Wednesday, September 7, 2022

கடைசி ஓவரில் தோற்றது இந்தியா இறுதி போட்டிக்கு முன்னேறியது இலங்கை


 

துபாயில் பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 ஆசிய கிண்ண  நடப்பு சாம்பியனான  இந்தியா லீக் சுற்றில் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றாலும் சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில்  பாகிஸ்தானிடம் போராடி தோல்வியடைந்தது. அதனால் இலங்கைக்கு எதிரன போட்டி மிக்  முக்கியமானதாக  இருந்தது.பங்களாதேஷுடனான  முதல் போட்டியில் வென்ற இலங்கைகும் இது  சவாலான  போட்டியாக இருந்தது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற  இலங்கை துடுப்பாடத்தைத்  தேர்வு செய்தது. முதலில் துடுப்படுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில் எட்டு விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்கள் எடுத்தது. இலங்கை19.5  ஓவர்கலில்  நான்கு விக்கெற்களை இழந்து 174 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெற்களால் வெற்றி பெற்றது.

 இந்தியாவுக்கு தொடக்க வீரர் கேஎல் ராகுல் 6 (7) ஓட்டங்களில் ல் அவுட்டாகி ஏமாற்ற அடுத்த ஓவரிலேயே விராட் கோலி டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

13/2 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற இந்தியாவுக்கு அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவுடன் ஜோடி சேர்ந்கப்டன் ரோகித் சர்மா இலங்கை வீரர்களை சரவெடியாக எதிர்கொண்டார். 3வது ஓவரில் ஜோடி சேர்ந்து 13 ஓவர்கள் வரை சிறப்பாக செயல்பட்டு 97 ஓட்டங்கள் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி இந்தியாவை காப்பாற்றி வலுப்படுத்தியது. கப்டன் ரோகித் சர்மா 5 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 72 (41) ஓட்டங்களை 175.61 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் தெறிக்கவிட்டு ஆட்டமிழந்தார்.

அடுத்து களம்  இறங்கிய இந்திய வீரர்கள் அனைவரும்   மளமளவென விக்கெற்றைப் பறிகொடுத்தனர். சூரியகுமார் யாதவ் 34 (29) ஓட்டங்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா 17 (13), ரிஷப் பண்ட் 17 (13), தீபக் ஹூடா 3 (4) என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ஓட்டங்கலில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.  அதிர்ச்சியும் ஏமாற்றமும் அளித்தனர். கடைசியில் 1 சிக்சருடன் 15* (7) ஓட்டங்கள் எடுத்து அஷ்வின் ஓரளவு காப்பாற்றினார்.இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி 173/8 ஓட்டங்கள் சேர்த்தது. இலங்கை சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக மதுசனாகா 3 விக்கெட்டுகள் எடுத்தார்

174 ஓட்ட  இலக்கைத்  துரத்திய இலங்கைக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கி 12 ஓவர்கள் வரை சிம்ம சொப்பனமாக இந்திய  வீரர்களைப்  புரட்டியெடுத்து 97 ஓட்டங்கள் அடித்து  அற்புதமான தொடக்கத்தை கொடுத்தனர்.  நிசாங்கா 4 பவுண்டரி 2 சிக்சருடன் 52 (37) ஓட்டங்களில் சஹாலிடம் ஆட்டமிழக்க அதே ஓவரில் அடுத்து களமிறங்கிய அசலங்கா டக் அவுட்டானார். அடுத்த சில ஓவர்களில் அடுத்து களமிறங்கிய குணதிலகா 1 (7)  ஆட்டமிழக்க  மறுபுறம் இந்தியாவுக்கு சவால் கொடுத்த மற்றொரு தொடக்க வீரர் குசால் மெண்டிஸ் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 57 (37) ஓட்டங்கலில் ஆட்டமிழந்தார். இந்திய ரசிகர்கள் ஆறுதல் பெருமூச்சு விட்டனர். ஆனால்,  இலங்கை வீரர்கள் சவாலை சமாலித்தனர்.

வெற்றியை நெருங்கிய இலங்கைக்கு கடைசி 5 ஓவரில் 54 ஓட்டங்கள் தேவைப்பட்ட போது கப்டன் சனாகா , ராஜபக்சா ஆகியோர் அதிரடியாக ஓட்டங்களை சேர்த்தனர். 16, 17, 18 ஆகிய ஓவர்களில் சிறப்பாக செயல்பட்ட அவர்கள் ஓவருக்கு 10  ஓட்டங்களை எடுத்து ரன் ரேட்டை கட்டுக்குள் கொண்டு வந்ததால் இந்தியாவின் மீது தொடர்ந்து அழுத்தம் இருந்தது. அதனால் கடைசி 2 ஓவரில் வெற்றிக்கு 21 ஓட்டங்கள் தேவைப்பட்ட போது அதை வீசிய புவனேஸ்வர் குமார் மீண்டும் 14 ஓட்டங்களை வாரி வழங்கியதால் கடைசி ஓவரில் 6 ஓட்டங்களை கட்டுப்படுத்த வேண்டிய பரிதாப நிலைமை இளம் வீர  அர்ஷிதீப் சிங்கின் பந்து வீச்சில் 1, 1, 2, 1 என முடிந்தளவுக்கு போராடிய அவர் 5வது பந்தை வீசினார்.

 5வது பந்தை எதிர்கொண்ட சனாக்கா அதை அடிக்காமல் தவறவிட்டு அவசர அவசரமாக   ஓடினார். அப்போது அந்த பந்தை கச்சிதமாக பிடித்த விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஓடிவந்து அடிக்காமல் நின்ற இடத்திலிருந்தே ஸ்டம்பை நோக்கி எரிந்த குறி தப்பியதால் 2 ஓட்டங்கள் எடுத்த இலங்கை சிறப்பான வெற்றி பெற்றது. ஒருவேளை ரிஷப் பண்ட்எறிந்த பந்து விக்கெற்ரில் பட்டிருந்தால் அது ரன் அவுட்டாக மாறி இந்தியா வெல்வதற்கோ அல்லது சூப்பர் ஓவர் வந்து மேற்கொண்டு வெற்றிக்கு போராடுவதற்கோ வாய்ப்பு கிடைத்திருக்கும்.

ஆனால் துடுப்பாட்டத்திலு,  விக்கெட் கீப்பிங்கிலும் சொதப்பிய அவரது செயல்பாட்டை பார்த்த முன்னாள் வீரர் ஹேமங் பதானி மற்றும் ரசிகர்கள் முன்னாள் ஜாம்பவான் விக்கெட் கீப்பர் எம்எஸ் தோனியை ரொம்பவும் மிஸ் செய்வதாக சமூக வலைதளங்களில் வெளிப்படையாகவே ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

No comments: