இயக்குநர் திலகம்' என்றும் கே.எஸ்.ஜி. என சுருக்கமாகவும் அன்புடன் அழைக்கப்பட்டவர் திரைப்பட இயக்குநர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன். வசனகர்த்தா, பாடலாசிரியர், தயாரிப்பாளர் எனப் பல பரிமாணங்களிலும் த புலமையை வெளிப்படுத்தியவர்.
கும்பகோணம் அருகேயுள்ள சாக்கோட்டையில் கே.சீனுவாசநாயுடு-விஜயத்தம்மாள் தம்பதியின் எட்டாவது மகனாகப் 1929 நவம்பரில் பிறந்தவர் கோபாலகிருஷ்ணன். குழந்தைப் பருவத்திலேயே கொலரா நோயினால் பெற்றோரை இழந்தார்.ஆதரிக்க எவருமற்ற நிலையில், நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையின் நாடக கம்பெனியில் அடைக்கலமானார். நாடகம், நடிப்பு, இசையில் பயிற்சி பெற்று, பன்னிரண்டு ஆண்டுகள் அங்கேயே வளர்ந்தார். தேர்ந்த அனுபவத்துடன் தன் பத்தொன்பதாவது வயதில் நாடக எழுத்தாளராக உருவெடுத்தார். அவர் எழுதிய போஸ்ட்மேன், தம்பி, எழுத்தாளன் என்ற நாடகங்கள் அரங்கேறி வெற்றிபெற்றன. அடுத்து திரையுலகில் அடியெடுத்துவைக்க அவர் முயற்சித்த வேளையில், ஸ்ரீதர் என்னும் மாமனிதரின் நட்பு கிடைத்தது. ரத்தபாசம் புகழ் ஸ்ரீதரின் உதவியாளரானார். எதிர்பாராதது, எங்கவீட்டு மகாலஷ்மி, மாதர்குல மாணிக்கம், அமரதீபம், உத்தமபுத்திரன் போன்ற படங்களில் வசன உதவியாளராகப் பணியாற்றிக்கொண்டே பாடல்களும் எழுதினார்.
ஸ்ரீதர் பிஸியாக இருந்த நேரங்களில் தனக்குப் பதிலாக படப்பிடிப்புத்
தளங்களுக்குச் செல்லும் உரிமையை கோபாலகிருஷ்ணனுக்கு வழங்கினார். ஸ்ரீதரின் பெரிய மனது
காரணமாக உதவியாளராக இருக்கும்போதே வசனகர்த்தா என்ற புகழ் இவரை வந்தடையத்தொடங்கியது.
கைராசியில் வசனகர்த்தாவாகி, தெய்வப்பிறவி மூலம் கதை-வசனகர்த்தாவாக உருவெடுத்தார்.படிப்படியாக
முன்னேறி சாரதா மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். கடைசியாக இயக்கிய படம் காவியத்தலைவன்.
இப்படத்திற்குத் திரைக்கதை வசனம் ஆபாவாணன். இயக்கம் மட்டும் கே.எஸ்.ஜி.கே.எஸ்.ஜி.
2015 நவம்பர் 14 ஆம் தேதி, தனது 86ஆம் வயதில் மறைந்தார்.
குடும்பத்துக்குள்
நடக்கிற சின்னச்சின்னப் பிரச்சினைகளையும் அந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் முன்வைக்கும் திரைப்படங்களை எடுத்து அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்தவர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.
பெண்களின் எண்ண ஓட்டங்களை திரையில் கொண்டுவருவதில் சூரர் என்று கொண்டாடப்பட்டவர் இவர். பெண்களின் கூட்டம், படத்தின் முதல்நாளிலே பெருமளவிற்கு வந்தார்களென்றால், அது... கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்
படங்களுக்குத்தான் என்பதி ரசிகர்களின் கணிப்பு.
சினிமா
ஆசையால் சென்னைக்குச் சென்றார் கோபாலகிருஷ்ணன்.
சினிமாவில் ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடன் சென்றவர் பாடல்,கதை,வசனம், இயக்கம் எனை பல துறைகளில்பரிணமித்தார். எழுதுவீர்களா
எனக் கேட்ட போது
, என்ன எழுதுவது எனத் தெரியாமலே ஆம் அன்றார். பாடல் எழுதும்படி சந்தத்தைக் கொடுத்தார்கள். உத்தமபுத்திரன் படத்துக்காக அவர் எழுதிய பாடல் அரை நூற்றாண்டு கடந்தும் ஒலிக்கிறது.
‘உன்னழகைக் கன்னியர்கள் கண்டபின்னாலே’ என்ற பாடல் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்
எழுதியது என்றால் பலர் நம்பப் போவதில்லை.
ஐம்பதுகளின் தொடக்கத்தில் பாடல்களை எழுதிக் கொண்டிருந்தவருக்கு படங்களுக்கு வசனங்கள் எழுதும் வாய்ப்புகள் கிடைத்தன. கிருஷ்ணன் பஞ்சு முதலான மிகப்பெரிய இயக்குநர்களின் படங்களுக்கெல்லாம் வசனங்கள் எழுதினார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். 60-களில், வசனகர்த்தாவாக தனித்த அடையாளத்துடன் திகழ்ந்தவர். எஸ்.எஸ்.ஆர் - விஜயகுமாரியை வைத்து, ‘சாரதா’ (1962) எனும் படத்தை இயக்கினார். சாரதா அவரை வெற்றிப்பட இயக்குநராக்கியது.
’தெய்வத்தின்
தெய்வம்’, ‘கைகொடுத்த தெய்வம்’, ‘பேசும் தெய்வம்’, ’செல்வம்’, ‘சித்தி’ என இவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் வெற்றிப் படங்களாகவும் அமைந்தன பத்மினியையும்
எம்.ஆர்.ராதாவையும் முதன்மைக் கதாபாத்திரங்களாக வைத்துக்கொண்டு, ஜெமினி கணேசன், முத்துராமனையும் உடன் சேர்த்துக்கொண்டு இயக்கிய ‘சித்தி’
படம் மிகப்பெரிய
வெற்றியைப் பெற்றது. கேஎஸ்ஜி
அறிமுகப்படுத்தின நடிகை, ‘நடிகைகள் பிறக்கிறார்கள். உருவாக்கப்படுவதில்லை!’ என பத்திரிகையில் பிரசுரமானது
அதைப் படித்த கே.எஸ். கோபாலகிருஷ்ணனுக்கு கோபம் வந்தது. .
தெருத்தெருவா வேஷங்கேட்டு சுத்துனவளை நான்தான் ஹீரோயின் ஆக்கி பேரு வாங்கிக் குடுத்தேன். இவளுக பிறவி நடிகைகளா?’-ன்னு கோபப்பட்டார்.அந்தப் படத்தில் ஜெமினி -சரோஜா தேவி வேஷத்தை பாதியாக் குறைத்து, நாகேஷ், அலேக் நிர்மலா வேஷத்தை டெவலப் பண்ணிட்டாரு. ‘எலந்தப் பழம், எலந்தப் பழம் செக்கச் செவந்த பழம்’னு ஒரு பாட்டு, ‘வாழைத்தண்டு போல உடம்பு அலேக்!’-னு ஒரு பாட்டு இரண்டு பாடல்களும் இன்றுவரை புகழ் மங்காதவை. பணமா பாசமா படத்தில் சிவகுமாரும் நடித்தார். படம் வெளியானபோது சிவகுமாரின் காட்சிகள் எஅவையும் இல்லை. ஆனால், திரைப்பட வெற்றி விழாவில் சிவகுமாருக்கும் கேடயம் கொடுத்து கெளரவித்தார்.
மிக நீண்ட வசனங்களின் சொந்தக் காரர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.
நடிகர் பாடமாக்கு தயாராக இருக்கும்போது. 8 வது
வரிய தூக்கி 2- ஆக வச்சுக்க, 6 வது
வரியக் கடைசியில சொல்லு, ‘டேக்’ என்பார். நடிப்பவருக்கு
தலைச்சுத்து வந்துவிடும்.நடிகை கே.ஆ.விஜயாவின்
முதல் படமான ‘கற்பகம்’ படத்தை இயக்கினார். அதில்தான் கவிஞர் வாலிக்கு ஒரேயொரு பாடல் கொடுக்கப் போய், அவரின் திறனை அறிந்து வியந்து, எல்லாப் பாடல்களையும் கொடுத்தார். ஒரு நடிகர் அல்லது நடிகையின் ஆரம்பப் பாடத்தையும் 100-வது படத்தையும் ஒரே இயக்குநர் இயக்கியிருக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால், கே.ஆர்.விஜயாவின்
முதல் படமான ‘கற்பகம்’, 100-வது படமான ‘நத்தையில் முத்து’, 200-வது படமான ‘படிக்காத பண்ணையார்’ முதலான படங்களை கே.எஸ்.ஜி
இயக்கினார். அதேபோல், ‘குறத்தி மகன்’ படத்தில் நடிக்கவைத்த ஜெயசித்ராவின் 100-வது படமான ‘நாயக்கரின் மகள்’ படத்தையும் இவரே இயக்கினார்.
ஹீரோ
அறிமுகம், பாடல், காமெடி மாந்தர்கள் என்றெல்லாம் வரையறைக்குள் செல்லமாட்டார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.
எடுத்ததுமே, கதைக்குள் நுழைந்துவிடுவார். அதேபோல், காமெடிக்கென தனியாக நடிகர்களெல்லாம் போட்டுக்கொள்ளமாட்டார். கதைக்குத் தேவையாக இருந்தால்தான் காமெடியைப் பயன்படுத்துவார். அதேபோல், ஆறேழு பாடல்கள் வேண்டும், படம் ஆரம்பித்ததும் பாட்டு ஒன்று வைக்க வேண்டும் என்றெல்லாம் முடிவு செய்யமாட்டார். கதைக்குத் தேவையாக இருந்தால்தான் பாடலை நுழைப்பார். ‘வாழையடி வாழை’ படத்தில் படம் தொடங்கி அரைமணி நேரம் கழித்துத்தான் பாடலே வரும்.
சிவாஜியும்
பத்மினியும் ‘பேசும் தெய்வம்’ படத்தில் நடித்தார்கள். இந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது, சில முக்கியமான காட்சிகள், உணர்ச்சிபூர்வமான காட்சிகள் எடுக்கப்பட்டன. தொடர்ந்து ஆறேழு நாட்கள் அப்படியான காட்சிகள் எடுத்துக்கொண்டிருந்தார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.
ஒவ்வொரு காட்சி எடுத்தபோதும் பத்மினியை எல்லோருக்கு முன்பும் பாராட்டிக்கொண்டே இருந்தார். அந்தக் காட்சியில் நடித்த சிவாஜி, ஒவ்வொரு நாளும் இதைப் பார்த்துக்கொண்டே இருந்தார். ஒருகட்டத்தில், ‘நாம சரியா நடிக்கலையோ...’ என்று சிவாஜிக்கு வருத்தம் வந்துவிட்டது.
ஷூட்டிங்
முடிந்து வீட்டுக்குச் சென்ற பிறகு, அன்றிரவு 12 மணிக்கு, தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்த சிவாஜி, அப்போதே கே.எஸ்.ஜி-க்கு போன் போட்டு மனதில் பட்டதையெல்லாம் சொல்லி ரொம்பவே வருந்தினாராம். “நான் சரியா நடிக்கலேன்னா சொல்லிருங்க. திரும்பவும் அதையெல்லாம் நடிச்சிக் கொடுக்கறேன். பத்மினியை எல்லாருக்கு முன்னாடியும் பாராட்டுறீங்க. அப்போ, சுத்தி இருக்கறவங்க, நான் சரியா நடிக்கலைன்னுதானே நினைப்பாங்க” என்று சொல்லிவிட்டு துக்கம் தாங்காமல் பேச்சும் வராமல் அப்படியே ரிசீவரை வைத்துக்கொண்டே இருந்தார்.
உடனே கே.எஸ்.ஜி. “என்ன கணேசன்... ஒரு சாதாரணக் காட்சில கூட பிரமாதமா நடிக்கிறவர் நீங்க. நீங்களே இப்படி நினைக்கலாமா. பத்மினி நடிப்புக்குச் சவால் விடுற மாதிரியான காட்சிகள் எல்லாமே! அவங்களைக் கொஞ்சம் ஊக்கப்படுத்தி, பாராட்டினாத்தான் இன்னும் நான் நினைக்கிற பெட்டர் வரும்னுதானே அப்படிச் சொல்லிக்கிட்டே இருந்தேன். உங்க நடிப்புல என்னிக்கி, யார்தான் குறைசொல்ல முடியும்? சின்னக்குழந்தையாட்டம் நடந்துக்கறீங்களே?” என்று சொல்ல, சிவாஜி பிறகுதான் அமைதியானாராம்.
No comments:
Post a Comment