இந்தியாவை பலகாலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி மிகவும் பலவீனமடைந்த நிலையில் உள்ளது.2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் நடபெற்ற முக்கியமான தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறவில்லை.
தேர்தல்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை பாரதீய ஜனதா விலைகொடுத்து வாங்கியது, ஊழல் வழக்குகள் மிரட்டல் என்பனவற்றால் காங்கிரஸ் உறுப்பினர்கள் அணி மாறினார்கள். கட்சியுடன் முரண்பட்ட முக்கியமான தலைவர்கள் வெளியேறிவிட்டார்கள். மாநிலங்களில் அவர்களின் செல்வாக்கு காங்கிரஸ் கட்சியைப் பலவீனப்படுத்தியுள்ளது. எதிர்க் கட்சிகள் ஓரணியில் இல்லாமல் பிரிந்து நிற்பதுதான் பாரதீய ஜனதாவுக்கு மிகவும் சாதகமாக உள்ளது.
ராகுலும், பிரியங்காவும் முழுவீச்சில் பிரசாரம் செய்த பஞ்சாப்,உத்த்ரபிரதேசம் ஆகிய மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. இதனால் விரக்தியடைந்த காங்கிரஸின் மூத்த தலைவர்கள் வெளியேறிவிட்டனர். அதன் பின்னர் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரளிப்பதற்காக தலைவரைத் தெரிவு செய்யும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்தது. ராகுல் மீண்டும் தலைவராக வேண்டும் எனவும், நேரு குடும்பத்தில் இல்லாத ஒருவர் தலைவராக வேண்டும் எனவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். இதையடுத்து 2019லிருந்து தற்போது வரை காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார்.
காங்கிரஸ் கட்சியில் சீர்திருத்தம் தேவை என கோரிக்கை விடுத்து கபில் சிபல், குலாம் நபி ஆசாத் போன்ற மூத்த தலைவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினர். இதனால் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும் என காங்கிரஸ் மேலிடம் சமீபத்தில் அறிவித்தது. அதன்படி கட்சி தலைவர் தேர்தல் அறிவிப்பை காங்கிரஸ் தேர்தல் குழு வெளியிட்டது.
காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செப்.24 முதல் செப். 30ம் திகதி வரை நடைபெறும் எனவும், வேட்புமனுவை அக்டோபர் 8ம் திக திக்குள் திரும்பபெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஒருபக்கம் பரத் ஜோடோ யாத்திரை நடத்திக்கொண்டிருக்கிறார். தமிழ்கத்தில் ஆரம்பமான பாதயாத்திரை காஷ்மீரில் முடிவடையும். இந்தப் பாதயாத்திரை காங்கிரஸுக்கு வலுச்சேர்க்கும் என்று நம்பப்படுகிறது. , மறுபக்கம் காங்கிரஸில் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வேலைகளும் நடந்துகொண்டே வருகின்றன. இந்த வேலைகள் தொடங்கப்பட்ட நாள் முதலே ராகுல் காந்தி கட்சியின் தலைவர் பதவிக்கு ஆர்வம் காட்டாமலிருந்தாலும், கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் `ராகுல் காந்தியே மீண்டும் தலைவராகப் பதவியேற்கவேண்டும்' என்று வெளிப்படையாகக் கூறிவருகின்றனர்.
இத்தேர்தலில் சோனியா குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிடப் போவது இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சோனியா குடும்பத்தினரது விருப்பமாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடுகிறார்.
2000 ஆண்டு தலைவர் தேர்தலில் சோனியா காந்தியை எதிர்த்து ஜிதேந்திர பிரசாத் போட்டியிட்டபோது, பிரச்சாரத்தின் போது, போபாலில் காங்கிரஸ் அலுவலகத்திலேயே அவருக்கு எதிர்ப்பு எழுந்தது. பல இடங்களில் அவருக்கு கறுப்புக்கொடி காட்டப்பட்டது. பிசிசி பிரதிநிதிகள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் 1997ல் சீதாராம் கேசரிக்கு எதிராக சரத்பவாரும்,ராஜேஷ் பைலட்டும் போட்டியிட்டபோது கொஞ்சம் செல்வாக்கு பெற்றனர். பல இடங்களில் பிரசாரம் செய்தார்கள். இருப்பினும் சீதாராம் கேசரி கிட்டத்தட்ட 70 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்."
உட்கட்சித் தேர்தல் என்பது வெறும் கண்துடைப்புத்தான் எனப்து வெளிப்படையானது.ஜெயலலிதாவுக்கு எதிராக தேர்தலில் மனுத் தாக்கல் செய்தவர்கள் தாக்கப்பட்டார்கள். இரட்டைத் தலைமையான எடப்பாடிக்கும், பன்னீருக்கும் எதிராக மனுத்தாக்கல்செய்யச் சென்றவர்களும் தாக்கப்பட்டனர். கட்சியின் உள் விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற நீதிமன்றத்தின் விதியால் சிலரின் தலைவிதி மாறியுள்ளது.
காங்கிரஸில் பெரும்பாலானோர் ராகுல் காந்தி தான் தலைவர் பதவிக்குப் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ராகுல் காந்தி தலைவர் பதவி ஏற்கத் தயாராக இல்லை. இதன் காரணமாகச் சோனியா காந்தியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவரான அசோக் கெலாட்டை களமிறக்க முடிவு செய்துள்ளனர்.
ராகுல்தான் காங்கிரஸ் கட்சியின் தலைவராக வேண்டும் என்று ராஜஸ்தான், சத்தீஸ்கர், புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டிகள் தீர்மானம் நிறைவேற்றின. தம் பங்குக்கும் அவசர அவசரமாக பொதுக்குழுவைக் கூட்டி, அதே தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது தமிழ்நாடு காங்கிரஸ். கூட்டத்தில், `அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல் காந்தியைத் தேர்வு செய்ய வேண்டும், மாநிலத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை தேசியத் தலைவருக்கு வழங்குகிறோம்’ என இரண்டே இரண்டு தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றியிருக்கிறார்கள்.
137 ஆண்டுகால வரலாற்றில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு நடக்கும் ஐந்தாவது தேர்தல்.அசோக் கெலாட், சசிதரூர்ர் ஆகிய இருவருக்கும் இடையேதான் போட்டி இருக்கும். கெலாட் சோனியாவின் விசுவாசத்துக்குரியவர். ராகுல்காந்தி, சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியபோது டெல்லியில் முன்நின்று போராட்டத்தை தொடர்ந்து அசோக் கெலாட் நடத்தினார். பலமுறை கைது செய்யப்பட்டார். மேலும் சோனியா காந்தி, ராகுல்காந்தியை பாதுகாக்கும் வகையில் பல முறை பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தி விளக்கம் அளித்தார். மேலும் அவர் ராஜஸ்தான் முதல்வராக இருப்பதோடு, விரைவில் தேர்தல் நடைபெற உள்ள குஜராத்தின் மேற்பார்வையாளராகவும் உள்ளார்.
காரணம் அசோக் கெலாட் அடிப்படையிலேயே காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவருக்கும், காங்கிரசுக்கும இடையேயான பந்தம் மிகவும் நீண்டகாலமாக உள்ளது. இவர் 5 முறை எம்பியாகவும், 5 முறை எம்எல்ஏவாகவும் இருந்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராகவும் உள்ளார். ராஜஸ்தான் முதல்வராகவும் உள்ளார்.
காரணம் அசோக் கெலாட் கெலாட் அரசியல் அனுபம் அதிகம் கொண்டவர். இவர் 3 முறை மத்திய அமைச்சராக இருந்துள்ளார். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் பிவி நரசிம்மராவ் ஆகியோரின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார். 3 முதல்வராக உள்ளார்.
ராஜஸ்தான் முதல்வராக உள்ள அசோக் கெலாட்டுக்கு நல்ல அரசியல் அனுபவம் உள்ளது. இதனை இந்தியா முழுவதும் பயன்படுத்தி கொள்ள காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. மேலும் இவருக்கு காங்கிரஸ் தலைவர் பதவி கொடுப்பதன் மூலம் ராஜஸ்தானின் முதல்வர் பதவியை சச்சின் பைலட்டுக்கு வழங்கலாம். இதன்மூலம் ராஜஸ்தானில் அடுத்தக்கட்ட தலைவரை உருவாக்கி அங்கு ஆட்சியை தக்க வைக்க முடியும் என காங்கிரஸ் கட்சி நினைக்கிறது. ஆ அசோக் கெலாட் சர்ச்சகைளில் சிக்காத அனுபவம் நிறைந்த அரசியல்வாதி. இந்தியாவின் அரசியல் நிலைப்பாடு, மக்களின் எண்ணம் என்பது பற்றி அவர் நன்கு அறிந்தவர்.
அசோக் கெலாட் போல் நேரு, சோனியாகாந்தியின் குடும்பத்துக்கு அவ்வளவு நெருக்கமானவராக சசிதரூர் இல்லை. அதோடு ஜி23 தலைவர்களிடம் ஒருவராக அறியப்பட்டு வரகிறார். 2020ல் உள்கட்சி சீர்திருத்தங்கள், உயர்மட்ட கூட்டத்தில் வெளிப்படை தன்மை வேண்டும் என சோனியா காந்திக்க கடிதம் எழுதி இருந்தார். இதனால் சசிதரூரை காட்டிலும் அசோக் கெலாட் தான் சோனியா காந்தியின் குடும்பத்துடன் விசுவாசமாக உள்ளது தெரிகிறது.
சசிதரூர் 2009ல் இருந்து தான் காங்கிரஸ் கட்சியின் செயல்பட்டு வருகிறார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து மூன்று முறை எம்பியாக தேர்வாகி உள்ளார். காங்கிரஸ் கட்சியின் தொழில் வல்லுநர் பிரிவின் தலைவராக தற்போது நீடித்து வருகிறார்
. அதேவேளையில் சசிதரூர் 2 முறை மத்திய அமைச்சராக இருந்துள்ளார். இரண்டு முறையும் அவர் குறுகிய காலம் மட்டுமே அமைச்சராக இருந்தார். 2009 மே 23ம் தேதி முதல் 2010 ஏப்ரல் 18 வரை முதல் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், அதன்பிறகு 2012 அக்டோபர் 28 முதல் 2014 மே மாதம் வரை மனித வள மேம்பாட்டு துறை அமைச்சராகவும் இருந்தார். இவர் ஐக்கிய நாடுகள் சபையில் 1978-2007 வரை 29 ஆண்டுகள் துணை பொதுச் செயலாளர் உட்பட பல பதவிகளிலும் இருந்துள்ளார். 23 புத்தகங்களை எழுதியுள்ளார். 2006ல் கோபி அன்னானுக்கு பிறகு ஐநா பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டார். அதன்பிறகு விலகினார். இவருக்கு காங்கிரஸ், அரசியல் சார்ந்த பதவிகளை விட பிற விஷயங்களில் தான் அனுபவம் உள்ளது. இதுவும் சசிதரூருக்கு பிரச்சனையாக உள்ளது.
சசிதரூர் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர். ஐபிஎல் கிரிக்கெட் விஷயத்தில் பங்கு வாங்க பதவியை தவறான பயன்டுத்தியதாக கூறி சர்ச்சையில் சிக்கி மத்திய அமைச்சர் பதவியை இழந்தார். அதன்பிறகு மனைவி சுனந்தா இறப்பு தொடர்பான விஷயத்தில் சர்ச்சையில் சிக்கினார். அதோடு ட்விட்டரை அதிகமான பயன்படுத்தும் அவர் அதிலும் கருத்துகள் தெரிவித்து சர்ச்சைகளை தன்னுடனே வைத்து கொள்வதே வாடிக்கையாக வைத்துள்ளார். 2021ல் ஆறு பெண் எம்பிக்களுடன் அவர் சேர்ந்து இருக்கும் படத்தை பதிவிட்டு கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியது. இதனால் தான் சசிதரூரை விட அசோக் கெலாட்டை தலைவராக்க சோனியா காந்தி விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியா,காங்கிரஸ்,சோனியா,ராகுல்,அரசியல்
No comments:
Post a Comment