ஆப்கானுடனான முதலாவது போட்டியில் தோல்வியடைந்த இலங்கை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சம்பியனாக கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 100 ஓட்டங்களைத் தாண்டுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. பின்கள வீரர்களின் அதிரடியால் இலாலய இலக்கை அடைந்தது.
ஐல்லிய அரபு எமிரேட்ஸில் நடந்த ஆசியக் கிண்ணப் போட்டியில் இலங்கை சம்பியனாகும் என கிரிக்கெட் வல்லுநர்கள் எவரும் கணிக்கவில்லை. கொங்கொங், நடப்புசம்பியன் இந்தியா,
ஒஅங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ,கொங்கொங் ஆகிய அணிகள்
வெளியேறின.
தோல்வியுடன் துவங்கினாலும் அதற்கடுத்த போட்டிகளில் வென்ற இலங்கை
, பாகிஸ்தான் ஆகிய அணிகள் லீக் ,சூப்பர் 4 சுற்றை கடந்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
துபாயில் நடந்த இறுதிப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
முதலில் களமிறங்கிய இலங்கைஅணி வீரர்கள்
குசல் மெண்டிஸ் 0, நிஷாங்க 8, குணத்திலக 1, டீ சில்வா 28, கப்டன் சனாக 2 குறைந்த ஓட்டங்களில் ஆடமிழந்தனர். பாகிஸ்தானின் தரமான பந்துவீச்சில் சீரான இடைவெளிகளில் இலங்கை வீரர்கள் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.
9 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்த இலங்கை இக்கெற்களை இழந்த
இலங்கை 58 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை ரசிகர்கள்
மெளனமாக
பார்த்துக் கொண்டிருந்தனர். பாகிஸ்தான் ரசிகர்களின் அரவாரம் மைதானத்தை அதிரச் செய்தது. இலங்கை ரசிகர்கள்
மெளனமாகப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
பாகிஸ்தான் ரசிகர்களின் ஆரவாரம் மைதானத்தை அதிரச் செய்தது.
ஹசரங்கா – பனுக்க ராஜபக்ச ஜோடி 6 ஆவது விக்கெற்றுக்கு ஜோடி சேர்ந்தி இலங்கையைத் தூக்கி நிறுத்தியது. இருவரும் பொறுப்புடனும் அதிரடியாகவும் விளையாடி 36 பந்துகளில் 58 ஓட்டங்கள் அடித்தனர்.
அதிரடியில் அசத்திய ஹசரங்க ஆட்டமிழ்க்காமல் 6 பவுண்டரி 3 சிக்சருடன்
45 பந்துகளில் 71* ஓட்டங்கள் அடித்தார். அவருடன் ஜோடி சேர்ந்த கருணரத்ன அட்டமிழக்காமல் 14* ஓட்டங்கள் எடுத்தார்.
இந்தஜோடி 34 பந்துகளில் 54
ஓட்டங்கள் எடுத்தது.
20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்த இலங்கை இலங்கை 170 ஓட்டங்கள் எடுத்து மிரட்டியது.
பாகிஸ்தான் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஹரிட் ரவூப் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
171 எனும் இமாலய இலகுடன் களம் இறங்கிய பாகிஸ்தான் வீரர்கள் இலங்கையில் பந்து வீச்சுக்குத் தாக்குப் பிடிக்க முடியாது தடுமாறினர். கப்டன் பாபர் அசாம் 5, பக்கார் ஜமான் 0 என முக்கிய வீரர்கள் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.மூன்றாவது ஓவரில் அடுத்தடுத்து இரன்டு விக்கெட்களை இழந்த பாகிஸ்தான் 22 ஓட்டங்கள் எடுத்தது. 3வது ஜோடியாக விளையாடிய முகாது ரிஸ்வான் , இப்திகர் அஹமத் நம்பிக்கையளித்தது. பாகிச்தான் ரசிகர்களின் ஆரவாரம் விண்ணை முட்டியது. இப்திகர் அஹமத் 31 ஓட்டங்களில் ஆட்டமிழந்தர். இவர்கள் இருவரும் 51 பந்துகளில் 71 ஓட்டங்கள் எடுத்தனர்.
அடுத்து களம் இறங்கிய
முகம்மது நவாஸ் 6 ஓட்டங்களில்
நடையை கட்ட
வெற்றிக்காக போராடிய முஹம்மது ரிஸ்வான் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 55 ஓட்டங்கள்
எடுத்து
ஆட்டமிழந்தார்.
குஷ்தில் ஷா 2, ஆசிப் அலி 0, சடாப் கான் 8 என
பாகிஸ்தான் வீரர்களின்
ஆட்டம் முடிவுக்கு வந்தது.
20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான்
அணி 147 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
பிரமோட் மதுசன் 4 விக்கெட்டுகளையும் வணிந்து ஹசரங்க 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
23 ஓட்ட வித்தியாசத்தில் வென்ற இலங்கை 2022 ஆசியக் கிண்ண சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. ஆட்டநாயகனாக பானுக ராஜபக்ஷவும்,தொடர்நாயகனாக வணிந்து ஹசரங்கடி சில்வவும் தேர்வு செய்யப்பட்டனர்.
போட்டி நடந்த துபாய் மைதானத்தில்நானயச்
சுழற்சியில் வென்று களத்தடுப்புச் செய்தால்
99% வெற்றி என்ற நிலைமையில் இறுதிப் போட்டியில் நாணயச் சுழற்சியில் தோற்ற இலங்கை 58/5 என்ற மோசமான தொடக்கத்தைப் பெற்ற போதிலும்
கடைசி 10 ஓவர்களில் மீண்டெழுந்து 170 ஓட்டங்கள் குவித்த போதே பாதி வெற்றியை உறுதியானது.
இப்போட்டி நடைபெற்ற துபாய் மைதானத்தில் கடந்த பல வருடங்களாகவே இரவு நேரங்களில் நடைபெறும் ரி20 போட்டிகளில் நாணயச்சுழற்சியில் வென்று துரத்தினால் வெற்றி உறுதி என்பது உலகிற்கே தெரிந்த கதையாகும். இந்த தொடரில் கூட மொத்தமாக நடைபெற்ற 13 போட்டிகளில் 10+ போட்டிகளில்விரட்டிய அணிகளே வென்றன. ஆனாலும் துபாயில் விதி விலக்காக கடந்த 2021இல் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் நாணயச் சுழற்சியில் தோற்றும் முதலில் துடுப்பெடுத்தாடி கொல்கத்தாவை தோற்கடித்து 4வது கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் இந்த இறுதிப் போட்டியில் வெல்வதற்கு தங்களுக்கு உத்வேகத்தை கொடுத்ததாக இலங்கை கப்டன் தசுன் சானக்க வெளிப்படையாக கூறியுள்ளார்.
இப்போட்டியில் வென்ற இலங்கை ஆசியக் கிண்ண வரலாற்றில் அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற இந்தியாவின் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளது. 1984 முதல் நடைபெற்று வரும் ஆசியக்
கிண்ணப் போட்டியில் 61 போட்டிகளில் பங்கேற்ற இலங்கை 40 வெற்றிகளை பதிவு செய்து இந்த சாதனை படைத்துள்ளது. 2வது இடத்தில் 59 போட்டிகளில் 39 வெற்றிகளுடன் இந்தியா உள்ளது. இருப்பினும் கோப்பைகள் அடிப்படையில் இந்தியா (7) வெற்றிகரமாக அணியாக திகழ்கிறது.
இப்போட்டியில் 170 ஓட்டங்களை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய இலங்கை 2012க்குப்பின் உலகக் கிண்ணம்
அல்லது ஆசியக் கிண்ணம்
போன்ற எந்த ஒரு பெரிய தொடரின் இறுதி போட்டியிலும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய அணி என்ற சாதனை படைத்துள்ளது.
இப்போட்டியில் 58/5 என இலங்கை தவித்த போது 71* (45) ஓட்டங்கள் குவித்து காப்பாற்றிய ராஜபக்சா ஒரு பலத்தரப்பு
ரி20 தொடரின் இறுதிப்போட்டியில் 4வது இடத்தில் அதிகபட்ச ஓட்டங்கள் பதிவு செய்த வீரர் என்ற
சாதனை படைத்துள்ளார்.
23968 பார்வையாளர்கள்
என
பதியப்பட்டுள்ளது.
1986 ,1997.2004,2008, 2016,2022 ஆசியக் கிண்ண சம்பியன்
இலங்கை
ரிஸ்வான் 261 ஓட்டங்கள்,கோலி 276 ஓட்டங்கள், இப்ராஹின் ஜஸ்ரன் 196 ஓட்டங்கள்,பானுக 191 ஓட்டங்கள்.
புவனேஸ்குமார்,11 விக்கெற்கள், வனிந்து 9 விக்கெற்கள், மொஹமட் நவாஸ் 8 விக்கெற்கள்
பாக் 5 இறுதி .3 தோல்வி ,2 சம்பியன்
No comments:
Post a Comment