Monday, September 5, 2022

ஆசியக்கிண்ண கடைசி ஓவரில் வென்றது பாகிஸ்தான்


 

  ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த ஆசியக்கிண்ண சூப்பர் 4  போட்டியில் இந்தியாவை எதிர்த்து விளையாடிய பாகிஸ்தான்  5விக்கெட்களால் வெற்றி பெற்றது.  நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பகிஸ்தான் கலத்தடுப்பைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய  இந்தியா  20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 181 ஓட்டங்கள்கள் எடுத்தது. 19.5  ஓவர்களில் 7 விக்கெட்களை இஅழ்ந்த பாகிச்தான் 182 ஓட்டங்கள் எடித்து வெற்றி பெற்றது.

கப்டன் ரோகித்சர்மாவும், கே.எல்.ராகுலும் அதிரடியாகவே ஆட்டத்தை தொடங்கினர்.கப்டன் ரோகித்சர்மா பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் நசீம்ஷா வீசிய முதல் ஓவரிலே பவுண்டரி, சிக்ஸரை விளாசினார். இதனால், முதல் ஓவரிலே இந்திய அணி தனது ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியது. பவர்ப்ளேவில் இந்திய அணி அதிரடியாகவே ஆட வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்திய வீரர்கள் ரோகித்சர்மாவும், கே.எல்.ராகுலும் உள்ளே வந்தனர் என்பது அவர்கள் ஆடிய விதத்தை பார்த்தபோதே தெரிந்தது.

 இருவரும் இணைந்து 3 ஓவர்களில் 34 ஓட்டங்களை விளாசினர்.  இவர்களது அதிரடியை கட்டுப்படுத்தண்ட பாகிஸ்தான் கப்டன் பாபர் அசாம் 5வது ஓவரிலே சுழற்பந்துவீச்சை அழைத்தார். இந்திய அணி 4.2 ஓவர்களில் 50 ஓட்டங்கள் அடித்தது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பவர் பிளேயில் 50 ஓட்டங்களுகு மேல் எடுத்தது இதுவே முதல் முறையாகும்.

  ரோகித்சர்மா 16 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 28 ஓட்டங்கள் அடித்த்கு  வெளியேறினார். இந்திய அணி பவர்ப்ளே முடிவில் 6 ஓவர்களில் 62 ஓட்டங்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு ஷதாப்கான் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 20 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்ஸருடன் 28 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆட முயற்சித்த சூர்யகுமார் யாதவ் 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இந்தியா 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 93 ஓட்டங்கள் எடுத்தது. பாகிஸ்தான் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக சடாப் கான் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

  182 ஓட்டக்ன்கள் என்ற இலக்கை துரத்திய பாகிஸ்தானுக்கு கப்டன் பாபர் அசாம் ஆரம்பத்திலேயே 14 ஓட்டங்களில ஆட்டமிழந்து ஏமாற்ற அடுத்து வந்த பகார் ஜமான் 15 ஓட்டங்களில் நடையை கட்டினார். அதனால் 63/2 என தடுமாறிய அந்த அணிக்கு அடுத்ததாக களமிறங்கி தொடக்க வீரர் முஹம்மது ரிஸ்வானுடன் ஜோடி சேர்ந்து 73 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மிரட்டிய முகமத் நவாஸ் 6 பவுண்டரி 2 சிக்சருடன் அதிரடியாக 42 (20) ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். அந்த ஓவரிலேயே 6 பவுண்டரி 2 சிக்சருடன் 71 (51) ஓட்டங்கள் அடித்த  முகமது ரிஸ்வானை  வெளியேற்ரிய இந்தியா வெற்றிக்கு போராடியது.

கடைசி 4 ஓவர்களில் பாகிஸ்தான் அணிக்கு 43  ஓட்டங்கள் தேவைப்பட்டது. இதனால், போட்டியில் விறுவிறுப்பு ஏற்பட்டது. முகமது ரிஸ்வான் களத்தில் இருந்ததால் இந்திய அணிக்கு நெருக்கடி  இருந்தது. இந்த சூழலில், ஹர்திக் பாண்ட்யா வீசிய 17வது ஓவரில் முகமது ரிஸ்வான் 71 ஒட்டன்களில் ஆட்டமிழந்தார்.கடைசி 3 ஓவர்களில் பாகிஸ்தான் வெற்றிக்கு 34  ஓட்டங்கள் தேவைப்பட்டதால் மீண்டும் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் கிடைத்த எளிதான கேட்ச்சை அர்ஷ்தீப்சிங் கோட்டைவிட்டார். இது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிஷ்னோய் 18வது ஓவரில் மூன்று ஒயிட் வீசினாலும் ஒரு பவுண்டரி கூட அளிக்காமல் கட்டுக்கோப்பாக வீசினார்.

புவனேஷ்வர் வீசிய 19வது ஓவரில் இரண்டு சிக்ஸர்களை பாகிஸ்தான் விளாசியது. இதனால், கடைசி 6 பந்துகளில் பாகிஸ்தான் வெற்றிக்கு 7  ஓட்டங்கள் தேவைப்பட்டது. இதில் இந்தியா பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் இந்தியா கடைசி ஓவரில் யார்டுக்கு வெளியே 4 பீல்டர்கள் மட்டுமே வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அர்ஷ்தீப் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் ஒரு ஓட்டம்  எடுத்த நிலையில், இரண்டாவது பந்தில் ஆசிப் அலி பவுண்டரி விளாசினார். இதனால், வெற்றிக்கு 2 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்டது. மூன்றாவது பந்து டாட் பால் ஆகிய நிலையில், ஆசிப் அலி நான்காவது பந்தில் எல்.பி.டபிள்யூ ஆகினார். இதனால், கடைசி 2 பந்துகளில் 2 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் வீரர் இப்திகார் அகமது 2 ஓட்டங்கள் விளாசியதால் பாகிஸ்தான் திரில் வெற்றி பெற்றது. 

  குஷ்தில் ஷா 14* (11) ஆசிப் அலி 16 (8) என கடைசியில் வந்த வீரர்கள் தேவையான ஓட்டங்களை அடித்ததால் 19.5 ஓவரில் 182/5 ஓட்டங்களை எடுத்த பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது.

தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்யாதது, 19வது ஓவரில் புவனேஸ்வர் குமார் 19  ஓட்டங்களை வாரி வழங்கியது போன்ற தவறான முடிவுகளும்   இந்தியா தோல்வியடைய காரணமாக அமைந்தது. அதனால் ஆசிய கோப்பையில் 7 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் இந்தியா 7 வருடங்கள் கழித்து முதல் முறையாக தோற்றுள்ளது ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. கடைசியாக கடந்த 2014இல் வங்கதேசத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் இதேபோல் கடைசி ஓவரில் தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஷ்வினை அடுத்தடுத்த சிக்ஸர்கள் பறக்கவிட்ட சாகித் அப்ரிடி 1 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைய வைத்தார். அதன்பின் 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் தோல்வியடையாமல் சம்பியனான  இந்திய அதே காலகட்டத்தில் பாகிஸ்தானை 4 போட்டிகளில் தோற்கடித்திருந்தது. ஆனால் தற்போது அந்த வெற்றிநடை முடிவுக்கு வந்துள்ளது.

 அதே போல் இந்தியாவுக்கு எதிராக ரி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச இலக்கை (182) வெற்றிகரமாக சேசிங் செய்து பாகிஸ்தான் சாதனை படைத்துள்ளது.     ஆசிய கோப்பையில் முதல் முறையாக ரோகித் சர்மா தலைமையில் இந்தியா நேற்று தோல்வியடைந்தது. மேலும் ரி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக அவரது தலைமையில் 180+ ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் இந்தியா தோற்றுள்ளது. அதை விட இந்தியாவின் அதிர்ஷ்ட தேவதை என்றழைக்கப்படும் தீபக் ஹூடா இடம் பிடித்திருந்த 16 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று வந்த இந்தியா நேற்றைய போட்டியில் முதல் முறையாக தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

No comments: