ஆசியக் கிண்ண ரி20 கிரிக்கெட் தொடரின் ஆட்டத்தில் சூப்பர் 4 சுற்றை இறுதி செய்யும் வகையில் பாகிஸ்தான் , ஹொங்கொங் ஆகியன மோதின. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஹொங்கொங் பாகிஸ்தானை துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.
ஆரம்பத்துடுப்பாட்ட
வீரர்களான ரிஸ்வானும், பாபர் ஆஸமும் களம் இறங்கினர். இந்தியாவுக்கு எதிரான போட்டியை போலவே
பாபர் ஆஸம் இந்தப் போட்டியிலும் சோபிக்கவில்லை. 9 ஓட்டங்களில் அவர் வெளியேறிய பிறகு
ரிஸ்வான் உடன் இணைந்தார் ஃபகார் ஜமான். இருவரும் இணைந்து 100 ஓட்டங்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்
அமைத்தனர்.
ஜமான் 53 ஓட்டங்களில் ஆட்டமிழந்த பின், குஷ்தில் களம் இறங்கினார். இறுதிவரை அவுட் ஆகாமல் இருந்து ரிஸ்வான் 78 ஓட்டங்கள் அடித்து வெற்றியைத் தேடிக் கொடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 193 ஓட்டங்கள் குவித்தது. ஹிங்கொங் தரப்பில் இஷான் கான் இரண்டு விக்கெட்டையும் வீழ்த்தினார்.
194 எனும் பெரிய இலக்கை நோக்கி விளையாடிய ஹொங்கொங் பாகிஸ்தானிடம் சரணடைந்தது. அ நிதானமாக ஓப்பனிங் கொடுத்த கப்டன் நிஜாகத் கானையும் ஒன் டவுன் இறங்கிய பாபர் ஹயாத்தையும் மூன்றாவது ஓவர் வீசிய நசீம் ஷா அடுத்தடுத்து அவுட் ஆக்கி அந்த அணியின் சரிவை தொடங்கிவைத்தார். அடுத்த ஒரு ஓவர் கூட தாக்குபிடிக்காத மற்றொரு ஓப்பனர் யாசிம் முர்தாசா 2 ஓட்டங்களுடன் நடையை கட்டினார்.இதன்பின் ஸ்பின்னர்கள் ஷதாப் கான், நவாஸ் இணைந்து ஹாங்காங் அணியைமுடக்கினர். இவர்களின் ஸ்பிந்தாகுதலுக்கு முகம் கொடுக்க முடியாமல் ஹொங்கொன் வீரர்கள் வருவதும்போவதுமாக இருந்தனர். இறுதியில் 10.4 ஓவர்களில் 38 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்த ஹொங்கொங்அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்விகண்டது. 155 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றது. பாகிஸ்தான் தரப்பில் ஷதாப் கான் 4 விக்கெட், நவாஸ் 3 விக்கெட் நசீம் ஷா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பாகிஸ்தானின் ரி20 வரலாற்றில் இது மிகப்பெரிய வெற்றியாகும். இதற்கு முன் மேற்கிந்திய தீவுகள் அணியை 60 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தி வென்றதே ரிடி20 வரலாற்றில் பாகிஸ்தான் பெற்ற பெரிய வெற்றியாக இருந்தது. அந்த சாதனை முறியடிக்கப்பட்டது.
No comments:
Post a Comment