அவுஸ்திரேலிய வீரரான ஸ்பின்னர் நேதன் லயன் 145 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 போட்டிகளில் தொடர்ந்து விளையாடிய முதல் பந்து வீச்சாளர் என்ற மாபெரும் உலக சாதனையை இப்போட்டியில் படைத்தார். குறிப்பாக 2013 முதல் தொடர்ந்து 10 வருடமாக 100 போட்டிகளில் தொடர்ந்து விளையாடிய அவருடைய சாதனை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி பாராட்ட வைத்தது.
ஆனால் இப்போட்டியில் முதல்
இன்னிங்ஸில் களத் தடுப்பு செய்யும் போது காயத்தை சந்தித்த அவர் பாதியிலேயே வெளியேறினார்.
அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொண்ட அவர்
காலில் கட்டு போட்டுக்கொண்டு கைத்தடி உதவிகளுடன் 4வது நாள் ஆட்டத்தில் நடக்க முடியாமல்
வந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
10 வருடங்களாக காயத்தை
சந்திக்காமல் உலக சாதனை படைத்த அவருக்கு இப்படி ஒரு நிலையா? என்று இதர ரசிகர்களும்
விரைவில் குணமடையுமாறு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அந்த காரணத்தால் அவர் இரண்டாவது
இன்னிங்ஸில் துடுப்பெடுதாட மாட்டார்
என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 9 விக்கெட்டுகள் இழந்த போது தமது காயத்தை பொருட்படுத்தாத
அவர் தைரியமாக மெதுவாக களமிறங்கி வந்தது அனைத்து
ரசிகர்களையும் நெகிழ்ச்சியடைய வைத்தது. குறிப்பாக சற்று நொண்டி நொண்டியே நடந்து வந்த
அவருடைய அர்பணிப்பை பார்த்த லார்ட்ஸ் மைதானத்தில் இருந்த மொத்த ரசிகர்களும் எழுந்து
நின்று கைதட்டி வரவேற்பு கொடுத்தனர். -
மாபெரும் உற்சாகத்துடன்
களமிறங்கிய அவர் மிட்சேல் ஸ்டார்க் சிக்ஸர் அடிக்க முயற்சித்த பந்தை ரெஹன் அஹ்மத் பவுண்டரி
எல்லையில் அபாரமாக தடுத்த போது நொண்டி நொண்டி ஓடி சிங்கிள் எடுத்து தடுமாறி கீழே விழத்
தெரிந்தது ரசிகர்களையும் வர்ணனையாளர்களையும் பரிதாபப்பட வைத்தது. இதையும் ஒற்றைக்காலிலேயே 13 பந்துகள் வரை தாக்குப்பிடித்து
1 பவுண்டரியுடன் 4 ஓட்டங்கள் எடுத்தார். நாட்டுக்காக
அர்ப்பணிப்புடன் விளையாடிய அவரை ரசிகர்கள்
கைதட்டி வரவேற்றது நெஞ்சை தொடும் வகையில் அமைந்தது.
No comments:
Post a Comment