Thursday, September 8, 2022

பரபரப்பான போட்டியில் வென்றது பாகிஸ்தான்

ஆசியக் கிண்ணத் தொடரின் சூப்பர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணியை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது பாகிஸ்தான். இந்த வெற்றியின் மூலம் இந்தியாவை  வெளியேற்றியது பாகிஸ்தான். 

ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாஅயச்சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. அப்கானிஸ்தான்   20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு   129 ஓட்டங்ளை மட்டுமே எடுத்திருந்தனர். அதன் காரணமாக 130 ஓட்டங்கள்  என்ற   இலகுவான  ஓட்ட எண்ணிக்கையுடன் களம்  இறங்கிய பாகிஸ்தான் கடைசி ஓவர் வரை போராடி வெற்ரி பெற்றது. எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்கை பாகிஸ்தான் விரட்டியது.

  ஓவரில் பாகிஸ்தான் வெற்றிக்கு 11 ஓட்டக்ன்கள் தேவைப்பட்டது. அதே நேரத்தில்  9 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதனால் ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு ஒரே ஒரு விக்கெட் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் அந்த கடைசி ஓவரின் முதல் இரண்டு பந்தையும் சிக்ஸர் விளாசி வெற்றியை உறுதி செய்தார் நசீம் ஷா. அதன் மூலம் பாகிஸ்தான் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தானின்  தொடக்க வீரர்கள் ஹசரதுல்லா 21 (17) குர்பாஸ் 17 (11) என குறைந்த  ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.  இப்ராஹிம் ஜாட்ரான் 35 (37), ஜானத் 15 (19), நஜிபுல்லா ஜாட்ரான் 10 (11) என முக்கிய வீரர்கள் திணறினர். சிறப்பாக பந்து வீசிய பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஹாரீஸ் ரவூப் 2 விக்கெட்டுக்கள் எடுத்தார்.

  130 என்ற சுலபமான இலக்கை துரத்திய பாகிஸ்தான் எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் ஓவரிலேயே கப்டன் பாபர் அசாம் கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அதைப் பயன்படுத்திய ஆப்கானிஸ்தான் மேலும் தரமாக பந்துவீசி பக்கார் ஜமான் 5, முகமத் ரிஸ்வான் 20, அஹமத் 30, சடாப் கான் 30 என முக்கிய வீரர்களை   சீரான இடைவெளியில் ஆட்டமிழக்கச் செய்தது.

 ஆப்கானிஸ்தானில் கை ஓங்கிய நிலையில் முகமத் நவாஸ் 4, ஆசிப் அலி 16, குஷ்தில் ஷா 1, ஹாரீஸ் ரவூப் 0 என அடுத்து வந்த வீரர்களும்     ஆட்டமிழந்து   அதிர்ச்சி கொடுத்தனர்.

 9 விக்கெட்டுகளை பாகிஸ்தான் இழந்ததால் போட்டியில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட போது அதை வீசிய பரூக்கி யார்கர் வீச முயற்சித்து தவறிப்போய் ஃபுல் டாஸ் பந்துகளாக வீசினார். அதை எதிர்கொண்ட டெயில் எண்டர் நசீம் ஷா முதல் 2 பந்துகளில் அடுத்தடுத்த சிக்ஸர்களை பறக்கவிட்டு   1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.   அஹமத் 3 விக்கெட்களும், பரூக்கி 3 விக்கெட்களும், ரசித் கான் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

 நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இந்தியா லீக் சுற்றில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றாலும் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து. அதனால் ஏற்கனவே இந்தியா பைனலுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு 99% காலியான நிலையில் எஞ்சிய 1% வாய்ப்பு ஆப்கானிஸ்தான் கையில் இருந்தது. அந்த நிலைமையில் நேற்றைய போட்டியில் 39 ஓவர்கள் வரை அற்புதமாக செயல்பட்ட ஆப்கானிஸ்தான் தங்களுடைய வெற்றிக்கும் இந்தியாவின் வெற்றிக்கும் சேர்த்து போராடியது. அதனால் அதிர்ஷ்டம் கை கொடுத்து விடும் போலயே என்ற குருட்டு நம்பிக்கை வைத்த இந்திய ரசிகர்களின் கனவு கடைசி ஓவரில் ஆப்கானிஸ்தான் தோற்றதால் சுக்குநூறாக உடைந்து போனது. ஏனெனில் இப்போட்டியில் போராடி திரில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் ஏற்கனவே தனது முதல் சூப்பர் 4 போட்டியில் இந்தியாவை தோற்கடித்த காரணத்தால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

ஆப்கானிஸ்தானை தோற்கடித்து இந்தியாவையும் தோற்கடித்த இலங்கையும் ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. ஆனால் இதுவரை சூப்பர் 4 சுற்றில் எந்த வெற்றிகளையும் பதிவு செய்யாத இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் தங்களது கடைசி போட்டியில் நேருக்கு நேர் மோதுவதற்கு முன்பாகவே இந்த தொடரிலிருந்து பரிதாபமாய் வெளியேறியுள்ளன.

 இந்த தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்ட பாகிஸ்தானும் இலங்கையும் வரும் செப்டம்பர் 11ஆம் திகதி துபாயில்   இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மாபெரும் இறுதி போட்டியில் விளையாடத் தயாரக உள்ளன.

  

 

No comments: