குஜராத்துக்கு எதிரான போட்டியில் சென்னை தோல்வியடைந்தாலும் டோனி புதிய சாதனைகளைப் படைத்துள்ளார். அயர்லாந்து பந்துவீச்சாளர், ஜோஷ் லிட்டில் வீசிய பந்தை ஒரு பெரிய சிக்ஸருக்கு விரட்டியதன் மூலம் 200 சிக்ஸர்கள் கிளப்பில் டோனி இணைந்துள்ளார்.
ஐபிஎல்
தொடரில் 200 சிக்ஸர்களை அடித்த ஐந்தாவது வீரர்
ஆனார் டோனி. அதில் 3 சிக்ஸர்கள்
புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக
எடுத்தது குறிப்பிடத்தக்கது.
200 சிக்ஸர்கள்
அடித்த வீரர்கள்
கிறிஸ்
கெய்ல் (ஆர்சிபி): 239
ஏபி
டி வில்லியர்ஸ் (ஆர்சிபி): 238
கீரன்
பொல்லார்ட் (எம்ஐ): 223
விராட்
கோலி (ஆர்சிபி): 210
எம்எஸ்
டோனி (சிஎஸ்கே): 200
20வது
ஓவரில் அதிக சிக்ஸர்கள்
இன்னொரு சாதனையாக, இந்தியன் பிரீமியர் லீக்கின் 20வது ஓவரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் தோனி தனது இடத்தில் இன்னும் வலுவாக அமர்ந்துள்ளார்.
ஐபிஎல்
20வது ஓவரில் அதிக சிக்ஸர்கள்:
எம்எஸ்
டோனி – 53
கீரன்
பொல்லார்ட் – 33
முக்கியமான
கட்டத்தில் நம்பர் 7இல் களம்
கண்ட டோனி, 200 ஸ்டிரைக் ரேட்டுடன், 7 பந்துகளில் 14 ஓட்டங்களை குவித்து அணி ஒரு நல்ல
இலக்கை நிர்ணயிக்க உதவினார். கடைசி ஓவரில் பேட்டிங்
செய்ய வந்த டோனியின் வேகமான
குவித்த ரன்கள் சிஎஸ்கே போர்டில்
178 ஓட்டங்களை பதிவு செய்ய உதவியது.
டோனி
30 முறை கடைசி ஓவர்களில் 10 ஓட்டங்களுக்கு
மேல் அடித்திருக்கிறார். இவருக்கு அடுத்தபட்சமாக பொல்லார்ட் 18 முறையும், பாண்டியா 13 முறையும், ரோகித், ஜடேஜா,மில்லர்
,தினேஷ் கார்த்திக் ஆகியோர் தலா ஒன்பது
முறையும் அடித்திருக்கிறார்கள்.
ருத்ராஜ் கெய்க்வாட்டும் இரண்டு மைல்கல்லை எட்டி
இருக்கிறார். சிஎஸ்கே அணிக்காக அதிக
முறை 70 ஓட்டங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில்
ருத்ராஜ் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். முதல்
இடத்தில் ரெய்னா 10 முறைக்கு மேல் 70 அடித்திருக்கிறார் ருத்ராஜ்
மூன்று சீசர்களின் விளையாடி எட்டு முறை அடித்திருக்கிறார்.
ஐபிஎல் சீசனில் தொடக்க ஆட்டத்தில்
அதிக ஓட்டங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில்
ருத்ராஜ் மூன்றாம் இடத்தில் உள்ளார். மெக்குல்லம்158 ஓட்டங்கள் உடன் முதல் இடத்திலும்
ரோகித் சர்மா 98 ஓட்டங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
96 போட்டிகளில்
விளையாடிய ஷமி 101 விக்கெற்கள் எடுத்துள்ளார்.
புதிதாக அறிமுகமான இம்பெக்ட் வீரராக கேன் வில்லியம்ஸுக்குப் ப்திலாக சாய் சுதர்சன் களம் இறங்கினார். ராயுடுவுக்கும் பதிலாக துஷார் தேஷ் பாண்டே விளையாடினார்.
No comments:
Post a Comment