16வது
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அஹமாதபாத்
நரேந்திர மோடி மைதானத்தில் கலை
நிகழ்ச்சிகளுடன் கோலகலமாக தொடங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸை
எதிர்த்து விளையாடிய குஜராத் டைடன்ஸ் ஐந்து விக்கெட்களால் வெற்றி
பெற்றது.
நணயச்சுழற்சியில்
வெறி பெற்ற குஜராத்
அணி கப்டன் ஹார்திக்
பாண்டிய முதலில் பந்துவீச்சை தேர்வு
செய்தார். முதலில்
துடுப்பெடுத்தாடிய சென்னை அணி
20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்கள் எடுத்தது. குஜராத் அணி 19.2 ஓவர்களில் 182 ஓட்டங்கள் எடுத்து
5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று
சென்னை
அணி தொடக்க வீரர்களான கான்வே,ருதுராஜ் ஆகியோர்
களமிறங்கினர். முகமது ஷமி பந்தில்
கான்வே 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனையடுத்து ருதுராஜூடன் கைகோர்த்த மொயின் அலி அதிரடியாக
விளையாடி ரஷித் கான் பந்தில்
23 ஓட்டங்களில்
ஆட்டமிழந்தார்.
சென்னை
ரசிகர்கள் நம்பி இருந்த பென்
ஸ்டோக்ஸ் 7 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறி சென்னை ரசிகர்களுக்கு ஏமாற்றம்
அளித்தார். தொடர்ந்து ருதுராஜ் குஜராத் அணியின் பந்துவீச்சை
நாலாப்புறமும் பறக்கவிட்டார். அதிரடியாக விளையாடிய ருத்துராஜ் 9 சிக்சர்கள் அடித்தார். 17.1 வது ஓவர் வரை
விளையாடிய ருதுராஜ் 52 பந்துகளில்
92 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜடேஜா ஒரு
ஓட்டத்துடன் வெளியேறினார்.
கடைசி ஓவரில் சென்னை அணி கப்டன் டோனி ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து ரசிகர்களை உற்சாகமூட்டினார். தோனி 7 பந்துகளில் 14 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்கள் எடுத்தது.
179 ஓட்டங்கள் எடுத்தால்
வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய
குஜராத் அணியில் சாஹா , சுப்மன்
கில் தொடக்க வீரர்களாக களமிறங்கி
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக விளையாடிய சாஹா 16 பந்துகளில் 25 ஓட்டங்களும்,
சாய் சுதர்சன் 22 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தானர்.
அதிரடியாக விளையாடிய சுப்மன் கில் 36 பந்துகளில்
3 சிக்சர்கள் 6 பவுண்டரிகளூடன் 63 ஓட்டங்கள்
எடுத்து ஆட்டமிழந்தார்.
குஜராத் அணி 19.2 ஓவர்களில் 182 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
No comments:
Post a Comment