Friday, July 11, 2025

பாகிஸ்தானில் ஆட்சியைக் கவிழ்க்க திட்டம்?

 அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை.நிரந்தர  நண்பனும் இல்லை என்ற புதிய கலாசாரத்தை  வெளிப்படுத்தியவர் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்   மறைந்த‌  ஜெயலலிதா.

இந்த வசனத்தை கொஞ்சம் மாற்றிபார்த்தால் பாகிஸ்தானுக்கு கனகச்சிதமாகப் பிரதமரும்   இல்லை என்பதே பாகிஸ்தானின் அரசியல் வரலாறாகும்.

ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும்  பிரதமர்  பாகிஸ்தானின் முழுமையாக ஐந்து வருடங்கள் ஆட்சி செய்யவில்லை. இராணுவப் புரட்சியின் மூலம் அவர்கள் தூக்கி எறியப்படுவார்கள் அல்லது கைது செய்யப்படுவார்கள்.

இன்றைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் ஆட்சிக்காலம் முடிவதற்கிடையில் அவரை தூக்கி எறிய சதித் திட்டம் நடப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

பாகிஸ்தானின் 23 ஆவது பிரதமராக கடந்த 2024 ஆம் ஆண்டு  பெப்ரவரியில் ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார்.  இவர் முன்னாள் பிரதமர் நவாஸ்ஷெரீப்பின் சகோதரராவார்.

1947 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சுதந்திரம்  பெற்றது.  சுமார் அரை நூற்றாணடாக அந்த நாட்டில் இராணுவ ஆட்சி நடைபெற்றது.

ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட பிரதமரைத் தூக்கி எறிந்து விட்டு இராணுவ ஆட்சியை அரங்கேற்றிய பெருமை ஜெனரல் அயூப் கானையே சாரும்.

1958  ஆம் ஆண்டு பாகிஸ்தானில் ஆட்சியைக் கவிழ்த்த அன்றைய இராணுவத் தளபதி ஜெனரல் அயூப்கான் 1959 ஆம் ஆண்டுதன்னைப்  ஜனாதிபதியாகப் பிரகடனம் செய்தார். அவரின் வழிவந்த இராணுவத் தளபதிகளும் அதனையே பின்  பற்றினார்கள். யகியாக்கான், முஹம்மது ஷியாகுல் ஹக், பர்வீஸ் முதாரப் என இப்பட்டியல்நீள்கிறது.

பாகிஸ்தானின் இராணுவத் தளபதி  ஜெனரல் அசிம்  முனீர் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றப் போவதாக ஊகங்கள் எழுந்துள்ளன.

ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியை  அகற்றி விட்டு அவர் ஜனாதிபடியாகப் போவதாகச் செய்திகள் கசிந்துள்ளன. 

இந்தியாவுடன்  முரண்படுவது, மல்லுக் கட்டுவது எனபனவே பாகிஸ்தான் அரசியல்வாதிகளின்  பிரதான வேலைத் திட்டமாகும்.


இந்தியாவில் கட்டவிழ்து விடப்படும் பயங்கரவாத்த் தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் துணை போவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்தியாவில் லக்நோவில்  சுற்றுலாததலமான பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் பாகிஸ்தான் இருபதாக இந்தியா குற்றம் சாட்டியது.

பாகிஸ்தான் வழக்கம்  போல்கையை விரித்தது.  பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை எனச் சொல்லியது.

 இந்தியா இதனை ஏற்கவில்லை. ஒப்பரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானில் இயங்கிய பயங்கரவாத முகாம்களை  விமானத் தாக்குதல் மூலம் அழித்ததாக இந்தியா கூறியது

 இந்திய விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக  பாகிஸ்தான் மார் தட்டியது. நான்கு நாட்களில் யுத்தம்  முடிவுக்கு வந்தது.

பாகிஸ்தானில் இயங்கிய பயங்கரவாதிகளின்  முகாம்கள் அழிக்கப்படதையும், தலைவர்கள், தளபதிகள், குடும்பங்கள்  கொல்லப்பட்டதையும் பாகிஸ்தான்  ஒப்புக் கொண்டது.

ஒப்பரேஷன் சிந்தூர் முடிந்த சில நாட்களின்  பின்னர்   ஜெனரல் அசீம் முனீர்  பீல்ட் மார்ஷலாக பதவி  உயர்வு பெற்றார். 

 பீல்ட் மார்ஷல் அசீம் முனீர் தனியாக அமெரிக்காவுக்குச் சென்ரு  ட்ரம்பைச் சந்தித்தார். அப்போதே இது பற்றிய யூகங்கள்  வெளிவரத்தொடங்கின. அதிகாரிகள், ஆலோசகர்கள் யாரும் இல்லாமல் வாஷிங்டனுக்குச் சென்ற அசீம் முனீர் ட்ரம்புடன் என்ன பேசினார் என்ற தகவல் இது வரை வெளிவரவில்லை. ஆனால் ஏதோ ஒரு மாற்றம் வரப்போவதை அரசியல் வல்லுநர்கள்  தெரிவித்தனர்.

ஜனாதிபதி சர்தாரியை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான வேலைத்திட்டங்கள் ஏற்கெனவே ஆரம்பமாகி விட்டதாக பாகிஸ்தானின் பத்திரிகையாளர் எஜாஸ் சயீத் பகிரங்கப்படுத்தி உள்ளார்.

லக்ஷர் இ தொய்பாக் கட்சித்தலைவர் ஹபீஸ் சயீத், ஜெய்ஷ்  இ முகமது தலைவர் மசூத் அசார்  ஆகியோர் கவலைக்குரிய நபர்கள் எனத் தெரிவித்த சர்தாரி அவர்களை நாடுகடத்த விரும்புவதாகத் தெரிவித்ததை அங்குள்ள மக்கள் விரும்பவில்லை. இதனால் அவர் மிது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

1977 ஆம் ஆண்டு மக்களா தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் பூட்டோவை  இராணுவ பலத்தால்  தூக்கி எறிந்து விட்டு அட்சி அதிகாரத்தைக் கைப்பற்ரினார் ஜெனரல் ஜியாகுல் கான். அந்தச் சம்பவம் நடைபெற்று 48 வருடங்கள் நிறைவடையும் வேளை மீண்டும் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றப்   போவதாக செய்தி  பரவி உள்ளது.

1999 ஆம் ஆண்டி இரத்தம் சிந்தாப் புரட்சியின் மூலம் இராணுவத் தள‌பதி பர்வேஸ் முஷாரப் ஆட்சியைக் கைப்பற்றினார். 2008 ஆம் ஆண்டு வரை முஷாரப்   ஆட்சி செய்தார்.அப்போது  இதே சர்தாரிதான் ஜனாதிபதிப் பதவியில் இருஃதார்.

2008 ஆம் ஆண்டு சர்தாரியை ஜனாதிபதியாக்கிய  பாகிஸ்தான்  இராணுவம்  27 வருடங்களின்  பின்னர் அதே சர்தாரியை  ஜனாதிபதிப் பதவியில் இருந்து அகற்ற கங்கணம் கட்டியுள்ளது. 

Wednesday, July 9, 2025

உலக வல்லரசை உலுக்கிய வெள்ளம்


      அமெரிக்காவின்  மாநிலமான டெக்டாஸில் ஏற்பட்ட வெள்ளத்தால் 104 பேர் பலியானார்கள்.கெர்  கவுண்டியில் 28 குழந்தைகள் உட்பட 84 உடல்கள்  மீட்கப்பட்டதாக கெர்  கவுண்டி அலுவலகம் தெரிவித்துள்ளது.

 இன்னும் பலரைக் காணவில்லை. அவர்கள்  உயிருடன்  இருப்பார்கள் என்பதர்கான  உத்தரவாதம் எதுவும் இல்லை.

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிறிய கார்கள் முதல் கனரக வாகனங்கள் பல அடித்துச் செல்லப்பட்டன. அழகாகக் காட்சியளித்த நிழல் தரும் மரங்கள் வேரோடு பிடுங்கி  எறியப்பட்டன.

மழை  பெய்யும், புயல் வரும் என எச்சரிக்கை விடுக்கப்படுவது வழமையானதே. ஆனால், மழையைத் தடுத்து நிறுத்த முடியாது. புயலைத் தடுக்கும் சக்தி, அல்லது திசை மாற்றும் வல்லமை இல்லை. இயற்கையின்  பேரிடர்களை எதிர்வு கூறலாம். அவற்றை  இல்லாமல் செய்யமுடியாது.

மத்திய கெர்கண்டியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் 25 சென்ரி மீற்றர் மழை பெய்தது.  பல மாதங்கள்  பெய்ய வேண்டிய மழை ஒரே இரவு கொட்டித் தீர்த்தது.

பெய்யாப் பெருமழையால் ஆறு கரை புரண்டு ஓடியது.  ஆற்றைங்கையில் இருந்த கிறிஸ்தவ கோடைகால முகாமில் தங்கி இருந்த சிறுவர்களும்,  பெரியவர்களும்  அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.

டெக்டாஸ் மாநிலத்தில் உள்ள  கெர் கவுண்டி, டிராவிஸ் கவுண்டி, பர்னெட் கவுண்டி ஆகிய பகுதிகள்  பெருமளவில் பாதிக்கப்பட்டன.

மழை வெள்ள எச்சரிக்கை   முன் கூட்டியே விடுக்கப்பட்டது.  சில இடங்களில்  தொலை தொடர்பு வசதிகள்  இல்லாமையால் உரிய  இடங்களுக்கு எச்சரிக்கை போய்ச் சேரவில்லை

காம்ப் மிஸ்டிக் போன்ர முகாம்களில் இருந்த மக்கள் வெளியேறுவதற்கு போதிய அவகாசம் கிடைக்கவில்லை எனக் குற்றம் சாட்டப்படுகிறது.

வெள்ள எச்சரிக்கை கிடைத்து மக்கள் வெளி யேறுவதற்கிடையில் வெள்ளம் சூழ்ந்து விட்டது.

டெக்டாஸ் ஹில்  கவுண்டியின்  நிலப்பரப்பும் நீர்வழிப்பாதைகளும் திடீர் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்படும் இடமாக அடையாளம் காண்ப்பட்டுள்ளது.

வாரத்தின் தொடக்கத்தில் ஆறு அங்குல மழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டதாகவும், ஆனால்,  10 அங்குல மழை பெய்ததால் நிலமை கைமீறிப் போனதாகவும் டெக்சாஸ் அவசர மேலாண்மைப் பிரிவின் தலைவர் நிம் கிட் கூறியுள்ளார்.

 சமூக ஊடக்க்ன்களில் பகிரப்படும் வீடியோக்கல் அழிவுகளின் உச்சத்தை வெளிப்படுத்துகின்றன. குவாடலூப் ஆற்று  வெள்ளப்பெருக்கால் கரை புரண்டு ஓடியதால் சிலமணி நேரங்கள்  மீட்புப்பணி இடை நிறுத்தப்படது.

அப்பகுதியைல் பெய்யும்  மழைகாரணமாக வெள்ளப்பெருக்கு அதிகரிக்கும் அபாயம் உள்ள்து.

டெக்டாச் மாநிலத்தின் பாறை உள்ள நிலபரப்பு.அங்கு  நிறைந்துள்ள களிமன் நிலப் பரப்பும் வெள்ளப்பஎருக்குக்குக் கரணமாகும். களிமண்தரை நீரை  உறிஞ்சாது நீர் ஓட்டத்தைத் தூண்டும் தன்மை உடையது.குவாடலூப்   உட்பட அருகில் உள்ள  நதிகளில் கடந்த 100 ஆண்டுகலில் ஒவ்வொரு தசாப்தத்துக்கும் ஒரு முறை  வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்படும்.

வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணி முதல் 7 மணிவரை   5-10 அங்குல மழை பெய்தது.

1.82 அடியாக  இருந்த நீர் மட்டம் சடுதியாக 34.29 அடியாக உயர்ந்தது.

ட்ரம்பின் நிர்வாகம் இந்த ஆண்டுத் தொடக்கத்தில் பட்ஜெட், நிர்வாக ஊழியர் குறைப்பு  என்பன வற்றின் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மழை தொடர்ந்து பெய்யும்  என எதிர்பார்க்ப்படுவதால் இன்னொரு வெள்ளப் பெருக்கு  ஏற்படும் அபாயம் உள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

டெக்டாஸ் வெள்ள அழிவு அமெரிக்க அரசியலில் புயலைக் கிளப்ப்பும்

என அறியபடுகிறது.டெக்டாசின் நிலை மோசமாகுவதாக அங்கிருக்கும் தகவல்கள்   தெரிவிக்கின்றன. 

Monday, July 7, 2025

புதிய தலைமுறையுடன் களம் இறங்கும் விஜய்

 

தமிழக அரசியலில் விஜயி  பெயர் பரபரப்பாக அடிப்டுகிறது. நடிகரான விஜய் தன்னை முழுமையான்ம அரசியல் வாதியாக மாற்ற்றிவிட்டார். முதல்வரே, ஸ்டாலினே பதிஒல் சொல் என  ஆவேசமாகப் பேசி கைதட்டல் வாங்கிகிறார்.

பனையீரில் நேற்று நடந்த அவரது கட்சியின் செயற்குழு மாநாடு விஜய்க்கு அரசியல் அங்கீகாரமளித்தது. தமிழகத்தின் முதல் வேட்பாளர் விஜய் என்ற தீர்மானம் நிறவேற்றப்பட்டது. இதனால் ரசிகர்களான கட்சித் தொண்டர்கள்  மகிழ்ச்சியடந்துள்ளனர்.

திராவிட முன்னேற்றக் கழகக் கூட்ட்னியின் முதலமைச்சர் வேட்பாள‌ர் ஸ்டாலின் எனபதில் மாற்றுக் கருத்து இல்லை. அதிக தொகுதிகள்  ஒதுக்கப்பட வேண்டும்,  துணை முதலமைச்சர், அமைச்சரவையின்  பங்கு போன்ற உட்பூசல்கள்  இருந்தாலும் கூட்டணி  பலமாக  உள்ளது. பாரதீய ஜனதாவுக்கான எதிர்ப்பு என்ற ஒற்றைச் சிந்தனை  கூட்டனியைப் பலமாக்கி உள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் கூட்டணி. எடப்பாடி முதலமைச்சர் என அண்ணா திராவிட  முன்னேற்றக் கழகத்தினர் நம்பிக்கொண்டிருக்கின்றனர். 

ஆனால், அமித்ஷாவின் கணக்கு வேறு விதமாக  உள்ளது. தமிழகத்தில் கூட்டனி ஆட்சி. அமைச்சரவையில்  பாரதீயஜனதா இருக்கும் என்கிறார் அமித்ஷா.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் இதனை  மறுக்கிறார்கள். கூட்டணி ஆட்சிக்கு தமிழக மக்கள்  ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.  அடுத்த முதலம்மைச்சர்  எடப்பாடி என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் அடித்துச் சொல்கிறார்கள்.  கூட்டனியின்  முதல்வர் என அமித்ஷா எந்த இடத்திலும் சொல்லவில்லை.

இப்படியான சிக்கல் இருக்கையில் தமிழக மக்கள்  இந்தக் கூட்டணிக்கு வாக்களிபார்களா என்பது கேள்விக்குறி.

இள வயது ரசிகர்களை நம்பி அரசியல் களத்தில்  குதித்த விஜய் தமிழக அரசியலைப் புரட்டிப் போடப்போவதாக சபதம் எடுத்துள்ளார்.தமிழக அரசிலயையும் சினிமாவையும்  பிரிக்க முடியாது. தமிழக அரசியலுடன் பின்னிப் பிணைந்தது சினிமா. அண்ணா, கலைஞர், சிவாஜி,எம்ஜிஆர், எஸ் எஸ் ஆர், கலைவாணர், எம் ஆர் ராதா, கண்ணதாசன், ஜெயலலிதா போன்றவர்கள் நாடகம், சினிமா ஆகிய  கலைகளில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள்.  நாடகம், சினிமா ஆகியவற்றின்  மூலம் அரசியல் பாடத்தை மக்களுக்குப் புகட்டி வெற்றி பெற்றவர்கள்.

இவர்களுக்குப் பின்னர் சினிமாவில் இருந்து பலர் அரசியலுக்குள் நுழைந்தார்கள் யாரும் வெற்றி பெறவில்லை. 

 

 

 

அமித்ஷாவின் வலையில் வசமாகச் சிக்கிய எடப்பாடி

 ஜெயலலிதாவின்    மறைவுக்குப் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பல மாற்ற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஜெயலலிதாவின்  உடன்  பிறவா சகோதரி  சசிகலா  ஓரங்கட்டப்பட்டார். ஜெயலலிதாவின் விசுவாசியான பன்னீர் வெளியேற்றப் பட்டார்.  எடப்பாடியார்  கழகத்தைக் கைப்பற்றினார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடப்பாடியின்  கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், தொடர் ச்சியாக 11 தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோல்வியடைந்தது.

எம்ஜிஆர்  இருகையில் தோல்விகாணாத கழகம், ஜெயலலிதாஅவும் அந்தப் பெருமையைக் கட்டிக் காப்பாற்றினார்.வெற்றிக் கனி எடப்பாடியை விட்டு  வெகுதூரம்  போய்விட்டது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடர் தோல்விகளுக்கு பாரதீய ஜனதாதான் காரணம் எனக் கண்டுபிடித்த எடப்பாடி கூட்டணியில் இருந்து வெளியேறினார்.

பாரதீய ஜனதாவுடன் தொடர்பு இல்லை என எடப்பாடி அறிவித்ததும் அதுவரை மெளனமாக  இருந்த மெளனமாக  இருந்த  இரண்டாம் கட்டத் தலைவர்கள் பாரதீய ஜனதாவை வறுத்து எடுத்தார்கள். ராயபுரத்தி ராஜாவான நான் பாரதீய ஜனதாவால் தோற்றேஎன் என  ஜெயக்குமார் புலம்பினார்.

எடப்பாடியின் சபதம் நீண்ட நாள் நீடிக்கவில்லை. பாரதீய ஜனதாவின்  கூட்டனியில்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இணைந்த தாக தமிழகத்தில்  அமித்ஷா  பகிரங்கமாகத் தெரிவித்தார். மேடையில் இருந்த எடப்பாடி தலை குனிந்தபடி இருந்ந்தார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் விரும்பாத கூட்டணிக்கு எடப்பாடி துணை போகிறார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிறகும், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி தொடர வேண்டும் என்பதற்காகவே, 'தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும்' என, உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியது அண்ணா திராவிட முன்னேற்றக் கழ்கத்துகுள்  பூசலைக் கிளப்பி உள்ளது. தமிழக அட்சியில் பாரதீய ஜனதாவும் இடம்  பெறும் என அமித்ஷா கூறியது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தலைவர்கள் ஏற்றுக்கொள்ள வில்லை.

 கூட்டணி ஆட்சியைத் தமிழக மக்கள் விரும்ப மாட்டார்கள். தமிழக அமைச்சரவையில் பாரதீய ஜனதா  இருப்பதை மக்கள் ஏற்ருக்கொள்ள மாட்டார்கள்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கு இதுவே காரணமாக அமையப் போகிறது.

, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கோஷம் தற்போது வலுத்துள்ளது. தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழ்கத்தை வீழ்த்துவதே நோக்கம் என எடப்பாடியும், அமித்ஷாவும்  அறிவித்துள்ளனர். மேலும் பல கட்சிகளை சேர்த்து, பலமான கூட்டணியை அமைக்கும் முயற்சியில், அமித் ஷா ஈடுபட்டுள்ளார். தேர்தலுக்கு பின்பும், அ.தி.மு.க., உடனான கூட்டணி தொடர வேண்டும் என்பதே, அமித் ஷா உள்ளிட்ட மேலிடத் தலைவர்களின் விருப்பமாக உள்ளது.

கூட்டணி ஆட்சி எனக்கூறும் ஆமித்ஷா முதலமைச்சர்  யாரெனக் கூறவில்லை. முதலமைச்சர்  பதவுக்காக சசிகலாவைத் தூக்கி எறிந்தவர் எடப்பாடி. தனக்குப் போட்டியாக வந்து விடுமார்  என்ற பயத்தால் பன்னீரை கட்சியில் இருந்து விரட்டியவர். மிக  இலகுவில்  முதலமைச்சர் பதவியைத் தாரை வார்க்க மாட்டார். இந்த நிலை நீடித்தார் தேர்தல்வரை இந்தக் கூட்டணி நிலைப்பது சந்தேகம்தான்.

 

2026‍ ஆம் ஆண்டு மேற்கு வங்கம், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க கூட்டணி வென்று ஆட்சியமைக்கும். டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பின்னர் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்ததுபோல, தமிழ்நாட்டிலும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி அமையும்...” என்று அடுத்த அரசியல் குண்டை வீசினார் அமித் ஷா,  அப்போது அமையாக இருந்த எடப்பாடி இப்போது  கன் விழித்த்ஹ்ஹு எதிர்வினையாற்றுகிறார்.

அண்னா திராவிட முன்னேற்றக் கழகம், பாரதீய ஜனதா ஆகியவற்றின் தலைவர்கள் தான்  கூட்டனி பற்றிப் பேசுகிறார்கள்.  தொண்டர்கள் விலகியே நிற்கிறார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்  முக்கிய தலைவர்கள் அமித் ஷாவுக்குப் பதிலளிக்கிறார்கள்.

வடமாநிலங்களில் பாரதீய ஜனதா செல்வாக்குடன்  இருக்கிறது. தமிழகத்தில் பாரதீய ஜனதா அறிக்கையில்தான் வளர்கிறது. அண்ணாமலை தினமும் ஏதாவது சர்ச்சையைக் கிளப்பி தன்னை முன்னிலைப் படுத்துவார்.

தனிப் பெரும்பான்மையுடன் தமிழகத்தில் ஆட்சி அமைப்போம் என்கிறார்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்கிறார் அமித்ஷா. கூட்டணிக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மெகா கூட்டணி என எடப்பாடியும் அமித்ஷாவும் சொல்கிறார்கள்.எந்தக் கட்சியுடன்  கூட்டனியுடன் சேருவது எனத் தெரியாது  இரண்டு திராவிடக் கட்சிகளுடனும் பிரேமலதா  பேரம் பேசுகிறார்.

தந்தைக்கும் மகனுக்கு இடையேயான பிரச்சனையால் பாட்டாளி மக்கள் கட்சி  பிளவுபட்டுள்ளது. தனி ஒருவனான வாசன் பாரதீய ஜனதாவின் பக்கம் சாய்ந்துள்ளார்.

மறு புறத்தில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி  மிகப்பலமாக இருக்கிறது. அங்கும் சில புகைச்சல்கள்  உள்ளன. ஆனால், பாரதீய ஜனதாவுக்கு எதிரான பொதுக்கருத்தில் ஒன்றுபட்டுள்ளது திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி.

ரமணி

6/7/25 

Tuesday, July 1, 2025

குற்றவாளிக்கூண்டில் நெதன்யாகு

அரபுநாடுகளின் விரோதியாகச் சித்தரிக்கப்படுபவர் நெதன்யாகு, காஸா யுத்தம், ஈரானின் மீதான தாக்குதல் என்பனவற்றால் சர்வதேச ஊடகங்களில்  இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகுவின் பெயர் அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது.

நெதன்யாகு நல்லவரா கெட்டவரா என்ற விவாதமும் இன்னொரு புறத்தில் நடைபெறுகிறது.

இஸ்ரேலின் வீத தீரனாக விளங்குபவர் நெதன்யாகு. அவர்தான்  இஸ்ரேலின் ஹீரோ என்றே பலரும் நினைக்கின்றனர்.

 ஆனால், நெதன்யாகுவுக்கு எதிரானவர்கள்  இஸ்ரேலிலும்  உள்ளனர். நெதன்யாகுவின்   அமைச்சரவையிலேயே அவரை எதிர்ப்பவர்கள்  இருக்கிறார்கள். 

"பீபீ' என   அழைக்கப்படுபவர் பெஞ்சமின் நெதன்யாகு. இஸ்ரேலில் மிக நீண்டகாலம் பிரத்மரானவர் என்ற பெருமையைப் பெற்றவர். முதலில் 1996 ஆம் ஆண்டுமுதல் 1999 ஆம் ஆண்டுவரை,  பின்னார் 2009 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டுவரை இஸ்ரேலின்  பிரதமராகப் பதவி வகித்தவர். 2022 ஆம் ஆண்டு முதல்  இன்ஸுவரை இஸ்ரேலின்  பிரதமராக இருக்கிறார் நெதன்யாகு

 இஸ்ரேலியப் பிரதமராக நெதன்யாகு இருக்கும் போதே அவருக்கு எதிராக 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஊழல் குற்றச் சாட்டு சுமத்தப்பட்டது. பிரதமர் மீது குற்றச் சாட்டு என்பதால் பொலிஸார் விட்டு விடவில்லை. விசாரணை தொடர்ந்தது. நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய்ப்பட்டது.

2023 ஆம் ஆண்டு காஸாவில்  ஹமாஸ் தாக்குதல் நடத்தியதால் நெதன்யாகுவுக்கு எதிரான  ஊழல் குற்றச் சாட்டு வழக்கு தாமதமாகிறது. அவர் மீதான குற்றச் சாட்டு நிரூபிக்கப்பட்டால் 10 வருட சிறைத் தண்டனை கிடைக்கும். நெதன்யாகு  குற்றம் செய்யவில்லை என அவரது வழக்கறிஞர்கள் வாதிடுகிறார்கள்.

நெதன்யாகுவின் மீதான ஊழல் குற்றச்சாட்டு விபரங்கள் 2018 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம்திகதி பத்திரிகைகளில் வெளியானபின்னர் மக்கள் மத்தியில் பேசு பொருளானது.

அன்றைய இஸ்ரேலிய  அரச வழக்கறினர் ஷாய் நிட்சன், அன்றைய அட்டரி ஜெனரல் அவிச்சாய் மண்டேல் பிட் ஆகியோர் நெதன்யாகுவின் மீதான குற்றச் சாட்டுகளை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றனர்.

இலஞ்சம், மோசடி, நம்பிக்கை மீற  ஆகிய மூன்று வழக்குகள் நெதன்யாகுவுக்கு எதிராகப்  பதியப்பட்டன.

இஸ்ரேலிய வரலாற்றின்  முதன் முதலாக குற்றவியல் குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்ட பிரதமர் என்ற கறை நெதன் யாகுவின் மீது படிந்தது.

இலஞ்சக் குற்றச் சாட்டு நிரூபிக்கப்பட்டால் 10 வருட சிறைத்தண்டனையும்,   மோசடி, நம்பிக்கை மீறல் குற்றச் சாட்டு நிரூபிக்கப்பட்டால் மூன்று  வருடச் சிறைத் தண்டனையும் கிடைக்கும்.

 குற்றச் சாட்டுகளின் எதிரொலியால் சுகாதார, விவசாயம், புலம் பெயர் விவகாரம் ஆகிய அமைச்சுப் பதவிகளை நெதன்யாகு துறந்தார். 

நெதன்யாகு பிரதமராக நீடிக்கலாமா இல்லையா என்ற என்ற விவாதம் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

நெதன்யாகுவுக்கு எதிரான வழக்குகள் நீதிமன்றத்தில் நடை பெறுகின்றன.  ஹமாஸின் தாக்குதல், ஈரானுடனான போர் ஆகியவற்றால்  விசாரணை தாமதமாகிறது.

நெதன்யாகுவுக்கு எதிராக   போர்க்குற்றம் சுமத்தப்பட்டு சர்வதேச விசாரணை நடைபெற  வேண்டும் என்ற கருத்தும்  தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபது மூக்ககை நுழைத்து சொல்லிய கருத்து எதிர் வினைகளைத் தோற்றுவித்துள்ளது.

நெதன்யாகுவின் மீதான குற்றச் சாட்டுகளை வாபஸ் பெற வேண்டும்ம், அவருக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என ட்ரம்ப்  அறிக்கை விடுத்துள்ளார்.

ட்ரம்பின் கருத்துக்கு எதிரான கண்டனங்கள் பருமளவில்  எழுந்துள்ளன.

இஸ்ரேல் சிறையில் நெதன்யாகு அடைக்கப்படுவாரா இல்லையா எனப்தை நீதிமன்றம் முடிவு செய்யும்.   

பிறேஸிலின் நம்பிக்கைகளுக்கு நெய்மர் முக்கியம் - அன்செலோட்டி

 உலகக் கிண்ணப் போட்டிக்குத் தயாராக இருப்பதில் கவனம் செலுத்துமாறு பிறேஸில் அணியின் பயிற்சியாளர் கார்லோ அன்செலோட்டி,   நெய்மரை வலியுறுத்தியுள்ளார்.நாட்டின் எல்லா நேரத்திலும் முன்னணி கோல் அடித்தவர் அவரது திட்டங்களுக்கு முக்கியமானவர் என்று கூறியுள்ளார்.

 2023  ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் ல் நெய்மர் பிறேஸிலுக்காக கிண்ண  கோப்பை தகுதிச் சுற்றின் போது அவரது இடது முழங்காலில் முன்புற   தசைநார் சிதைந்ததால் அவர் அவதிப்பட்டார்.

பார்சிலோனா , பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் அணிகளுக்கான முன்னாள் நட்சத்திரம், ஒரு வருடத்திற்கும் மேலாக ஓரங்கட்டப்பட்ட பிறகு கடந்த அக்டோபரில் மீண்டும் களமிறங்கினார், ஆனால் அதன் பின்னர் தொடர்ச்சியான சிறிய தசை காயங்களுடன் போராடி வருகிறார்.

"உலகக் கோப்பையில் எங்கள் அணிக்கு அவர் மிக முக்கியமான வீரர்" என்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு  க்கு அளித்த பேட்டியில் அன்செலோட்டி கூறினார்.

புதன்கிழமை, நெய்மரின் ஒப்பந்தத்தை டிசம்பர் வரை நீட்டிக்க ஒரு உடன்பாட்டை எட்டியதாக சாண்டோஸ் அறிவித்தார். 33 வயதான அவர் ஜனவரி மாதம் சவுதி புரோ லீக் அணியான அல்-ஹிலாலில் இருந்து தனது சிறுவயது கிளப்பில் மீண்டும் இணைந்ததிலிருந்து 12 போட்டிகளில் மட்டுமே பங்கேற்றுள்ளார்.

2010 ஆம் ஆண்டு சர்வதேச அளவில் அறிமுகமானதிலிருந்து நெய்மர் பிரேசிலுக்காக 128 போட்டிகளில் 79 கோல்களை அடித்துள்ளார். 

Friday, June 20, 2025

இஸ்ரேலின் வான் பாதுகாப்பை சிதைத்த ஈரானின் அரக்கன்

 இஸ்ரேல், ஈரான் போரினால் உலக நடுகள் அச்சத்தில் உறைந்துள்ளன. ஈரானின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஈரான் பதிலடி கொடுத்தது.

  ஈரானின்  கேந்திர முக்கியத்துவம் மிக்க இடங்களிக் குறை வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. 

  இஸ்ரேலின் ஹைஃபா, டெல் அவிவ் , ஜெருசலேம்  ஆகிய நகரங்கள்   ஈரானின் தாக்குதலால்  சிதைந்தன.இஸ்ரேலின் தாக்குதலை ஈரானால் சமாலிக்க் முடியாது என்றே பலரும் நினைத்தார்கள்.

ஆனால் ஈரானின் பதில்தாக்குதல் இஸ்ரேலை அதிரச் செய்தது.

பலம் வாய்ந்த  இஸ்ரேலின் வான் பாதுகாப்பை மீறை ஈரானால் தாக்குதல் நடத்த முடியாது என்றே போர் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

ஹமாஸின் தாக்குதலால்  இஸ்ரேலின் வான் பாதுகாப்பு  இரண்டு மாதங்களுக்கு முன்னர்  சிதைத்தது. அதிலிருந்து பாடம் கற்ற இஸ்ரேல் எச்சரிக்கையானது. ஈரானின் ஏவுகளைகளைத்தடுக்க இஸ்ரேலால் முடியவில்லை.

இரானின் அரக்கன் என வர்ணிக்கப்படும் ஹைபர் சுப்பர் சொனிக் ஏவுகளைகள்  இஸ்ரேலின் முக்கிய நகரங்களைச் சிதைத்தன.

     ஹைபர்சோனிக் ஏவுகணையான ஃபட்டா-1 ஐ இஸ்ரேலிம் மீது  ஏவியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அறிவித்தது.

  இஸ்ரேலுக்கு எதிரான மோதலில்  ஹைபர் சுப்பர்சொனிக்  முதன் முதலில்  பயன்படுத்தப்பட்டது.

 2023 ஆண்டு உலகத்துக்கு  வெளிப்படுத்தப்பட்ட இந்த ஏவுகணைக்கு    ஈரானின்  தலைவர் அயதுல்லா அலி கொமேனி தான்  பெயரிட்டார்.

IRGC-யால் உருவாக்கப்பட்டு ஜூன் 2023 இல் உலகிற்கு வெளிப்படுத்தப்பட்ட ஃபட்டா-1, ஒரு நடுத்தர தூர ஹைபர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும்.

ஈரான்-இஸ்ரேல் போரில் பயன்படுத்தப்பட்ட ஃபட்டா-1 ஹைபர்சோனிக் ஏவுகணைகள் என்றால் என்ன? 

 ஃபட்டா-1 ஏவுகணை என்றால் என்ன?

IRGC படி, இந்த தாக்குதல் ஆபரேஷன் ஹானஸ்ட் ப்ராமிஸ் 3-இன் 11வது அலையின் ஒரு பகுதியாகும். ஃபட்டா-1 ஏவுகணை இஸ்ரேலின் இரும்பு டோம் மற்றும் அம்பு போன்ற அதிநவீன பாதுகாப்பு அமைப்புகளைத் தவிர்ப்பதற்காக குறிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஈரானிய அதிகாரிகள் இதை "இஸ்ரேல்-ஸ்ட்ரைக்கர்" என்று குறிப்பிடுகின்றனர்.

இந்த ஏவுகணை  மணிக்கு சுமார் 15,000 கிலோ மீற்றர் செல்லும் திறன் கொண்டது.

இது 350-450 கிலோ எடையுள்ள  வெடிமருந்திஅச் சுமந்து செல்லும்.

 இஸ்ரேலின் வான்பாதுகாப்பு அமைப்பை மீறி ஈரானின் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் கவனத்தை பெற்றுள்ளது. அணுகுண்டு தயாரிப்பில் ஈரான் தீவிரம் காட்டுவதாகக் கூறி, அந்நாட்டின் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுத்த ஈரான், இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தியது. இந்த மோதல் தற்போது பெரிதாக வெடித்து, இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேலின் வான்பாதுகாப்பு அமைப்பான ஐயன் டாம் ஈரான் ஏவிய ரொக்கெற்களையும், ஏவுகணைகளையும் வானிலேயே இடைமறித்து சுட்டு வீழ்த்தியது.

ஆனால், ஈரான் அனுப்பிய  ஹைபர்சோனிக்  ஏவுகளைகளையும், பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் தாக்கியபோது, இஸ்ரேலின் ஐயன் டாம் வான் பாதுகாப்பு அமைப்பால் கூட அதனைத் தடுக்க முடியாமல்  இஸ்ரேலைச் சீரளித்தன.  ஈரானின் இந்த ஹைபர்சோனிக் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் திறன் எந்த நாட்டிடமாவது இருக்கிறதா எனும் கேள்வி எழுந்துள்ளது.

ஆயுதங்களின் நவீன அரக்கனான சுப்பர்சோனிக் ஏவுகணைகள்   மூலம் உகரைனின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது.

சண்ண்டையை நிறுத்தும்படியும்சரணடையும் படியும்   ஈரானிடம் ட்ரம்ப் கூறினார். ட்ரம்பின் சொல்லைக் கேட்ட முடியாது என கொமேனி  பதிலளித்தார்.

கொமேனி பதுங்கி இருக்கும் இடம் தெரியும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.  இஸ்ரேலுக்கு ஆதரவாக ட்ரம்ப்  போர்  செய்வார் என அமெரிக்க ஊடகங்கள்  தெரிவிக்கின்றன.

  வெள்ளை மாளிகையில் தனது தேசிய பாதுகாப்பு குழுவுடன் ட்ரம்ப் ஒரு மணி நேரம் 20 நிமிட சந்தித்து உரையாடினார்.

  ஈரானிய அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேலின் இராணுவ தாக்குதலில்   இணைவதற்கு  ட்ரம்ப் ஆலோசித்து வருவதாக   மூத்த உளவுத்துறை அதிகாரி ,பாதுகாப்புத் துறை அதிகாரி உட்பட சிலர் ஊடகங்களுக்குத் தெரிவித்துளனர்.சமூக ஊடகங்கள் இதனை விவாதிக்கின்றன.

  ஈரானுக்கு எதிரான  போரில் அமெரிக்கா ஜனாதிபதி   ட்ரம்ப்   இணையும்  வாய்ப்புள்ளது என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இஸ்ரேலிய பாதுகாப்பு நிறுவனமும் நம்புவதாக இரண்டு இஸ்ரேலிய அதிகாரிகள் கூறியதாக  செய்தி வெளியாகி உள்ளது. .

கனடாவில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டிலிருந்து ட்ரம்ப் திடீரென வெளியேறியதும், சமூக ஊடகங்களில் தொடர்ந்து வந்த  ட்ரம்பின் அச்சுறுத்தும் எச்சரிக்கைகளும், அமெரிக்காவின் ஈடுபாட்டை உறுதிப்படுத்தின.

ரஷ்யாவும்,  வட கொரியாவும்  இஸ்ரேலைக் கண்டித்துள்ளன.   இஸ்ரேலுக்கு ஆதரவாக  அமெரிக்கா  போர் செய்தால் நிலமை மேலும் விபரீதமாகும்.

ஈரானின் ஆயுதப் பலம் அமெரிக்காவுக்கும் அச்சுறுத்தலாக  உள்ளது.

ஈரானுக்கு அருகில் அமெரிக்க இராணுவத் தளங்கள்  உள்ளன.  இந்தப் போர்  இப்போதைக்கு முடியும் போல் தெரியவில்லை