Thursday, September 1, 2022

சுப்பர் 4 க்கு தகுதி பெற்றது ஆப்கான்

 

 

  ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் ஆசியக் கிண்ணப் போட்டியில் பங்களாதேஷை எதிர்த்து விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

 நாணயச் சுழற்சியில்  வெற்ரி பெற்ற   ஷாகிப் அல் ஹசான் தலைமையிலான பங்களதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

 6 ஓவர்களில்   4 விக்கெட்டுகள் இழந்து 28 ஒட்டங்கள் எடுத்து   மோசமான தொடக்கத்தைக் கொடுத்தது. மொகமதுல்லா[25], குசெய்ன் [48] ஆகியோரின் அபாரமான துடுப்பாட்டத்தால்  பங்களதேஷ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 127 ஓட்டங்கள் எடுத்தது.  ஆஃப்கானிஸ்தான் அணியில் ரஹ்மான் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

128 எனும் வெற்றி இலகுடன் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் ஆரம்பத்தில் தடுமாரியது.   சாசி 23 ஓட்டங்களும், சார்டன் 42 ஓட்டங்களும்,  நாஜிபுல்லா 42 ஓட்டங்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு கை கொடுத்தனர். 

No comments: