ஆசியக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளை வீழ்த்தி இந்தியா சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஏற்கனவே ஆப்கானிஸ்தான் தகுதி பெற்றுள்ள நிலையில் மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு பாகிஸ்தான், இலங்கை,பங்களாதேஷ் , ஹாங்காங் அணிகள் போட்டி போடவுள்ளன.
ஆசியக் கிண்ணத் தொடரின்
நான்காவது ஆட்டம், இந்தியாவுக்கான இரண்டாவது ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இந்தியா
- ஹாங்காங் மோதிய இந்தப் போட்டியில் நாணயச் சுழர்சியில் வென்ர இந்தியா பந்து வீச்சைத்
தேர்வு செய்தது. ஹர்திக் பாண்ட்யா வுக்கு
ஓய்வு அளிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டார்.
ரோஹித் ஷர்மா 21 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். காயத்துக்கு பிறகு திரும்பிய கேஎல் ராகுல், நிதானமாக விளையாடுவதில் கவனம் செலுத்தினார். டி அவர் 39 பந்துகளில் 36 ஓட்டங்கள் எடுத்தார்.
பின்னர் வந்த ஸ்கை என்று
அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் தனது ஸ்டைலில் எதிர்பாராத இடங்களில் எல்லாம் பந்தை
பவுண்டரிகளாக விரட்டினார். பார்மை மீட்டெடுக்கும் ஒரே குறிக்கெோளுடன் நிதானமாக ஆடி
வந்த கோலி அரைசத்தை பூர்த்தி செய்தார். கடைசி
ஓவரில் சூர்ய குமார் யாதவ் பந்தை நாலபுறமும் பறக்க விட்டு 26 ஓஆட்னகள் எடுத்தார். யுவராஜ்சிங்குக்குப்
பின்னர் தொடர்ச்சியாக மூன்று சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். இதன் மூலம் 20 ஓவர் முடிவில்
2 விக்கெட் இழப்புக்கு இந்தியா அணி 192 ஓட்டங்ளை குவித்தது. விராட் கோலி கடைசி வரை
ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்களும், சூர்யகுமார் யாதவ் 68 ஓட்டங்களும் எடுத்திருந்தனர்.
இதனால் 20 ஓவர் முடிவில்
ஹாங்காங் அணி 5 விக்கெட் இழப்புக்கு 152 ஓட்டங்கள் எடுத்தது.193 ஓட்டங்கள் இலக்கை துரத்திய ஹாங்காங் அணிக்கு நல்ல
துவக்கம் அமையவில்லை. ஓப்பனிங் இறங்கிய அந்த அணி வீரர் யாசிம் முர்தாசாவை அர்ஷதீப்
சிங் 2வது ஓவரிலேயே வெளியேற்ற , அடுத்த சில ஓவர்களில் கப்டன் நிஜாகத் கான் ரன் அவுட்
செய்யப்பட்டார். ஒன் டவுனில் இறங்கிய பாபர் ஹயாத் மற்றும் கிஞ்சித் ஷா இருவரும் அணியை
சரிவிலிருந்து மீட்கப் போராடினர். ஆனால் அவர்களின் உழைப்பு நீண்ட நேரம் கைகொடுக்கவில்லை.
41 ஓட்டங்கள் எடுத்த
ஹயாத்தை ரவீந்திர ஜடேஜாவும், 30 ஓட்டங்கள் எடுத்திருந்த ஷாவை புவனேஷ்வர் குமாரும் வெளியேற்றினர்.
இதன்பின் ஜீஷன் அலி ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினாலும், அதற்குள் 20 ஓவர்கள் முடிந்துவிட்டது.
இதனால் 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. 20 ஓவர்களில் ஐந்து
விக்கெட்களை இழந்த ஹாங்காங் அணி 152 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இந்திய தரப்பில் 6 ஆறு வீரர்கள் பந்து வீசினர்.6வது வீரராகவிராட் கோலி ஒரு ஓவர்
பந்துவீசினார். 17வது ஓவராக வீசிய அவர் 6 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். விக்கெட் ஏதும்
வீழ்த்தவில்லை. தொடர்ச்சியாகஇரண்டு வெற்றிகளை பெற்ற இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு
அடுத்தபடியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்திய இளம் பந்து வீச்சாளர்களான
ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங் ஆகியோரின் ஓவர்களை ஹாங்காங் பேட்ஸ்மேன்கள் நன்கு பயன்படுத்தி
ஓட்டங்ளை அள்ளி குவித்தனர். இவர்கள் இருவரும் சேர்ந்து 8 ஓவர்களுக்கு 97 ஓட்டங்களை
வாரி வழங்கியுள்ளனர். அதே போல் அனுபவ பெளலர்களான புவனேஷ் குமார், ஜடேஜா, சஹால் ஆகியோர்
11 ஓவர்கள் வீசி 48 ஓட்டங்களை மட்டும் கொடுத்திருந்தனர். எட்டு வருடங்களின் பின்னர் கோலி பந்து வீசினார்.பந்தை நாலாபுறமும்
பறக்க விட்ட அரைசதம் அடித்து, அணியின் ஸ்கோரையும் உயர்த்திய சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாக
தேர்வு செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment