Saturday, September 17, 2022

மாணவர்களின் மனதில் இடம்பிடித்த ஸ்டாலின்

தமிழக அரசியல்தலைவர்கள் ஒரு வட்டத்தைப் போட்டு அதற்குள்ளேயே  சுற்றிச் சுற்றி வருகிறார்கள். முதலமைச்சர் ஸ்டாலின் ஒருபடி மேலே  போய் படசாலை மாணவர்களுடன் சகஜமாக காலை சிற்றுண்டி சாப்பிட்டு சகலரின் பார்வையையும் தன் பக்கம் திருப்பியுள்ளார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள்  ஒற்றைத் தலைமைக்கான  போட்டி இன்னமும்  உயிர்ப்புடன்  இருக்கிறது. கழக அங்கத்தவர்களும், நிர்வாகிகளும் தன் பக்கம் இருப்பதால் எடப்பாடி குஷியாக  இருக்கிறார். சட்டப் போராட்டத்தின் மூலம் கட்சியைக் கைப்பற்ற முயற்சித்த . பன்னீர்ச்செல்வத்துக்கு தோல்வியே மிஞ்சியது. ஆனாலும், அவரது சட்டப் போராட்டம்  தொடரும் எனத் தெரிகிறது. எடப்பாடியும், பன்னிரும்  முறுகும் போதெல்லாம்  ஓடிப்போய் ஒற்றுமையாக்கும் பாரதீய ஜனதாக் கட்சி  கையைக் கட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்  தலைவர்கள்  ஒன்றுபட்டால் தமிழகத்தில்  தாமரை மலராது என்பதால்  பாரதீய ஜனதா வேடிக்கை பார்க்கிறது. எடப்பாடியும்  அவரது சகாக்களும் செய்த ஊழல்களை பன்னீரும் மற்றையவர்களும் பட்டியலிடுகின்றனர். பன்னீரும் அவருடன்  இருப்பவர்களும் செய்த ஊழல்களை எடப்பாடி தரப்பு புட்டுப் புட்டு வைக்கிறது.   அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான கட்சிகள் செய்ய வேண்டியதை  ஒரேகட்சியைச் சேர்ந்தவர்கள் பகிரங்கப்படுத்துகிறார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்ப்பதையே தனது முழுநேர காரியமாக  நினைக்கிறார் தமிழக பரதீய ஜனதாக் கட்சித்  தலைவர் அண்ணாமலை. அவர் தெரிவிக்கும்  குற்றச் சாட்டுக்களில் அனேகமானவை  புஷ்வாணமாகி விடுகின்றன.

தமிழக அரசின் மீது எதிர்க்கட்சிகள் குற்ரம் சாட்டுகின்றன. கூட்டனிக் கட்சிகள் விமர்சனம் செய்கின்றன. அனைத்திஅயும் மெளனமாகக் கடந்த ஸ்டாலின், "காலை சிற்றுண்டி திட்டம்" என அரிவித்து அதனை  நிஜமாக்கி உள்ளார். காமராஜர், எம்.ஜி.ஆர் வழியில் ஸ்டாலினின்  பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது.முதல்வர் ஸ்டாலின் மாணவனுக்கு, காலை சிற்றுண்டியை ஊட்டிவிட்ட புகைப்படம்  ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. தமிழக முதல்வராக காமராஜர் இருந்தபோது, கிராமங்களிலும் பள்ளிகள் தொடங்கப்பட்டு, பள்ளி நாட்களில் மாணவர்களுக்கு மதிய உணவு கொடுக்கும் திட்டத்தை முன்னெடுத்து மாணவர்கள்  மத்தியில் புரட்சியை ஏற்படுத்தினார்.பாடசாலை  நாட்களை தவிர மற்ற நாட்களில் மதிய உணவு வழங்கப்படாததை அறிந்த எம்ஜிஆர், அனைத்து நாட்களிலும் மாணவர்களுக்கு உடனடியாக மதிய உணவு வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

1982ம் ஆண்டு "சத்துணவு" என்ற திட்டத்தை எம்.ஜி.ஆர் ஆரம்பித்தார். இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கும் முன்னோடி திட்டமாக இன்றும் திகழ்கிறது. பசி தீர்க்கும் சாதாரண உணவாக இல்லாமல் ஊட்டச்சத்துடன் ஏழை மாணவர்கள் இருக்க இந்த சத்துணவு திட்டத்தில் முட்டைகளை வழங்க முடிவு செய்தார் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. 1989 ல் 2 வாரத்துக்கு ஒரு முட்டை என்ற திட்டத்தை கொண்டு வந்த கருணாநிதி, 1998 ஆம் ஆண்டு வாரம் ஒரு முட்டை, 2006 ஆம் ஆண்டு வாரம் 2 முட்டை, 2007 ஆம் ஆண்டு வாரம் 3 முட்டை என அதிகரித்து 2008 ஆம் ஆண்டு மாணவர்கள் பள்ளிக்கு வரும் 5 நாட்களும் முட்டை வழங்க உத்தரவிட்டார். முட்டை சாப்பிட விரும்பாத மாணவர்களுக்கு வாழைப்பழம் வழங்கினார்எம்.ஜி.ஆர் வழையைப் பின்பற்ரி ஜெயலலிதவும் மாணவர்கள் மீது அக்கறை கொண்டார். அவரது அரசியல் வாழ்க்கைக்கு அப்போது பிள்ளையார் சுழி போடப்பட்டது. 2014ம் ஆண்டு சூடான "கலவை சாதமாக" பட்டை தீட்டப்பட்டு அடுத்தக்கட்டத்துக்கு இட்டுச்சென்றதும் இந்த திட்டம்தான்.

சத்துணவு திட்டத்தின் மூலம், ஆண்டுதோறும் 50 லட்சம் குழந்தைகள் பயனடைகிறார்கள் என்று ஒரு ஆய்வு சொல்கிறது... மதிய உணவு,சத்துணவு, கலவை சாதம், முட்டை, வாழைப்பழம், என்று ஒவ்வொரு கட்டமாக உருமாறி, இன்று "காலை சிற்றுண்டி திட்டம்" வரை இதன் வளர்ச்சி விரிவடைந்துள்ளது

அரசு பள்ளிகளில் 5ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம் தொடர்பான ஹேஷ்டேக் டிவிட்டரில் தேசிய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது.

தமிழகத்தில் முதல் கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை  முன்னாள் முதலமைச்சர் மறைந்த அண்ணாவின் பிறந்தநாளான 15 அம் திகதி  தமிழக முதலமைச்சர் மு..ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மாநகராட்சி, நகராட்சி, ஊரக மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1,14, 095 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முதற்கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்தை ரூ.33.56 கோடி செலவில் செயல்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.மதுரை நெல்பேட்டை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து  சிற்றுண்டியை உண்டார்.

முக்கியமான நிகழ்வுகள் தொடர்பான ஹேஷ்டேக்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆவது வழக்கம். அந்த வகையில் தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டம் தொடர்பான #TNBreakfastஎன்னும் ஹேஷ்டேக் தமிழகம் மட்டுமல்லாது தேசிய அளவிலும் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

பின்வரும் பல்வேறு விதமான சிற்றுண்டி வகைகளில் ஏதேனும் ஒன்றை குறிப்பிட்டுள்ள நாட்களில் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது. அதன்படி,

திங்கட்கிழமை - உப்புமா வகை ,ரவா உப்புமா + காய்கறி சாம்பார், சேமியா உப்புமா + காய்கறி சாம்பார், அரிசு உப்புமா + காய்கறி சாம்பார், கோதுமைரவா உப்புமா + காய்கறி சாம்பார்

செவ்வாய்கிழமை - கிச்சடி வகை, ரவா காய்கறி கிச்சடி ,சேமியா காய்கறி கிச்சடி , சோள காய்கறி கிச்சடி ,கோதுமை ரவாகாய்கறி கிச்சடி

புதன்கிழமை - பொங்கல் வகை ,ரவா பொங்கல் + காய்கறி சாம்பார் ,வெண்பொங்கல் + காய்கறி சாம்பார் ,வியாழக்கிழமை - உப்புமா வகை ,சேமியா உப்புமா + காய்கறி சாம்பார் ,அரிசி+ உப்புமா + காய்கறி சாம்பார் , ரவா உப்புமா + காய்கறி சாம்பார், கோதுமை ரவா உப்புமா + காய்கறி சாம்பார்

வெள்ளிக்கிழமை - கிச்சடியுடன் இனிப்பு ,எதாவது ஒரு கிச்சடி வகையுடன் (செவ்வாய்கிழமை உணவு வகையின்படி) ,ரவா கேசரி,சேமியா கேசரி

மேலும் வாரத்தில் 2 நாட்களாவது உள்ளூரில் கிடைக்கக் கூடிய சிறு தானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவை வழங்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதுஉணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களின் தரம் Fஸ்ஸாஈ நெறிமுறைகளுக்கு உகந்தவாறு இருக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை கண்டிப்பாக மீண்டும் பயன்படுத்தக் கூடாது போன்ற அறிவுரைகளையும் அரசு வழங்கியுள்ளது.

  இந்தியாவுக்கே முன்மாதிரியான சத்துணவுத்திட்டம் தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டு 100 வருடங்கள் கடந்து விட்டது. சென்னை மாநகராட்சியின் தலைவர் சேர் பிட்டி தியாகராயர் மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். மேலும் உலகின் முதல் மதிய உணவு செப்டம்பர் 16, 1920 அன்று சென்னையில் வழங்கப்பட்டது.இந்த நடவடிக்கையின் காரணத்தை விளக்கி, அப்போதைய சென்னை மாநகராட்சித் தலைவரும், நீதிக்கட்சியின் நிறுவனர்களில் ஒருவருமான சர் பிட்டி தியாகராயர், பள்ளியில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களின் வலிமையை 'பெரிய அளவில்' பாதித்தது என்றார். அப்போது பள்ளியில் 165 மாணவர்கள் மட்டுமே இருந்தனர். இத்திட்டத்தில் மேலும் நான்கு பள்ளிகள் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, ஐந்து பள்ளிகளின் மொத்த மாணவர் சேர்க்கை 19223ல் 811 ஆக இருந்தது 19245ல் 1,671 ஆக உயர்ந்தது.

மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு மாணவருக்கு ஒரு அணாவுக்கு மிகாமல் உணவு வழங்க அனுமதி கேட்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசாங்கம் தொடக்கக் கல்வி நிதியிலிருந்து செலவினங்களை அனுமதிக்கவில்லை, இதன் மூலம் ஏப்ரல் 1, 1925-இல் திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 25 பள்ளிகளில் 1,000 ஏழை மாணவர்களுடன் இது புத்துயிர் பெற்றது. எழுத்தாளர் ஆர். கண்ணன், ‘அண்ணா: தி லைஃப் அண்ட் டைம்ஸ் ஆஃப் சி.என். அண்ணாதுரைஎன்ற புத்தகத்தில், சேர் பிட்டி தியாகராயரைமதிய உணவு திட்டத்தின் தந்தைஎன்று அழைத்தார்.

சுதந்திரத்திற்குப் பின் 1957ல் அப்போதைய தமிழக முதல்வர்  கே.காமராஜர் , மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் ஆண்டுக்கு 200 நாட்கள் மதிய உணவு திட்டத்தை  அறிமுகப்படுத்தினார். 1982-ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன், தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சத்தான உணவை உறுதி செய்யும் திட்டத்தை அறிவித்தார். இன்று ஸ்டாலின் காலை சிற்றுண்டையை அறிமுகப்படுத்தி உள்ளார்.

 

No comments: