பொருளாதார
நெருக்கடியால் இலங்கை தள்ளாடும் வேளையில் உதவி செய்வதற்கு சர்வதேச நாணய நிதியம் ஒப்புதலளித்துள்ளது. ஜனாதிபதி ரணிலுக்கு இது ஆறுதலான செய்தி. டொலர் வரப்போகிறது என மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட முடியாது. வரவு செலவுத்திட்டம் அதிக செலவை பட்டியலிட்டுள்ளது. வட்வரி,எரிவாயு,எரிபொருள் ஆகியவற்றின் விலை உயர்வு. அரச ஊழியர்கள் 60 வயதுடன் ஓய்வுபெற வேண்டும் போன்ற முன்மொழிவுகள் விவாதப்பொருளாகியுள்ளன. இடைக்கால வரவு செலவுத்
திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதும் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது. கோட்டா ஜனாதிபதியாக இருந்தபோது சர்வதேச நாணய நிதியத்துக்குச் செல்வதற்கு
அரசாங்கம் விரும்பவில்லை.
கேட்கும் போதெல்லாம் கடன்கொடுத்த சீனா முரண்டு பிடிக்கிறது. சர்வதேச நானய நிதியத்தின் உதவியை நாடுவதுதான் இலங்கைக்கு உள்ள ஒரே ஒரு பாதை.
இதனை எதிர்க் கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்யப்போகின்றன. இவற்றுக்குல்லாம் முன்னைய அரசாங்கம்தான் காரணம் என்பது உலகறிந்த உண்மை. முன்னைய அரசாங்கம் தோண்டிய குழுயில் இன்றைய ஜனாதிபதி குப்புற விழுந்துள்ளார்.
ஆனாலும் பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை உடனடியாக வெளிவந்து விட முடியாது.ஜனாதிபதி
ரணில் விக்கிரமசிங்க மந்திரவாதியல்ல அவர் அரை
நூற்றாண்டு அனுபவம் உள்ள அரசியல்வாதி.சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்புதல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கிடைத்த முதல் வெற்றி.
மிகுதியாக உள்ள காலத்தை எப்படி சமாளிப்பது
என்பது ரணிலுக்கு மிக நன்றாகத் தெரியும்.பனங்காட்டுநரி இந்த சலசலப்புக்கெல்லாம்
அஞ்சாது.
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பேச்சு வார்த்தையை ஆரம்பித்தபோது நாடு சுமுகமாக இருக்கவில்லை.
பொருளாதாரச் சரிவு, நிதி நெருக்கடி , மக்கள் போராட்டம்
, அரசியல்வாதிகளின் மறைமுக எதிர்ப்பு போன்றவற்றுக்கு மத்தியில் தனது ஆளுமையை நிலை நிறுத வேண்டிய கட்டாயம் ஜனாதிபதிக்கு ஏற்பட்டது. சர்வதேச நானய நிதியத்தின் நம்பிக்கையைப் பெறுவதற்காக
அரசாங்கம் சில அதிரடி முடிவுகளை எடுத்தது. அரசாங்கத்தின் வருமானத்தை உயர்த்துவதற்காக
வரிகள் உயர்த்தப்பட்டன. முதலிடுகளை ஈர்க்கும்
திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
மிக
நீண்ட நாட்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பலனாக இலங்கைக்கு கடன் வழங்க சர்வதேச நானய
நிதியம் ஒப்புதலளித்தது.
இலங்கை அரசுடன் நீண்ட காலமாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின்
அடிப்படையில் 2.9 பில்லியன் டொலர் மதிப்பிலான பெயில்அவுட் நிதி அளிக்க ஒப்புதல் கொடுக்கப்பட்டு
உள்ளது என சர்வதேச நாணய நிதியம் கடந்த செப்டம்பர்
1 ஆம் திகதி காலையில் வெளியிட்ட அறிவிப்பில்த்
தெரிவித்துள்ளது. இலங்கை பொருளாதாரச் சரிவு மற்றும் நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு
வர வேண்டும் என்பதற்காக நிதியுதவியைக் கேட்டு வந்த நிலையில் அந்நாட்டின் பொருளாதாரக்
கொள்கைக்கு உதவும் வகையில் 48 மாத ஒப்பந்தம் மூலம் சுமார் 2.9 பில்லியன் டொலர் அளவிலான தொகையை அளிக்க
ஒப்புதல் அளித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம்
தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளது.
சர்வதேச்
நனய நிதியம் வெருமனே டொலரைத் தூக்கிக் கொடுக்கவில்லை.
அதனுடைஅய நிபந்தனைகள் அதிகமானவை அப்பாவிகளுக்கு அது பற்றிய விபரம் எதுவும் தெரியாது.இந்த
நிதியுதவியின் வாயிலாக இலங்கை அரசு விரைவில் வரி விதிப்பு முறைகளை மறுசீரமைப்புச் செய்ய
உள்ளது. இதன் பிடி தனிநபர் வருமான வரி விதிப்பில் தற்போது இருக்கும் கட்டமைப்பை காட்டிலும்
மிகவும் முற்போக்காகவும், கார்பரேட் வரி விதிப்பை விரிவாக்கவும், வட் வரி விதிப்பை
விரிவாக்கவும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கண்டிஷன் உடன் ஒப்பந்தம் இரு தரப்பு
மத்தியிலும் கையெழுத்தாகியுள்ளது.
இலங்கையில்
நடந்த மக்கள் போராட்டம் அந்நாட்டில் மட்டும் அல்லாமல் பல நாடுகளில் பயத்தை ஏற்படுத்தியது
என்றால் மிகையில்லை, மேலும் பொருளாதாரச் சரிவில் இருக்கும் இலங்கை மக்கள் பிழைப்புக்காக
வெளிநாடுகளுக்கு அதிகளவில் செல்ல துவங்கியுள்ளனர்.
இதேபோல்
பல சிறு தொழில்கள் மூடப்பட்டு உள்ளதால் வகைப்படுத்தாத துறையில் இருக்கும் கோடிக் கணக்கான
ஊழியர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். மேலும் பல குடும்பங்கள் வறுமைக்
கோட்டிற்குக் கீழ் தள்ளப்பட்டு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்குத் தற்போது பல நாடுகள் உதவி செய்து வரும் இதேவேளையில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இலங்கையில் வர்த்தகத்தைத் துவங்கவும், முதலீடு செய்யவும் திட்டமிட்டு வருகிறது. இந்த 2.9 பில்லியன் டொலர் உதவி மூலம் இலங்கை மக்களுக்கு அடிப்படைத் தேவைகளும், உதவிகளும் உறுதி செய்யப்படும்.
No comments:
Post a Comment