Saturday, November 4, 2023

புதிய சாதனைகளுடன் இலங்கையை வீழ்த்தியது இந்தியா

வான்கடேயில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான  உலகக்கிண்ணப் போட்டியில் 302  ஓட்டங்களால் வெற்றி பெற்ற இந்தியா அரை இறுருதிக்கு முதல் அணியாகத் தெரிவானது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை களத் தடுப்பைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தடிய இந்தியா எட்டு விக்கெற்களை  இழந்து 357  ஓட்டங்கள் எடுத்ததுமுதல் ஓவரில் இந்திய கப்டனை 4 ஓட்டங்களில் வெறியேற்றிய  இலங்கை ஏனைவர்களைக் கட்டுப்படுத்த முடியாது தவித்தது.

கில்98, விராட் 88, ஸ்ரேயாஸ் 82, ராகுல்21, சூரியகுமார் யாதவ் 12, ஜடேஜா 35  ஓட்டங்கள் அடித்தனர்மதுசங்க 5 விக்கெற்களை வீழ்த்தினார்.

358 அனும் பிரமாண்ட  இலக்கை நோக்கி விளையாடிய  இலங்கை 19.4 ஓவர்களில் சகல விக்கெற்களையும்  இழந்து 55  ஓட்டங்கள் எடுத்தது.

கோலியின்  சாதனைகள்

ஒருநாள் கிரிக்கெட்டில் ஆசிய கண்டத்தில் அதிவேகமாக 8000 ஓட்டங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை உடைத்த விராட் கோலி ஆசியாவின் புதிய கிங்காக சாதனை படைத்தார்.

இந்த வருடம் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி 1000 ஓட்டங்களையும் கடந்துள்ளார். இதற்கு முன் ஏற்கனவே 7 காலண்டர் வருடங்களில் 1000 ஓட்டங்கள் அடித்துள்ள அவர் இதையும் சேர்த்து மொத்தம் 8 வருடங்களில் தலா 1000க்கும் மேற்பட்ட ஓட்டங்களை அடித்துள்ளார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை ஒரு காலண்டர் வருடத்தில் 1000 ஓட்டங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் வாழ்நாள் சாதனையை உடைத்த விராட் கோலி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

உலகக்  கிண்ணத்தில் அதிக முறை 50க்கும் மேற்பட்ட ஓட்டங்கள் அடித்த துவக்க வீரர் அல்லாத வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார். இதுவரை துவக்க வீரராக களமிறங்காமல் அவர் 13 முறை 50+ ஓட்டங்கள் அடித்துள்ள நிலையில் இதற்கு முன் குமார் சங்ககாரா 12 முறை அடித்திருந்ததே முந்தைய சாதனையாகும்.

கிளன் மேக்ஸ்வெலை முந்தியஸ்ரேயாஸ்

ஸ்ரேயாஸ்  106 மீற்றசிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையபடைத்தார். இதற்கு முன் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் க்ளன் மேக்ஸ்வெல் 104 மீற்றர் சிக்சர் அடித்ததையும் சாதனையாகும்.

ஜஸ்ப்ரீத் பும்ரா படைத்த இமாலய சாதனை

இந்திய அணி பந்துவீச ஆரம்பிக்கையில் தான் வீசிய முதல் பந்திலேயே பதும் நிசங்காவை எல்.பி முறையில் ஆட்டமிழக்க வைத்த ஜஸ்ப்ரீத் பும்ரா உலகக்கிண்ண  இன்னிங்சின் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்து அசத்தியுள்ளார். 43 ஆண்டு கால ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இப்படி முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மிட்சேல் ஸ்டார்க்கை ஓரம்கட்டிய ஷமி

5 ஓவர்களில்  1 மெய்டன் உட்பட 18 ஓட்டங்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்த ஷமி உலகக் கோப்பை வரலாற்றில் அதிக முறை ஒரு போட்டியில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்த பந்து வீச்சாளர் என்று அவுஸ்திரேலியாவின் மிட்சேல் ஸ்டார்க் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.   ஸ்டார்க் 24 போட்டிகளில் செய்த சாதனையை  10 இன்னிங்ஸ் குறைவாக இந்த சாதனையை படைத்துள்ளது ஷமியின் தரத்திற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு

5 விக்கெட்டுகளையும் சேர்த்து உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய பவுலர் என்ற ஜாம்பவான் ஜஹிர் கான் சாதனையையும் தகர்த்த ஷமி புதிய வரலாறு படைத்துள்ளார்.

இந்தியாவின் தனித்துவ சாதனை

உலகக்  கிண்ண  வரலாற்றில் ஒரு போட்டியில் ஒரு சதம் கூட அடிக்காமலேயே அதிகபட்ச  ஓட்டங்கள்  பதிவு செய்த அணி என்ற பாகிஸ்தானின் தனித்துவ சாதனையை உடைத்துள்ள இந்தியா புதிய உலக சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 2019 உலகக்கோப்பையில் நாட்டிங்கம் நகரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஒரு சதம் கூட அடிக்காமல் பாகிஸ்தான் 348/8 ஓட்டங்கள் குவித்ததே முந்தைய சாதனையாகும்.

இந்தியா 7 போட்டிகளில் 7 தொடர்ச்சியான வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இதற்கு முன் கடந்த 2007 உலக கோப்பையில் பெர்முடா அணிக்கு எதிராக 257 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றதே முந்தைய சாதனையாகும்.

ஒரு வருடத்தில் இரண்டு முறை 75 ஓட்டங்களுக்குள்ளும் 300+ ஓட்டங்கள் வித்தியாசத்திலும் இலங்கையை  இந்தியா வென்றுள்ளது.

No comments: