கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 37வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கவுக்கு எதிராக விளையாடிய இந்தியா 243 ஓட்டங்களால் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்ததைப் பிடித்துள்ளது.
நாணயச் சுழற்சியில் வெற்றி
பெற்ற இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் 5 விக்கெற்களை இழந்து 326 ஓட்டங்கள்
எடுத்தது. 27.1 ஓவர்களில் சகல விக்கெற்களையும்
இழந்த தென். ஆபிரிக்கா 83 ஓட்டங்கள் எடுத்து
தோல்வியடைந்தது.
பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக
விளையாடி 62 ஓஆடங்கள் இணைப்பாடமாக எடுத்த ரோஹித் சர்மா 40 ஓட்டங்களிலும், ப்மன் கில்லும் 23 ஓட்டங்களிலும் ஆடமிழந்தனர்.
3வது விக்கெற்றீல் இணைந்த கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி 134 ஓட்டங்கள் எடுத்து அசத்தியது. ஸ்ரேயாஸ் ஐயர் 77 , கேஎல்
ராகுல் 8, சூரியகுமார் யாதவ் 22 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய
விராட் கோலி 10 பவுண்டரியுடன் ஆட்டமிழக்காமல்
101* ஓட்டங்கள் அடித்தார். ரவீந்திர ஜடேஜா 3 பவுண்டரி 1 சிக்சருடன் ஆட்டமிழக்காது 19* ஓட்டங்கள் அடித்தார்.
327 என்ற கடினமான இலக்கை
துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு ஆரம்பத்திலேயே சிராஜ் வேகத்தில் டீ காக் 5 ஓட்டங்களில்
விக்கெற்றைப் பறிகொடுத்தார். யான்சென் அதிக பட்சமாக 14 ஓட்டங்கள் எடுத்தார் . கள் எடுத்தும்
27.1 ஓவரில் தென்னாப்பிரிக்காவை 83 ஓட்டங்களுக்கு சுருட்டிய இந்தியா 243 ஓட்டங்கள்
வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. ரவீந்திர
ஜடேஜா 5, ஷமி ,குல்தீப் யாதவ் ஆகியோர் தலா
2 விக்கெட்களை வீழ்த்தினர்.
உலகக் கிண்ணப் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில்இந்தியா
சாதனை படைத்துள்ளது. 2015 ஆம் ஆண்டு உலகக்
கிணப் போட்டியில் மெல்போர்ன் நகரில் இந்தியா 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்காவை
தோற்கடித்தது.
அதிக சிக்ஸர்கள் அடித்த அடித்த ரோஹித் சர்மா
6 பவுண்டரி 2 சிக்சருடன் 40 ஓட்டங்கள் அடித்த ரோஹித் சர்மா 4.3 ஓவரில் இந்தியாவை 50 ஓட்டங்கள் தாண்ட உதவினார்.இந்த
2 சிக்சர்களையும் சேர்த்து இந்த வருடம் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா
மொத்தம் 58 சிக்சர்கள் அடித்துள்ளார். ஒருநாள்
கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற ஏபி டீ
வில்லியர்ஸ் உலக சாதனையை ரோகித் சர்மா சமன் செய்துள்ளார்.
1. ரோஹித் சர்மா : 58*
(2023) 1. ஏபி டீ வில்லியர்ஸ் : 58 (2015)
2. கிறிஸ் கெயில் : 56 (2019)
3. ஷாஹித் அப்ரிடி : 48 (2002)
இந்திய அணி சார்பாக துவக்க
வீரர்களாக களம் இறங்கிய ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் இணைந்து கடந்த
25 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி சார்பாக மாபெரும்
சாதனை ஒன்றினை நிகழ்த்தி அசத்தியுள்ளனர்.இந்திய அணியின் துவக்க வீரர்களாக களம் இறங்கி
ஒரே ஆண்டில் அதிகபட்ச ரன்களை அடித்த துவக்க ஜோடி என்ற சாதனையை இவர்கள் படைத்துள்ளனர்.
2023-ஆம் ஆண்டு மட்டும் ரோஹித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் ஜோடியாக 2019 ஓட்டங்களை குவித்துள்ளனர். 1998-ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் 2002 ஓட்டங்கள் அடிக்கப்பட்டது.
பிறந்தநாளன்று சதம் விளாசிய கோலி
சர்வதேச ஒருநாள் கிறிக்கெற்றீல் பிறந்தநாளன்று சதம் விளாசிய 7வது என்ற சாதனையைகோலி
படைத்துள்ளார். இதுவரை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி முன்னாள் வீரர் வினோத்
காம்ப்ளி தனது 21வது பிறந்தநாளன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசியுள்ளார். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்
தனது 25வது பிறந்தநாளன்று அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசினார்.
இலங்கை அணியின் சனத் ஜெயசூர்யா
தனது 39வது பிறந்தநாளன்று இந்தியாவுக்கு எதிராகவும், நியூசிலாந்து அணியின் ராஸ் டெய்லர்
தனது 27வது பிறந்தநாளன்று பாகிஸ்தானுக்கு எதிராகவும், நியூசிலாந்து அணியின் டாம் லேதம்
தனது 30வது பிறந்தநாளன்று நெதர்லாந்துக்கு எதிராகவும் சதம் விளாசி இருக்கின்றனர்.
பிறந்த நாளான இன்று சதம் விளாசியதன் மூலமாக ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுகரின் 49 சதங்கள் சாதனையை சமன் செய்துள்ளார் .
ஐசிசியின் ஆட்ட நாயகன்
50 ஓவர் உலகக்கிண்ணம், ரி20 உலகக் கிண்ணம், சம்பியன்ஸ் டிராபி ஆகிய அனைத்து
விதமான ஐசிசி தொடர்களில் மொத்தம் விராட் கோலி 12 ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளார்.
இதன் வாயிலாக ஐசிசி தொடர்களில் அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்ற வீரர் என்ற கிறிஸ் கெய்ல் சாதனையை உடைத்துள்ள அவர் மற்றுமொரு
புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
1. விராட் கோலி : 12*
2. கிறிஸ் கெயில் : 11
3. சச்சின் டெண்டுல்கர்/ரோஹித்
சர்மா/ஷேன் வாட்சன்/மகலே ஜயவர்த்தன : தலா 10
4. யுவராஜ் சிங்/ஏபி டீ வில்லியர்ஸ்/சனத் ஜயசூர்ய : தலா 9
ஜடேஜாவின் சாதனைகள்
9 ஓவர்களில் 1 மெய்டன் உட்பட 33 ஓட்டங்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்து அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக அசத்தினார்ஜடேஜா. உலகக் கிண்ண வரலாற்றில் ஒரு போட்டியில் 5 விக்கெட்களை எடுத்த இந்திய சுழல் பந்து வீச்சாளர் என்ற யுவராஜ் சிங் சாதனையை சமன் செய்துள்ளார். கடைசி நேரத்தில் களமிறங்கி ஆட்டமிழக்காமல் 29* (15) ஓட்டங்கள் குவித்து ஒரு போட்டியில் 25+ ஓட்டங்கள், 5 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் கபில் தேவ், யுவராஜ் சிங் ஆகியோரின் தனித்துவமான சாதனையும் அவர் சமன் செய்துள்ளார்.
No comments:
Post a Comment