இலங்கை சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து ஏதோ ஒரு போர் தமிழ் மக்கள் மீது திணிக்கப்படுகிறது. பெளத்தக்குது முன்னுரிமை கொடுத்தால் தேர்தலில் வாக்குகளை அருவடை செய்யலாம் என்பதை சிங்கள அரசியல்வாதிகள் மிகத் துல்லியமாகப் புரிந்து கொண்டார்கள்.அரச இயந்திரம் அவர்களுக்குப் பக்க பலமாக உள்ளது.
தமிழ்மக்கள் வாழும் இடங்களில் உள்ள வரலாற்றுத்தொன்மங்களையும், சரித்திரச் சான்றுகளையும் அழித்தொழிப்பதிலும், கைப்பற்றுவதிலும் சிலர் முனைப்புக் காட்டுகின்றனர். சிங்கள அரசியல்வாதிகளின் உணர்ச்சிகரமான பேச்சுகள் அவர்களைத்தூண்டிவிடுகின்றன. தேரர்கள், பாதுகாப்புப் படையினர் அவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கின்றனர். நீதிமன்றத் தீர்ப்புகள் துச்சமாக துக்கி எறியப்படுகின்றன. அந்த வரிசையில் இப்போது தொல்பொருளியல் திணைக்களம் பகிரங்கமாக இறங்கி உள்ளது. தொல்பொருளியல்ல் திணக்களமா தொல்லை தரும் திணைக்களமா எனக் கேட்கத் தோன்றுகிறது.
இலங்கையின் தொல்பொருளியல் திணைக்களம், நாட்டில் உள்ள தொல்லியல் மரபுரிமை தொடர்பான பணிகளுக்காக
உருவாக்கப்பட்ட அரசாங்கத்தின் ஒரு பிரிவு ஆகும். இது பிரித்தானியர் ஆட்சிக்காலத்தின்போது
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்டது. அனுராதபுரம், பொலநறுவை போன்ற
மறக்கப்பட்ட பண்டைக்காலத் தலைநகரங்களின் மீது ஏற்பட்ட ஆர்வமே அப்போதைய இலங்கை அரசாங்கம்
தொல்லியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குக் காரணமாக அமைந்தன. இலங்கையில் தொல்பொருளியல்
மரபுரிமை தொடர்பான சரியான முகாமைத்துவத்தை வளர்த்தெடுப்பது இலங்கைத் தொல்பொருளியல்
திணைக்களத்தின் முதன்மை நோக்கம். இதனால், இலங்கையின் தொல்லியல் மரபுரிமையை முகாமைப்படுத்துவதையும்
அது தொடர்பான செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துவதையும் இத்திணைக்களம் முக்கிய பணியாகக் கொண்டுள்ளது.
தொல்பொருளியல் மரபுரிமை தொடர்பில், தேவையான மனித வளங்களையும், நிறுவன வளங்களையும் உருவாக்கிப்
பேணுதல்; நாடு முழுவதிலும் உள்ள தொல்லியல் மரபுரிமைகளைப் பாதுகாத்தல்; அவற்றைப் பதிவு
செய்தல்; இம்மரபுரிமை தொடர்பாக மக்களிடையே அறிவை வளர்த்தல்; தொல்லியல் களங்களையும்,
நினைவுச்சின்னங்களையும், தொல்பொருட்களையும் பேணிப் பாதுகாத்தல்; தொடர்பான ஆய்வுகளில்
ஈடுபடுதல் என்பன இத்திணைக்களத்தின் செயற்பாட்டு வரம்புக்குள் அடங்குகின்றன.
இலங்கையில் தொல்பொருளியல் திணைக்களம் 1890ஆம் ஆண்டில் அதன் பணிகளை ஆரம்பித்தாலும் தொல்பொருளியல் பணிகள் தொடர்பான அடிப்படை வேலைகள் அதற்குப் பல வருடங்களுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டு விட்டன. ஹர்கியுலஸ் ரொபின்சன் ஆட்சிக் காலத்திலேயே தொல்பொருளியல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இந்தியாவில் தொல்பொருளியல் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டு ஏழு ஆண்டுகளின் பின்னர் 1868ஆம் ஆண்டில் இலங்கையில் புராதன கட்டிடக்கலை தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளக் குழுவொன்று அப்போதைய ஆட்சியாளர்களினால் நியமிக்கப்பட்டது. 1871ஆம் ஆண்டில் நாட்டில் ஆட்சியாளர்களிடமிருந்து நிதி மற்றும் ஏனைய உதவிகளைப் பெற்றுக்கொண்டு அனுராதபுரத்தையும் பொலனறுவையையும் முதன்மையாகக் கொண்டு கட்டிடங்களின் பெறுமதிமிக்க புகைப்படங்கள் பல பெற்றுக்கொள்ளப்பட்டன.
1873ஆம் ஆண்டில்
வில்லியம் கிறகரி தேசாதிபதி முழுமையான ஆய்வொன்றை மேற்கொள்ளும்படி பணிப்புரை வழங்கினார். அவ்வாண்டிலேயே புராதன அனுராதபுரம் தொடர்பான அமைவிட ஆய்வொன்று ஆரம்பிக்கப்பட்டது. ஜே.ஜி. ஸ்மினரினால்
மேற்கொள்ளப்பட்ட முன்னோடி பணிகளை சார்பாகக் கொண்டு தாதுகோபுரங்கள் மற்றும் ஏனைய அழிவுற்ற கட்டிடங்கள் உள்ளடங்கிய “அனுராதபுரத்தின் தொல்பொருளியல் அழிவுச் சின்னங்கள்” என்ற நூல் 1894ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
இலங்கையில்
823/73 ஆம் இலக்க
தொல்லியல் கட்டளைச்சட்டம் (188ஆம் அத்தியாயம்)
16ஆம் பிரிவின்
கீழ் வடக்கு கிழக்கு பகுதிகளில் இருக்கும் பல சைவ சமய
ஆலயங்களில் பௌத்த மதம் சார்ந்த அடையாளங்கள் இருப்பதாக நல்லாட்சி அரசாங்க காலத்திலும் அதற்கு முந்திய ஆட்சி காலத்திலும் தொல்லியல் திணைக்களம் சிறப்பு வர்த்தமானிகள் மூலம் அடையப்படுத்தியுள்ளது.
அவற்றில் ஒட்டுசுட்டான்
தான்தோன்றி ஈஸ்வரம் ஆலயம்,மாந்தைகிழக்கு பூவரங்குளம் பத்திரகாளி அம்மன் கோவில், குமாரபுரம் சிறீ சித்திரவேலாயுதம் முருகன் கோவில், குமுழமுனை ஆஞ்சநேயர் கோவில்,பாண்டியன்குளம் சிவன் கோவில்,வவுனிக்குளம் சிவபுரம் சிறீமலை கோவில், குமுழமுனை குறிஞ்சிக்குமரன் கோவில் ,மன்னார் திருக்கேதீஸ்வரக் கோவில், மயிலிட்டி போர்த்துக்கேயர் கோவில் , ஒதியமலையில் வைரவர் கோவில்,முள்ளியவளை குமாரபுரம் முருகன் கோயில், திருகோணமலை தென்னமரவடி கந்தசாமிமலை,செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயம்,புல்மோட்டை அரிசி ஆலை மலை கோவில்,வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயம், மூதூர், சூடைக்குடா மத்தள மலைப்பகுதி முருகன் ஆலயம், திருகோணலை கோணேஸ்வரர் ஆலயம்,மூன்றுமுறிப்பு கண்ணகி அம்மன்,, சிவபுரம் சிவாலயம்,, மாந்தை கிழக்கு ஆதிசிவன் கோயில், குஞ்சுமப்ப பெரியசாமி கோவில்,ஸ்ரீ மலை நீலியம்மன் கோயில், கன்னியா வெந்நீர் ஊற்று பிள்ளையார் கோவில்,மட்டக்களப்பு தாந்தாமலை ஆலயம்,. மட்டக்களப்பு கச்சக்கொடி சுவாமிமலை போன்றவை உள்ளடங்குவதாகவும் இவற்றை தொல்லியல் இடங்களைக் அடையப்பப்படுத்தியுள்ளமை மத ரீதியிலான ஆக்கிரமிப்பு இலை
என எப்படிச் சொல்வது.
தொல்பொருளியல்
திணைக்களத்தில் தமிழ்ர்களும், முஸ்லிம்களும் உள்வாங்கபப்டவில்லை.
வெடுக்கு நாரி மலை, குருந்தூர் மலை கின்னியா வெந் நீர் ஊற்று , யாழ்ப்பாணம், மந்திரிமனை, நெடுந்தீவு வெடி அரசன் கோட்டை ஆகியவற்ரின் மீது தொல்பொருளியல் திணைக்களத்தின் பார்வை விழுந்துள்ளது.
நிலாவரையில்
வைக்கப்பட்ட புதர் சிலை எதிர்ப்பினால்
அகற்றப்பட்டது. கச்சதீவு
என்ரால் புனித அந்தோனியார்
தான் ஞாபகத்துக்கு
வருவார். அங்கு அரச
மரம் வளர்க்கப்பட்டு புத்தை
சிலை வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள தொல்பொருளியல் திணைக்களம் சிங்கள் மக்களுக்கு மட்டும் உரிமையானது என அங்கு கடமையாற்றுபவர்கள் நினைக்கிரார்கள். இலங்கையில் வாழு இன்னொரு இன மக்களின் நம்பிக்கையைச் சிதறடிகும் செயற்பாட்டை தொல்பொருளியல் திணைக்கள கன கட்ட்சிதமாகச் செய்கிரது. இது தமிழ், சிங்கள உரவுக்கு விரோதமானதி. தொல்பொருள் திணைக்களம் இன – மத வேறுபாடுகளுக்கு அப்பால் செயற்படுகின்றது என்பதை உறுதிப்படுத்துவது அவசியம்
No comments:
Post a Comment