பெங்களூருவில் நடைபெற்ற உலகக்கிண்ண 35 ஆவது லீக் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 50 ஓவர்களில் 6 விக்கெற்களை இழந்து 401 ஓட்டங்கள் அடித்து மிரட்டியது. மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டதால் டிஆர் எஸ் டி விதிமுறைப்படி21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது.
நியூஸிலாந்து அணியின் இளம்
வீரர் ரச்சின் ரவீந்திரா 108, கப்டன்
கேன் வில்லியம்சன் 95 ஓட்டங்கள் எடுத்தனர். பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக முகமது வாசிம் 3 விக்கெட்டுகள்
சாய்த்தார்.
402 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய பாகிஸ்தானுக்கு அப்துல்லா சபிக் 4 ஓட்டங்களில் சௌதீ வேகத்தில் அவுட்டானாலும் பக்கார் ஜமான் அதிரடியாக விளையாடினார். குறிப்பாக மழை வரும் என்பதால் வேகமாக விளையாட வேண்டும் என்பதை தெரிந்து கொண்ட அவர் 63 பந்துகளில் சதமடித்து மிரட்டினார்.
கப்டன்
பாபர் அசாம் தம்முடைய பங்கிற்கு
66* ஓட்டங்களும் பக்கார் ஜாமான் 126* ஓட்டங்களும்
எடுத்ததால் 25.3 ஓவரில் பாகிஸ்தான் 200/1 ஓட்டங்கள்
எடுத்திருந்த போது மழை வந்து
போட்டியை நிறுத்தியது. அப்போது நியூசிலாந்தை விட
21 முன்னிலை பெற்றதன் காரணமாக வென்ற பாகிஸ்தான்
தங்களுடைய செமி ஃபைனல் வாய்ப்பை
தக்க வைத்துக் கொண்டது.
மழை வந்ததால் தோல்வியை சந்தித்த நியூசிலாந்து பின்னடடைவை சந்தித்து செமி ஃபைனல் செல்ல தங்களுடைய கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment