இலங்கையில் உருவான பொருளாதார பிரச்சனை காரணமாக பல இடர்பாடுகளை மக்கள் அனுபவிக்கின்றனர். கிணறு வெட்ட பூதம் புறப்பட்டதுபோல ஒவ்வொரு பிரச்சனையாகத் தீர்வு காண முயற்சி செய்யும்[போது இன்னொரு பிரச்சனை உருவாகி விடும். பழைய பிரச்சனையைத் தீர்ப்பதா அல்லது புதியதை சரிப்படுத்துவதா என பட்டிமன்றம் நடைபெறும் இடை வெளியில் இன்னொரு பிரச்சனை பூதாகரமாகக் கிளம்பிவிடும்.
உணவுப்
பற்றாக்குறை சிறுவர்களையும் மாணவர்களையும் பாதிக்கத்
தொடங்கியுள்ளது. இதனால் அடுத்த தலைமுறைக்கு
ஊட்டச்சத்து உரிய முறையில் கிடைக்கவில்லை.
பொருளாதார நெருக்கடி காரணமாக உணவுப் பொருட்களின்
விலை எகிறிவிட்டது. ஊட்டச்
சத்துள்ள உணவை வாங்குவதற்குரிய பொருளாதார
நிலை பலரிடம் இல்லை.
நாட்டில்
ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, சாதாரண நாட்களில் பிள்கைகளுக்கு வீட்டில் வழங்கி வந்த உணவுகளை
தற்போது கொடுக்க
முடியாத நிலையில் பல பெற்றோர்
உள்ளனர். உணவுப் பொருட்களின் விலை
ஏற்றத்தால் பால்மா குடிப்பவர்களின்
தொகை குறைவடைந்துள்ளது. மீன்
,முட்டை போன்ற இலகுவாகப் பெறக்கூடிய
போஷாக்கு உணவுகளைக் கூட
வாங்குவதற்கு வக்கில்லாத நிலையில் பலர் உள்ளனர்.
ஊட்டச்சத்து
இன்மை காரணமாக குழந்தைகள் தேகாரோக்கியம்
பாதிக்கப்படுகிறது. அவர்கள்
மெலிந்து போகும் தன்மை சடுதியாக
கடுமையாகும். இது ஒரு குழந்தையின்
மரணத்துக்குக் கூட வழிவகுக்கும். சிறுவர்
மந்த போஷாக்கில் உலகளவில் இலங்கை 6ஆவது இடத்தில்
உள்ளதாக யுனிசெப் அறிவித்திருக்கிறது. தெற்காசியாவில் கடுமையான போஷாக்கின்மையை எதிர்கொள்ளும் நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில்
இருப்பதாகவும் யுனிசெப் குறிப்பிட்டிருக்கிறது. உணவுப் பொருட்களுக்கான விலைகள்
கடுமையாக அதிகரித்திருப்பது - மந்த போஷாக்கு ஏற்படுவதற்கான
முக்கிய காரணம்' எனவும் யுனிசெப்
சுட்டிக்காட்டியிருக்கிறது.
பொருளாதார
நெருக்கடியில் முன்பள்ளிக் கட்டணத்தைச் செலுத்த முடியாத காரணத்தினால்
முன்பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கையில் கணிசமான அளவு குறைவடைந்துள்ளதாக
இலங்கை முன்பள்ளி ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
பல பெற்றோர்கள் தங்கள் வருமான ஆதாரங்களை
இழந்து, வருமானம் குறைந்துள்ளதால், பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் முன்பள்ளிக்
கட்டணத்தைச் செலுத்துவதில் சிரமப்படுகின்றனர். நகர்புறங்களை விட கிராமப்புறங்களில் இந்நிலைமை
அதிகமாக காணப்படுகின்றது.
கடந்த
சில மாதங்களாக முன்பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை
குறைந்துள்ளது. உதாரணமாக, முன்பள்ளியில் 20 குழந்தைகள் கல்வி கற்ற பாலர்
பள்ளியில் தற்போது 15 மாணவர்கள் உள்ளனர். மேலும், பாலர் பள்ளிகளில்
இரண்டு முதல் மூன்று மாதங்கள்
வரை படிக்கும் சில குழந்தைகள், கட்டணம்
செலுத்த முடியாததால், படிப்பை நிறுத்துகின்றனர்.
கட்டணம்
செலுத்தாத மாணவர்களிடம் முன்பள்ளி ஆசிரியர்கள் உரிய கட்டணத்தை கோரவில்லை
என்றாலும், ஆசிரியர்களை எதிர்கொள்ளும் தயக்கத்தால் மாணவர்கள் முன்பள்ளிக்கு வருவதில்லை என செய்திகள் வெளியாகி
வருவதாக ஸ்ரீநாத் தெரிவித்தார். இந்நிலை தொடரும் பட்சத்தில்
கல்வித்துறையில் சிக்கல் நிலை உருவாகும்
என்றார்.
“நாட்டின்
பொருளாதார நெருக்கடியால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், மாநில பெண்கள் மற்றும்
குழந்தைகள் விவகார அமைச்சகம் மற்றும்
கல்வி அமைச்சகம் போன்ற தொடர்புடைய நிறுவனங்கள்
தங்கள் குழந்தைகளை பாலர் பள்ளிகளுக்கு அனுப்ப
பெற்றோரை ஊக்குவிக்க முடியும். எதிர்வரும் நாட்களில் பெண்கள் மற்றும் சிறுவர்
விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்கவுடன் இது
தொடர்பில் கலந்துரையாடவுள்ளோம் என ஸ்ரீநாத் மேலும்
தெரிவித்தார்.
இதேவேளை,
பல குடும்பங்கள் எதிர்நோக்கும் கடுமையான பொருளாதாரச் சிரமங்களாலும், பாடசாலைகள் முறையான முறையில் பாடங்களை
நடத்தாததாலும், சில சிரேஷ்ட தர
மாணவர்கள் கல்வியை இடைநிறுத்தும் போக்கு
காணப்படுவதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது. வேலைவாய்ப்பு. கல்விப் பொதுச் சான்றிதழ்
உயர்தர (உ/த) பரீட்சைக்குத்
தோற்றவிருக்கும் மாணவர்களிடையே இது பெரும்பாலும் காணப்படுகிறது.
குறிப்பிட்ட சில மாணவர்கள் வேலைக்குச்
செல்வதற்கு முக்கியக் காரணம் அவர்களது பெற்றோர்
சொந்த வேலைகளை இழந்துவிட்டதால், அவர்களது
வீட்டுச் செலவுகளைத் தாங்க முடியாமல் தவிப்பதாகக்
கூறப்படுகிறது.
சூரியவெவ
கிராமத்தில் 80% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக கணக்கெடுப்பு ஒன்றில்
தெரியவந்துள்ளது என மருத்துவ மற்றும்
சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் நிபுணத்துவ மன்றத்தின் தலைவர் டாக்டர் சமல்
சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
சூரியவெவ,
வல்சபுகல பகுதியில் தாங்கள் ஆய்வு ஒன்றை
மேற்கொண்டதாகவும், அப்பகுதியில் கணிசமான மக்கள் தொகை
இருப்பதாகவும் டாக்டர் சஞ்சீவ மேலும்
தெரிவித்தார். குறிப்பிட்ட கிராமமானது அம்பாந்தோட்டை மாவட்டத்தின் நல்ல பிரதிநிதித்துவம் கொண்டதாக
இருந்தமையால், அனைத்து மாவட்டங்களிலும் இதேபோன்றதொரு
நிலைமையே நிலவுவதாக ஊகிக்க முடியும் என்றார்.
“கடந்த ஆறு மாதங்களில் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே வேலை இருப்பதாக பெற்றோர்கள் கூறுகின்றனர். அவர்களால் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை. அவர்கள் கட்டணம் செலுத்தியவுடன், அவர்கள் அரிசி, தேங்காய் மற்றும் மிக அடிப்படையான உணவுப் பொருட்களை மட்டுமே வாங்க முடியும். அவர்களால் முட்டை, இறைச்சி, மீன் ஆகியவற்றை வாங்க முடியாது,'' என்றார்.
டாக்டர்
சஞ்சீவா சுகாதார
பதிவுகளை ஆய்வு செய்ததாகவும், 30% குழந்தைகள்
ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருப்பதைக் கண்டறிந்ததாகவும் கூறினார். மேலும் 50% பேர் ஊட்டச்சத்து குறைபாடுடையவர்கள்.
"விஷயங்கள் இப்படியே
நடந்தால், மற்ற 20%, ஊட்டச்சத்து குறைபாடுடையவர்களாக மாறுவார்கள். பெரும்பாலான குடும்பங்களில் தலா மூன்று குழந்தைகள்
உள்ளனர் மற்றும் அவர்கள் அனைவரும்
ஊட்டச்சத்து குறைபாடு அல்லது ஊட்டச்சத்து குறைபாடு
உள்ளவர்கள். குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்த சுகாதார மையங்கள் ஒரு
திட்டத்தைத் தொடங்கியுள்ளன, ஆனால் பெரும்பாலான மக்கள்
அந்த இடத்திற்குச் செல்ல முடியாது. சுகாதார
அதிகாரிகள் மக்களிடம் செல்ல வேண்டிய நேரம்
இது. ஹம்பாந்தோட்டையில் உள்ள பெரும்பாலான பாடசாலைகளில்
அதிகளவான மாணவர்கள் மயங்கி விழுந்ததால் காலை
சபை கூட்டத்தை நிறுத்தியுள்ளனர்.
ஊட்டச்சத்து
குறைபாடு காரணமாக மாணவர்கள் பாதிக்கப்படுவது
உண்மைதான். ஆனால், வெளியாகும் செய்திகள்
சிலவற்ரில் உண்மைத்தன்மை இல்லை என ஜானாதிபதியின்
ஊடக அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.
வறுமை
காரணமாக மாணவர் ஒருவர் மதிய
உணவிற்காக தேங்காய் துருவலை உட்கொண்டதாக தெரிவிக்கப்பட்ட
சம்பவம் ஆதாரமற்றது என ஜனாதிபதி ஊடகப்
பிரிவு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும்,
அத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்ளும் எந்தவொரு குழந்தை/குடும்பத்திற்கும் உதவுவதற்காக
ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் விசேட வேலைத்திட்டம்
ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உதவிக்கு 0114354647 என்ற ஹாட்லைனை அழைக்கவும்.
பாடசாலை
மாணவர்கள் சரியான உணவு கிடைக்காமல்
பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்குவதாகவும், அவர்களுக்கு சத்துள்ள உணவுகளை வழங்க முடியாமல்
அரசாங்கம் திணறுவதாகவும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள்
குற்றம் சுமத்தியதால் பாராளுமன்றத்தில்
கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சிறுவர்களுக்கும் ,கர்ப்பிணிகளுக்கும் உரிய முறையில் ஊட்டச்சத்துள்ள உணவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment