விக்கிரமாதித்தன் கதைபோல வடக்கு, கிழக்கில் ஏதோ ஒரு வகையில் அரசாங்கம் ஆக்கிரமிப்பதும் மக்கள் அதற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போராடுவதும் தொடர் கதையாக உள்ளன. வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் வாழ்க்கையில் போராட்டமும் ஒரு அங்கமாக உருவெடுத்துள்ளது.
தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கையில் மண்டை தீவில் பொது மக்களின் காணியைக் கடற்படையின கையகப்படுத்த மேற்கொண்ட முயற்சிக்குபதிலடியாக போராட்டம் நடைபெற்றது.
வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில் ஜே/07 கிராம சேவகர் பிரிவில் உள்ள, 29 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கும் அதிகமான காணிகளை, வெலிசுமன முகாம் அமைப்பதற்காக கையகப்படுத்தும் நோக்கில்,கடந்த புதன்கிழமை (12) அளவீட்டுப் பணிகளை ஆரம்பிக்கப் போவதாக நில அளவைத் திணைக்களத்தினரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இவ் அளவீட்டுப் பணிகளை தடுத்து நிறுத்துவதற்காக, காணி உரிமையாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் , , சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகியோர் மண்டைதீவு கிழக்கு முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு அருகில் ஒன்று கூடிய வெலிசுமன கடற்படை முகாம் முன்பாக எதிர்ப்பை வெளியிட்டனர்.
காணி சுவீகரிப்புக்கு எதிராக
போராட்டம் நடைபெறும் என்பதைத் தெரிந்துகொண்ட பாதுகாப்பு படையினர் பாதுகாப்பைப் பலப்படுத்தினர்.
கடற்படை முகாம் முன்பாக பொலிஸார், கடற்படையினர் ,புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டனர்.
கலகமடக்கும் படையினர் தயார் நிலையில் இருந்ததனர்.
அரசாங்கத்துக்கு எதிராகவும், பாதுகாப்புப் படையினருக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டக்க்காரர்கள்
கோஷம் எழுப்பியபோது பதுகாப்புப் படையின அமைதியாக்கப் பார்த்துக்கொண்டு நின்றனர். எந்த
நாளிலும் இல்லாத மாதிரி கடற்படையினரின் செயற்பாடு அமைந்தது. போராட்டக் காரர்கள் களைப்படைந்துள்ளதாக எண்ணிய கடற்படையினர், குளிர் பானமும், பிச்கட்டும் வழங்கினர். போராட்டக்காரர்கள் எவரும் அவற்றாஇத் தொட்டுப் பார்க்கவில்லை.“எங்கட
காணியை விட்டு எழும்பி போங்கோ பிஸ்கட் சாப்பிடுவோம்” என காணி உரிமையாளர் ஒருவர் கூறினார். நில அளவை திணைக்களத்தினர்
சமூகமளிக்காமையினால் காணி அளவீடு இடை நிறுத்தப்பட்டது.
இன்னொருநாள் மீண்டும் அளக்க முயற்சிப்பார்கள். அப்போது
போராட்டம் நடைபெறும்.
வடக்கு,கிழக்கில் உள்ள
படையினருக்காக பொதுமக்களின் காVஇயைக் கைப்பற்ற முயற்சிப்பது இது முதல் முறை அல்ல.
இதேவேளை , பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவுக்கு எதிராக வடக்கு, கிழக்கு சட்டத்தரணிகள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு,
குருந்தூர்மலையில் மேலதிகமாக மேம்படுத்தல் வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றதா என்பது தொடர்பில்
ஆராய்வதற்காக, முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா கடந்த செவ்வாய்க்கிழமை
(04) களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது குருந்தூர்மலைப் பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகரவும்
சென்றிருந்தார். நீதிபதி ரி.சரவணராஜா வழக்குத்
தொடர்பிலான விசாரணைகளை, இரு தரப்பு சட்டத்தரணிகளுடனும் இணைந்து மேற்கொண்டிருந்தபோது
இடையே குறுக்கிட்ட சரத்வீரசேகர, தன்னை அறிமுகப்படுத்தி தானும் அங்கு கருத்துத் தெரிவிக்க
முற்பட்டார்.
அப்போது அவரது கருத்தினை ஏற்க மறுத்த நீதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்களோ, அரசியல்வாதிகளோ இங்கு கருத்துத் தெரிவிக்க முடியாது எனவும், இங்கு நீதிமன்ற விசாரணையே இடம்பெறுவதாகவும், அங்கிருந்து சரத் வீரசேகரவினை விலகிச் செல்லுமாறும் எச்சரித்திருந்தார்.அதனைத் தொடர்ந்து சரத் வீரசேகர அங்கிருந்து விலகிச் சென்றார்.
குருந்தூர்மலையில் சரத் வீரசேகரவை வெளியேற்ரியவர் நீதிபதி. தான் அவமானப்படுத்தப்பட்டதாக நினைத்த சரத் வீரசேகர, பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது " குருந்தீர் மலையில் இருந்து என்னை வெளியேற்ற தமிழ் நீதிபதிக்கு உரிமை இல்லை" எனத் தெரிவித்தார். பாராளுமன்ற சிறப்புரிமைமூலம் நீதித்துறையை சரத் வீரசேகர அவமதித்துள்ளதாக சட்டத்தரணிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். சட்டத்தரணிகள் சங்கம் சரத் வீரசேகரவுக்கு கடிதம் ஆட்சேபனை தெரிவித்து கடிதம் எழுதியுள்ளது. அதற்கும் அவர் காட்டமாகப் பதிலளித்துள்ளார்.
சரத் வீரசேகரவின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு ,மட்டக்களப்பு ஆகிய நீதிமன்றங்களுக்கு
முன்பாக த்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று நடைபெற்றது.
பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தின் செயற்பாடுகளிலிருந்து சட்டத்தரணிகள்
விலகியிருந்தனர். . சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தின்
சட்டத்தரணிகள் வழக்குகளுக்காக ஆஜராவதை தவிர்த்துக்கொண்டனர்.
சட்டத்தரணிகளின் பணிப்பகிஷ்கரிப்பினால் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின்
செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்திருந்தன.
பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் பாராளுமன்ற உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்னாரிலும் சட்டத்தரணிகள் நீதிமன்ற செயற்பாடுகளை இன்று பகிஷ்கரித்தனர்.
கல்முனையிலும் சட்டத்தரணிகள் இன்று போராட்டத்தை முன்னெடுத்தனர்.
வடக்கு, கிழக்குகில் தமிழ் மக்களுக்கிடையாயான போரட்டக் களத்தை உருவாக்குவதில் இலங்கை அரசாங்கமும், பாதுகாப்புப் படையினரும் ஏட்டிக்குப் போட்டியாகச் செயற்படுகின்றனர்.
No comments:
Post a Comment