சினிமாவில் சதிக்க வேண்டும் என்ற வெறியுடன் நகரத்துக்குச் சென்ற பலர் தோல்வியடைந்தனர். ஒரு சிலர். வெற்றி பெற்றனர். விரும்பிய துறையைக் கைவிட்டு வேறு துறையில் சாதித்தவர்களின் பட்டியல் அதிகமானது. நடிகனாக வேண்டும் என்ற ஆர்வத்துடன் சென்னைக்குச் சென்ற எம்.எஸ்.விஸ்வநாதன் இசைத்துறையில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார். அவர் ஆசைப்பட்டதுபோல் பின்னர் சில படங்களில் பிரபல நடிகர்களுடன் நடித்தார்.
சினிமாவில் காலடி வைத்ததும் சாதிக்க முடியாது என்பதைத் தெரிந்துகொண்ட
எம். எஸ்.விஸ்வநாதன் கிடைத்த வேலைகளைச் செய்தார்.
டி.எஸ்.பாலையாவின் நாடகக் கம்பனியில் மெட்டுப்போடுவது. ஆர்மோனியம் வாசிப்பது தவிர சின்னச்
சின்ன வேஷங்களிலும் நடித்தார்.அன்று நடந்த இராமாயண நாடகம் எம்.எஸ்.விஸ்வநாதனின் வேலைக்கு
உலை வைத்தது. சுயம் வரத்தில் வளைத்த வில் அவருக்கு
வில்லனானது.
சுயம்வரத்துக்கான வைக்கப்பட்ட வில்லை வளைக்கும் இளவரசனாக நடித்த எம்.எஸ்.விஸ்வநாதன் வில்லைத் தூக்கியதும் அது "படார்" என முறிந்தது. என்ன செய்வதெனத் தெரியாமல் எம்.எஸ்.விச்வநாதன் திகைத்து நின்றார். ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். சிலர் கேலிபண்ணினர். "வில்லை உடைத்த ராஜாக்கு சீதையைக் கட்டிக்கொடு" என ரசிகர்கள் கோஷமிட்டனர். கூச்சல் குழப்பம் அதிகமானதால் திரை கீழே இறக்கப்பட்டது. அதற்காகவே காத்திருந்தவர் போல ஓடிச் சென்ற டி.எஸ்.பாலையா, அடங்காத ஆத்திரத்துடன் விஸ்வநாதனைப் போட்டு மிதி மிதியென மிதித்தார்.
எம்.எஸ்.விஸ்வநாதன் வாழ்க்கையில் அப்படி ஒரு அடியை வாங்கியதில்லை.
மூக்கால் இரத்தம் ஒழுகியது. மேலெல்லேம் ஒரே வலி. தொடர்ந்தும் அங்கே இருக்க அவர் விருப்பப்படவில்லை.
ஆத்தூரில் இருந்து சேலத்துக்கு ஒரே ஓட்டமாக ஓடினார். சேலத்தில் உள்ள மார்டன் தியேட்டர்ஸ்
"பர்மா ராணி" எனும் படத்தைத் தயாரித்தது. கே.வி.மகாதேவன் அதற்கு இசை அமைத்தார்.
கோரஸ் பாடுவதற்கு வாய்ப்புத் தரும்படி அவரிடம்
கேட்டார். விஸ்வநாதனின் வேண்டுகோளை கே.வி.மகாதேவன் ஏற்றுக்கொள்ளவில்லை. ஜூபிடரில் எம்.எஸ்.விஸ்வநாதன் பனியாற்றியபோது அவரது
திறமையைக் கண்டு வியந்த சக கலைஞர்கள் அவரைப்
பற்றி கே.வி.மகாதேவனிடம் எடுத்துச் சொன்னார்கள்.
மிகச்சிறந்த ஒரு கலைஞரை கோரஸ் பாடும் குழுவுக்குள் அடக்க கே.வி.மகாதேவன் விரும்பவில்லை.
"விஸ்வநாதா உன்னிடம் நல்ல திறமை உள்ளது. கோரஸ் பாடி உன்னுடைய எதிர்காலத்தை வீணாக்கி விடாதே. நீ வேலை செய்த ஜூபிடர்ஸ் இப்போ கோயம்புத்தூரில் ஒரு ஸ்ரூடியோவை வாங்கி படம் தயாரிக்கிறது. அவர்கள் உனக்கு நிச்சயம் வேலை தருவார்கள். நீ விட்டுட்டுப் போனது தவறு எனச்சொல்லி மனிப்புக் கேள்" என மூத்த சகோதர் போல் ஆலோசனை சொன்னார்.
கே.வி.மகாதேவன் சொன்னதைக் கேட்டதும் என்ன செய்வதெனத் தெரியாது திகைத்து
நின்றார் எம்.எஸ்.விஸ்வநாதன். திகைப்பு அடங்குவதற்கிடையில்
புது வேட்டி,சட்டை செலவுக்குப் பணம் கொடுத்தார் மகாதேவன்.நம்பிக்கையுடன் சென்ற எம்.எஸ்.விச்வநாதனுக்கு
ஜுபிடர்ஸ் நிறுவனம் வேலஒ கொடுத்தது. ஜுபிடர்ஸின்
"ஜெனோவா" படத்துகு எம்.எஸ்.விஸ்வநாதன்
இசை அமைத்தார். அவரது இசையில் வெளியான "ஜெனோவா" படப் பாடல்கள் பலரையும் கவர்ந்தன. குறுகிய காலத்தினுள்
எம்.எஸ்.விஸ்வநாதனின் புகழ் தமிழகத்தில் பரவியது.
கே.வி.மகாதேவனுக்கு இணையாக எம்.எஸ்.விஸ்வநாதன் பேசப்பட்டார். அவருக்கான படவாய்ப்புகள்
அதிகரித்தன.பிரபல நடிகர்களும், தயாரிப்பாளர்களும் அவரைத் தேடிச் சென்றனர்.ரசிகர்களும்,
விநியோகஸ்தர்களும் விரும்பும் இசையமைபளராக எம்.எஸ்.விஸ்வநாதன் இருந்தார்.
சாண்டோ சின்னப்பா தேவர் தயாரிக்கும் படங்களுக்கு கே.வி.மகாதேவை இசையமைத்தார். எம்.ஜி.ஆர் நடிக்கும் " வேட்டைக்காரன்" படம் தயாரிப்பு வேலைகள் மும்முரமாக நடந்தன. அந்தப் படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைக்க வேண்டும் என எம்.ஜி.ஆர் விரும்பினார்.எம்.ஜி.ஆரின் விருப்பத்துக்கமைய எம்.எஸ்.விஸ்வநாதனின் வீட்டுக்கு சண்டோ சின்னப்ப தேவர் சென்றார். கே,வி,மகாதேவனைவிட அதிகமான பணத்தை எம்.எஸ்.விஸ்வநாத வாங்கிய காலமது.
கே.வி.மகாதேவன் சொன்னதைக் கேட்டதும் என்ன செய்வதெனத் தெரியாது திகைத்து
நின்றார் எம்.எஸ்.விஸ்வநாதன். திகைப்பு அடங்குவதற்கிடையில்
புது வேட்டி,சட்டை செலவுக்குப் பணம் கொடுத்தார் மகாதேவன்.நம்பிக்கையுடன் சென்ற எம்.எஸ்.விச்வநாதனுக்கு
ஜுபிடர்ஸ் நிறுவனம் வேலஒ கொடுத்தது. ஜுபிடர்ஸின்
"ஜெனோவா" படத்துகு எம்.எஸ்.விஸ்வநாதன்
இசை அமைத்தார். அவரது இசையில் வெளியான "ஜெனோவா" படப் பாடல்கள் பலரையும் கவர்ந்தன. குறுகிய காலத்தினுள்
எம்.எஸ்.விஸ்வநாதனின் புகழ் தமிழகத்தில் பரவியது.
கே.வி.மகாதேவனுக்கு இணையாக எம்.எஸ்.விஸ்வநாதன் பேசப்பட்டார். அவருக்கான படவாய்ப்புகள்
அதிகரித்தன.பிரபல நடிகர்களும், தயாரிப்பாளர்களும் அவரைத் தேடிச் சென்றனர்.ரசிகர்களும்,
விநியோகஸ்தர்களும் விரும்பும் இசையமைபளராக எம்.எஸ்.விஸ்வநாதன் இருந்தார்.
சாண்டோ சின்னப்பா தேவர் தயாரிக்கும் படங்களுக்கு கே.வி.மகாதேவை இசையமைத்தார். எம்.ஜி.ஆர் நடிக்கும்
" வேட்டைக்காரன்" படம் தயாரிப்பு வேலைகள் மும்முரமாக நடந்தன. அந்தப் படத்துக்கு
எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைக்க வேண்டும் என
எம்.ஜி.ஆர் விரும்பினார்.எம்.ஜி.ஆரின் விருப்பத்துக்கமைய எம்.எஸ்.விஸ்வநாதனின் வீட்டுக்கு
சண்டோ சின்னப்ப தேவர் சென்றார். கே,வி,மகாதேவனைவிட அதிகமான பணத்தை எம்.எஸ்.விஸ்வநாதன்
வாங்கிய காலமது.
தான் வந்த காரணத்தை எம்.எஸ்.விஸ்வநாதனிடம் தெரிவித்த சாண்டோசின்னப்பா
தேவர் , எம்.ஜி.ஆரின் விருப்பம்,விநியோகஸ்தர்களின் விருப்பம் என்பதை அழுத்திச் சொன்னார். தனது திறமையைத்தனக்கு
அடையளம் காட்டிய கே.வி.மகாதேவனுக்குக் கிடைக்க
உள்ள சந்தர்ப்பத்தைத் தட்டிப் பறிக்க எம்.எஸ்.வி விரும்பவில்லை. எம்.ஜி.ஆரே கேட்டாலும், கோடிகோடியாகக் கொட்டிக் கொடுத்தாலும்
கே.வி.மகாதேவனின் சந்தர்ப்பத்தை தட்டிப் பறிக்க மாட்டேன் என்றார்.
"பாஸ் என்கிற பாஸ்கரன்," "நான் கடவுள்" ஆகிய படங்களைத் தயாரித்த் கே.எச்.சிவராமன், கே.எஸ்.சிவராமன் ஆகியோரின் தகப்பனான மணி அய்யர் " தெய்வத் திருமணங்கள்" எனும் படத்தைத் தயாரித்தார். அப் படத்துக்கு மூன்று பேர் இசை அமைப்பதால் பெரிய எதிர் பார்ப்பு இருந்தது. காலையில் தேநீர் அருந்திக்கொண்டு பத்திரிகையை பார்த்த எம்.எஸ்.விஸ்வநாதனின் கண்ணில் பட விளம்பரம் தென்பட்டது. உடனே பதறியடித்து தேநீர் கப்பை வைத்துவிட்டு தயாரிப்பாளரின் வீட்டுகுச் சென்றார். எம்.எஸ்.வியைக் கண்ட தயாரிப்பாளர் என்ன இந்த விடிகாலை வேளையில் என விசாரித்தார்.
கையில் இருந்த பத்திரிகையை மேசையில் போட்டிவிட்டு, "இந்த விளம்பரத்திப்
போடுவதற்கு முன் சரியாகப் பார்த்தீர்களா? இப்படி
விளம்பரம் வரலாமா?" எனக் கேட்டார். தயாரிப்பாளரான மணி அய்யர் அந்த விளம்பரத்தைப்
பார்த்தார். ப.நீலகண்டன், காமேஸ்வரராவ்,கே.சங்கர் ஆகிய மூவர் இயக்கிய படம். இசை அமைப்பாளர்களும் மூவர். விஸ்வநாதன் சுட்டிக் காட்டிய பகுதியைப் பார்த்ததும் அவர் வந்த காரணத்தை தயாரிப்பாளர் தெரிந்துகொண்டார்.
திரை இசையிலெம்.எச்.விச்வநாதன் கொடிகட்டிப் பறந்த நேரம். விளம்பரத்தை வடிவ்மைத்தவர்
எம்.எஸ்.விஸ்வநாதனின் பெயரை முதலில் போட்டு, கே.வி.மகாதேவனின் பெயரை இரண்டாவதாகப் போட்டார்.
"இதைப் பாத்தா அவர் என நினைப்பார்" என விஸ்வநாதன் கேட்டார்.
இது ஒரு சின்னப் பிரச்சினை கே.வி.மகாதேவனிடன் நான் சொல்கிறான் என தயாரிப்பாளர் சமாதானப் படுத்தினார். எம்.எஸ்.விஸ்வநாதன் ஒப்புக்கொள்ளவில்லை தயாரிப்பாளரையும் கூட்டிக்கொண்டு கே.வி.மகாதேவனின் வீட்டுக்குச் சென்றார்.
தயாரிப்பளர் மணி அய்யரையும், விஸ்வநாதனையும் அந்த காலை நேரத்தில் கே.வி.மகாதேவன் எதிர் பார்க்கவில்லை.விளம்பரக் குழப்பதை
இருவரும் விபரித்தனர். அதனைக் கேட்ட கே.வி.மகாதேவன் சிரித்துக்கொண்டு, " விஸ்வநதனைப் பற்றி எனக்குத்
தெரியாதா? இந்த சின்ன விஷயத்துக்காகவா இந்த
நேரத்தில் வந்தீர்கள்? நான் தப்பாக நினைக்க மாட்டேன் எனக் கூறி இருவரையும் அனுப்பினார்.
அதன் பின்னர் வெளியான விளம்பரங்களிலும்
படத்திலும் முதலில் கே.வி.மகாதேவன், இரண்டாவதாக
ஜி.கே.வெங்கடேஷ், மூன்றாவதாக எம். எஸ் விஸ்வநாதன் என பொறிக்கப்பட்டது.
No comments:
Post a Comment