தமிழ்த்திரை உலகின் முடி சூடா மன்னர்களான சிவாஜி கணேசனும், எம்.ஜி.ஆரும் மிக இலகுவாக அந்தக் கிரீடத்தைக் கைப்பற்றவில்லை. நாட மேடையில் இருந்து கதாநாயகனாக திரை உலகில் காலடி வைத்த்வர் சிவாஜி. சிறு சிறு வேடங்களில் நடித்து கதாநாயகனால மிளிர்தவர் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக முதல் படத்தில் நடிகும்போதெ இருவருக்கும் பல ரூபங்களில் எதிர்ப்புகள் கிளம்பின. படத்தைக் கைவிடப்போகிறார்கள், கதநாயகனை மாற்றப் போகிறார்கள் போன்ற தகவல்களால் இருவரும் பயந்து பயந்துதான் நடித்தர்கள்.
1946-ம் ஆண்டு தீபாவளியன்று ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்த ‘ஸ்ரீமுருகன்’ மற்றும் டி.ஆர்.ராமச்சந்திரன் கதாநாயகனாக நடித்த ‘வித்யாபதி’
ஆகிய இரு படங்களும் திரைக்கு வந்தன. அதுவரையில்
ஒரே நிறுவனம் தயாரித்த இரு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளிவந்ததே இல்லை. ஆகவே, இந்தியாவில்
அப்படிப்பட்ட சாதனையைச் செய்த முதல் நிறுவனம்
என்ற பெருமையை ஜுபிடர் பிக்சர்ஸ் பெற்றது. இரு படங்களும் படுதோல்வியடைந்தன.
ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தில் கதாசிரியராக மிகச் சிறப்பாகப் பணியாற்றிக் கொண்டிருந்த் ஏ.எஸ்.ஏ.சாமி. அவருக்கு ஒரு படத்தை இயக்குகின்ற வாய்ப்பை கொடுக்க முடிவெடுத்த ஜுபிடர் பிக்சர்ஸ் அதிபர்களான சோமுவும், மொகிதீனும் ஒரு நாள் ஏ.எஸ்.ஏ.சாமி அவர்களை அழைத்து அவரிடம் மனம் விட்டுப் பேசினார்கள்.
நஷ்டமைந்திருக்கும்
நிறுவனத்தைத் தூக்கி நிமிர்த்த வேண்டும் இது உங்களது முதல்படம். எம்து ஒப்பந்தத்தில் உள்ள நடிகர்களை வைத்து படத்தை இயக்க வேண்டும் என நிபந்தனை விதித்தார்கள்.
அதற்கு ஒப்புக்க்கொண்ட சாமி "ராஜ குமாரி" எனும் கதையை எழுதினார். திரைக்கதையைக்
கேட்ட ஜூபிடர்
சோமுவும் ,மொகிதீனும் தங்கள் முடிவை
அடியோடு மாற்றிக் கொண்டனர். ”கதை நன்றாக இருக்கிறது. ஆனால், இந்தக் கதையை நமது கம்பெனி நடிகர்களை வைத்து எடுத்தால் நிச்சயமாக எடுபடாது. அதனால் கதாநாயகனாக பி.யு.சின்னப்பா
அவர்களையும் கதாநாயகியாக டி.ஆர்.ராஜகுமாரியையும்
ஒப்பந்தம் செய்து விடுவோம்..” என்றார்கள். எம்.கே.தியாகராஜா பாகவதரும்,
பி.யு.சின்னப்பாவும் அந்தக்
கால கட்டத்தில் தமிழ்ப் பட உலகில் இருந்த
இரண்டு சூப்பர்
ஸ்டார்களாக வலம் வந்தனர். ஆனால், சாமியின் எண்ண ஓட்டம் வேறு மாதிரியாக இருந்தது.
“எனக்கு
பி.யு.சின்னப்பாவும், டி.ஆர்.ராஜகுமாரியும் வேண்டாம். உங்களது ‘ஸ்ரீமுருகன்’ படத்திலே சிவனாகவும், பார்வதியாகவும் நடித்த ராமச்சந்திரனையும் மாலதியையும் நீங்கள்
ஒப்பந்தம் செய்து தாருங்கள் போதும்..”
என்றார்.
அந்தக்
கதைக்காக பெரிய நடிகர்களை ஒப்பந்தம்
செய்ய தயாரிப்பாளர்கள் விரும்பிய போதும் சாமியின் மனதில் எம்.ஜி.ஆர் தான்
இருந்தார்.
ஏ.எஸ்.ஏ.சாமி அப்படி
சொன்னவுடன் சோமு
அவர்களுக்கும் மொகிதீன் அவர்களும் அவர் சொன்னதை அப்படியே ஒப்புக் கொள்ளவில்லை. “இது நீங்கள் டைரக்ட் செய்யப் போகும் முதல் படம். அதில் பி.யு.சின்னப்பாவும்,
டி.ஆர்.ராஜகுமாரியும் நடித்தார்கள் என்றால் வெற்றி நிச்சயம். செலவைப் பற்றி கவலைப்படாமல் நாங்களே பெரிய நடிகர்களை ஒப்பந்தம் செய்யலாம் என்று சொல்லும்போது நீங்கள் ஏன் வேண்டாம் என்று சொல்கிறீர்கள்..?” என்று ஏ.எஸ்.ஏ.சாமியிடம் கேட்டனர்.
“ராமச்சந்திரனையும், மாலதியையும் வைத்துக் கொண்டு இந்தப் படத்தை மிகப் பெரிய வெற்றிப் படமாக்க முடியும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அப்படி இருக்க எனக்கு எதற்கு மிகப் பெரிய நட்சத்திரங்கள்..?” என்று ஏ.எஸ்.ஏ.சாமி சொன்னவுடன் “உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை இருக்கும்போது அதில் குறுக்கிட நாங்கள் விரும்பவில்லை. உங்கள் விருப்பப்படியே படம் எடுங்கள்” என்று இயக்குனர் ஏ.எஸ்.ஏ.சாமிக்கு தயாரிப்பாளர்கள் இருவரும் பச்சைக் கொடி காட்டினார்கள்.
‘ராஜகுமாரி’
படத்துக்கு இசையமைக்கும் பொறுப்பை ஏற்றிருந்த எஸ்.எஸ்.சுப்பையா நாயுடு தனது மிக
நெருங்கிய நண்பரான எம்.ஜி.ஆருக்கு
அந்த இனிய செய்தியைச் சொன்னார். எம்.ஜி.ஆர் சந்தோஷப்படவில்லை ‘சாயா’
என்றொரு படத்தில்
கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டு, பல நாட்கள் நடித்த
பின்னர் அந்த படத்திலிருந்து நீக்கப்பட்ட காயத்தின் வடு அந்த அளவிற்கு அவர் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது. “ஏ.எஸ்.ஏ.சாமி உங்களது நெருங்கிய நண்பர்தானே. ஆகவே அவரிடமே ‘ராஜகுமாரி’ பட நாயகன் நீங்கள்தானா
என்பதைக் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்” என்றார் எஸ்.எம்.சுப்பையா நாயுடு.ஏ.எஸ்.ஏ.சாமியை, எம்.ஜி.ராமச்சந்திரன் சந்தித்தபோது
‘ராஜகுமாரி’ படத்தின் நாயகன் அவர்தான் என்பதை உறுதிப்படுத்தினார் அவர்.
‘ராஜகுமாரி’ படம்தான் கதாநாயகனாக எம்.ஜி.ஆருக்கு முதல் படம் என்பதால் எம்.ஜி.ஆருக்கு அந்தப் படத்தில் சம்பளம் இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய் என்று முடிவு செய்யப்பட்டது . அதே படத்தில் இன்னொரு முக்கியமான பாத்திரத்தில் நடித்த டி.எஸ்.பாலையாவுக்கு எம்.ஜி.ஆரின் சம்பளத்தைப் போல நான்கு மடங்கு சம்பளம் தரப்பட்டது.
பின்னாளில் எம்.ஜி.ஆர்.அவர்களோடு திரையுலகில் மிக நெருக்கமாக இருந்த பலர் இந்த ‘ராஜகுமாரி’ படத்தில் அவரோடு பணியாற்றினார்கள். எம்.ஜி.ஆர். நடித்து பதினாறு படங்களை இயக்கிய எம்.ஏ.திருமுகம் அந்தப் படத்தில் உதவி எடிட்டராக பணி புரிந்தார்.
எம்.ஜி.ஆரை வைத்து அதிகமான படங்களைத் தயாரித்த நிறுவனம் என்ற பெயரைப் பெற்ற தேவர் பிலிம்ஸ் அதிபரான சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் ‘ராஜகுமாரி’யில்தான் முதன்முதலாக எம்.ஜி.ஆரோடு நடித்தார். எம்.ஜி.ஆர் அவர்களின் பெரும்பாலான படங்களில் தவறாமல் இடம் பெற்ற இன்னொரு நடிகரான எம்.என்.நம்பியார் எம்.ஜி.ஆரோடு இணைந்து நடித்த முதல் படமும் இதே ‘ராஜகுமாரி’தான்.கலை உலகில் மட்டுமின்றி அரசியலிலும் எம்.ஜி.ஆர். அவர்களோடு இணைந்து பல ஆண்டுகள் பயணம் செய்த கலைஞர் மு.கருணாநிதி எம்.ஜி.ஆரோடு இணைந்து பணியாற்றிய முதல் படமாகவும் ‘ராஜகுமாரி’ அமைந்ததுகலைஞர் கருணாநிதி அந்தப் படத்திலே பணியாற்றக் காரணமாக அமைந்தவர் பிரபல பாடகரான சிதம்பரம்.எஸ்.ஜெயராமன். ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பதாக இருந்த ‘உதயணன்’ என்ற திரைப்படத்துக்கு இசையமையக்க இவர் ஒப்பந்தமானார்.அது தொடர்பாக அடிக்கடி ஜுபிடர் பிக்சர்சுக்கு வந்தபோது ஏ.எஸ்.ஏ.சாமி அவர்களோடு அவருக்கு நல்ல நட்பு ஏற்பட்டது.
“என்
மைத்துனரான மு.கருணாநிதி திராவிடர்
கழகத்தில் இருக்கிறார். இப்போது ‘குடியரசு’ பத்திரிகையிலே பணியாற்றிக் கொண்டிருக்கும் அவர் மிகச் சிறந்த எழுத்தாற்றால் கொண்டவர். சந்தர்ப்பம் வரும்போது அவரைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று ஒரு முறை தன்னிடம் சிதம்பரம் ஜெயராமன் கூறியதை
நினைவில் வைத்துக் கொண்டிருந்த ஏ.எஸ்.ஏ.சாமி, தனக்கு ‘ராஜகுமாரி’ படத்தை இயக்குகின்ற வாய்ப்பு கிடைத்ததும் தன்னுடன் இணைந்து வசனம் எழுத வரும்படி கலைஞர் கருணாநிதிக்கு அழைப்பு விடுத்தார்.
கோவைக்கு
சென்ற கலைஞர் கருணாநிதி, ஏ.எஸ்.ஏ.சாமியை சந்தித்தார். கலைஞர்
கருணாநிதிக்கு ஏற்கனவே பல நாடகங்களை
எழுதிய அனுபவம் இருந்ததால் ஏ.எஸ்.ஏ.சாமி சொன்ன
காட்சிகளுக்கு எல்லாம் உடனுக்குடன் அவர் வசனங்களை எழுதிக்
கொடுத்தார். வசனம் எழுதுவதில் அவருக்குள்ள ஆற்றலைப் பார்த்து அசந்து போன ஏ.எஸ்.ஏ.சாமி முழு திரைப்படத்திற்கும் அவரையே வசனம் எழுதச் சொன்னார்.
‘சதி
லீலாவதி’ படத்திலே எம் ஜி ஆருக்கு நிச்சயமாக
ஒரு வாய்ப்பு தந்தே ஆக வேண்டும் என்று
எம்.கே.ராதா அவர்கள்
போராடியதைப்போல ‘ராஜகுமாரி’ படத்திலே தனது நண்பரான சின்னப்பா தேவருக்கு ஒரு வாய்ப்பினைப்
பெற்றுத் தரப் போராடினார் எம்.ஜி.ஆர்.‘ராஜகுமாரி’
கதையின்படி ராணிக்கு
ஒரு மெய்க்காப்பாளன் இருந்தான். அந்த மெய்க்காப்பாளனிடம் சண்டையிட்டு கதாநாயகன் அவரை வெல்கின்ற காட்சியிலே எம்.ஜி.ஆரோடு நடிக்க மிகப்
பெரிய பயில்வான் ஒருவரை ஏற்பாடு செய்திருந்தார் தயாரிப்பாளரான சோமு. இறுதியில் எம்.ஜி.ஆரின் பிடிவாதம்
வென்றது.
‘ராஜகுமாரி’
படத்தின் தயாரிப்பாளர்களான
சோமுவுக்கும், மொகிதீனுக்கும் படத்தை
எடுத்த வரையில் திரையிட்டுக் காட்டினார் இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமி. படம்
மிகச் சிறப்பாக அமைந்திருப்பதாக அவர் எண்ணினார். ஆகவே படத்தைப் பார்த்துவிட்டு முதலாளிகள் இருவரும் தன்னை நிச்சயம் பாராட்டுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் தியேட்டருக்கு வெளியே காத்துக் கொண்டிருந்தார் அவர். ஆனால்
அவரது எதிர்பார்ப்பிற்கு முற்றிலும் மாறாக படத்தின் முதலாளிகள் இருவரும் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு தியேட்டரை விட்டு வெளியே வந்தனர். அவர்கள் இருவருக்குமே படம் பிடிக்கவில்லை.
“முந்தைய
இரு படங்களும் தோல்வியடைந்துள்ள நிலையில் இன்னொரு தோல்விப் படம் கொடுக்க வேண்டுமா என்று ஒரு முறைக்கு இரு முறை யோசித்துக் கொள்ளுங்கள்” என்று தன்னுடைய பங்குதாரரான சோமுவிடம் கூறினார் மொகிதீன். அவர் அப்படிக் கூறியவுடன் சோமு மிகப் பெரிய குழப்பத்துக்கு ஆளானார்.
இன்னொரு
தோல்விப் படத்தை தங்களது நிறுவனம் தாங்காது என்று அவருக்கும் நன்றாகத் தெரிந்திருந்தது. ஆனால் அதே சமயம் ‘ராஜகுமாரி’ படம் நிறுத்தப்பட்டால் முதன் முதலாக அந்தப் படத்திலே இயக்குநராக அறிமுகமாகும் ஏ.எஸ்.ஏ.சாமி, அந்தப்
படத்தில் கதானாயகனாக நடித்து வரும் ராமச்சந்திரன் ஆகிய இருவரின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி விடுமே என்று யோசனை செய்த அவர், அவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு வித்தியாசமான ஒரு முடிவை எடுத்தார்.
“எப்படியும்
பாதி படத்துக்கும் மேலாக எடுத்துவிட்டோம். மீதமுள்ள நான்காயிரம் அடி படத்தையும் எடுத்துவிட்டுப் போட்டுப் பார்ப்போம். அதற்குப் பிறகும் படம் பிடிக்கவில்லை என்றால் யார் கண்ணிலும் காட்டாமல் படத்தை தூக்கிப் போட்டு விடலாம்’ என்பதுதான் மொகிதீனிடம்
அவர் சொன்ன
முடிவு.
எம்.ஜி.ஆர்., ஏ.எஸ்.ஏ.சாமி ஆகிய
இருவரின் எதிர்காலத்தை மனதில் கொண்டு மொகதீன் அவர்களும் சோமுவின் முடிவை ஏற்றுக் கொள்ள ‘ராஜகுமாரி’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்தது.
பலபோராட்டங்களை சந்தித்துவிட்டு திரைக்கு வந்த ‘ராஜகுமாரி’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைக் குவித்தது.அந்தப் படம்தான் தமிழ்த் திரைப்படக் கதாநாயகர்களின் பட்டியலில் ஒரு நிரந்தரமான இடத்தை எம்ஜிஆருக்கு பெற்றுத் தந்தது.
No comments:
Post a Comment