Monday, November 6, 2023

இக்கட்டான நிலையில் இலங்கை கிறிக்கெற்


 உலகக்கிண்ண  கிரிக்கெற் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. உலகக்கிண்ண சம்பியன்களுக்கு நெருக்கடி கொடுத்த இலங்கை கிறிக்கெற் அணி நெருக்கடியில் சிக்கி உள்ளது. உலகக்கிண்ணத்தை வெல்வதே  விளையாட்டு வீரர்களின்  இலட்சியம்.

இலங்கையின்  உலகக்கிண்ண சம்பியன் கனவு 1999 ஆம் ஆண்டு நனவானது. அதன்  பின்னர் கிரிக்கெற்  வைரஸ் இலங்கை ரசிகர்களப் பீடித்தது. கிறிக்கெற்  ஜாம்பவான்களைக்கொண்ட கிரிக்கெற் அணிகள்  இலங்கையிடம் வீழ்ந்தன. கிரிக்கெற்றைச் சொல்லொக் கொடுத்தவர்களுக்கு இலங்கை பாடம் எடுத்தது.

இலங்கை கிரிக்கெற் அணியின் சம்பியன்கள்  ஒருவர் பின்  ஒருவர் ஓய்வு பெற்ற பின்னர்  அவர்களின் இடத்தை இடத்தை  நிரப்புவதற்கு  உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. ஆனாலும்,  இலங்கை பல  போட்டிகளில் வெற்றி பெற்றது. உலகக்கிண்ணத் தொடருக்காக ஏனைய அணிகள் தயாரான  போது சரியான  ஒரு  அணியைத் தயார்ப்படுத்த இலங்கை கிரிக்கெற் தவறிவிட்டது. உலகக் கிண்ணத் தொடர் நெருங்கிய வேளையில்  கப்டன் மாற்றப் பட்டார். உலகக் கிண்ணப் போட்டியில் ஒரு அணியாகப் போட்டியிடுவதற்கு ஏற்ற சூழ்நிலைகள் இல்லாதது, அத்தகைய போட்டிகளின் தோல்விகளை நேரடியாகப் பாதித்தது.

  வேகப்பந்து வீச்சாளர்களான துஷ்மந்த சமிர, மதிஷ பத்திரன, லஹிரு குமார ஆகியோர்  காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு  மாற்ரு வீரர்கள் எவரும் அணியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. 

 னிப்பட்ட பழிவாங்கல்கள் மற்றும் புறக்கணிப்பு காரணமாக அஞ்சலோ மெயூஸ், தினேஷ் சந்திமால் போன்ற மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் சேர்க்கப்படவில்லை.இலங்கையின் தோல்விக்கு இவை முக்கிய காரணமாகும்.

தற்போதைய இலங்கை கிறிக்கெற் செயற்குழு , தெரிவுக்குழுவின் செயற்பாடுகளின் படி 2040 இல் கூட உலகக் கிண்ணத்தை வெல்ல முடியாத இக்கட்டான நிலையில் உள்ளதாக விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க வலியுறுத்தினார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் இருந்து பெறப்படும் பணத்தை வீரர்களின் மேம்பாட்டிற்காகவும், விளையாட்டை மேம்படுத்தவும் பயன்படுத்தாமல், தங்கள் சொந்த மகிழ்ச்சிக்காகவும் செயற்குழு பயன்படுத்துகின்ற சூழ்நிலை உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவுவுஸ்திரேலியாவில் ரி20 உலகக் கிண்ண சுற்றுப்பயணத்தின் போது இடம்பெற்ற ஊழல்களும், எல்.பி.எல் போட்டித் தொடரில் அந்நாட்டுக்கு பணம் எதுவும் வழங்கப்படவில்லை என்பதும் அனைவரும் அறிந்ததே. உலகக் கிண்ணம் போன்ற பொதுவான லட்சியங்களைத் தூக்கி எறிந்துவிட்டு, கிரிக்கெட் நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழு, ஆலோசகர்கள் மற்றும் தேர்வுக் குழுவும் எல்.பி.எல் போட்டிகளுக்கு எப்படி ஒப்புக்கொண்டன? எல்.பி.எல் போட்டியை நடத்த வேண்டுமா என அமைச்சர் கேள்வி எழுப்பி உள்ளார்.

இலங்கை அணியின்  மோசமான தோல்விக்குப் பொறுப்பேற்று  இலங்கை கிரிக்கெட் சபை  உடனடியாக பதவி விலக வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.    இலங்கை கிரிக்கெற் சபைக்கும், விளையாட்டு அமைச்சருக்கும் இடையே  பல பிரச்சனைகள்  உள்ளன. அவை  பூதாகரமாக வெடிக்க  உள்ளன.

    தலைமை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் மாதாந்த சம்பளமாக 30000 அமெரிக்க டொலர், ஆலோசகர் பயிற்சியாளர் மஹேல ஜயவர்தன 20,000 அமெரிக்க டொலர்,    உதவி பயிற்சியாளர் நவீத் நவாஸ் 14,000 அமெரிக்க டாலர்,    முழு பயிற்சி ஊழியர்களுக்கும் மாதந்தோறும் 120,000 அமெரிக்க டாலர்கள் ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால்,  கிறிக்கெற்றில் எந்தவிதம்மான  முன்னேற்றமும்  இல்லை. ஜயவர்த்தன இருப்பதால், தலைமைப் பயிற்சியாளர் சில்வர்வுட் வெறும் கைப்பாவை போல் இருக்கிறார் என்ற குற்றச் சாட்டும் இருக்கிறது.

  இலங்கை கிறிக்கெற்  சபை  தேசிய வீரர்களுக்கு சம்பளம் கொடுக்கத் தவறிய காலகட்டம் இருந்தது. , ஆனால், அந்த சகாப்தத்தில் இலங்கை நான்கு உலகக் கிண்ண  இறுதிப் போட்டிகளில் விளையாடியது - ஒன்றில்சம்பியனானது.  ஏனென்றால் அதற்குள் முன்னுரிமை தரமானது. கிரிக்கெட், உருவாக்கப்படும் பணத்தின்   அளவு அல்ல.

விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம்.  போராடித் தோற்பது வெற்றிக்குச் சமானமானது. போராடாமல்  தோற்பது அவமானமானது.  இரண்டு முக்கிய தொடர்களில்  இந்தியாவுக்கு எதிராக  50+  ஓட்டங்கள் என்பது மிக  மோசமான  பெறுபேறாகும்.

கிறிக்கெற் என்பது ஒரு விளையாட்டாக இல்லாமல் கிட்டத்தட்ட ஒரு மதமாக இருக்கும் நாட்டில் எப்படி கிறிக்கெற்  இந்த முறையில் இயங்க அனுமதிக்கப்படுகிறது என்று ஒருவர் ஆச்சரியப்படுவார். இலங்கை கிரிக்கெட்   விளையாட்டு அமைப்பு என்ற நிலையைக் கடந்து விட்டது.  இப்போது ஒரு வணிகத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதாக  தெரிவிக்கப்பட்டுகிறது. 

இலங்கை  கிரிக்கெட்டின் செயலாளர் மொஹான் டி சில்வா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.  மற்றயவர்கள் என்ன செய்யப் போகிறார்களோ தெரியாது.  கிறிக்கெற்றை நேசிக்கும்  இலங்கை ரசிகர்களின்  எதிர் பார்ப்பு நிறைவேற்றப்பட வேண்டும்.

Sunday, November 5, 2023

தென் ஆபிரிக்காவை தெறிக்கவிட்ட இந்தியா

கொல்கத்தா ஈடன் கார்டன்  மைதானத்தில்  நடைபெற்ற 37வது லீக் போட்டியில்   தென்னாப்பிரிக்கவுக்கு எதிராக விளையாடிய  இந்தியா  243  ஓட்டங்களால் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்ததைப்  பிடித்துள்ளது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற  இந்தியா  முதலில் துடுப்பெடுத்தாடி  50 ஓவர்களில் 5 விக்கெற்களை இழந்து 326 ஓட்டங்கள் எடுத்தது. 27.1  ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்த தென். ஆபிரிக்கா 83  ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது.

பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடி 62  ஓஆடங்கள்  இணைப்பாடமாக எடுத்த   ரோஹித் சர்மா 40 ஓட்டங்களிலும்,  ப்மன் கில்லும் 23 ஓட்டங்களிலும் ஆடமிழந்தனர்.

3வது விக்கெற்றீல் இணைந்த  கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி  134 ஓட்டங்கள் எடுத்து அசத்தியது.   ஸ்ரேயாஸ் ஐயர்   77 ,  கேஎல் ராகுல் 8, சூரியகுமார் யாதவ் 22 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.  இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய விராட் கோலி 10 பவுண்டரியுடன்  ஆட்டமிழக்காமல் 101*  ஓட்டங்கள் அடித்தார்.   ரவீந்திர ஜடேஜா 3 பவுண்டரி 1 சிக்சருடன் ஆட்டமிழக்காது  19* ஓட்டங்கள் அடித்தார்.

327 என்ற கடினமான இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு ஆரம்பத்திலேயே சிராஜ் வேகத்தில் டீ காக் 5 ஓட்டங்களில் விக்கெற்றைப் பறிகொடுத்தார்.  யான்சென்  அதிக பட்சமாக 14 ஓட்டங்கள் எடுத்தார் . கள் எடுத்தும் 27.1 ஓவரில் தென்னாப்பிரிக்காவை 83 ஓட்டங்களுக்கு சுருட்டிய இந்தியா 243 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது.  ரவீந்திர ஜடேஜா 5, ஷமி ,குல்தீப் யாதவ்  ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

 உலகக் கிண்ணப் போட்டியில்  தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில்இந்தியா சாதனை படைத்துள்ளது.  2015 ஆம் ஆண்டு உலகக் கிணப் போட்டியில் மெல்போர்ன் நகரில் இந்தியா 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்காவை தோற்கடித்தது.

                      அதிக சிக்ஸர்கள் அடித்த  அடித்த ரோஹித் சர்மா   

 6 பவுண்டரி 2 சிக்சருடன்   40 ஓட்டங்கள் அடித்த ரோஹித் சர்மா  4.3 ஓவரில் இந்தியாவை 50 ஓட்டங்கள் தாண்ட உதவினார்.இந்த 2 சிக்சர்களையும் சேர்த்து இந்த வருடம் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா மொத்தம் 58 சிக்சர்கள் அடித்துள்ளார்.  ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற ஏபி டீ வில்லியர்ஸ் உலக சாதனையை ரோகித் சர்மா சமன் செய்துள்ளார்.

 1. ரோஹித் சர்மா : 58*

 (2023) 1. ஏபி டீ வில்லியர்ஸ் : 58 (2015)

 2. கிறிஸ் கெயில் : 56 (2019)

3. ஷாஹித் அப்ரிடி : 48 (2002)



இந்திய அணி சார்பாக துவக்க வீரர்களாக களம் இறங்கிய ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் இணைந்து கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி சார்பாக மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தி அசத்தியுள்ளனர்.இந்திய அணியின் துவக்க வீரர்களாக களம் இறங்கி ஒரே ஆண்டில் அதிகபட்ச ரன்களை அடித்த துவக்க ஜோடி என்ற சாதனையை இவர்கள் படைத்துள்ளனர்.

2023-ஆம் ஆண்டு மட்டும் ரோஹித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் ஜோடியாக 2019 ஓட்டங்களை குவித்துள்ளனர்.  1998-ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் 2002 ஓட்டங்கள் அடிக்கப்பட்டது.

                               பிறந்தநாளன்று சதம் விளாசிய  கோலி 

  சர்வதேச ஒருநாள் கிறிக்கெற்றீல்  பிறந்தநாளன்று சதம் விளாசிய 7வது என்ற சாதனையைகோலி படைத்துள்ளார். இதுவரை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி தனது 21வது பிறந்தநாளன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசியுள்ளார்.  இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது 25வது பிறந்தநாளன்று அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசினார்.

இலங்கை அணியின் சனத் ஜெயசூர்யா தனது 39வது பிறந்தநாளன்று இந்தியாவுக்கு எதிராகவும், நியூசிலாந்து அணியின் ராஸ் டெய்லர் தனது 27வது பிறந்தநாளன்று பாகிஸ்தானுக்கு எதிராகவும், நியூசிலாந்து அணியின் டாம் லேதம் தனது 30வது பிறந்தநாளன்று நெதர்லாந்துக்கு எதிராகவும் சதம் விளாசி இருக்கின்றனர்.

பிறந்த நாளான இன்று சதம் விளாசியதன் மூலமாக ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுகரின் 49 சதங்கள் சாதனையை சமன் செய்துள்ளார் .

                                               ஐசிசியின் ஆட்ட நாயகன்

50 ஓவர் உலகக்கிண்ணம், ரி20   உலகக் கிண்ணம், சம்பியன்ஸ் டிராபி ஆகிய அனைத்து விதமான ஐசிசி தொடர்களில் மொத்தம் விராட் கோலி 12 ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளார். இதன் வாயிலாக ஐசிசி தொடர்களில் அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்ற வீரர் என்ற  கிறிஸ் கெய்ல் சாதனையை உடைத்துள்ள அவர் மற்றுமொரு புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

1. விராட் கோலி : 12*

 2. கிறிஸ் கெயில் : 11

3. சச்சின் டெண்டுல்கர்/ரோஹித் சர்மா/ஷேன் வாட்சன்/மகலே ஜயவர்த்தன : தலா 10

4. யுவராஜ் சிங்/ஏபி டீ வில்லியர்ஸ்/சனத் ஜயசூர்ய : தலா 9

                                               ஜடேஜாவின் சாதனைகள்

 9 ஓவர்களில் 1 மெய்டன் உட்பட 33 ஓட்டங்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்து அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக அசத்தினார்ஜடேஜா.   உலகக் கிண்ண வரலாற்றில் ஒரு போட்டியில் 5 விக்கெட்களை எடுத்த இந்திய சுழல் பந்து வீச்சாளர் என்ற யுவராஜ் சிங் சாதனையை  சமன் செய்துள்ளார்.  கடைசி நேரத்தில் களமிறங்கி ஆட்டமிழக்காமல்  29* (15) ஓட்டங்கள் குவித்து   ஒரு போட்டியில் 25+ ஓட்டங்கள், 5 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் கபில் தேவ், யுவராஜ் சிங் ஆகியோரின் தனித்துவமான சாதனையும் அவர் சமன் செய்துள்ளார். 

நடப்பு சம்பியனை வீட்டுக்கு அனுப்பிய அவுஸ்திரேலியா

அஹமதாபாத்தில் நடைபெற்ற லீக்  போட்டியில் நடப்பு சம்பியன்  இங்கிலாந்தை  0000  அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்தத் தோல்வியால் இங்கிலாந்து உலகக்கிண்ண்த் தொடரில் இருந்து வெளியேறியது.

 புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடும் இங்கிலாந்து கண்டிப்பாக வென்றே தீர வேண்டும் என்ற நிலைமையில் நாணயச் சுழற்சியில்  வென்று பந்து வீசுவதாக அறிவித்ததுஅவுஸ்திரேலியாவுக்கு துவக்க வீரர்கள் ட்ராவிஸ் ஹெட் 11, டேவிட் வார்னர் 15 ஓடன்ர்களில் கிறிஸ் ஓக்ஸ் வேகத்தில் ஆட்டமிழந்தனர்இரண்டு விக்கெற்களை இழந்து 38 ஒட்டங்கள் எடுத்த இங்கிலாந்தை  3வது விக்கெட்டுக்கு 85 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஸ்டீவ் ஸ்மித்தை 44 ஓடங்களில் அவுட்டாக்கிய அடில் ரசித் அடுத்ததாக வந்த ஜோஸ் இங்லிஷை 3 ஓட்டங்களில் வெளியேற்றினார்.

மறுபுறம் அரை சதம் கடந்து அசத்திய மார்னஸ் லபுஸ்ஷேன் 71 ஓட்டங்களில் அவுட்டானார். இறுதியில் கேமரூன் கிரீன் 47, மார்க்கஸ் ஸ்டோனிஸ் 35, ஆடம் ஜாம்பா அதிரடியாக 29 (19) ஓட்டங்கள் எடுக்க  49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அவுஸ்திரேலியா 286 ஓட்டங்ன்கள் எடுத்தது. இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஓக்ஸ் 4, அடில் ரசித், மார்க் வுட் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

 287 ஓட்டங்களை துரத்திய இங்கிலாந்துக்கு முதல் பந்திலேயே ஜானி பேர்ஸ்டோவை கோல்டன் டக் அவுட்டாகிய மிட்சேல் ஸ்டார்க் அடுத்ததாக வந்த ஜோ ரூட்டையும் 13ஓட்டங்களில் வெளியேற்றினார்.அதனால் 19/2 என்ற சுமாரான துவக்கத்தை பெற்ற இங்கிலாந்தை மற்றொரு துவக்க வீரர் டேவிட் மாலனுடன் ஜோடி சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் நிதானமாக விளையாடி காப்பாற்ற போராடினார்.

 3வது விக்கெட்டுக்கு 84 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் மாலன் 50 ஓட்டக்ன்களில் அவுட்டாக அடுத்ததாக வந்த கப்டன் பட்லர் பொறுப்பின்றிஒரு ஓட்டதுடன் நடையைக் கட்டினார். போராடியபென் ஸ்டோக்ஸ் 64  ஓட்டங்களில் அவுட்டாக காப்பாற்றுவார் என்று கருதப்பட்ட லியம் லிவிங்ஸ்டனும் 2 ஓட்டங்நடையை கட்டினார்மொயின் அலியும் போராடி 42 ஓட்டங்களில் அவுட்டானதால் இறுதியில் கிறிஸ் ஓக்ஸ் 32, ரசித் 20 ரன்கள் எடுத்தும் 48.1 ஓவரில் இங்கிலாந்து 253 ஓட்டங்கள் எடுத்தது. அவுஸ்திரேலியா 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுஆடம் ஜாம்பா 3, ஜோஸ் ஹேசல்வுட், மிட்சேல் ஸ்டார்க், கப்டன் கமின்ஸ் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதனால் 7 போட்டிகளில் 5வது வெற்றியை பதிவு செய்த அவுஸ்திரேலியா செமி ஃபைனல் வாய்ப்பை 99% உறுதி செய்துள்ளது.

401 ஓட்டங்கள் அடித்தும் தோற்றது நியூஸிலாந்து

பெங்களூருவில் நடைபெற்ற  உலகக்கிண்ண 35 ஆவது  லீக் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய  நியூஸிலாந்து 50  ஓவர்களில் 6 விக்கெற்களை இழந்து 401  ஓட்டங்கள் அடித்து மிரட்டியதுமழை காரணமாக போட்டி கைவிடப்பட்டதால் டிஆர் எஸ் டி விதிமுறைப்படி21 ஓட்டங்கள் வித்தியாசத்தில்   பாகிஸ்தான் வென்றது.

 நியூஸிலாந்து  அணியின்  இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா 108, கப்டன் கேன் வில்லியம்சன் 95 ஓட்டங்கள் எடுத்தனர்.    பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக முகமது வாசிம் 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

 402  ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய பாகிஸ்தானுக்கு அப்துல்லா சபிக் 4 ஓட்டங்களில் சௌதீ வேகத்தில் அவுட்டானாலும் பக்கார் ஜமான் அதிரடியாக விளையாடினார். குறிப்பாக மழை வரும் என்பதால் வேகமாக விளையாட வேண்டும் என்பதை தெரிந்து கொண்ட அவர் 63 பந்துகளில் சதமடித்து மிரட்டினார்.

கப்டன் பாபர் அசாம் தம்முடைய பங்கிற்கு 66* ஓட்டங்களும் பக்கார் ஜாமான் 126* ஓட்டங்களும் எடுத்ததால் 25.3 ஓவரில் பாகிஸ்தான் 200/1 ஓட்டங்கள் எடுத்திருந்த போது மழை வந்து போட்டியை நிறுத்தியது. அப்போது நியூசிலாந்தை விட 21 முன்னிலை பெற்றதன் காரணமாக வென்ற பாகிஸ்தான் தங்களுடைய செமி ஃபைனல் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

மழை வந்ததால் தோல்வியை சந்தித்த நியூசிலாந்து பின்னடடைவை சந்தித்து செமி ஃபைனல் செல்ல தங்களுடைய கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Saturday, November 4, 2023

புதிய சாதனைகளுடன் இலங்கையை வீழ்த்தியது இந்தியா

வான்கடேயில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான  உலகக்கிண்ணப் போட்டியில் 302  ஓட்டங்களால் வெற்றி பெற்ற இந்தியா அரை இறுருதிக்கு முதல் அணியாகத் தெரிவானது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை களத் தடுப்பைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தடிய இந்தியா எட்டு விக்கெற்களை  இழந்து 357  ஓட்டங்கள் எடுத்ததுமுதல் ஓவரில் இந்திய கப்டனை 4 ஓட்டங்களில் வெறியேற்றிய  இலங்கை ஏனைவர்களைக் கட்டுப்படுத்த முடியாது தவித்தது.

கில்98, விராட் 88, ஸ்ரேயாஸ் 82, ராகுல்21, சூரியகுமார் யாதவ் 12, ஜடேஜா 35  ஓட்டங்கள் அடித்தனர்மதுசங்க 5 விக்கெற்களை வீழ்த்தினார்.

358 அனும் பிரமாண்ட  இலக்கை நோக்கி விளையாடிய  இலங்கை 19.4 ஓவர்களில் சகல விக்கெற்களையும்  இழந்து 55  ஓட்டங்கள் எடுத்தது.

கோலியின்  சாதனைகள்

ஒருநாள் கிரிக்கெட்டில் ஆசிய கண்டத்தில் அதிவேகமாக 8000 ஓட்டங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை உடைத்த விராட் கோலி ஆசியாவின் புதிய கிங்காக சாதனை படைத்தார்.

இந்த வருடம் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி 1000 ஓட்டங்களையும் கடந்துள்ளார். இதற்கு முன் ஏற்கனவே 7 காலண்டர் வருடங்களில் 1000 ஓட்டங்கள் அடித்துள்ள அவர் இதையும் சேர்த்து மொத்தம் 8 வருடங்களில் தலா 1000க்கும் மேற்பட்ட ஓட்டங்களை அடித்துள்ளார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை ஒரு காலண்டர் வருடத்தில் 1000 ஓட்டங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் வாழ்நாள் சாதனையை உடைத்த விராட் கோலி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

உலகக்  கிண்ணத்தில் அதிக முறை 50க்கும் மேற்பட்ட ஓட்டங்கள் அடித்த துவக்க வீரர் அல்லாத வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார். இதுவரை துவக்க வீரராக களமிறங்காமல் அவர் 13 முறை 50+ ஓட்டங்கள் அடித்துள்ள நிலையில் இதற்கு முன் குமார் சங்ககாரா 12 முறை அடித்திருந்ததே முந்தைய சாதனையாகும்.

கிளன் மேக்ஸ்வெலை முந்தியஸ்ரேயாஸ்

ஸ்ரேயாஸ்  106 மீற்றசிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையபடைத்தார். இதற்கு முன் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் க்ளன் மேக்ஸ்வெல் 104 மீற்றர் சிக்சர் அடித்ததையும் சாதனையாகும்.

ஜஸ்ப்ரீத் பும்ரா படைத்த இமாலய சாதனை

இந்திய அணி பந்துவீச ஆரம்பிக்கையில் தான் வீசிய முதல் பந்திலேயே பதும் நிசங்காவை எல்.பி முறையில் ஆட்டமிழக்க வைத்த ஜஸ்ப்ரீத் பும்ரா உலகக்கிண்ண  இன்னிங்சின் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்து அசத்தியுள்ளார். 43 ஆண்டு கால ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இப்படி முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மிட்சேல் ஸ்டார்க்கை ஓரம்கட்டிய ஷமி

5 ஓவர்களில்  1 மெய்டன் உட்பட 18 ஓட்டங்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்த ஷமி உலகக் கோப்பை வரலாற்றில் அதிக முறை ஒரு போட்டியில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்த பந்து வீச்சாளர் என்று அவுஸ்திரேலியாவின் மிட்சேல் ஸ்டார்க் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.   ஸ்டார்க் 24 போட்டிகளில் செய்த சாதனையை  10 இன்னிங்ஸ் குறைவாக இந்த சாதனையை படைத்துள்ளது ஷமியின் தரத்திற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு

5 விக்கெட்டுகளையும் சேர்த்து உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய பவுலர் என்ற ஜாம்பவான் ஜஹிர் கான் சாதனையையும் தகர்த்த ஷமி புதிய வரலாறு படைத்துள்ளார்.

இந்தியாவின் தனித்துவ சாதனை

உலகக்  கிண்ண  வரலாற்றில் ஒரு போட்டியில் ஒரு சதம் கூட அடிக்காமலேயே அதிகபட்ச  ஓட்டங்கள்  பதிவு செய்த அணி என்ற பாகிஸ்தானின் தனித்துவ சாதனையை உடைத்துள்ள இந்தியா புதிய உலக சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 2019 உலகக்கோப்பையில் நாட்டிங்கம் நகரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஒரு சதம் கூட அடிக்காமல் பாகிஸ்தான் 348/8 ஓட்டங்கள் குவித்ததே முந்தைய சாதனையாகும்.

இந்தியா 7 போட்டிகளில் 7 தொடர்ச்சியான வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இதற்கு முன் கடந்த 2007 உலக கோப்பையில் பெர்முடா அணிக்கு எதிராக 257 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றதே முந்தைய சாதனையாகும்.

ஒரு வருடத்தில் இரண்டு முறை 75 ஓட்டங்களுக்குள்ளும் 300+ ஓட்டங்கள் வித்தியாசத்திலும் இலங்கையை  இந்தியா வென்றுள்ளது.