Wednesday, September 28, 2022

சூரியகுமார் ராகுல் ஜோடியால் இந்தியா வென்றது


 தென் ஆபிரிக்காவுக்கு எதிராக திருவனந்த புரத்தில் நடைபெற்ற முதலாவது ரி20 போட்டியில் 8 விக்கெற்களால் இந்தியா வெற்றி பெற்றது. நாணயச் சுழற்சியில்  வெற்றி பெற்ற  இந்திய அணித் தலைவர் ரோகித் சர்மா பந்து வீச்சைத்  தேர்வு செய்தார்.    முதலில் துடுப்படுத்தாடிய தென் ஆபிரிக்கா  8 விக்கெற்களை இழந்து 106 ஓட்டங்கள் எடுத்தது. 107 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களம்  இறங்கிய இந்தியா  16.4  ஓவர்களில் 2 விக்கெற்களை இழந்து  110 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்க அணி பவர்பிளேயின்  முதல் மூன்று ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்தது. டெம்பா பவுமா, டிகாக், ரிலே ரோஸ்சோவ், டேவிட் மில்லர், ஸ்டப்ஸ் போன்ற வீரர்கள் வரிசையாக 10 பந்துகளில் தங்களது விக்கெட்டை அடுத்தடுத்து இழந்தனர். ஒரே ஓவரில் அர்ஷ்தீப் சிங், 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அந்த அணி 9 ஓட்டங்கள் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதில் டிகாக்கை தவிர மற்ற அனைவரும்ஓட்டம்  ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினர். 

பவர்பிளே ஓவர்களின் முடிவில் அந்த அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 30 ஓட்டங் கள் எடுத்திருந்தது. 7 முதல் 15 ஓவர்களில் 33 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இதில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே  இழந்திருந்தது. கடைசி 5 ஓவர்களில் 43 ஓட்டங்கள் எடுத்தது.இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் 3 விக்கெட்டுகளையும், தீபக் சஹார்,  ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா  2 விக்கெட்களையும்,  , அக்சர் படேல் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

107 ஒட்டங்கள்  என்ற சுலபமான இலக்குடன் களம் இறங்கிய  இந்தியா ஆரம்ப்த்தில் தடுமாரியது.  ரோகித் சர்மா முதல் விக்கெட்டாக ஓட்டம் கள் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். அதேபோல், விராட் கோலியும் வந்த வேகத்தில் 3  ஓட்டங்களுடன் வெளியேறினார்.    முதல்வரிசை வீரர்கள் இருவரும் அடுத்தடுத்து  ஆட்டமிழ்க்க இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். , கேஎல் ராகுல் உடன்  ஜோடி சேர்ந்த   சூர்யகுமார் யாதவ்  மெதுவாக அணியை மீட்டெடுத்தார்

தென்னாப்பிரிக்க பந்துவீச்சை எளிதாக சமாளித்தவர்கள், பவுண்டரிகளை விளாசி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.   16.3வது பந்தில் சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்து அசத்த, அடுத்த பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டு அரைசதம் அடித்த கேஎல் ராகுல் போட்டியை முடித்து வைத்தார்.  இந்தியா இரண்டு விக்கெட்களை  இழந்து 110 ஓட்டங்கள் எடுத்து வெற்றிபெற்றது இந்திய அணி. கேஎல் ராகுல் 51 ஓட்டங்களும், சூர்யகுமார் யாதவ்  50 ஓட்டங்களும் எடுத்தனர். அர்சீப் சிங் ஆட்டநாயகனாஅக்த் தெர்வு செய்யப்பட்டார்.அனுபவம் மிக்க ராகுல் தடுமாருவது அப்பட்டமாகத் தெரிகிறது.

No comments: