Tuesday, April 4, 2023

தமிழ் மக்களுக்கு எதிரான கலாசாரப் போர்


 இலங்கை சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து ஏதோ ஒரு போர் தமிழ் மக்கள்  மீது திணிக்கப்படுகிறது. பெளத்தக்குது முன்னுரிமை கொடுத்தால் தேர்தலில் வாக்குகளை அருவடை செய்யலாம் என்பதை சிங்கள அரசியல்வாதிகள்  மிகத் துல்லியமாகப் புரிந்து கொண்டார்கள்.அரச  இயந்திரம் அவர்களுக்குப் பக்க பலமாக  உள்ளது.

தமிழ்மக்கள் வாழும் இடங்களில் உள்ள வரலாற்றுத்தொன்மங்களையும், சரித்திரச் சான்றுகளையும் அழித்தொழிப்பதிலும், கைப்பற்றுவதிலும் சிலர் முனைப்புக் காட்டுகின்றனர். சிங்கள அரசியல்வாதிகளின்  உணர்ச்சிகரமான  பேச்சுகள் அவர்களைத்தூண்டிவிடுகின்றன. தேரர்கள், பாதுகாப்புப் படையினர் அவர்களுக்குப் பாதுகாப்புக்  கொடுக்கின்றனர். நீதிமன்றத் தீர்ப்புகள் துச்சமாக துக்கி எறியப்படுகின்றன.  அந்த வரிசையில்  இப்போது தொல்பொருளியல் திணைக்களம்   பகிரங்கமாக   இறங்கி உள்ளது.  தொல்பொருளியல்ல் திணக்களமா தொல்லை தரும் திணைக்களமா எனக் கேட்கத் தோன்றுகிறது.

இலங்கையின் தொல்பொருளியல் திணைக்களம்,  நாட்டில் உள்ள தொல்லியல் மரபுரிமை தொடர்பான பணிகளுக்காக உருவாக்கப்பட்ட அரசாங்கத்தின் ஒரு பிரிவு ஆகும். இது பிரித்தானியர் ஆட்சிக்காலத்தின்போது 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்டது. அனுராதபுரம், பொலநறுவை போன்ற மறக்கப்பட்ட பண்டைக்காலத் தலைநகரங்களின் மீது ஏற்பட்ட ஆர்வமே அப்போதைய இலங்கை அரசாங்கம் தொல்லியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குக் காரணமாக அமைந்தன. இலங்கையில் தொல்பொருளியல் மரபுரிமை தொடர்பான சரியான முகாமைத்துவத்தை வளர்த்தெடுப்பது இலங்கைத் தொல்பொருளியல் திணைக்களத்தின் முதன்மை நோக்கம். இதனால், இலங்கையின் தொல்லியல் மரபுரிமையை முகாமைப்படுத்துவதையும் அது தொடர்பான செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துவதையும் இத்திணைக்களம் முக்கிய பணியாகக் கொண்டுள்ளது. தொல்பொருளியல் மரபுரிமை தொடர்பில், தேவையான மனித வளங்களையும், நிறுவன வளங்களையும் உருவாக்கிப் பேணுதல்; நாடு முழுவதிலும் உள்ள தொல்லியல் மரபுரிமைகளைப் பாதுகாத்தல்; அவற்றைப் பதிவு செய்தல்; இம்மரபுரிமை தொடர்பாக மக்களிடையே அறிவை வளர்த்தல்; தொல்லியல் களங்களையும், நினைவுச்சின்னங்களையும், தொல்பொருட்களையும் பேணிப் பாதுகாத்தல்; தொடர்பான ஆய்வுகளில் ஈடுபடுதல் என்பன இத்திணைக்களத்தின் செயற்பாட்டு வரம்புக்குள் அடங்குகின்றன.

இலங்கையில் தொல்பொருளியல் திணைக்களம் 1890ஆம் ஆண்டில்  அதன் பணிகளை ஆரம்பித்தாலும் தொல்பொருளியல் பணிகள் தொடர்பான அடிப்படை வேலைகள் அதற்குப் பல வருடங்களுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டு விட்டன. ஹர்கியுலஸ் ரொபின்சன் ஆட்சிக் காலத்திலேயே தொல்பொருளியல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இந்தியாவில் தொல்பொருளியல் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டு ஏழு ஆண்டுகளின் பின்னர் 1868ஆம் ஆண்டில்  இலங்கையில் புராதன கட்டிடக்கலை தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளக் குழுவொன்று அப்போதைய ஆட்சியாளர்களினால்   நியமிக்கப்பட்டது.  1871ஆம் ஆண்டில்  நாட்டில் ஆட்சியாளர்களிடமிருந்து   நிதி மற்றும் ஏனைய உதவிகளைப் பெற்றுக்கொண்டு அனுராதபுரத்தையும் பொலனறுவையையும் முதன்மையாகக் கொண்டு கட்டிடங்களின் பெறுமதிமிக்க புகைப்படங்கள் பல பெற்றுக்கொள்ளப்பட்டன.

1873ஆம் ஆண்டில் வில்லியம் கிறகரி தேசாதிபதி முழுமையான ஆய்வொன்றை மேற்கொள்ளும்படி பணிப்புரை வழங்கினார். அவ்வாண்டிலேயே புராதன அனுராதபுரம் தொடர்பான அமைவிட ஆய்வொன்று ஆரம்பிக்கப்பட்டது. ஜே.ஜி. ஸ்மினரினால் மேற்கொள்ளப்பட்ட முன்னோடி பணிகளை சார்பாகக் கொண்டு தாதுகோபுரங்கள் மற்றும் ஏனைய அழிவுற்ற கட்டிடங்கள் உள்ளடங்கியஅனுராதபுரத்தின் தொல்பொருளியல் அழிவுச் சின்னங்கள்என்ற நூல் 1894ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

இலங்கையில் 823/73 ஆம்  இலக்க தொல்லியல் கட்டளைச்சட்டம் (188ஆம்  அத்தியாயம்) 16ஆம்  பிரிவின் கீழ் வடக்கு கிழக்கு பகுதிகளில் இருக்கும் பல சைவ சமய ஆலயங்களில் பௌத்த மதம் சார்ந்த அடையாளங்கள் இருப்பதாக நல்லாட்சி அரசாங்க காலத்திலும் அதற்கு முந்திய ஆட்சி காலத்திலும் தொல்லியல் திணைக்களம் சிறப்பு வர்த்தமானிகள் மூலம் அடையப்படுத்தியுள்ளது.

அவற்றில்   ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரம் ஆலயம்,மாந்தைகிழக்கு பூவரங்குளம் பத்திரகாளி அம்மன் கோவில், குமாரபுரம் சிறீ சித்திரவேலாயுதம் முருகன் கோவில், குமுழமுனை ஆஞ்சநேயர் கோவில்,பாண்டியன்குளம் சிவன் கோவில்,வவுனிக்குளம் சிவபுரம் சிறீமலை கோவில், குமுழமுனை குறிஞ்சிக்குமரன் கோவில் ,மன்னார் திருக்கேதீஸ்வரக் கோவில், மயிலிட்டி போர்த்துக்கேயர் கோவில் , ஒதியமலையில் வைரவர் கோவில்,முள்ளியவளை குமாரபுரம் முருகன் கோயில், திருகோணமலை தென்னமரவடி கந்தசாமிமலை,செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயம்,புல்மோட்டை அரிசி ஆலை மலை கோவில்,வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயம், மூதூர், சூடைக்குடா மத்தள மலைப்பகுதி முருகன் ஆலயம், திருகோணலை கோணேஸ்வரர் ஆலயம்,மூன்றுமுறிப்பு கண்ணகி அம்மன்,, சிவபுரம் சிவாலயம்,, மாந்தை கிழக்கு ஆதிசிவன் கோயில், குஞ்சுமப்ப பெரியசாமி கோவில்,ஸ்ரீ மலை நீலியம்மன் கோயில், கன்னியா வெந்நீர் ஊற்று பிள்ளையார் கோவில்,மட்டக்களப்பு தாந்தாமலை ஆலயம்,. மட்டக்களப்பு கச்சக்கொடி சுவாமிமலை போன்றவை உள்ளடங்குவதாகவும் இவற்றை தொல்லியல் இடங்களைக் அடையப்பப்படுத்தியுள்ளமை மத ரீதியிலான ஆக்கிரமிப்பு  இலை என எப்படிச் சொல்வது.

தொல்பொருளியல் திணைக்களத்தில் தமிழ்ர்களும்,  முஸ்லிம்களும்  உள்வாங்கபப்டவில்லை.

வெடுக்கு நாரி மலை,  குருந்தூர் மலை கின்னியா வெந் நீர் ஊற்று ,  யாழ்ப்பாணம், மந்திரிமனை, நெடுந்தீவு  வெடி அரசன் கோட்டை  ஆகியவற்ரின்  மீது தொல்பொருளியல் திணைக்களத்தின் பார்வை விழுந்துள்ளது.

 நிலாவரையில் வைக்கப்பட்ட புதர் சிலை  எதிர்ப்பினால் அகற்றப்பட்டது.  கச்சதீவு என்ரால்  புனித  அந்தோனியார் தான்  ஞாபகத்துக்கு வருவார். அங்கு  அரச மரம் வளர்க்கப்பட்டு  புத்தை சிலை வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள தொல்பொருளியல் திணைக்களம் சிங்கள் மக்களுக்கு மட்டும்  உரிமையானது என அங்கு  கடமையாற்றுபவர்கள் நினைக்கிரார்கள்.  இலங்கையில் வாழு  இன்னொரு  இன மக்களின் நம்பிக்கையைச் சிதறடிகும் செயற்பாட்டை தொல்பொருளியல் திணைக்கள கன கட்ட்சிதமாகச் செய்கிரது. இது தமிழ், சிங்கள  உரவுக்கு  விரோதமானதி.  தொல்பொருள் திணைக்களம் இனமத வேறுபாடுகளுக்கு அப்பால் செயற்படுகின்றது என்பதை உறுதிப்படுத்துவது அவசியம்

Sunday, April 2, 2023

எடப்பாடியின் ஆசையை நிறைவேற்றிய நீதிமன்றம்

ஜெயலலிதா எனும் ஆளுமையின் கட்டுப்பாட்டில் இருந்த அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தனிப் பெரும் தலைவராக  உயர்ந்துள்ளார் எடப்பாடி பன்னீர்ச்செல்வம்.  ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் உருவான பதவிப் போட்டியில் எடப்பாடி  வெற்றி பெற்றுள்ளார்.

ஜெயாலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர்  ஓ.பன்னீர்ச்செல்வம். சசிகலாவால் நியமிக்கப்பட்டவர் எடப்பாடி பழனிச்சாமி. ஜெயலலிதா தாரைவார்த்த முதலமைச்சர் பதவியை திரும்பவும் அவரிடம்  கொடுத்தவர் பன்னீர்ச்செல்வம். சசிகலாவின் கையால்  முதலமைச்சர் பதவியைப் பெற்ற  எடப்பாடி, அவரை யார் எனக் கேட்டார்.பன்னீர்ச்செல்வம் விசுவாசி. எடப்பாடி அரசியல்வாதி. விசுவாசத்துக்கும் அதிகாரத்துக்கும் இடையேயான  போட்டியில் அரசியல் அதிகாரம் வெற்றி பெற்றுள்ளது. தனது கையில் இருந்த‌ இரட்டை இலைச் சின்னத்தை கட்சிக்காக விடுக்கொடுத்த  பன்னீரை எடப்பாடியும் அவரது ஆதரவாளர்களும் தூக்கி எறிந்துவிட்டனர்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக  பொதுக்குழு, பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஜூலை 11ஆம் திக‌தி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதால் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஜெயலலிதாவின்  மறைவுக்குப் பின்னர் ஒருங்கிணைப்பாளர்.  இணை ஒருங்கிணப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.  இரட்டைத் தலைமையை எடப்பாடி விரும்பவில்லை.  எம்ஜி.ஆர்,  ஜெயலலிதா ஆகியோரைப்  போன்று  தனிப் பெரும் தலைவராக  உருவாக விரும்பினார் எடப்பாடி. பன்னீர்ச்செல்வம் அதனை விரும்பவில்லை. எடப்பாடியைப் பொதுச் செயலாளராகுவதற்காக விதிகள் திருத்தப்பட்டன.  பொதுக்குழுவில் பன்னீர் அவமானப் படுத்தப்பட்டார்.

நியாயம் கிடைக்கும் என நினைத்த பன்னீர் நீதிமன்ற‌த்தை நாடினார்.  அதிகமான எம்பிக்களும், சட்ட சபை உறுப்பினர்களும் தனது  பக்கம்  இருப்பதை  எடப்பாடி உறுதிப்படுத்தினார்.

 எடப்பாடியின் த்லமிமையிம் 10 தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோல்வியடைந்தது.  எடப்பாடிக்கு எதிரான 8 வழக்குகளில்  பன்னீர் தோல்வியடைந்தார். என்ராலும் மனம் தளராது  பொதுச் செயலாளர் பதவிக்கு எதிராக தடைகோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளார் பன்னீர்ச்செல்வம்..

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்  50 ஆண்டுகால வரலாற்றில் அக்கட்சியின் 7-வது பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1972-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வரும் நடிகருமான எம்ஜிஆர்

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத்  தொடங்கினார். எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் ஜெயலலிதா கட்சியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு கடந்த 7 ஆண்டுகளாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பெரும் குழப்பம் நீடித்தது

  ஜெயலலிதா மறைவுக்குப் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் சசிகலா. ஆனால் சசிகலா சில நாட்களிலேயே பெங்களூர் சிறைவாசம் அனுபவிக்க நேரிட்டது. இதன்பின்னர்  பன்னீர், எடப்பாடி  அணிகள் இணைந்தன. இதனால் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு இன்னமும் நிலுவையில் இருக்கிறது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பதவி நிரந்தரமாக ஜெயலலிதாவுக்குதான் என ஒரு விதியை   ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து உருவாக்கினர். அதிமுகவில் ஒரூங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. அதிமுகவில் மீண்டும்பன்னீர், எடப்பாடி அணிகள் என பிளவு ஏற்பட்டது. இது தொடர்பான சட்டப் போராட்டங்களின் இறுதியாக தற்போதுஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

1974-ம் ஆண்டு   நிறுவனரான எம்ஜிஅர் அக்கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1976-ம் ஆண்டு  மூத்த தலைவரான நாவலர் நெடுஞ்செழியன், பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். 1980-ம் ஆண்டு மற்றொரு மூத்த தலைவரான ப.உ.சண்முகம், அதிமுகவின் பொதுச்செயலாளரானார். 1984-ம் ஆண்டு  எஸ்.ராகவானந்தம் பொதுச்செயலாளரானார். அப்போதுதான் கட்சிக்குள் ஜெயலலிதாவின் வருகை பெரும் புயலை கிளப்பிக் கொண்டிருந்தது. 1986-ம் ஆண்டில்   பொதுச்செயலாளர் பதவிகளை முன்வைத்து பெரும் பிரளயம் வெடித்தது. மீண்டும்   பொதுச்செயலாளரானார் எம்ஜிஆர். ஆனால் மூத்த துணை பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டு ராகவானந்தத்துக்கு அப்பதவி வழங்கப்பட்டது. து  ணை பொதுச்செயலாளர்களாக ஹண்டே, காளிமுத்து நியமிக்கப்பட்டனர்.

1987-ம் ஆண்டு எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  மீண்டும் பிளவுபட்டது. இதன் பின் அதிமுக அணிகள் ஒருங்கிணைந்தன. ஒருங்கிணைந்த அதிமுக பொதுச்செயலாளராக 1989-ம் ஆண்டு ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மறையும் வரை கட்சியின்  பொதுச்செயலாளராகவே இருந்தார். ஜெயலலிதா காலத்தில் மூத்த துணை பொதுச்செயலாளராக எஸ்டி சோமசுந்தரம், பஉ சண்முகம், ஆர் எம்வீரப்பன் இருந்தனர்.

2016-ம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா பொதுச்செயலாளரானார். இதனையடுத்து 2017-ல் சசிகலா அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். எம்ஜிஆர், நெடுஞ்செழியன், ப.உ. சண்முகம், ராகவானந்தம், ஜெயலலிதா, சசிகலா ஆகியோரைத் தொடர்ந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 7-வது பொதுச்செயலாளராகி உள்ளார் எடப்பாடி கே.பழனிசாமி.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்   நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதியும் ரத்து செய்யப்பட்டது.. அதுமட்டுமல்ல,  பொருளாளருக்கான அதிகாரங்கள் அனைத்தையும் பொதுச்செயலாளருக்கே என்ற ரீதியில் சட்ட விதிகளிலும் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதுதான் ஜெயலலிதாவின் தொண்டர்களை அதிர செய்துள்ளது. நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், தொண்டர்கள்  எடப்பாடியின் பக்கம்  இல்லை என்பதை  ஈரோடு இடைத் தேர்தல் நிரூபித்துள்ளது.

எடப்பாடிக்கான சோதனை இனிமேல்தால் ஆரம்பமாகப்  போகிறது. அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நண்பனும்  இல்லை என ஜெயலலிதா அடிக்கடி கூறுவார்.  அரசியல் எதிரிகளான பன்னீர், சசிகலா, தினகரன் ஆகிய மூவரும்  ஒன்றிணைந்தால் எடப்பாடிக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படும்.

 தனிப்பெரும் தலைவராக எடபாடி உருவாகுவதை பாரதீய ஜனதா பார்த்துக்கொண்டிருக்காது. தமிழகத்தில்  தாமரை மலருவதற்காக  இரட்டை இலையை இரண்டாக்கி உள்ள‌து பாரதீய ஜனதாக் கட்சி .

 எம்.ஜி.ஆர் வேஷமணிந்த தொண்டர் ஒருவர் எடப்பாடியின் காலில் விழுந்ததையும், எம்.ஜி.ஆரைப் போல எடப்பாடிக்கு  தொப்பி கண்ணாடி,சால்வை அணிந்ததையும் எம்ஜி.ஆரின் ரசிகர்கள் ஏற்கவில்லை.

 எடப்பாடிக்கு உதவி செய்யும்  பாரதீய ஜனதாக் கட்சியின்  விருப்பங்களை நிறைவேற்ற வேண்டிய  இக்கட்டான நிலை எடப்பாடிக்கு ஏற்பட்டுள்ள‌து. மோடியா  லேடியா என  ஜெயலலிதா சவால் விடுத்தார். எடப்பாடியால் அப்படி சவால் விட முடியாது.

பன்னீர்,சசிகலா, தினகரன் மட்டுமல்லாது ஸ்டாலினுக்கு எதிராகவும் அரசியல் செய்ய வேண்டிய எடப்பாடி செயற்பட வேண்டிய நிலை  உள்ளது.

கருணாநிதி,எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா,ஸ்டாலின்  போன்று எடப்பாடியும், பன்னீரும் தனிப்பெரும் தலைவர்கள் அல்ல. சொந்தத் தொகுதிக்கு வெளியே தேர்தலில் போட்டியிட்டு வெற்ரி பெற எடப்பாடியாலும், பன்னீராலும்  முடியாது. தமிழகம்  முழுவதும் அவர்களுக்கு ஆதரவு இல்லை.

 

ரஷ்யா , பெலாரஸ் வீரர்கள் விளையாட அனுமதி

 விம்பிள்டனில் ரஷ்ய, பெலாரஷ்ய வீரர்கள் "நடுநிலை" விளையாட்டு வீரர்களாக விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என்று ஆல் இங்கிலாந்து கிளப் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

"நடுநிலை' விளையாட்டு வீரர்களாக போட்டியிடுவதற்கும் பொருத்தமான நிபந்தனைகளுக்கு இணங்குவதற்கும் உட்பட்ட ரஷ்ய , பெலாரஷ்ய வீரர்களின் உள்ளீடுகளை ஏற்றுக்கொள்வது எங்கள் தற்போதைய நோக்கம்" என்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ரஷ்ய அல்லது பெலாரஷ்ய மாநிலங்களில் இருந்து நிதியுதவி பெறும் வீரர்கள் அல்லது மாநிலங்களால் இயக்கப்படும் அல்லது கட்டுப்படுத்தப்படும் நிறுவனங்களின் அனுசரணை  உள்ளவர்கள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

"எல்லா காரணிகளையும் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு இவை மிகவும் பொருத்தமான ஏற்பாடுகள் என்பது எங்கள் கருத்து" என்று ஆல் இங்கிலாந்து கிளப்பின் தலைவர் இயன் ஹெவிட் கருத்து தெரிவித்தார்.

"இப்போது மற்றும் சாம்பியன்ஷிப் தொடங்குவதற்கு இடையில் சூழ்நிலைகள் மாறினால், நாங்கள் பரிசீலித்து அதற்கேற்ப பதிலளிப்போம்."

டென்னிஸின் நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றாக, விம்பிள்டன் சாம்பியன்ஷிப் 2022 போட்டிக்கான ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய வீரர்களின் நுழைவுகளை நிராகரித்தது. 

விளாடிமிர் புட்டின் உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ரஷ்ய,பெலாரசியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. விம்பிள்டன் இந்த ஆண்டு ஜூலை 3 முதல் 16 வரை நடைபெற உள்ளது.

ரஷ்யாவின் உலக தரவரிசையில் ஐந்தாவது வீரரான டேனியல் மெட்வடேவ் , பெலாரஸின் நடப்பு அவுஸ்திரேலிய ஓபன் சாம்பியனான அரினா சபலெங்கா ஆகியோர் விளையாடுவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.

Saturday, April 1, 2023

முதல் போட்டியில் வென்றது குஜராத்

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அஹமாதபாத் நரேந்திர மோடி மைதானத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் கோலகலமாக தொடங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்த்து விளையாடிய குஜராத் டைடன்ஸ்  ஐந்து விக்கெட்களால் வெற்றி பெற்றது.

நணயச்சுழற்சியில் வெறி பெற்ற  குஜராத் அணி ப்டன் ஹார்திக் பாண்டிய முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை   அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்கள் எடுத்தது. குஜராத் அணி  19.2 ஓவர்களில்  182 ஓட்டங்கள்  எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று

 சென்னை அணி தொடக்க வீரர்களானகான்வே,ருதுராஜ்  ஆகியோர் களமிறங்கினர். முகமது ஷமி பந்தில் கான்வே 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனையடுத்து ருதுராஜூடன் கைகோர்த்த மொயின் அலி அதிரடியாக விளையாடி ரஷித் கான் பந்தில் 23  ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

சென்னை ரசிகர்கள் நம்பி இருந்த பென் ஸ்டோக்ஸ் 7 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறி சென்னை ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். தொடர்ந்து ருதுராஜ் குஜராத் அணியின் பந்துவீச்சை நாலாப்புறமும் பறக்கவிட்டார். அதிரடியாக விளையாடிய ருத்துராஜ் 9 சிக்சர்கள் அடித்தார். 17.1 வது ஓவர் வரை விளையாடிய ருதுராஜ்  52 பந்துகளில் 92 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜடேஜா  ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார்.

கடைசி ஓவரில் சென்னை அணி கப்டன் டோனி ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து ரசிகர்களை உற்சாகமூட்டினார். தோனி 7 பந்துகளில் 14 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.   சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்கள் எடுத்தது.

179 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியில் சாஹா , சுப்மன் கில் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக விளையாடிய சாஹா 16 பந்துகளில் 25 ஓட்டங்களும், சாய் சுதர்சன் 22 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தானர்அதிரடியாக விளையாடிய சுப்மன் கில் 36 பந்துகளில் 3 சிக்சர்கள் 6 பவுண்டரிகளூடன்  63 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

  குஜராத் அணி  19.2 ஓவர்களில்  182 ஓட்டங்கள்  எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

ஐபிஎல் இல் டோனியின் புதிய சாதனைகள்


 குஜராத்துக்கு எதிரான போட்டியில் சென்னை தோல்வியடைந்தாலும்  டோனி புதிய சாதனைகளைப் படைத்துள்ளார். அயர்லாந்து பந்துவீச்சாளர், ஜோஷ் லிட்டில் வீசிய பந்தை ஒரு பெரிய சிக்ஸருக்கு விரட்டியதன் மூலம் 200 சிக்ஸர்கள்  கிளப்பில்  டோனி இணைந்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் 200 சிக்ஸர்களை அடித்த ஐந்தாவது வீரர் ஆனார் டோனி. அதில் 3 சிக்ஸர்கள் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக எடுத்தது குறிப்பிடத்தக்கது.

 200 சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்

கிறிஸ் கெய்ல் (ஆர்சிபி): 239

ஏபி டி வில்லியர்ஸ் (ஆர்சிபி): 238

கீரன் பொல்லார்ட் (எம்ஐ): 223

விராட் கோலி (ஆர்சிபி): 210

எம்எஸ் டோனி (சிஎஸ்கே): 200

20வது ஓவரில் அதிக சிக்ஸர்கள்

இன்னொரு சாதனையாக, இந்தியன் பிரீமியர் லீக்கின் 20வது ஓவரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் தோனி தனது இடத்தில் இன்னும் வலுவாக அமர்ந்துள்ளார்.

ஐபிஎல் 20வது ஓவரில் அதிக சிக்ஸர்கள்:

எம்எஸ் டோனி – 53

கீரன் பொல்லார்ட் – 33

முக்கியமான கட்டத்தில் நம்பர் 7இல் களம் கண்ட டோனி, 200 ஸ்டிரைக் ரேட்டுடன், 7 பந்துகளில் 14 ஓட்டங்களை குவித்து அணி ஒரு நல்ல இலக்கை நிர்ணயிக்க உதவினார். கடைசி ஓவரில் பேட்டிங் செய்ய வந்த டோனியின் வேகமான குவித்த ரன்கள் சிஎஸ்கே போர்டில் 178 ஓட்டங்களை பதிவு செய்ய உதவியது.

 டோனி 30 முறை கடைசி ஓவர்களில் 10 ஓட்டங்களுக்கு மேல் அடித்திருக்கிறார். இவருக்கு அடுத்தபட்சமாக பொல்லார்ட் 18 முறையும், பாண்டியா 13 முறையும், ரோகித், ஜடேஜா,மில்லர் ,தினேஷ் கார்த்திக் ஆகியோர் தலா ஒன்பது முறையும் அடித்திருக்கிறார்கள்.

  ருத்ராஜ் கெய்க்வாட்டும் இரண்டு மைல்கல்லை எட்டி இருக்கிறார். சிஎஸ்கே அணிக்காக அதிக முறை 70 ஓட்டங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ருத்ராஜ் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் ரெய்னா 10 முறைக்கு மேல் 70 அடித்திருக்கிறார் ருத்ராஜ் மூன்று சீசர்களின் விளையாடி எட்டு முறை அடித்திருக்கிறார். ஐபிஎல் சீசனில் தொடக்க ஆட்டத்தில் அதிக ஓட்டங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ருத்ராஜ் மூன்றாம் இடத்தில் உள்ளார். மெக்குல்லம்158 ஓட்டங்கள் உடன் முதல் இடத்திலும் ரோகித் சர்மா 98 ஓட்டங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

96 போட்டிகளில் விளையாடிய ஷமி  101 விக்கெற்கள் எடுத்துள்ளார்.

புதிதாக அறிமுகமான  இம்பெக்ட்  வீரராக  கேன் வில்லியம்ஸுக்குப் ப்திலாக சாய் சுதர்சன் களம்  இறங்கினார். ராயுடுவுக்கும் பதிலாக துஷார் தேஷ்  பாண்டே விளையாடினார்.

15 சீசன்கள் 13 கப்டன்கள் சம்பியனாகாத பஞ்சாப்

.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 15 சீசன்கள் முடிவடைந்துள்ளன. இதில் மும்பை இந்தியன்ஸ் அதிக பட்சமாக 5 முறை .பி.எல். கோப்பையை வென்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் 4 தடவை பட்டம் பெற்றுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தலா 1 தடவையும் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளன.

 ஐபிஎல் தொடரில் அதிக கப்டன்களை மாற்றிய அணியாக பஞ்சாப் புதுவிதமான சாதனை ஒன்றை படைத்துள்ளது. இதுவரை நடந்த 15 சீசனில் 13 கப்டன்கள் அந்த அணிக்கு தலைமை தாங்கியுள்ளனர். ஐபிஎல் தொடரில் சம்பியனாகாத அணிகளுள் பஞ்சாப் அணியும் ஒன்று. இந்தாண்டு ஷிகர் தவான் தலைமையில் பஞ்சாப் களம்  இறங்குகிறது.

 

பஞ்சாப் கிங்ஸ் அணியின் ப்டன்கள் பட்டியல்:-

யுவராஜ் சிங் -இந்தியா

 குமார் சங்ககார -இலங்கை

ஜெயவர்தன-இலங்கை

 கில்கிறிஸ்ட் -அவுஸ்திரேலியா

 டேவிட் ஹசி -அவுஸ்திரேலியா

 பெய்லி -அவுஸ்திரேலியா

சேவாக் - இந்தியா

 டேவிட் மில்லர் -தென் ஆப்பிரிக்கா

 முரளி விஜய் -இந்தியா

மேக்ஸ்வெல் -அவுஸ்திரேலியா

 அஸ்வின் -இந்தியா

கேஎல் ராகுல் - இந்தியா

அகர்வால் -இந்தியா