Sunday, September 4, 2022

ஆப்கானுடனான பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை வெற்றி

   ஆசியக் கிண்ண‌ குரூப் 4 சுற்றில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இலங்கை திரில் வெற்றிபெற்றது. சார்ஜா, ஆசியக் கிண்ண  கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று நிறைவடைந்த நிலையில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

  சூப்பர்4 சுற்று  முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-இலங்கை அணிகள் மோதின. நானயச் சுழற்சியில்  வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

  ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஹசரத்துல்லா ஷஷாய் 13 ஓட்டங்களிலாட்டமிழந்தார் . மற்றொரு தொடக்க வீரரான ரஹ்மதுல்லா குர்பாஸ் அதிரடியாக விளையாடி 45 பந்துகளில் 6 சிக்சர், 4 பவுண்டரி விளாசி 84 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

 அடுத்ததாக களமிறங்கிய இப்ராகிம் சட்ரன் 40 ஓட்டங்கள்,  . நஜிபுல்லா சட்ரன் 17 ஓட்டங்கள் , க‌ப்டன் முகமது நபி ஒரு ஓட்டத்துடனும் வெளியேறினர். ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ஓட்டங்கள் குவித்தது. இலங்கை அணியின் தில்ஷன் மதுஷகா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 176 ஓட்டங்கள்  எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக நிசங்கா மற்றும் குசல் மெண்டிஸ் களமிறங்கினர். நிசங்கா 35 ஓட்டங்கள் , குசல் மெண்டிஸ் 36 ஓட்டங்கள்  எடுத்து அடுத்தடுத்து   வெளியேறினர். அடுத்துவந்த அசலங்கா 8ஓட்டங்கள் அடித்து வெளியேறினார். சனங்கா 10 ஓட்டங்கள்  எடுத்து ஆட்டமிழந்தார். ஆப்கானிஸ்தானுக்கு வெற்றிவாய்ப்பு ஏற்பட்டபோது களமிங்கிய குனதிலக, பனுகா ராஜபக்சா ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குனதிலகா 20 பந்துகளில் 2 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 33ஓட்டங்கள்  குவித்தார்.   14 பந்துகளை சந்தித்த பனுகா ராஜபக்சா 1 சிக்சர், 4 பவுண்டரிகள் உள்பட 31 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழந்தார். இலங்கை அணி 19.1 ஓவரில் 6 விக்கெட்டுகளை 179 ஓட்டங்கள் எடுத்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை திரில் வெற்றிபெற்றது. கசரங்கா 9 பந்துகளில் 16 ஓட்டங்களுடனும், கருனரத்னே 2 பந்துகளில் 5 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். ஆப்கானிஸ்தான் அணியின் முஜிபுர் ரஹ்மான் மற்றும் நவீன் உல் அக் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

No comments: