சினிமாவை பலர் பூஜித்தார்கள். படப்பிடிப்புக்கு ஒழுங்காகப் போக வேண்டும், நேரத்துக்குப் போக வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருந்தார்கள். எல்லோருக்கு வழிகாட்டியாக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். சிவாஜியுடன் நடிப்பதென்றால் அவருக்கு முதல் சென்றுவிட வேண்டும் என கூட நடிப்பவர்கள் நினைப்பார்கள்.எஸ்.வி.ரங்கராவ்,எம்.ஆர்.ராதா ஆகியோருடன் நடைப்பதென்றால் சிவாஜி உசாராகிவிடுவார். கொஞ்சம் அசந்தால் இருவரும் சிவாஜியை தூக்கிச் சாப்பிட்டு விடுவார்கள்.
படப்பிடிப்புக்குத்
தாமதமாகச் செல்வதில் எஸ்.வி.ரங்கராவுக்கு
நிகர் அவர்தான்.அதன் காரணமாக
பட வாய்புகளை இழந்திருக்கிறார். பலர்
அவரை வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் பேசினார்கள்.
அவற்றை எல்லம் அவர் பெரிதாக எடுக்கவில்லை.
ஒரு சிலர் அவருக்காகக் காத்திருந்தனர்.
‘நானும் ஒரு பெண்’ படத்தில் எஸ்.வி.ரங்காராவ் கதாநாயகன் எஸ்.எஸ்,ராஜேந்திரனுக்குத் தந்தையாக நடித்தார். மிக வேகமாகப் படபிடிப்பு நடந்தது. முக்கியமான காட்சி படமாக்க ஏற்பாடு செய்யப்பட்டது. நானும் ஒரு பெண் படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்கள் அனைவரும் வந்து விட்டனர். வழமைபோல எஸ்.வி.ரங்கராவ் வரவில்லை.படப்பிடிப்பு நடை பெறுவதற்கு சுமார் ஒரு மணி நேரம் முன்னதாக வந்த எம்.ஆர்.ராதா பொறுமை இழந்து விட்டர். கோபத்தை அடக்குவதற்காக குறுக்கும் நெடுக்கும் நடந்தார்.
எல்லோரும்
காத்துக் கொண்டிருக்கையில் கம்பீரமாக படப்பிடிப்பு நடை பெறும் இடத்துக்கு
வந்தார் எஸ்.வி.ரங்கராவ்,
அவரைப் பார்த்ததும் கோபத்துடன் கொந்தளித்துக்கொண்டிருந்த எம்.ஆர்.ராதா, “கெட்டவனா
நடிக்கிறவன் எல்லாம் படப்பிடிப்புக்கு ஒழுங்கா
நேரத்தில வர்றான். நல்லவனா நடிக்கிறவன் ஒரு
ஒழுங்கு இல்லாம என்ன பாடுபடுத்தறான்
பாரு” என்று ரங்காராவின் காதில்
விழுகின்ற மாதிரி உரக்கச் சொன்னார்.
எம்.ஆர்.ராதாவின் விமர்சனத்தால்
அங்கிருந்தவர்கள் கலங்கினார்கள். எஸ்.வி.ரங்கராவ் கோபித்துக்கொண்டு போனால்
படப்பிடிப்பு இஅத்தாகிவிடும் என நினைத்தார்கள். ஆனால்,
எஸ்.வி.ரங்கராவோ எதுவும்
நடக்காததுபோல படப்பிடிப்புக்கு ஒத்துழைத்தார். காலையின் தொடங்கிய படப்பிடிப்பு இரவுதான் முடிவடைந்தது.
எதுவும் நடக்காதது போல எம்.ஆர்.ரதாவும், எஸ்.வி.ரங்கராவும்
ஒத்துழைத்தனர்.
மெல்லிசை
மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்,
கலை இயக்குநர் கங்கா ஆகிய இருவரும் இணைந்து
தயாரித்த படம் ‘கலைக் கோவில்.’
அந்தப் படத்தின் கதாநாயகனான முத்துராமனின் தந்தையின் பாத்திரத்தில்
இசைக் கலைஞராக எஸ்.வி.சுப்பையா நடித்தர். அந்தப் பாத்திரத்தில்
நடிபதற்கு முதலில்
எஸ்.வி.ரங்காராவை ஸ்ரீதர் ஒப்பந்தம்
செய்தார். எஸ்.வி.ரங்கராவைப்
பற்ரி நன்கு தெரிந்திரிந்த ஸ்ரீதர்,
தனது அலுவலகத்துக்கு அவரை அழைத்து குறுகிய
நாட்களினும் படத்தை முடிக்க வேண்டும்
என்பதால் ஒழுங்காக நேரத்துக்கு வர வேண்டும் என்றார்.
உங்களால் முடியாதென்றால் இப்பவே சொலிவிடுங்கள் வேறு
ஆளைப் பார்க்கிறேன் என ஸ்ரீதர் சொன்னார். ஒழுங்காக நேரத்துக்கு வருவதாக எஸ்.வி.ரங்கராவ் வாக்குறுதியளித்தார்.
"கலைக் கோவில்"
படத்தின் பூஜை
காலை 6.30 மணிக்கு நடைபெறும் என்பதால்
அனைவரும் 6 மணிக்கு வந்துவிட்டார்கள். எஸ்.வி.ரங்கரவைக் காணவில்லை.
பூஜைக்கு வராத எஸ்.வி.ரங்கராவ் படப்பிடிப்புகு சொன்ன
நேரத்துக்கு வந்து விடுவர் என
ஸ்ரீதர் நினைத்தார்.நேரம் போய்க்கொண்டிருந்தது. எஸ்.வி.ரங்கராவின் தலைக் கறுப்பைக் காணவில்லை.
எஸ்.வி.ரங்கராவ் வீடுக்கு தொலைபேசியி
தொடர்புகொண்ட போது அவர் எழு
மணிக்கு விட்டை விட்டு வெளிக்கிட்டு விட்டதாகச்
சொன்னர்கள். பொறுமை இழந்த ஸ்ரீதர் எஸ்.வி.சுப்பையா எங்கிருக்கிறார் என விசாரித்து அவரை
அழைக்கும்படி சொன்னார்.
படப்பிடிப்பு ஒன்றும்
இல்லாமல் எஸ்.வி.சுப்பையா இருந்தார்.உடனடியாக அழைக்கப்பட்ட எஸ்.வி.சுப்பையவுக்கு
நடந்தவற்றை விளக்கி படக்
கதையைக் கூறினார் ஸ்ரீதர்.
எஸ்.வி.சுப்பையா நடிப்பதர்கு
சம்மதம் தெரிவித்தார். தாடியை ஒட்டிக்கொண்டு வரும்படி ஸ்ரீதர்
கூரினார். படாரென கதிரையை விட்டெழுந்த எஸ்.வி.சுப்பையா, ஒட்டுத்தாடி
வைப்பதற்கு மறுப்புத் தெரிவித்தார். கதை, பாத்திரத்தின் தன்மை,
வசனம் எல்லாவற்றையும் பொறுமையாக விளக்கினார் ஸ்ரீதர்.
மனம் மாறிய எஸ்.வி.
சுப்பையா நடிபதற்குச் சம்மதித்தார்.
தடைதாண்டிய படப்பிடிப்பு ஆரம்பமாகி ஒரு மணித்தியாலத்தின் பின்னர் எஸ்.வி. ரங்கராவ் காரில் இருந்து இறங்கினார்.தாமதமாக வந்ததைப் பற்றிக் கவலை படாமல் படபிடிப்பு நடக்கும் இடத்தை நோக்கி சென்றார். அவருக்குப் பதிலாக எஸ்.வி.சுப்பையா நடிப்பதாக கோபக்காரரான அவரிடம் யார் சொல்வது என அனைவரும் தடுமாறினர்.
“பூஜை
நேரத்துக்கு நீங்கள் வராததை ஸ்ரீதர்
அபசகுனமாக நினைத்து விட்டார். அதனால்தான் உங்களை மாத்திவிட்டு….” என்று
ஸ்ரீதரின் வலது கரமாக இருந்த
சித்ராலயா கோபு இழுத்தவுடனேயே சூழ்நிலையைப்
புரிந்து கொண்ட எஸ்.வி.ரங்காராவ், “ஸ்ரீதரை எப்போதும் மதிப்பவன்
நான். எனக்கு அவர் மேல்
எந்த கோபமும் இல்லை என்பதை
அவரிடம் சொல்லி விடுங்கள்” என்று
கோபுவிடம் சொல்லிவிட்டு தனது காரில் ஏறி
புறப்பட்டுவிட்டார்.தன் மேல் தவறு
இருந்தால் அதை ஒப்புக் கொள்கின்ற
நேர்மையான குணத்துக்கு சொந்தக்காரரான எஸ்.வி.ரங்காராவ்
யாராவது தன்னைப் பற்றி தவறாக
குற்றம் சாட்டினால் அதை எதிர்கொள்ளவும்
தயங்க மாட்டார்.
ஏவி.எம். தயாரிப்பான ‘பக்த
பிரகலாதா’வில் இரண்யனின் வேடம் ஏற்று
நடித்தபோது நான்கு
அல்லது ஐந்து மணி நேரத்துக்கு
மேல் படப்பிடிப்பில் எஸ்.வி.ரங்காராவ்
இருக்க மாட்டார். மாலை ஆறு மணிவரை
இருந்து நடித்துவிட்டுப் போங்கள் என்று அவரிடம்
சொல்லக் கூடிய தைரியம் படக்
குழுவினருக்கு இல்லாததால்
படப்பிடிப்பில் ரங்காராவ் சரியாக ஒத்துழைப்பு தருவதில்லை
என்ற தகவலைப் பட
முதலாளியான ஏவி.மெய்யப்ப செட்டியாரிடம்
அவர்கள் தெரிவித்தனர்.
“இன்று படப்பிடிப்பு தளத்துக்கு வந்து நான் அவரிடம் பேசிக் கொள்கிறேன்” என்று அவர்களிடம் சொன்ன மெய்யப்ப செட்டியார் படப்பிடிப்பு தொடங்கிய அரை மணி நேரத்தில் அங்கே வந்தார். அவரைப் படப்பிடிப்பு தளத்தில் பார்த்த உடனேயே தன்னைப் பற்றி யாரோ புகார் சொல்லித்தான் அவர் அங்கே வந்திருக்கிறார் என்று ரங்காராவிற்கு புரிந்துவிட்டது.
மதிய
உணவு இடைவெளியின்போது தான் அணிந்திருந்த கவசங்கள்,
ஆபரணங்கள் ஆகியவற்றை பொறுமையாகக் கழட்டிய ரங்காராவ் “மிஸ்டர்
செட்டியார் கொஞ்சம் இதைப் பிடியுங்கள்”
என்று மெய்யப்ப செட்டியாரிடம் தந்தார்.
அவற்றைக்
கையில் வாங்கிய செட்டியார் “இவ்வளவு
கனமாக இருக்கிறதே. எப்படி இதைப் போட்டுக் கொண்டு நடிக்கிறீர்கள்?” என்று
கேட்டவுடன் எந்த நோக்கத்துக்காக
அந்த ஆபரணங்களை அவரிடம் கொடுத்தாரோ
அந்த நோக்கம் நிறைவேறிவிட்ட மகிழ்ச்சியில்
“இப்போது சொல்லுங்கள். இவ்வளவு கனமான நகைகளையும்,
கவசத்தையும் அணிந்து கொண்டு என்னால்
எவ்வளவு நேரம் தொடர்ந்து நடிக்க
முடியும்..? படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்குப் போன பிறகுகூட இந்த
நகைகளை அணிந்து கொண்டு நடித்த
வலி தீர இரண்டு மணி
நேரம் ஆகிறது…” என்றார் ரங்காராவ்.
அவர்
தரப்பில் இருந்த நியாயத்தைப் புரிந்து
கொண்ட செட்டியார் “நீங்கள் சொல்வது உணமைதான்.
உங்களால் எவ்வளவு நேரம் முடியுமோ,
அவ்வளவு நேரம் நடியுங்கள் போதும்”
என்றாராம்.
‘நர்த்தனசாலா’
என்ற படத்தில்
கீசகனாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான பட்டத்தை இந்தோனேஷியாவில்
நடைபெற்ற பட விழாவில் பெற்ற
ரங்காராவைப் பாராட்டிய தெலுங்கு நடிகர் ‘கும்மிடி’ ரங்காராவ்
இந்தியாவில் பிறந்தது நாம் செய்த அதிர்ஷ்டம்.
ஆனல் அவரைப் பொறுத்தவரை அது
மிகப் பெரிய துரதிருஷ்டம். மேற்கத்திய
நாடுகளில் அவர் பிறந்திருந்தால் உலகின்
மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக
அவர் புகழ் பெற்றிருப்பார்” என்று குறிப்பட்டிருக்கிறார்.
No comments:
Post a Comment