ஜெயலலிதா எனும் ஆளுமையின் கட்டுப்பாட்டில் இருந்த அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தனிப் பெரும் தலைவராக உயர்ந்துள்ளார் எடப்பாடி பன்னீர்ச்செல்வம். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் உருவான பதவிப் போட்டியில் எடப்பாடி வெற்றி பெற்றுள்ளார்.
ஜெயாலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓ.பன்னீர்ச்செல்வம். சசிகலாவால் நியமிக்கப்பட்டவர்
எடப்பாடி பழனிச்சாமி. ஜெயலலிதா தாரைவார்த்த முதலமைச்சர் பதவியை திரும்பவும் அவரிடம் கொடுத்தவர் பன்னீர்ச்செல்வம். சசிகலாவின் கையால் முதலமைச்சர் பதவியைப் பெற்ற எடப்பாடி, அவரை யார் எனக் கேட்டார்.பன்னீர்ச்செல்வம்
விசுவாசி. எடப்பாடி அரசியல்வாதி. விசுவாசத்துக்கும் அதிகாரத்துக்கும் இடையேயான போட்டியில் அரசியல் அதிகாரம் வெற்றி பெற்றுள்ளது.
தனது கையில் இருந்த இரட்டை இலைச் சின்னத்தை கட்சிக்காக விடுக்கொடுத்த பன்னீரை எடப்பாடியும் அவரது ஆதரவாளர்களும் தூக்கி
எறிந்துவிட்டனர்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுக்குழு, பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஜூலை 11ஆம் திகதி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதால் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப்
பின்னர் ஒருங்கிணைப்பாளர். இணை ஒருங்கிணப்பாளர்
பதவிகள் உருவாக்கப்பட்டன. இரட்டைத் தலைமையை
எடப்பாடி விரும்பவில்லை. எம்ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரைப் போன்று
தனிப் பெரும் தலைவராக உருவாக விரும்பினார்
எடப்பாடி. பன்னீர்ச்செல்வம் அதனை விரும்பவில்லை. எடப்பாடியைப் பொதுச் செயலாளராகுவதற்காக
விதிகள் திருத்தப்பட்டன. பொதுக்குழுவில் பன்னீர்
அவமானப் படுத்தப்பட்டார்.
நியாயம் கிடைக்கும் என நினைத்த பன்னீர் நீதிமன்றத்தை நாடினார். அதிகமான எம்பிக்களும், சட்ட சபை உறுப்பினர்களும்
தனது பக்கம் இருப்பதை
எடப்பாடி உறுதிப்படுத்தினார்.
எடப்பாடியின் த்லமிமையிம்
10 தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோல்வியடைந்தது. எடப்பாடிக்கு எதிரான 8 வழக்குகளில் பன்னீர் தோல்வியடைந்தார். என்ராலும் மனம் தளராது பொதுச் செயலாளர் பதவிக்கு எதிராக தடைகோரி வழக்குத்
தாக்கல் செய்துள்ளார் பன்னீர்ச்செல்வம்..
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 50 ஆண்டுகால வரலாற்றில் அக்கட்சியின் 7-வது பொதுச்
செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1972-ம்
ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வரும் நடிகருமான எம்ஜிஆர்
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார். எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் ஜெயலலிதா
கட்சியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு கடந்த 7 ஆண்டுகளாக
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பெரும் குழப்பம் நீடித்தது
ஜெயலலிதா மறைவுக்குப்
பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
சசிகலா. ஆனால் சசிகலா சில நாட்களிலேயே பெங்களூர் சிறைவாசம் அனுபவிக்க நேரிட்டது. இதன்பின்னர் பன்னீர், எடப்பாடி அணிகள் இணைந்தன. இதனால் பொதுச்செயலாளர் பதவியில்
இருந்து சசிகலா நீக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு இன்னமும் நிலுவையில் இருக்கிறது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பதவி நிரந்தரமாக ஜெயலலிதாவுக்குதான் என ஒரு விதியை ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து உருவாக்கினர். அதிமுகவில் ஒரூங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. அதிமுகவில் மீண்டும்பன்னீர், எடப்பாடி அணிகள் என பிளவு ஏற்பட்டது. இது தொடர்பான சட்டப் போராட்டங்களின் இறுதியாக தற்போதுஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
1974-ம் ஆண்டு நிறுவனரான
எம்ஜிஅர் அக்கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1976-ம் ஆண்டு மூத்த தலைவரான நாவலர் நெடுஞ்செழியன், பொதுச்செயலாளராக
தேர்வு செய்யப்பட்டார். 1980-ம் ஆண்டு மற்றொரு மூத்த தலைவரான ப.உ.சண்முகம், அதிமுகவின்
பொதுச்செயலாளரானார். 1984-ம் ஆண்டு எஸ்.ராகவானந்தம்
பொதுச்செயலாளரானார். அப்போதுதான் கட்சிக்குள் ஜெயலலிதாவின் வருகை பெரும் புயலை கிளப்பிக்
கொண்டிருந்தது. 1986-ம் ஆண்டில் பொதுச்செயலாளர்
பதவிகளை முன்வைத்து பெரும் பிரளயம் வெடித்தது. மீண்டும் பொதுச்செயலாளரானார் எம்ஜிஆர். ஆனால் மூத்த துணை
பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டு ராகவானந்தத்துக்கு அப்பதவி வழங்கப்பட்டது. து ணை பொதுச்செயலாளர்களாக ஹண்டே, காளிமுத்து நியமிக்கப்பட்டனர்.
1987-ம் ஆண்டு எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகம் மீண்டும் பிளவுபட்டது. இதன் பின் அதிமுக
அணிகள் ஒருங்கிணைந்தன. ஒருங்கிணைந்த அதிமுக பொதுச்செயலாளராக 1989-ம் ஆண்டு ஜெயலலிதா
தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மறையும் வரை கட்சியின் பொதுச்செயலாளராகவே இருந்தார். ஜெயலலிதா காலத்தில்
மூத்த துணை பொதுச்செயலாளராக எஸ்டி சோமசுந்தரம், பஉ சண்முகம், ஆர் எம்வீரப்பன் இருந்தனர்.
2016-ம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா பொதுச்செயலாளரானார்.
இதனையடுத்து 2017-ல் சசிகலா அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். எம்ஜிஆர், நெடுஞ்செழியன்,
ப.உ. சண்முகம், ராகவானந்தம், ஜெயலலிதா, சசிகலா ஆகியோரைத் தொடர்ந்து அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகத்தின் 7-வது பொதுச்செயலாளராகி உள்ளார் எடப்பாடி கே.பழனிசாமி.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதியும்
ரத்து செய்யப்பட்டது.. அதுமட்டுமல்ல, பொருளாளருக்கான
அதிகாரங்கள் அனைத்தையும் பொதுச்செயலாளருக்கே என்ற ரீதியில் சட்ட விதிகளிலும் திருத்தம்
கொண்டு வரப்பட்டது. இதுதான் ஜெயலலிதாவின் தொண்டர்களை அதிர செய்துள்ளது. நீதிமன்றம்
தீர்ப்பளித்தாலும், தொண்டர்கள் எடப்பாடியின்
பக்கம் இல்லை என்பதை ஈரோடு இடைத் தேர்தல் நிரூபித்துள்ளது.
எடப்பாடிக்கான சோதனை இனிமேல்தால் ஆரம்பமாகப் போகிறது. அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நண்பனும் இல்லை என ஜெயலலிதா அடிக்கடி கூறுவார். அரசியல் எதிரிகளான பன்னீர், சசிகலா, தினகரன் ஆகிய
மூவரும் ஒன்றிணைந்தால் எடப்பாடிக்கு பெரிதும்
பாதிப்பு ஏற்படும்.
தனிப்பெரும் தலைவராக எடபாடி
உருவாகுவதை பாரதீய ஜனதா பார்த்துக்கொண்டிருக்காது. தமிழகத்தில் தாமரை மலருவதற்காக இரட்டை இலையை இரண்டாக்கி உள்ளது பாரதீய ஜனதாக்
கட்சி .
எம்.ஜி.ஆர் வேஷமணிந்த தொண்டர்
ஒருவர் எடப்பாடியின் காலில் விழுந்ததையும், எம்.ஜி.ஆரைப் போல எடப்பாடிக்கு தொப்பி கண்ணாடி,சால்வை அணிந்ததையும் எம்ஜி.ஆரின்
ரசிகர்கள் ஏற்கவில்லை.
எடப்பாடிக்கு உதவி செய்யும் பாரதீய ஜனதாக் கட்சியின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டிய இக்கட்டான நிலை எடப்பாடிக்கு ஏற்பட்டுள்ளது. மோடியா லேடியா என ஜெயலலிதா சவால் விடுத்தார். எடப்பாடியால் அப்படி சவால் விட முடியாது.
பன்னீர்,சசிகலா, தினகரன் மட்டுமல்லாது ஸ்டாலினுக்கு எதிராகவும்
அரசியல் செய்ய வேண்டிய எடப்பாடி செயற்பட வேண்டிய நிலை உள்ளது.
கருணாநிதி,எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா,ஸ்டாலின் போன்று எடப்பாடியும், பன்னீரும் தனிப்பெரும் தலைவர்கள்
அல்ல. சொந்தத் தொகுதிக்கு வெளியே தேர்தலில் போட்டியிட்டு வெற்ரி பெற எடப்பாடியாலும்,
பன்னீராலும் முடியாது. தமிழகம் முழுவதும் அவர்களுக்கு ஆதரவு இல்லை.
No comments:
Post a Comment