்.ஈரான்  வீரர்  அலிதயேய்  109  கோல்கள்  அடித்து  முதலாவது  இடத்தில்  இருக்கிறார். யூரோ  கிண்ணத்தொடரில் அதிக  கோல்கள்  அடிக்கும்  பட்சத்தில்  ரொனால்டோ முதலிடத்துக்கு  முன்னேறுவார் என ரசிகர்கள்  எதிர்பார்க்கிறார்கள்.

ப்ரான்ஸ்  வீரரான  மைக்கல்  பிளட்டினியும்,  ரொனால்டோவும்  யூரோ  கிண்ணத்தொடரில்  தலா 9  கோல்கள்  அடித்துள்ளனர். ஒரு  கோல்  அடித்ததும்  ரொனால்டோ  முதலிடத்தைப்  பிடிப்பார்.


  சுவிட்ஸர்லாந்து, (6,218 கி.மீ) , பெல்ஜியம் [ 5,876கி.மீ],  போலந்து (5,690 கி.மீ)  ஆகியன 5,000   கி.மீ  பயனம்  செய்து  யூரோ  கிண்ணப்  போட்டிகளில்  விளையாட  உள்ளன.  இங்கிலாந்து,இத்தாலி, ஸ்பெய்ன்,  போலந்து, ஜேர்மனி  ஆகியன தமது  நாட்டு  மைதானங்களில்  அதிக  போட்டிகளில் விளையாடுவதால்  அவற்ரின்  பயணத்தூரம்  குறைவாகும்.

ஒரு மாதத்துக்கு உதைபந்தாட்ட  ரசிகர்கள்  கொரோனாவைப்  பற்ரி  பயப்படாமல்  மகிழ்ச்சியாக  இருக்கப்போகின்றனர்.

Tuesday, June 8, 2021

காணாமல் போகும் கமலின் அரசியல் கட்சி


 சினிமாவில் கால் பதித்து  திரைப்படம் சார்ந்த  சகலதுறைகளிலும் வெற்றிக்கொடி நாட்டியவர் கமல்ஹாசன். தமிழ்  பேசும்  பிக்பொஸ்ஸில்  முகம் காட்டி சின்னத்திரை மூலம் தமிழர் வாழும்  வீடுகளில் தினமும் வந்துபோனவர்  சிந்தனையாளர் கமல். தடம்  பதித்த  அனைத்துத்  துரைகளிலும்  வெற்றிக் கம்பத்தைத் தொட்ட  கமல் அரசியலில்  புகுந்ததனால் படுகுழியில்  விழுந்துவிட்டார்.

தமிழக அரசியலில் ஒட்டியிருக்கும் சினிமாவை எந்தக்  காலத்திலும் பிரித்துப்  பார்க்க  முடியாது. அண்ணாத்துரை,  கருணாநிதி,  சிவாஜி,  எம்.ஜி.ஆர்,  எம்.ஆர்.ராதா, எஸ்,எஸ்,ஆர், ஜெயலலிதா என அரசியலில்   வெற்றிக்கொடி நாட்டிய சினிமா நட்சத்திரங்களின் பட்டியல்  நீளமானது. சினிமாவில்  முகம்  காட்டினால் அரசியலில்  வெற்றி பெறலாம் என நினைதவர்களின்  பட்டியல்   வெதமிழகத்தின் அரசியல்   ஆளுமைகளான  ஜெயலலிதாவும்,  கருணாநிதியும்  அடுத்தடுத்து காலமானதால் தமிழக அரசியல் தலைமையில்  வெற்றிடம்  தோன்றியுள்ள‌தென பலர்  நினைத்துவிட்டனர். சசிகலா, எடப்பாடி  பழனிச்சாமி,  ஓ.பன்னீர்ச்செல்வம். தினகரன்,  ரஜினி,  கமல்  தமிழக  அரசியலுக்குத்  தலைமை  தாங்கி  முதல்வராக  ஆசைப்பட்டனர். சொத்துக்குவிப்பு  வழக்கில்  சிறைக்குப்  போனதால் சசிகலாவின்  ஆசை முடக்கப்பட்டது. அண்ணா  திராவிட  முன்னேற்றக்  கழகத்தின்  தலைமைப்  பதவியைப்  பிடிக்க  முட்டுப்பட்டதால் எடப்பாடி, பன்னீர் ஆகியோரின்  தலமை   நிராகரிக்கப்பட்டுவிட்டது. அரசியல்  பலம்  இல்லாத  தினகரன்  காணாமல்  போய்விட்டார். அடுத்த  முதல்வர்  என  ரசிகர்களால்  கொண்டாடப்பட்ட  ரஜினி தேர்தலுக்கு  முன்னரே  கட்சியை  கலைத்துவிட்டார்.சினிமா,  பிக்பொஸ் ஆகிய  மாயைகளால் மினுமினுத்த   கமல் அரசியலில்  படுதோல்வியடைந்தார். அண்ணாத்துரை,  கருணாநிதி,  சிவாஜி,  எம்.ஜி.ஆர்,எம்.ஆர்,ராதா, எஸ்.எஸ்.ஆர் ஜெயலலிதா என  அரசியலில்  வெற்றி பெற்ற சினிமா  பிரபலங்களின் பட்டியல்  நீளமானது. சினிமாவில்  முகத்தைக்  காட்டினால்  வெற்றி பெறலாம் என்ற  நம்பிக்கையில் அரசியலில்  கால் பதித்து  தோல்வியடைந்தவர்களின்  பட்டியல், வெற்றி  பெற்றவர்களின் பட்டியலை  விட  மிக  நீளமானது.

சினிமாவின்  ரஜனியுடன்  போட்டிபோட்ட  கமல்  அரசியலிலும்  போட்டிபோட்டார். சினிமாவில்  மட்டுமல்ல  அரசியலிலும்  இருதுருவங்கள்தான் என்பதை  இருவரும்  நிரூபித்தனர். "மக்கள்  நீதி   மய்யம்" எனும்  பெயரின்  கமலின்  அரசியல்  கட்சி பதிவாகியது. கவிஞர்  சினேகன், நடிகை  ஸ்ரீபிரியா , சமூக  வலைத்தள  பிரபலமான பத்மபிரியா  போன் றோர்  கமலின் கட்சியில்  இணைந்தனர். கமலைத்தவிர  பிரமலமானவர்கள் எவரும் கட்சியில்  இல்லை.

தமிழக  சட்ட  மன்றத் தேர்தலின்போது கமல்  வெற்ரி  பெற  வேன்டும்  என  எதிர்க்  கட்சியில்  உள்ள  அவரது  ரசிகர்களும்  விரும்பினார்கள். வாக்கு  எண்ணிக்கையில் முன்னுக்கு  நின்ற  கமல்  இறுதியில்  தோல்வியடைந்தார். கமலின்  கட்சியில்  போட்டியிட்ட  அனைவரும்  தோல்வியடைந்து  கட்டுப்பணத்தை  இழந்தனர். கமலுடன்  கூட்டணி  சேர்ந்த  சரத்குமார்,  பாரிவேந்தர் ஆகியோரின்  நிலையும் இதுதான்.

பலம்  மிக்க  இரண்டு  திராவிடக்  கட்சிகளின்  துணை  இல்லாமல்  தேர்தலில்  வெற்றி  பெற  முடியாது  என்பதை இன்னொரு  தேர்தல் முடியு   நிரூபித்துள்ளது.கமலின்  கட்சி  தொல்ல்வியடைந்தது  ஒரு  புறம்  இருக்க  அவரது  கட்சியின்  நிர்வாகிகள் கட்சியை  விட்டு  வெளியேறிவிட்டனர்.

டாக்டர் மகேந்திரன்,பத்மபிரியா, சந்தோஷ்பாபு  போன்றவர்கள் கட்சியில்  இருந்து  வெளியேறிவிட்டனர். கமல்  மீது  கொண்ட  மதிப்பின்  நிமித்தம் அவரது  அரசியல்  கட்சியில்  சேர்ந்தவர்  டாக்டர்  மகேந்திரன். வெற்றி,தோல்வி, இணைவு, பிரிவு  என்பன அரசியலில் சர்வசாதாரணம். மகேந்திரன்  வெளியேறியதும், அவர்  துரோகி,  எப்போதோ  களைஎடுக்கப்பட  வேண்டியவர் என சாரப்பட  கமல்  கடிதம் எழுதியது அவரது  அரசியல்  முதிர்ச்சியின்மையை  வெளிக்காட்டுகிறது. நிர்வாகிகள்  வெளியேறுவதால் கமலின்  கட்சி கரைந்துகொன்டு  போகிறது. சினிமாவில்  விழுந்து  எழுந்த  கமல்,  அரசிலில்  என்ன  செய்யப்போகிறார் எனபதை  அறிய  அவரது  ரசிகர்கள்  ஆவலாக  உள்ளனர்.

Friday, June 4, 2021

ஓபிஎஸ்ஸை ஓரம் கட்டிய ஈபிஎஸ்


தமிழக சட்ட மன்ற   எதிர்க் கட்சித்  தலைவர்  பதவியை . பன்னீர்ச்செல்வம் விரும்பிய  போதிலும் எடப்பாடியின் சதுரங்க வேட்டைக்கு  ஈடு  கொடுக்க  முடியாமல் கைவிட்டுப் போனது.

2021 சட்டமன்றத் தேர்தலில், தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்ற திராவிட முன்னேற்றக் கழகம்  ஆட்சியைக் கைப்பற்றியது. 65 தொகுதிகளில் வெற்றிபெற்று இரண்டாம் இடம்பிடித்த அண்ணா திராவிட  முன்னேற்றக்  கழகத்துக்கு  எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்தது.  சட்டசபை 'எதிர்க்கட்சித் தலைவர் யார்' என்பதை முடிவுசெய்வதற்காகக் கடந்த 7‍ம் திகதி  தலைமை அலுவலகத்தில் அந்தக் கட்சியின் எம்.எல்.-க்கள் கூடினார்கள். ஆனால், கட்சியின் ஒருங்கிணைப்பாளரான .பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடிபழனிசாமி இருவருமே 'எதிர்க்கட்சித் தலைவர்' பொறுப்புக்காக மல்யுத்தம் நடத்தியதையடுத்து, கூட்டத்தில் கூச்சல் குழப்பமே நீடித்தது. இதையடுத்து எந்தவொரு முடிவும் எட்டப்படாமலேயே கூட்டம் 10‍ம் திகதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

மே 11 அன்று புதிய சட்டமன்றம் கூட்டப்படவிருப்பதை முன்னிட்டு, மிகுந்த பரபரப்பும் எதிர்பார்ப்புக்கும் இடையே   மே 10, காலை 9:30 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள   தலைமை அலுவலகத்தில் .பி.எஸ் - .பி.எஸ் தலைமையில் .தி.முக எம்.எல்.-க்கள் கூட்டம் மறுபடியும் கூட்டப்பட்டது. கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்துக்குப் பிறகு, 'எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்' என்ற அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது

பலத்த போட்டிக்கிடையில் வாய்ப்பைப் பறிகொடுத்துவிட்ட விரக்தியில் இருந்துவரும் .பி.எஸ் தரப்பு ஆதரவாளர்கள், ``அம்மாவால் முதல்வராக அடையாளம் காணப்பட்டவர் அண்ணன் .பி.எஸ். அவர்மீது அம்மா வைத்திருந்த நம்பிக்கையினாலேயே இரு முறை முதல்வராகும் பொறுப்பை வழங்கினார். .பி.எஸ்-ஸும் அந்த நம்பிக்கையைக் கடைசிவரைக் காப்பாற்றினார். அதன் அடிப்படையில்தான் அம்மா மறைவுக்குப் பிறகும் அவரையே முதல்வராக கட்சி தேர்ந்தெடுத்தது. அதுமட்டுமல்ல... அம்மா உயிரோடு இருந்த காலகட்டத்திலேயே நிதியமைச்சராக திறம்பட பணியாற்றி, பலமுறை பட்ஜெட் தாக்கல் செய்தவர், அவை முன்னவர் என அவருக்கான தகுதிகள் ஆயிரம்.


கடந்த வருடம், கட்சியில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற கேள்வி எழுந்தபோது, தனிப்பட்ட தன் நலனை முன்னிறுத்தி முடிவெடுக்காமல், கட்சியின் நலனை கருத்தில்கொண்டு முடிவெடுத்தவர் அண்ணன் .பி.எஸ். அதாவது, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற உயரிய பதவியில் இருந்துவந்தாலும்கூட, 'எடப்பாடி பழனிசாமியே கட்சியின் முதல்வர் வேட்பாளர்' என்று பெருந்தன்மையோடு அறிவித்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமியோ, 'எதிர்க்கட்சி வேட்பாளர்' என்ற அந்தஸ்தைக்கூட அண்ணனுக்காக விட்டுத்தர மறுத்துவிட்டார் என குமுறுகின்றனர்.

அண்ணா திராவிட  முன்னேற்றக்  கழக கடிதத் தலைப்பில்  பன்னீர்ச்செல்வம் அறிக்கை வெளியிடுகிறார். எதிர்க் கட்சித்  தலைவர் பழனிச்சாமி தனியாளாக அறிக்கை  வெளியிடுகிறார். இரட்டைத்தலைமை வேறு  வேறு  பக்கமாக  செயற்படுகிறது. இருவருக்குமான  தொடர்புகள்  அறுந்துள்ளன.  கட்சித் தலைமையைக்  கைப்பற்றுவதிலேயே  இருவரும்  அக்கறை  காட்டுகிறார்கள். இந்தச்  சந்தடியில்  சசிகலா  மூக்கை  நுழைத்துள்ளார்.  கட்சி  ஆதர்வாளர்  ஒருவருடன்  சசிகலா  பேசிய  ஒலிப்பதிவு  பொது  வெளியில்  பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா  முடிந்ததும்  அரசியலுக்கு  வருவேன்   அண்ணா  திராவிட   முன்னேற்றக்  கழகத்தை  சீரமைப்பேன் எனப்  பொருள்பட  சசிகலா  பேசியுள்ளார். சிகலாவின்  அனுமதில்  இல்லாமல் ஒலிப்பதிவு  வெளியாகி இருக்க  முடியாது.

பழனிச்சாமி   ஏற்பாடு  செய்த  மாவட்ட  செயலாளர்  கூட்டத்தில்  ஒன்பது   பேர்  ட்டும்  கலந்துகொன்டனர்.  இதனால்  பழனிச்சாமை  அதிர்ச்சியடைந்துள்ளார்.  கட்சித்  தலைமையைக்   கைப்பற்றும்  போட்டியில்  சசிகலா  இன்னமும்  உயிர்ப்புடன்  இருக்கிறார்.