விம்பிள்டனில் ரஷ்ய, பெலாரஷ்ய வீரர்கள் "நடுநிலை" விளையாட்டு வீரர்களாக விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என்று ஆல் இங்கிலாந்து கிளப் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
"நடுநிலை' விளையாட்டு வீரர்களாக போட்டியிடுவதற்கும் பொருத்தமான
நிபந்தனைகளுக்கு இணங்குவதற்கும் உட்பட்ட ரஷ்ய , பெலாரஷ்ய வீரர்களின் உள்ளீடுகளை ஏற்றுக்கொள்வது
எங்கள் தற்போதைய நோக்கம்" என்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ரஷ்ய அல்லது பெலாரஷ்ய மாநிலங்களில் இருந்து நிதியுதவி பெறும்
வீரர்கள் அல்லது மாநிலங்களால் இயக்கப்படும் அல்லது கட்டுப்படுத்தப்படும் நிறுவனங்களின்
அனுசரணை உள்ளவர்கள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட
மாட்டார்கள்.
"எல்லா காரணிகளையும் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஷிப்
போட்டிகளுக்கு இவை மிகவும் பொருத்தமான ஏற்பாடுகள் என்பது எங்கள் கருத்து" என்று
ஆல் இங்கிலாந்து கிளப்பின் தலைவர் இயன் ஹெவிட் கருத்து தெரிவித்தார்.
"இப்போது மற்றும் சாம்பியன்ஷிப் தொடங்குவதற்கு இடையில் சூழ்நிலைகள்
மாறினால், நாங்கள் பரிசீலித்து அதற்கேற்ப பதிலளிப்போம்."
டென்னிஸின் நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றாக, விம்பிள்டன்
சாம்பியன்ஷிப் 2022 போட்டிக்கான ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய வீரர்களின் நுழைவுகளை நிராகரித்தது.
விளாடிமிர் புட்டின் உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து கடந்த
ஆண்டு ரஷ்ய,பெலாரசியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. விம்பிள்டன் இந்த ஆண்டு ஜூலை
3 முதல் 16 வரை நடைபெற உள்ளது.
ரஷ்யாவின் உலக தரவரிசையில் ஐந்தாவது வீரரான டேனியல் மெட்வடேவ் , பெலாரஸின் நடப்பு அவுஸ்திரேலிய ஓபன் சாம்பியனான அரினா சபலெங்கா ஆகியோர் விளையாடுவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment