அஹமதாபாத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் நடப்பு சம்பியன் இங்கிலாந்தை 0000 அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்தத் தோல்வியால் இங்கிலாந்து உலகக்கிண்ண்த் தொடரில் இருந்து வெளியேறியது.
புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடும் இங்கிலாந்து கண்டிப்பாக வென்றே தீர வேண்டும் என்ற நிலைமையில் நாணயச் சுழற்சியில் வென்று பந்து வீசுவதாக அறிவித்தது. அவுஸ்திரேலியாவுக்கு துவக்க வீரர்கள் ட்ராவிஸ் ஹெட் 11, டேவிட் வார்னர் 15 ஓடன்ர்களில் கிறிஸ் ஓக்ஸ் வேகத்தில் ஆட்டமிழந்தனர். இரண்டு விக்கெற்களை இழந்து 38 ஒட்டங்கள் எடுத்த இங்கிலாந்தை 3வது விக்கெட்டுக்கு 85 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஸ்டீவ் ஸ்மித்தை 44 ஓடங்களில் அவுட்டாக்கிய அடில் ரசித் அடுத்ததாக வந்த ஜோஸ் இங்லிஷை 3 ஓட்டங்களில் வெளியேற்றினார்.
மறுபுறம்
அரை சதம் கடந்து அசத்திய
மார்னஸ் லபுஸ்ஷேன் 71 ஓட்டங்களில் அவுட்டானார். இறுதியில் கேமரூன் கிரீன் 47, மார்க்கஸ்
ஸ்டோனிஸ் 35, ஆடம் ஜாம்பா அதிரடியாக
29 (19) ஓட்டங்கள் எடுக்க 49.3 ஓவரில்
அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அவுஸ்திரேலியா 286 ஓட்டங்ன்கள்
எடுத்தது. இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஓக்ஸ் 4, அடில்
ரசித், மார்க் வுட் தலா
2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
287 ஓட்டங்களை
துரத்திய இங்கிலாந்துக்கு முதல் பந்திலேயே ஜானி
பேர்ஸ்டோவை கோல்டன் டக் அவுட்டாகிய
மிட்சேல் ஸ்டார்க் அடுத்ததாக வந்த ஜோ ரூட்டையும்
13ஓட்டங்களில் வெளியேற்றினார்.அதனால் 19/2 என்ற சுமாரான துவக்கத்தை
பெற்ற இங்கிலாந்தை மற்றொரு துவக்க வீரர்
டேவிட் மாலனுடன் ஜோடி சேர்ந்த பென்
ஸ்டோக்ஸ் நிதானமாக விளையாடி காப்பாற்ற போராடினார்.
3வது விக்கெட்டுக்கு 84 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் மாலன் 50 ஓட்டக்ன்களில் அவுட்டாக அடுத்ததாக வந்த கப்டன் பட்லர் பொறுப்பின்றிஒரு ஓட்டதுடன் நடையைக் கட்டினார். போராடிய பென் ஸ்டோக்ஸ் 64 ஓட்டங்களில் அவுட்டாக காப்பாற்றுவார் என்று கருதப்பட்ட லியம் லிவிங்ஸ்டனும் 2 ஓட்டங்நடையை கட்டினார். மொயின் அலியும் போராடி 42 ஓட்டங்களில் அவுட்டானதால் இறுதியில் கிறிஸ் ஓக்ஸ் 32, ரசித் 20 ரன்கள் எடுத்தும் 48.1 ஓவரில் இங்கிலாந்து 253 ஓட்டங்கள் எடுத்தது. அவுஸ்திரேலியா 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆடம் ஜாம்பா 3, ஜோஸ் ஹேசல்வுட், மிட்சேல் ஸ்டார்க், கப்டன் கமின்ஸ் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதனால் 7 போட்டிகளில் 5வது வெற்றியை பதிவு செய்த அவுஸ்திரேலியா செமி ஃபைனல் வாய்ப்பை 99% உறுதி செய்துள்ளது.
No comments:
Post a Comment